இந்திய கல்வி முறையை வலுப்படுத்த பட்ஜெட்டில் அதிக நிதி ஒதுக்கீடு – பிரதமர் நரேந்திர மோடி பெருமிதம்

புதுடெல்லி: 2023-24-ம் ஆண்டுக்கான மத்திய பட்ஜெட்டை நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் கடந்த பிப்ரவரி 1-ம் தேதி தாக்கல் செய்தார். இதில் இதுவரை இல்லாத வகையில் கல்விக்கு மத்திய அரசு 1.12 லட்சம் கோடி ஒதுக்கியுள்ளது. இது முந்தைய நிதியாண்டை விட 8.2 சதவீதம் அதிகமாகும். இந்நிலையில் ‘இளைஞர் சக்தியைப் பயன்படுத்துதல் – திறன் மேம்பாடு மற்றும் கல்வி’ என்ற தலைப்பில் பட்ஜெட்டுக்கு பிந்தைய இணைய வழி கலந்துரையாடல் டெல்லியில் நேற்று நடைபெற்றது. இதில் பிரதமர் நரேந்திர மோடி … Read more

சொகுசுக் கப்பலின் 50 நாள் நீர்வழிப் பயணம் 28ந் தேதி நிறைவு.. கப்பலை வரவேற்க மத்திய, மாநில அரசுகள் சார்பில் ஏற்பாடு..!

உலகின் மிகப் பெரிய நதி வழி சொகுசுக் கப்பல் எம்.வி.கங்கா விலாஸின் 50 நாள் பயணம் நாளை மறுநாள்  அஸ்ஸாம் மாநிலம் தீப்ருகரில் நிறைவு பெறுகிறது. கடந்த மாதம் 13ம் தேதி வாரணாசியில் இந்த சொகுசுக் கப்பலின் பயணத்தை பிரதமர் மோடி வாரணாசியில் தொடங்கி வைத்தார். சுமார் 3200 கிலோ மீட்டர் தூரம் பயணத்திற்குப்பின் சொகுசுக் கப்பலின் முதல் பயணம் நிறைவு பெறுகிறது. கப்பலை வரவேற்க மத்திய நீர்வழிப் போக்குவரத்துத் துறை சார்பிலும்அஸ்ஸாம் மாநில அரசு சார்பிலும் … Read more

விசாரணைக்கு ஆஜராகிறார் டெல்லி துணை முதல்வர் மணிஷ் சிசோடியா: சிபிஐ தலைமை அலுவலகத்தைச் சுற்றி 144 தடை உத்தரவு பிறப்பிப்பு.!

டெல்லி: டெல்லியில் சிபிஐ தலைமை அலுவலகத்தைச் சுற்றி 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. டெல்லி துணை முதல்வர் மணிஷ் சிசோடியாவை இன்று சிபிஐ விசாரணைக்கு அழைத்துள்ள நிலையில், தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. டெல்லியில் முதல்வர் கெஜ்ரிவால் தலைமையிலான ஆம் ஆத்மி கட்சி அரசு, மதுபான கொள்கைகளை தளர்த்தி, தனியாருக்கு மதுக்கடை உரிமங்களை வழங்கி, சலுகைகளை அளித்தது. இதில் பெரும் ஊழல் நடந்திருப்பதாக புகார் எழுந்துள்ளது. இந்த ஊழலில் துணை முதல்வர் மணிஷ் சிசோடியா பெயரும் அடிபட்டு வருகிறது. … Read more

பாகிஸ்தானை பிரதமர் நரேந்திர மோடி மீட்பார் – இந்திய உளவு அமைப்பின் முன்னாள் தலைவர் கருத்து

