நேபாள ஜனாதிபதியாக ராம்சந்திரா தேர்வு

காத்மாண்டு: நேபாளத்தில் ஜனாதிபதியாக இருக்கும் பித்யா தேவி பண்டாரி பதவிக்காலம் நாளை மறுநாள்  முடிவடைகிறது. எனவே அங்கு புதிய ஜனாதிபதியை தேர்வு செய்யும் தேர்தல் நேற்று  நடந்தது. இந்த தேர்தலில் நேபாள காங்கிரஸ் சார்பில் ராம்சந்திரா பவ்டெல்,  சிபிஎன், யுஎம்எல் கூட்டணி சார்பில் சுபாஷ் சந்திரா நிறுத்தப்பட்டுள்ளனர்.  நேற்று காலை 10 மணி முதல் மாலை 3 மணி வரை எம்பிக்கள், எம்எல்ஏக்கள் ஓட்டு போட்டனர். மொத்தம் உள்ள 550 மாகாண சட்டப்பேரவை உறுப்பினர்களில் 518 பேர் … Read more

குழந்தைகள் காப்பக திட்ட முறைகேடு: சிபிஐ விசாரணை தொடங்கியது

புதுடெல்லி: குழந்தைகள்  காப்பக திட்ட முறைகேடு தொடர்பான வழக்கில் சிபிஐ விசாரணை தொடங்கியுள்ளது. ராஜிவ் காந்தி தேசிய குழந்தைகள் பகல் காப்பக திட்டம்  கடந்த 2006ம் ஆண்டு தொடங்கப்பட்டது. இதன் செயல்பாடுகள் குறித்து ஆய்வு நடத்துவதற்கு அரசு இணை செயலாளர் தலைமையில் 3 பேர் கொண்ட கமிட்டியை டெல்லி உயர் நீதிமன்றம் அமைத்தது. அப்போது  பல முறைகேடுகள் நடந்துள்ளது தெரிய வந்தது. எத்தனை குழந்தைகள் சேர்ந்து உள்ளனர் போன்ற அடிப்படை விவரங்களை சேகரிக்காமல்  நிதி ஒதுக்கப்பட்டுள்ளது. குறைவான … Read more

கேரளாவில் 10ம் வகுப்பு தேர்வு இன்று தொடங்கியது: நாளை பிளஸ் 2 தேர்வுகள் துவக்கம்

திருவனந்தபுரம்: கேரளாவில் 10 வகுப்பு தேர்வுகள் இன்று தொடங்கியது. பிளஸ் 1 மற்றும் பிளஸ் 2 தேர்வுகள் நாளை (10ம் தேதி) தொடங்குகிறது. கேரளாவில் 10ம் வகுப்பு அரசு பொதுத் தேர்வுகள் இன்று தொடங்கியது. வரும் 29ம் தேதி தேர்வுகள் முடிவடைகிறது. பிளஸ் 1 மற்றும் பிளஸ் 2 பொதுத் தேர்வுகள் நாளை (10ம் தேதி) தொடங்கி 30ம் தேதி நிறைவடைகிறது. மொத்தம் 4,19,554 மாணவர்கள் 10ம் வகுப்பு தேர்வும், 4,25,361 மாணவர்கள் பிளஸ் 1 தேர்வும், … Read more

நிரந்தர ஆளுநரை நியமிக்க வேண்டும்-இரவல் ஆளுநர் வேண்டாம்: புதுச்சேரி சட்டப்பேரவையில் சுயேட்சை எம்எல்ஏ நேரு முழக்கம்

