டெல்லி மாநகராட்சி நிலைக்குழு உறுப்பினர்கள் தேர்தலுக்கு முன் பாஜகவில் இணைந்த ஆம் ஆத்மி கவுன்சிலர்

புதுடெல்லி: டெல்லி மாநகராட்சி நிலைக்குழு உறுப்பினர்கள் தேர்தல் காலை 10 மணிக்கு தொடங்கிய நிலையில் அதற்கு சில மணித்துளிகள் முன்னதாக ஆம் ஆத்மி கவுன்சிலர் பவன் ஷெராவத் பாஜகவில் இணைந்தார். இதனால் டெல்லி மாநகராட்சியில் இன்று புதிதாக மற்றுமொரு குழப்பம் ஏற்பட்டுள்ளது. முன்னதாக நேற்று (பிப்.24), டெல்லி மாநகராட்சியின் மாமன்றத்தில் புதிய மேயர் ஷெல்லி ஓபராய் தலைமையில் நிலைக்குழு உறுப்பினர்கள் தேர்தல் நடைபெற்றது. இதில் முறைகேடு நடந்ததாகக் கூறி மீண்டும் தேர்தல் நடத்த வலியுறுத்தி பாஜக உறுப்பினர்கள் … Read more

ஆம் ஆத்மி – பாஜ மோதல்; டெல்லி மாநகராட்சியில் பாட்டில், செருப்பு வீச்சு

புதுடெல்லி: டெல்லி மாநகராட்சிக்கு நிலைக்குழு உறுப்பினர்கள் 6 பேரை தேர்ந்தெடுக்கும் விவகாரத்தில், ஆம் ஆத்மி – பாஜ இடையே கடும் மோதல் ஏற்பட்டது. நேற்று முன்தினம் தொடங்கிய நிலைக்குழு உறுப்பினர்கள் தேர்தல், நேற்று காலை வரை விடிய விடிய நடந்தது. இரவு முழுவதும் இரு கட்சி கவுன்சிலர்கள் அடிக்கடி மோதிக் கொண்டனர். இதனால், 14 முறை மாநகராட்சி மன்றம் ஒத்திவைக்கப்பட்டது. இரவு முழுவதும் கவுன்சிலர்கள் அவையிலேயே தங்கி, தூங்கினர். நேற்று காலை நடந்த மோதலில் தண்ணீர் பாட்டில்கள், … Read more

நாய்கள் கடித்து சிறுவன் உயிரிழந்த சம்பவம் – ஹைதராபாத் மாநகராட்சி உடனடியாக நஷ்டஈடு வழங்க உயர் நீதிமன்றம் உத்தரவு

ஹைதராபாத்: ஹைதராபாத் அம்பர்பேட்டையை சேர்ந்த கங்காதர் என்பவரின் மகன் பிரதீப் (4). கடந்த 19-ம் தேதிவிளையாடச் சென்ற சிறுவன் பிரதீப் கையில் பிஸ்கெட் பாக்கெட்டுகள் இருந்துள்ளன. அப்போது, அப்பகுதியில் உள்ள சுமார் ஐந்தாறு தெரு நாய்கள், சிறுவன் பிரதீப்பை சுற்றி வளைத்து கடித்து குதறின.தம்பியின் அலறல் சத்தம் கேட்டுஅவனது சகோதரி மேக்னா ஓடிவந்தாள். அங்கு தம்பியை நாய்கள் கடித்து குதறிக் கொண்டிருப்பதைப் பார்த்து பயந்து போய் அழுது கொண்டே ஓடி தந்தையிடம் கூறினாள். கங்காதரும் பதறியபடி ஓடிச் … Read more

சத்தீஸ்கர் மாநிலம் பதபாரா மாவட்டத்தில் லாரி மீது வேன் மோதியதில் 11 பேர் உயிரிழப்பு!!