கொல்கத்தா: பாகிஸ்தானில் கடும் பொருளாதார நெருக்கடி நிலவுகிறது. அந்த நாட்டின் அந்நிய செலவாணி கையிருப்பு கணிசமாக குறைந்ததால் வெளிநாடுகளில் இருந்து உணவு தானியங்கள், கச்சா எண்ணெய் வாங்க முடியாத நிலை நீடிக்கிறது. இதன் காரணமாக ஒரு கிலோ கோதுமை மாவு ரூ.200, ஒரு லிட்டர் பால் ரூ.200, ஒரு கிலோ கோழி இறைச்சி ரூ.900 விலையில் விற்கப்படுகிறது. மின் உற்பத்தி பாதிக்கப்பட்டு பல்வேறு நகரங்கள் இரவில் இருளில் மூழ்குகின்றன. தொழில் துறை முற்றிலுமாக முடங்கி வேலைவாய்ப்பின்மை பிரச்சினை … Read more

ஜி20 நிதியமைச்சர்கள் மாநாட்டில் பங்கேற்ற ரஷ்ய அதிகாரிகளுக்கு ஜெர்மனி, கனடா அதிகாரிகள் மிரட்டல்..?

பெங்களூரில் நடைபெற்ற ஜி 20 நிதியமைச்சர்கள் மாநாட்டின் போது, ஜெர்மனி மற்றும் கனடா அதிகாரிகளால் தாங்கள் மிரட்டப்பட்டதாக ரஷ்ய அதிகாரிகள் புகார் தெரிவித்துள்ளனர். இந்தியா ஜி 20 தலைமையை ஏற்றதைத் தொடர்ந்து பிப்ரவரி 22 முதல் 25 வரை நிதியமைச்சர்கள் மாநாடு நடைபெற்றது. இந்த மாநாட்டில் ரஷ்ய அமைச்சக அதிகாரிகள் பங்கேற்றனர். அப்போது உக்ரைன் போரை காரணம் காட்டி தாங்கள் மிரட்டப்பட்டதாக ரஷ்ய அதிகாரிகள் கூறுகின்றனர். அவர்களின் குற்றச்சாட்டை ஜெர்மன் அதிகாரிகள் மறுத்துள்ளனர். ஆனால் கனடா சார்பில் … Read more

சஸ்பெண்ட் செய்யப்பட்டதால் இன்ஸ்பெக்டர் தீக்குளித்து தற்கொலைக்கு முயற்சி

திருவனந்தபுரம்: புகார்  கொடுக்க வந்த முதியவரிடம் அவமரியாதையாக நடந்து கொண்டதாக கூறப்பட்ட  புகாரில் சஸ்பெண்ட் செய்யப்பட்ட பாலக்காட்டை சேர்ந்த இன்ஸ்பெக்டர்  காருக்குள் வைத்து தீக்குளித்து தற்கொலை செய்ய முயற்சித்த சம்பவம் பரபரப்பை  ஏற்படுத்தியது. கேரள மாநிலம் கொல்லத்தைச் சேர்ந்தவர் லிபி.  இவர்  பாலக்காடு மாவட்டம் மீனாட்சிபுரம் போலீஸ் நிலையத்தில் இன்ஸ்பெக்டராக  உள்ளார். இந்நிலையில் கடந்த சில தினங்களுக்கு முன் இவரிடம் புகார்  கொடுப்பதற்காக அப்பகுதியை சேர்ந்த ஒரு முதியவர் வந்தார். அப்போது அவரிடம்  இன்ஸ்பெக்டர் லிபி அவமரியாதையாக … Read more

டெல்லியில் உளவு பார்த்த சீன இளைஞர் கைது

பரேலி: சீனாவைச் சேர்ந்த இளைஞர் வாங் கவுஜுன். இவர் தகுந்த விசா இல்லாமல் இந்தியாவுக்குள் நுழைந்து டெல்லியின் பல்வேறு இடங்களில் உளவு பார்த்துள்ளார். தகுந்த விசா இல்லாமல் இந்தியாவுக்குள் நுழைந்த குற்றத்துக்காக உ.பி. போலீஸார் இவரைக் கைது செய்து விசாரித்து வருகின்றனர். அப்போதுதான் இவர் டெல்லியின் முக்கிய இடங்களை உளவு பார்த்தது தெரிய வந்துள்ளது. இவரை 9 நாட்கள் போலீஸ் காவலில் வைக்க நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. இதையடுத்து இவரை விரைவில் லக்னோ, டெல்லி நகரங்களுக்கு அழைத்துச் சென்று … Read more

மகாராஷ்டிராவில் 2 சட்டமன்றத் தொகுதிகளுக்கு இன்று இடைத்தேர்தல்.. மராட்டிய அரசியலில் புதிய மாற்றத்தை ஏற்படுத்துமா..?