புதுச்சேரி: புதுச்சேரி சட்டப்பேரவையில் பட்ஜெட் கூட்டத்தொடரில் ஆளுநர் தமிழிசை உரையாற்றிய போது நிரந்தர ஆளுநர் நியமிக்க வேண்டும் இரவல் ஆளுநர் நியமிக்க வேண்டாம் என பதாகையை காண்பித்து ரங்கசாமி ஆதரவு சுயேட்சை எம்.எல்.ஏ நேரு வெளிநடப்பு செய்ததால் பரபரப்பு ஏற்பட்டது. புதுச்சேரி சட்டப்பேரவையில் பட்ஜெட் கூட்டத்தொடர் தமிழ் தாய் வாழ்த்துடன் தொடங்கியது. பின்னர், பாரதியாரின் வரிகளை வாசித்து ஆளுநர் தமிழிசை உரையாற்றினார். அப்போது ரங்கசாமி ஆதரவு சுயேட்சை எம்.எல்.ஏ நேரு எழுந்து நின்று கையில் இருந்த பதாகையை … Read more

பிரபல நடிகர் சதீஷ் கவுசிக் மாரடைப்பால் மரணம்: திரையுலகினர் கடும் அதிர்ச்சி

புதுடெல்லி: பிரபல பாலிவுட் நடிகர் சதீஷ் கவுசிக் மாரடைப்பால் மரணமடைந்தார். அவரது உடலுக்கு திரையுலகினர் இரங்கல் தெரிவித்துள்ளனர். பிரபல பாலிவுட் நடிகரும் இயக்குனருமான சதீஷ் கவுசிக். இவர், டெல்லியில் உள்ள அவரது நண்பர் வீட்டில் இருந்தபோது, இன்று அதிகாலையில் உடல் நலம் பாதித்தது. உடனே அவர் மருத்துவமனைக்கு அழைத்து செல்லப்பட்டார். டாக்டர்கள் பரிசோதனையில், அவர் மாரடைப்பால் ஏற்கனவே இறந்து விட்டார்’ என்று தெரிவித்தனர். அவருக்கு வயது 67. இந்த தகவலை அவரது நெருங்கிய நண்பரான நடிகர் அனுபம் … Read more

காங்கிரஸ் கரண்ட் கொடுக்காததால் மக்கள் தொகை பெருகியது; பாஜக அமைச்சர் பலே.!

கடந்த காங்கிரஸ் ஆட்சியில் மின்சாரம் தொடர்ச்சியாக வழங்கப்படாததால் மக்கள் தொகை அதிகரித்துள்ளதாக ஒன்றிய பாஜக அமைச்சர் பிரகலாத் ஜோஷி தெரிவித்துள்ளார். கர்நாடகா மநிலத்தில் வருகிற மே மாத்திற்குள் சட்டப்பேரவை தேர்தல் நடைபெற உள்ளது. மாநிலத்தில் காங்கிரஸ், பாஜக மற்றும் மதச்சார்பற்ற ஜனதா தளம் ஆகிய கட்சிகளிடையே மும்முனை போட்டி நிலவிவருகிறது. கடந்த சட்டப்பேரவை தேர்தலின் போது எந்த கட்சிக்கும் பெரும்பான்மை கிடைக்காததால், காங்கிரஸ் மதச்சார்பற்ற ஜனதா தளம் ஆகிய கட்சிகள் கூட்டணி அமைத்து ஆட்சியமைத்தது. ஆனால் அக்கூட்டணி … Read more

ரூ500 கள்ள நோட்டுகளை புழக்கத்தில் விட்ட விவசாயத்துறை பெண் அதிகாரி கைது: கேரளாவில் பரபரப்பு

திருவனந்தபுரம்: கேரள மாநிலம் ஆலப்புழாவில் ரூ500 கள்ள நோட்டுகளை புழக்கத்தில் விட்ட விவசாயத்துறை பெண் அதிகாரியை போலீசார் கைது செய்து விசாரித்து வருகின்றனர். கேரள மாநிலம் ஆலப்புழாவைச் சேர்ந்த மீன்பிடி உபகரணங்கள் விற்பனை செய்யும் ஒருவர் நேற்று அங்குள்ள ஒரு வங்கியில் ரூ50 ஆயிரம் முதலீடு செய்வதற்காக சென்றார். தொடர்ந்து அவர் கொடுத்த பணத்தை வங்கி அதிகாரிகள் பரிசோதித்து பார்த்தனர். அப்போது அதில் 7 ரூ500  நோட்டுகள் கள்ள நோட்டுகள் என்பது தெரியவந்தது. இதுகுறித்து வங்கி அதிகாரிகள் … Read more