ராய்ப்பூர் : சத்தீஸ்கர் மாநிலம் பதபாரா மாவட்டத்தில் லாரி மீது வேன் மோதியதில் 11 பேர் உயிரிழந்தனர். தொழிற்சாலையில் இருந்து ஆட்களை ஏற்றிச் சென்ற வேன், லாரி மீது மோதி விபத்தில் சிக்கியது.

தீர்ப்பை இணையத்தில் அறிய தனித்துவ எண்: உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி அறிவிப்பு

புதுடெல்லி: இணையத்தில் தீர்ப்பு விவரங்களை எளிதாக தேடி கண்டுபிடிக்க ஒவ்வொரு தீர்ப்புக்கும் தனித்துவ எண் வழங்கப்படும் என்று உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி சந்திரசூட் அறிவித்துள்ளார். உச்ச நீதிமன்றத்தில் தினசரிபிறப்பிக்கப்படும் உத்தரவுகள், தீர்ப்புகள் நீதிபதிகள் கையெழுத்திட்ட உடன் இணையதளத்தில் பதிவேற்றம் செய்யப்படுகிறது. வழக்குஎண், நீதிபதியின் பெயர், தீர்ப்புவெளியான நாள், வாதி, பிரதிவாதியின் பெயர் ஆகியவற்றை இணையத்தில் பதிவிட்டு குறிப்பிட்ட தீர்ப்பு விவரங்களை அறிந்து கொள்ள முடிகிறது. இந்த சூழலில் இணையத்தில் தீர்ப்பை எளிதாக அறிய கூடுதலாக ஒரு … Read more

76 இடங்களில் என்ஐஏ அதிரடி ரெய்டு; காலிஸ்தான் தீவிரவாதியின் கூட்டாளி உட்பட 6 பேர் கைது

புதுடெல்லி: நாடு முழுவதும் என்ஐஏ நடத்திய சோதனையில் காலிஸ்தான் தீவிரவாதியின் கூட்டாளி உட்பட 6 பேர் கைது செய்யப்பட்டனர். கிரிமினல்கள், போதை பொருள் கடத்தல்காரர்கள் மற்றும் தீவிரவாதிகள் இடையேயான தொடர்பு குறித்து தேசிய புலானய்வு அமைப்பு(என்ஐஏ) விசாரித்து வருகிறது. இந்நிலையில். பஞ்சாப், அரியானா,டெல்லி,ராஜஸ்தான்,உத்தர பிரதேசம், மத்திய பிரதேசம், மகாராஷ்டிரா உள்ளிட்ட 8 மாநிலங்களில் 76 இடங்களில் என்ஐஏ நேற்று  அதிரடி சோதனை நடத்தியது. இச்சோதனையில்  ராஜஸ்தான் மாநிலம் கங்காநகர் மாவட்டத்தில் லக்கி கோக்கர் என்ற டெனிசை என்ஐஏ … Read more

பிரதமர் மோடியை கிண்டல் செய்த காங். மூத்த தலைவர் பவன் கேரா கைது – இடைக்கால ஜாமீன் வழங்கியது உச்ச நீதிமன்றம்

புதுடெல்லி: பிரதமர் மோடியை, காங்கிரஸ் மூத்த தலைவர் பவன் கேரா கிண்டல் செய்தது தொடர்பாக புகார் அளிக்கப்பட்டதால், அவரை அசாம் போலீஸார் டெல்லி விமான நிலையத்தில் கைது செய்தனர். அவருக்கு உச்சநீதிமன்றம் வரும் 28-ம் தேதி வரை இடைக்கால ஜாமீன் வழங்கியது. காங்கிரஸ் செய்தி தொடர்பாளர் பவன் கேரா சமீபத்தில் பத்திரிகையாளர் சந்திப்பை நடத்தினார். அதானி குழுமத்துக்கு எதிராக அமெரிக்காவின் ஹிண்டன்பர்க் நிறுவனம் அளித்த அறிக்கை தொடர்பாக நாடாளுமன்ற கூட்டுக்குழு விசாரணை தேவை என்றார். அப்போது அவர் … Read more

