அமித் ஷா பாதுகாப்பில் விதிமுறை மீறல்

அகர்தலா: திரிபுரா மாநில முதல்வராக மாணிக் சாஹா நேற்று முன்தினம் 2-வது முறையாக பதவியேற்றார். அவரை உள்துறை அமைச்சர் அமித் ஷா சந்தித்து பேசிய பின் விருந்தினர் மாளிகையில் இருந்து வெளியே சென்றார். அவரது பாதுகாப்பு வாகனங்களை, வெள்ளை நிற டாடா டைகோர் கார் பின்தொடர்ந்ததும் அந்தக் காரை நிறுத்த முயன்றபோது, மின்னல் வேகத்தில் பாதுகாப்பு வாகனங்களை முந்திச் சென்றதும் தெரியவந்துள்ளது. இந்த பாதுகாப்பு விதிமீறல் குறித்து போலீஸார் விசாரணை நடத்தி வருகின்றனர். மகாராஷ்டிர மாநிலம் மும்பையில் … Read more

புதிதாக அமைக்கப்பட்ட பெங்களூரு -மைசூர் அதிவிரைவுச் சாலையை நாளை மறுநாள் திறந்து வைக்கிறார் பிரதமர் மோடி

புதிதாக அமைக்கப்பட்ட பெங்களூரு -மைசூர் அதிவிரைவுச் சாலையை பிரதமர் மோடி நாளை மறுநாள் திறந்து வைக்கிறார். 8 ஆயிரத்து 478 கோடி ரூபாய் செலவில் அமைக்கப்பட்டுள்ள 10 வழிச் சாலையால், இரு நகரங்களுக்கு இடையேயான பயண தூரம் ஒன்றரை மணி நேரமாகக் குறையும். மின்சார வாகனங்களுக்காக தனிப் பாதை அமைக்கப்பட்டுள்ளது. இந்த அதி விரைவுச்சாலையின் படங்களை மத்திய போக்குவரத்து அமைச்சர் நிதின் கட்கரி சமீபத்தில் வெளியிட்டார். மாண்டியாவில் அதிவிரைவுச் சாலையைத் திறந்து வைத்து, புதிய சாலைவழியாக பிரதமர் … Read more

இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் 266 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி

டெல்லி: இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 266 ஆக பதிவாகியுள்ளது என ஒன்றிய சுகாதாரத்துறை அமைச்சகம் தகவல் தெரிவித்துள்ளது. நாடு முழுவதும் கொரோனாவால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெறுவோரின் எண்ணிக்கை 3294 ஆக பதிவாகியுள்ளது. இந்தியாவில் இதுவரை பலியானவர்களின் மொத்த எண்ணிக்கை 5,30,779 ஆக உள்ளது. இதுவரை குணமடைந்து வீடு திரும்பியவர்களின் எண்ணிக்கை 4,41,55,439ஆக பதிவாகியுள்ளது. நாடு முழுவதும் இதுவரை 220,64,41,230 டோஸ் கொரோனா தடுப்பூசி போடப்பட்டுள்ளது. நேற்று ஒரே நாளில்7,230 டோஸ் … Read more

இந்தியா- ஆஸ்திரேலியா இடையே நடைபெற்ற கிரிக்கெட் போட்டியை ரசித்த பிரதமர்கள்

அகமதாபாத்: குஜராத்தின் அகமதாபாத்தில் நேற்று நடைபெற்ற இந்தியா, ஆஸ்திரேலியா இடையிலான கிரிக்கெட் டெஸ்ட் போட்டியை பிரதமர் நரேந்திர மோடி, ஆஸ்திரேலிய பிரதமர் அந்தோணி அல்பானீஸ் ஒன்றாகப் பார்த்து ரசித்தனர். ஆஸ்திரேலியாவில் கடந்த ஆண்டு மே மாதம் நடைபெற்ற நாடாளுமன்ற தேர்தலில் ஆஸ்திரேலிய தொழிலாளர் கட்சி வெற்றி பெற்றது. அந்த கட்சியின் தலைவர் அந்தோணி அல்பானீஸ் பிரதமராக பதவியேற்றார். அவர் பதவியேற்ற பிறகு முதல்முறையாக 4 நாட்கள் பயணமாக இந்தியாவுக்கு வருகை தந்துள்ளார். குஜராத்தின் அகமதாபாத் சர்வதேச விமான … Read more

ஆஸ்திரேலிய பிரதமர் ஆன்டனி அல்பானிசுடன் பிரதமர் மோடி இன்று பேச்சுவார்த்தை!

