பஞ்சாப்பில் கலவரம் எதிரொலி: கைதான மத தலைவரின் உதவியாளர் விடுதலை: நீதிமன்றம் உத்தரவு

அமிர்தசரஸ்: பஞ்சாப்பில் நேற்று நடந்த கலவரத்திற்கு காரணமான மதத் தலைவரின் உதவியாளரை விடுவிக்க நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. பஞ்சாப் மாநிலத்தின் ‘வாரிஸ் பஞ்சாப் தே’ என்ற மத அமைப்பின் தலைவர் அம்ரித்பால் சிங்கின் நெருங்கிய உதவியாளர் லவ்பிரீத் துஃபான் என்பவர் மீது ஆள்கடத்தல் வழக்கு பதிவு செய்த போலீசார், நேற்று அவரை கைது செய்தனர். இதனால் ஆத்திரமடைந்த அந்த அமைப்பின் தொண்டர்கள் அமிர்தசரஸில் கலவரத்தில் ஈடுபட்டனர். அஜ்னாலா காவல் நிலையத்தையும் அடித்து நொறுக்கினர். கையில் துப்பாக்கியும், வாள்களும் வந்த … Read more

டிஜிட்டல் பரவலாக்கம் மக்களின் வாழ்க்கையை எளிதாக்கி இருக்கிறது: பிரதமர் நரேந்திர மோடி

புதுடெல்லி: டிஜிட்டல் பரவலாக்கம் மக்களின் வாழ்க்கையை எளிதாக்கி இருக்கிறது என்று பிரதமர் நரேந்திர மோடி தெரிவித்துள்ளார். ஜி20 உறுப்பு நாடுகளின் நிதி அமைச்சர்கள் மற்றும் மத்திய வங்கிகளின் தலைவர்கள் பங்கேற்கும் மாநாடு பெங்களூருவில் இன்று (பிப். 24) நடைபெற்று வருகிறது. நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன், ரிசர்வ் வங்கி ஆளுநர் சக்திகாந்த தாஸ் தலைமையில் நடைபெறும் இந்த மாநாட்டில் பிரதமர் நரேந்திர மோடி காணொலி வாயிலாக தொடக்க உரை ஆற்றினார். அப்போது அவர் கூறியதாவது: ”நிதி மற்றும் … Read more

காங்கிரஸ் செயற்குழு உறுப்பினர்களை நியமிக்கும் அதிகாரம் கட்சி தலைவருக்கே வழங்கப்பட்டுள்ளது: ஜெய்ராம் ரமேஷ்

சத்திஸ்கர்: காங்கிரஸ் செயற்குழு உறுப்பினர்களை நியமிக்கும் அதிகாரம் கட்சி தலைவருக்கே வழங்கப்பட்டுள்ளது என்று ஜெய்ராம் ரமேஷ் கூறியுள்ளார். சத்தீஸ்கரின் ராய்ப்பூரில் நடைபெற்று வரும் காங்.சிறப்பு மாநாட்டு முடிவு பற்றி முத்த தலைவர் ஜெயராம் ரமேஷ் விளக்கம் அளித்துள்ளார். 

மாதவிடாய் நாட்களில் பணிபுரியும் பெண்களுக்கு விடுப்புக்கோரி வழக்கு – உச்சநீதிமன்றம் அறிவுரை

மாதவிடாய் நாட்களில் மாணவிகள் மற்றும் பணி செய்யும் பெண்களுக்கு விடுமுறை வழங்க வேண்டும் என உத்தரவிடக் கோரிய பொதுநல மனுவை விசாரிக்க உச்சநீதிமன்றம் மறுப்பு தெரிவித்துள்ளது.  உச்ச நீதிமன்றத்தில் இது தொடர்பாக தாக்கல் செய்யப்பட்ட பொதுநல மனுவில் மாதவிடாய் நாட்களில் மாணவிகள் மற்றும் பணி செய்யும் பணிப் பெண்களுக்கு பல்வேறு நிறுவனங்கள் தானாக முன்வந்து விடுப்பு வழங்கி வருவதாகவும், இதனை அரசுகளும் பின்பற்றும் வகையில் பொதுவான ஒரு உத்தரவாக நாடு முழுவதும் பின்பற்றக்கூடிய ஒன்றாக பிறப்பிக்க வேண்டும் … Read more

காங்கிரஸில் இருந்து விலகுகிறாரா ராஜாஜியின் கொள்ளுப்பேரன்..?