ரூபா ஐபிஎஸ்க்கு நோட்டீஸ் அனுப்பினார் ரோகினி ஐஏஎஸ்

கர்நாடக ஐஏஎஸ் அதிகாரியான ரோகினி சிந்தூரி, பெண் ஐபிஎஸ் அதிகாரியான ரூபா மீது மான நஷ்டஈடு கேட்டு நோட்டீஸ் அனுப்பியுள்ளார். கர்நாடக மாநில கைவினைப் பொருட்கள் மேம்பாட்டுக் கழகத்தின் நிர்வாக இயக்குனராக இருந்த ரூபா, இந்து சமய மற்றும் அறநிலையத்துறை ஆணையராக இருந்த ரோகினி குறித்து சமூக வலைதளங்களில் பல்வேறு கருத்துக்களையும், தனிப்பட்ட புகைப்படங்களையும் பகிர்ந்திருந்தார். இருவரும் வலைதளங்களில் பகிரங்கமாக கருத்துத் தெரிவித்ததால் காத்திருப்போர் பட்டியலுக்கு மாற்றப்பட்டனர். இந்நிலையில் ரூபாவின் செயல் தனக்கும், தனது குடும்பத்திற்கும் மனவேதனை … Read more

ரோகிணி ஐஏஎஸ்சுக்கு எதிராக சமூகவலைத்தளத்தில் பதிவிட ஐபிஎஸ் அதிகாரி ரூபாவுக்கு தடை: பெங்களூரு நீதிமன்றம் உத்தரவு

பெங்களூரு: ஐஏஎஸ் அதிகாரி ரோகிணி சிந்தூரிக்கு எதிராக மீடியா மற்றும் சமூகவலைத்தளங்களில் எந்த கருத்தும் பதிவு செய்யக்கூடாது என்று ஐபிஎஸ் அதிகாரி டி.ரூபாவுக்கு பெங்களூரு சிட்டி சிவில் நீதிமன்றம் தடை விதித்து விசாரணையை மார்ச் 7ம் தேதிக்கு ஒத்தி வைத்தது. கர்நாடக மாநில அரசு துறையில் பணியாற்றும் ஐஏஎஸ் அதிகாரி ரோகிணி சிந்தூரி மற்றும் ஐபிஎஸ் அதிகாரி ரூபா மவுதிகல் இடையில் கடந்த 4 நாட்களாக மீடியா மற்றும் சமூகவலைத்தளங்களில் ஒருவர் மீது ஒருவர் குற்றம்சாட்டி பதிவுகள் … Read more

சுற்றுச்சூழல் பாதுகாப்பு ஒவ்வொருவரின் கூட்டுப் பொறுப்பு – நிலையான வளர்ச்சி மாநாட்டில் பிரதமர் மோடி வலியுறுத்தல்

புதுடெல்லி: சுற்றுச்சூழல் பாதுகாப்பு என்பது நாம் ஒவ்வொருவரின் கூட்டுப்பொறுப்பு என பிரதமர் நரேந்திர மோடி தெரிவித்துள்ளார். டெல்லியில் நேற்று முன்தினம் நடைபெற்ற உலக நிலையான வளர்ச்சி 22 வது உச்சிமாநாட்டின் தொடக்கவிழாவில் பிரதமர் மோடி விடுத்துள்ள செய்தி: சுற்றுச்சூழல் பாதுகாப்பு என்பதுஒவ்வொருவரின் கூட்டுப் பொறுப்பாகும். இதனை உணர்ந்து, சுற்றுச்சூழலை மேம்படுத்த இந்தியா அர்ப்பணிப்பு உணர்வுடன் செயல்பட்டு வருகிறது. சுற்றுச்சூழல் பாதுகாப்புக்காகவே புதுப்பிக்கத்தக்க மற்றும் மாற்று எரிசக்தி ஆதாரங்களை கண்டறியும் பணியில் இந்தியா முழுமூச்சுடன் ஈடுபட்டுள்ளது. நகர்ப்புற சவால்களுக்கு … Read more