சிபிஐயை தொடர்ந்து அமலாக்கத்துறையால் மணீஷ் சிசோடியா அதிரடி கைது: நாளை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்த திட்டம்..!

டெல்லி: டெல்லி முன்னாள் துணை முதல்வர் மணீஷ் சிசோடியா அமலாக்கத்துறையால் கைது செய்யப்பட்டார். டெல்லி மதுபானக்கொள்கை முறைகேடு தொடர்பாக விசாரணை நடத்தி வந்த சிபிஐ அதிகாரிகள் கலால் துறை அதிகாரிகள் மற்றும் தொழிலதிபா்கள் சிலரை கைது செய்தது. இதன் தொடர்ச்சியாக, கலால் துறை அமைச்சராக இருந்த துணை முதல்வர் சிசோடியாவின் வீடு மற்றும் அலுவலகம் உள்ளிட்ட இடங்களில்  சிபிஐ அதிகாரிகள் சோதனை நடத்தினர். அதன்பின் சிசோடியாவை விசாரணைக்காக இரண்டு முறை வரவழைத்தனர். இரண்டாவது முறையாக கடந்த மாதம்  … Read more

மே மாதம் வரை இந்தியாவில் வெப்ப அலை பல மாநிலங்களை தாக்கும்: வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை

டெல்லி: இந்தியாவின் பல்வேறு பகுதிகளில் இதுவரை இல்லாத அளவில் இந்தாண்டு வெப்ப அலை வீச வாய்ப்புள்ளது என்று இந்திய வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது. இந்தியாவில் ஒவ்வொரு ஆண்டும் ஏப்ரல், மே மாதங்களில் வெயிலின் தாக்கம் அதிகமாக இருக்கும். மார்ச் மாதம் வெயில் தொடங்கி ஏப்ரல், மே மாதங்களில் வெயில் உச்சத்தில் இருக்கும். ஆனால், இந்தாண்டு பிப்ரவரி மாதமே இந்தியாவில் வெயிலின் தாக்கம் புதிய உச்சத்தை தொட்டுள்ளது. இதன்படி, இந்தியாவில் கடந்த 1901ம் ஆண்டுக்கு பிறகு … Read more

தமிழகத்தில் 4 மிதக்கும் கப்பல் தளம்: ஒன்றிய அமைச்சகம் அனுமதி

டெல்லி: சாகர்மாலா திட்டம் என்பது தமிழ்நாடு சுற்றுலா பொருளாதாரத்திற்கு ஊக்கமளிக்கிறது என கூறியுள்ள ஒன்றிய அமைச்சர், தமிழ்நாட்டில் கூடுதலாக 4 மிதக்கும் கப்பல் தளத்துக்கு அனுமதி வழங்கியுள்ளதாக தெரிவித்துள்ளார். ஒன்றிய துறைமுகங்கள், கப்பல் போக்குவரத்து மற்றும் நீர்வழி அமைச்சகம் நாட்டின் சமூக பொருளாதார சூழலை வலுப்படுத்த சாகர்மாலா திட்டத்தின் கீழ் சீர்திருத்தங்கள் மற்றும் முயற்சிகளை மேற்கொண்டு வருகிறது. அதில் பழமையான முறையில் நிரந்தர கப்பல் இறங்கு தளங்களை அமைப்பதற்கு பதிலாக தனித்துவமான மிதக்கும் இறங்கு தளங்களை உருவாக்க … Read more