இந்தியாவின் கடைசித் தலைமை ஆளுநராகப் பணியாற்றியவர் ராராஜி. அத்துடன் இந்திய தேசிய காங்கிரசின் தலைவர், சென்னை மாகாண முதல்வர், சென்னை மாநில முதல்வர், மேற்கு வங்க ஆளுநர், இந்திய ஒன்றியத்தின் உட்துறை அமைச்சர் போன்ற பல பதவிகளிலும் பணியாற்றியுள்ளார். பாரத ரத்னா விருதைப் பெற்ற முதல் இந்தியர்களில் ஒருவர். பிற்காலத்தில் ஜவகர்லால் நேருவுடன் ஏற்பட்ட கருத்து வேறுபாட்டின் காரணமாக 1959-ல் சுதந்திராக் கட்சியை தொடங்கினார். இக்கட்சியுடன் கூட்டணி அமைத்து 1967-ல் திராவிட முன்னேற்றக் கழகம் தமிழ்நாட்டில் ஆட்சியை … Read more

கள்ளக்காதலுக்கு இடையூறாக இருந்த மகனைக் கொடூரமாக அடித்து கொன்ற தாய்..!!

மேற்கு வங்க மாநிலம் குல்தாலியின் காசிர் ஹாட்டில் வசிக்கும் அப்துல் ஹுசைன் ஷேக் (31) என்பவருடன் கடந்த ஆண்டு முதல் மஃபுசா பியாதாய்க்கு திருமணத்துக்குப் புறம்பான தொடர்பு இருந்தது. பியாதாயின் கணவர் தோயிப் அலி வேலைக்காக கொல்கத்தா சென்றிருந்தார். அப்போது இருவருக்குமிடையிலான சந்திப்பு ஆரம்பமானது. கடந்த 21-ம் தேதி, மஃபுசாவும் அப்துல்லாவும் திருமணம் செய்து கொள்வதற்காக குழந்தையை விட்டுவிட்டு ஓடிவிட திட்டமிட்டனர். ஆனால், குழந்தையை தன்னுடன் அழைத்துச் செல்ல அப்துல் மறுத்ததாக கூறப்படுகிறது. கடந்த செவ்வாய்க்கிழமை காலை … Read more

அடுத்த ஆண்டு நடக்கும் நாடாளுமன்ற தேர்தலை சந்திப்பது சவாலானது என்பதுடன் ஆட்சிமாற்றத்துக்கான ஒரு வாய்ப்பாகும்: காங். தலைவர் கார்கே பேச்சு

ராய்பூர்: அடுத்த ஆண்டு நடக்கும் நாடாளுமன்ற தேர்தலை சந்திப்பது சவாலானது என்பதுடன் ஆட்சிமாற்றத்துக்கான ஒரு வாய்ப்பாகும் என காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே தெரிவித்துள்ளார். சத்தீஸ்கர் மாநிலம் ராய்பூரில் காங்கிரஸ் காரியக் கமிட்டியின் 85வது மாநாடு, கட்சித்தலைவர் மல்லிகார்ஜூன கார்கே தலைமையில் தொடங்கியது. இன்று முதல் 3 நாட்களுக்கு நடைபெறும் இந்த காங்கிரஸ் மாநாட்டில், 9 மாநில சட்டப்பேரவைத் தேர்தல் குறித்தும், அடுத்த ஆண்டு மக்களவை தேர்தல் வியூகங்கள் தொடர்பாகவும் ஆலோசனை நடைபெறவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இந்நிலையில், … Read more