பிரதமர் மோடி, ஆஸ்திரேலியப் பிரதமர் ஆன்டனி அல்பானிஸ் இடையே இன்று நடைபெறும் பேச்சுவார்த்தையில் வர்த்தகம், முதலீடு, பாதுகாப்பு துறைகளில் ஒத்துழைப்பு குறித்து விவாதிக்கப்பட உள்ளது. நான்குநாள் அரசுமுறைப் பயணமாக இந்தியா வந்த அல்பானிஸ் அகமதாபாத்திலும், மும்பையிலும் பல்வேறு நிகழ்ச்சிகளில் பங்கேற்றார். நேற்று மாலை மும்பையில் டப்பாவாலாக்களை சந்தித்து உரையாடிய அவர், விக்ராந்த் போர்க்கப்பலைப் பார்வையிட்டார். இந்நிலையில், குடியரசுத் தலைவர் மாளிகையில் அதிகாரப்பூர்வ வரவேற்பு அளிக்கப்படுகிறது. அதனைத் தொடர்ந்து பிரதமர் மோடியும், ஆஸ்திரேலியப் பிரதமரும் பேச்சுவார்த்தை நடத்த உள்ளனர். … Read more

வர்த்தகம், முதலீடு, பாதுகாப்பு துறைகளில் ஒத்துழைப்பு குறித்து ஆஸ்திரேலிய பிரதமர் அல்பானிசுடன் மோடி இன்று பேச்சுவார்த்தை

புதுடெல்லி: இந்தியா-ஆஸ்திரேலியா பிரதமர்கள் இன்று நடத்த இருக்கும் பேச்சுவார்த்தையில் வர்த்தகம், முதலீடு, கனிம வளங்கள் மற்றும் பாதுகாப்பு குறித்து கலந்து ஆலோசிக்க இருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது. பிரதமர் மோடியின் அழைப்பை ஏற்று ஆஸ்திரேலிய பிரதமர் அன்டனி அல்பானிஸ் 4 நாள் அரசுமுறைப் பயணமாக நேற்று முன்தினம் இந்தியா வந்துள்ளார்.  நேற்று அகமதாபாத்தில் நடந்த இந்தியா-ஆஸ்திரேலியா இடையேயான 4வது டெஸ்ட் போட்டியை பிரதமர் மோடியுடன் பார்த்து ரசித்தார். இதையடுத்து, மும்பை சென்ற அல்பானிஸ் அங்கு நடைபெற்ற இந்தியா-ஆஸ்திரேலியா … Read more

மாவீரன் லசித் போர்புகான் பற்றிய 42 லட்சம் கட்டுரை – கின்னஸ் சாதனை படைத்த தொகுப்பு

குவாஹாட்டி: அசாம் பகுதியில் அஹோம் ராஜ்ஜியத்தின் கமாண்டர் லசித் போர்புகான் பற்றி 42 லட்சம் கட்டுரை தொகுப்பு கின்னஸ் உலக சாதனையில் இடம் பெற்றுள்ளது. அசாம் மாநிலம் கடந்த 1671-ம் ஆண்டில் அஹோம் பேரரசாக இருந்தது. அப்போது அசாம் பகுதியை கைப்பற்ற முகலாய படைகள் முயன்றன. அப்போது அஹோம் ராஜ்ஜியத்தின் கமாண்டர் லசித் என்பவர் தலைமையில் பிரம்மபுத்ராவின் சராய்காட் பகுதியில் முகலாய படைகளுக்கு எதிராக போர் நடந்தது. அப்போது ராஜா ராம் சிங் தலைமையிலான முகலாய படைகளின் … Read more

ஒடிசாவில் கேமரா மற்றும் மைக்ரோசிப் போன்ற சாதனங்களுடன் பிடிபட்ட புறா.. உளவு பார்க்க அனுப்பப்பட்டதா என போலீஸார் தீவிர விசாரணை..!