மகாராஷ்ட்ரா மாநிலம் புனேயில் கசபா பேத் மற்றும் சின்ச்சிவாட் தொகுதிகளுக்கு இன்று இடைத்தேர்தல் நடைபெறுகிறது. இந்தத் தேர்தல் முடிவுகள் மகாராஷ்ட்ர அரசியலில் திருப்புமுனையாக இருக்கும் என்று கருதப்படுகிறது. பாஜக விடம் இருந்த இந்த இரு தொகுதிகளையும் கைப்பற்றினால் காங்கிரஸ்- உத்தவ்தாக்கரே கூட்டணிக்கு மிகப்பெரிய  வெற்றியாக இருக்கும் என்று கூறப்படுகிறது.  மும்பை, நாக்பூர்,நாசிக், அவுரங்காபாத் மாநகராட்சித் தேர்தல்கள் விரைவில் நடைபெற உள்ள நிலையில், இத்தேர்தலின் முடிவுகள் தாக்கத்தை ஏற்படுத்தும் என்றும் கூறப்படுகிறது Source link

காஷ்மீரில் சொத்து வரி வசூலிப்பது கண்டித்து போராட்டம்

ஸ்ரீநகர்:  ஜம்மு காஷ்மீரில் சொத்து வரி விதிப்பதற்கு யூனியன் பிரதேச நிர்வாகம் முடிவு செய்துள்ளது. ஏப்ரல் ஒன்றாம் தேதி முதல் சொத்து வரி செலுத்துவது அமல்படுத்தப்படுகின்றது. யூனியன் பிரதேசத்தின் இந்த நடவடிக்கைக்கு அரசியல் கட்சி தலைவர்கள் பலரும் கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர். இந்நிலையில் யூனியன் பிரதேசத்தின் முடிவை எதிர்த்து மக்கள் ஜனநாயக கட்சி சார்பாக நேற்று போராட்டம் நடத்தப்பட்டது. ஷெர் இ காஷ்மீர் பூங்கா அருகே உள்ள  கட்சியின் தலைமை அலுவலகம்  முன்பு தலைமை செய்தி தொடர்பாளர் … Read more

தேர்தலில் போட்டியிடும் குற்றப் பின்னணி வேட்பாளர்கள் குறித்த நிலை என்ன? – மத்திய அரசு விளக்கம் அளிக்க உத்தரவு

புதுடெல்லி: தேர்தலில் போட்டியிடும் குற்றப் பின்னணி வேட்பாளர்கள் குறித்து நிலை என்ன என்பது தொடர்பாக விளக்கம் அளிக்குமாறு மத்திய அரசு, தேர்தல் ஆணையத்துக்கு உச்ச நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது. இதுதொடர்பாக வழக்கறிஞர் அஸ்வினி உபாத்யா உச்ச நீதிமன்றத்தில் தாக்கல் செய்துள்ள பொதுநலன் மனுவில் (பிஐஎல்) கூறியுள்ளதாவது: ஓர் அரசு ஊழியர் மீதுநீதிமன்றத்தில் ஒரு குற்றச்சாட்டை முன்வைத்தால், அவர் இடைநீக்கம் செய்யப்படு வார் அல்லது பணியில் இருந்து நீக்கப்படுவார். ஆனால் ஒரு வேட்பாளர், கிரிமினல் வழக்கில் குற்றவாளி என … Read more