காங்கிரஸ் முக்கிய கூட்டத்தை தவிர்த்த காந்தி குடும்பத்தினர்: ராய்பூர் மாநாட்டில் பங்கேற்கிறார்கள்

ராய்பூர்: சத்தீஸ்கரில் இன்று (பிப்.24) நடக்கும் காங்ரகிஸ் கட்சியின் வழிகாட்டு குழுக்கூட்டத்தில் காங்கிரஸ் கட்சியின் முன்னாள் தலைவர் சோனியா காந்தி, ராகுல்காந்தி, பிரியங்கா காந்தி வத்ரா கலந்து கொள்ளவில்லை. இந்த கூட்டத்தில், காங்கிரஸ் காரிய கமிட்டியின் தேர்தல் குறித்து முக்கிய முடிவுகள் எடுக்கப்பட இருக்கிறது. காந்தி குடும்பத்தினர், புதிதாக காங்கிரஸ் கட்சியின் தலைவராக தேர்ந்தெடுக்கப்பட்டிருக்கும் மல்லிகார்ஜூன கார்கே சுதந்திரமாக செயல்பட விரும்புவதாகவும், முடிவகளில் எந்தவித பாதிப்பும் ஏற்படுவதை விரும்பவில்லை என்பதால் இந்தக் கூட்டத்தை காந்தி குடும்பத்தினர் புறக்கணித்துள்ளனர். … Read more

நீட் தேர்வு தொடர்பாக அதிமுக ஆட்சியில் தாக்கல் செய்யப்பட்ட மனுவை திரும்பபெற தமிழ்நாடு அரசுக்கு உச்சநீதிமன்றம் அனுமதி!

டெல்லி: நீட் தேர்வு தொடர்பாக அதிமுக ஆட்சியில் தாக்கல் செய்யப்பட்ட மனுவை திரும்பபெற தமிழ்நாடு அரசுக்கு உச்சநீதிமன்றம் அனுமதிவழங்கியுள்ளது. நீட் தேர்வில் இருந்து விலக்கு கோரி தமிழ்நாடு அரசு தாக்கல் செய்துள்ள மனு மீது விரைவில் விசாரணை நடைபெறும் என நீதிபதிகள் கூறியுள்ளனர். நீட் தேர்வில் இருந்து விலக்கு பெற தமிழ்நாடு அரசு தொடர்ந்து அனைத்து நடவடிக்கைகளை முன்னெடுத்துவரும் நிலையில் நீட் தேர்வு அரசியல் சாசனத்திற்கு எதிரானது என பல வலுவான வாதங்களுடன் தமிழ்நாடு அரசு புதிய … Read more

இரட்டை கொலை:பசு காவலர்களால் 20 மணிநேரம்.. 200 கி.மீ.தூரம் இஸ்லாமிய இளைஞர்கள் அலைக்கழிப்பு?

அரியானாவில் பசு கடத்தியதாக சந்தேகத்தின் பேரில் காரில் வைத்து எரித்து இஸ்லாமிய இளைஞர்கள் இருவர் கொலை செய்யப்பட்டதாக கூறப்படும் சம்பவத்தில் பல திடுக்கிடும் தகவல்கள் வெளியாகியுள்ளன. ராஜஸ்தான் மாநிலம் பரத்பூர் மாவட்டம் காட்மிக்கா கிராமத்தைச் சேர்ந்த இளைஞர்களான நசீர் (27) மற்றும் ஜுனைத் (35) ஆகிய இருவரும் கடந்த 15-ம் தேதி காணாமல் போனநிலையில், இரண்டு நாட்கள் கழித்து ஹரியானா மாநிலம் பிவானி மாவட்டம் லோஹரு கிராமத்தில் கார் ஒன்றில் எரிந்த நிலையில் சடலங்களாக மீட்கப்பட்டனர். இதில் … Read more