ஒடிசாவின் பாரதீப் கடற்பகுதியில் கேமரா மற்றும் மைக்ரோசிப் போன்ற சாதனங்கள் பொருத்தப்பட்ட புறா ஒன்று பிடிபட்டது. ஜகத்சிங்பூர் மாவட்டத்திலுள்ள கோனார்க் கடற்கரையிலிருந்து 35 கிலோ மீட்டர் தூரத்தில் மீனவர்கள் சிலர், சில தினங்களுக்கு முன்பு மீன்பிடித்துக் கொண்டிருந்தனர். அப்போது, காலில் கேமிரா போன்ற சாதனங்கள் பொருத்தப்பட்ட புறா ஒன்று மீன்பிடி படகில் வந்து அமர்ந்ததுள்ளது. அதன் காலிலும், இறக்கையிலும் ஏதோ எழுதப்பட்டிருப்பதை அறிந்த பெஹெரா என்ற மீனவர், அதைப் பிடித்து காவல் நிலையத்தில் ஒப்படைத்துள்ளார். இந்த புறா … Read more

பெண்களுக்கான 33% இட ஒதுக்கீட்டுடன் நாகாலாந்தில் 13 ஆண்டுகளுக்கு பிறகு வரும் மே மாதம் 16ம் தேதி உள்ளாட்சி தேர்தல்!!

கோஹிமா : நாகாலாந்தில் 13 ஆண்டுகளுக்கு பிறகு வரும் மே மாதம் 16ம் தேதி உள்ளாட்சி தேர்தல் நடைபெற உள்ளது. நாகாலாந்து உள்ளாட்சி அமைப்புகளில் பெண்களுக்கு 33% ஒதுக்கீடு அளிக்கப்பட்டதற்கு எதிர்ப்பு எழுந்ததால் அம்மாநிலத்தில் உள்ளாட்சி தேர்தல் நடத்தப்படாமல் இருந்தது. இதையடுத்து பல்வேறு அமைப்புகளும் உச்ச நீதிமன்றத்தை அணுகினர். வரும் மார்ச் 14ம் தேதிக்குள் உள்ளாட்சி தேர்தல் தேதிகளை அறிவிக்க வேண்டும் என உச்சநீதிமன்றம் உத்தரவிட்டது. இதனையடுத்து பெண்களுக்கான 33% இட ஒதுக்கீட்டுடன் வரும் மே 16ம் … Read more

‘மார்பிங்’ படங்களுடன் பெண் நீதிபதிக்கு ரூ.20 லட்சம் கேட்டு மிரட்டல்

ஜெய்ப்பூர்: ராஜஸ்தான் மாநிலம் ஜெய்ப்பூரில் பெண் நீதிபதி ஒருவர் கடந்த மாதம் 7-ம் தேதி நீதிமன்ற அறையில் இருந்தபோது, அவருக்கு ஒரு பார்சல் வந்தது. பெண் நீதிபதியின் குழந்தை படிக்கும் பள்ளியில் இருந்து அந்த பார்சல் வந்துள்ளதாக கூறி அதனை நீதிபதியின் சுருக்கெருத்தாளரிடம் இளைஞர் ஒருவர் கொடுத்துள்ளார். பார்சலை திறந்தபோது அதில் சில இனிப்புகளுடன் பெண் நீதிபதியின் மார்பிங் செய்யப்பட்ட ஆபாச புகைப்படங்கள் இருந்துள்ளன. அதில் இருந்த கடிதத்தில், “ரூ.20 லட்சத்துடன் தயாராக இரு. இல்லாவிடில் இந்தப் … Read more