மேகாலயா, நாகலாந்தில் நாளை வாக்குப்பதிவு: ஷில்லாங் தொகுதியில் தேர்தல் ஒத்திவைப்பு

ஷில்லாங்: மேகாலயா, நாகலாந்தில் தேர்தல் பிரசாரம் ஓய்ந்தது. இதைத்தொடர்ந்து நாளை வாக்குப்பதிவு நடக்க உள்ளது. மேகாலயாவின் ஷில்லாங் தொகுதியில் வேட்பாளர் மறைவால் அங்கு தேர்தல் ஒத்திவைக்கப்பட்டுள்ளது. வடகிழக்கு மாநிலங்களான திரிபுரா, மேகாலயா, நாகலாந்து சட்டப் பேரவைகளுக்கான தேர்தல்கள் அறிவிக்கப்பட்டன. கடந்த 16ம் தேதி திரிபுராவில் வாக்குப்பதிவு நடைபெற்றது. இதைத்தொடர்ந்து மேகாலயா மற்றும் நாகலாந்தில் நாளை ஒரே கட்டமாக வாக்குப்பதிவு நடைபெறுகிறது. மேகாலயாவை பொருத்தவரை 60 இடங்களுக்கு பாஜ, காங்கிரஸ் உட்பட 11 கட்சிகளைச் சேர்ந்த 369 பேர் … Read more

அனைத்து மட்டங்களிலும் ஊழல் தலைவிரித்தாடுகிறது: உச்சநீதிமன்றம் கவலை

புதுடெல்லி: அஸ்வினிகுமார் உபாத்யாயா என்பவர் உச்சநீதிமன்றத்தில் தாக்கல் செய்துள்ள பொதுநல மனுவில்  ‘கடுமையான குற்ற வழக்குகளில் குற்றச்சாட்டு பதிவு செய்யப்பட்ட நபர் அரசு துறையில் துப்புரவு பணியாளராகவோ அல்லது காவலராகவோ சேர முடியாது. ஆனால் அதே போன்ற குற்றச்சாட்டுகள் பதிவு செய்யப்பட்டிருந்த ஒரு நபர் எம்எல்ஏவாகவோ, அமைச்சராகவோ கூட ஆகி விடலாம். அதனால் கிரிமினல் வழக்குகள் பதிவு செய்யப்பட்டிருந்த நபர்கள் தேர்தலில் போட்டியிடுவதற்கு தடை விதிக்க வேண்டும்’ என்று அவர் குறிப்பிட்டிருந்தார். இந்த வழக்கு, உச்சநீதிமன்ற நீதிபதி … Read more

ரஷ்யா விவகாரத்தில் ஒருமித்த கருத்தின்றி முடிந்த ஜி20 கூட்டம்

பெங்களூரு: கர்நாடக மாநிலத்தின் பெங்களூருவில் நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தலைமையில், ஜி-20 நாடுகளின் நிதியமைச்சர்களின் மாநாடு பெங்களூருவில் நேற்று 2வது நாளாக நடந்தது. இந்த மாநாட்டில் ஜி-20 நாடுகளின் நிதியமைச்சர்கள் மற்றும் அந்நாடுகளின் மத்திய வங்கி ஆளுநர்கள் பங்கேற்றனர். இந்தியா தலைமையில் நடந்த இந்த கூட்டத்தில் உலக நாடுகள் எதிர்கொண்டுள்ள பிரச்னைகள், சவால்கள் குறித்து விவாதிக்கவே இந்தியா விரும்பியது. ஆனால், அமெரிக்கா, பிரான்ஸ் போன்ற உக்ரைனை ஆதரிக்கும் நாடுகள் உக்ரைன்-ரஷ்யா போர் ஓராண்டு நிறைவையொட்டி, ரஷ்யாவுக்கு கண்டனம் … Read more

திருநங்கை செய்தி வாசிப்பாளர் மீது துப்பாக்கிச்சூடு

லாகூர்: பாகிஸ்தானில் முதல் திருநங்கை செய்தி வாசிப்பாளர் மீது துப்பாக்கி சூடு நடத்தப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. பாகிஸ்தான் நாட்டைச் சேர்ந்த 26 வயதான மர்வியா மாலிக். கடந்த 2018ம் ஆண்டு அந்நாட்டின் முதல் திருநங்கை செய்தி வாசிப்பாளராகி சாதனை படைத்தார். இவர் திருநங்கைகளின் உரிமைகளுக்காக தொடர்ச்சியாக குரல் கொடுத்து வருகிறார். இதனால், அவருக்கு அவ்வபோது போன் மூலம் கொலை மிரட்டல்கள் வந்துள்ளன. இந்நிலையில், லாகூரில் கடந்த வியாழக்கிழமை மருந்து வாங்கிக் கொண்டு வீடு அருகே … Read more

3-க்கு 2 பெரும்பான்மையில் மோடியை மீண்டும் பிரதமராக தேர்ந்தெடுக்க வேண்டும்.. பீகாரில் காட்டு ராஜ்ஜியத்தை போக்க அதுதான் ஒரே வழி – அமித் ஷா

அடுத்து வரும் நாடாளுமன்றத் தேர்தலில் 3-க்கு 2 என்ற பெரும்பான்மையில் நரேந்திர மோடியை மீண்டும் பிரதமராக்குவதுதான் பீகாரில் காட்டு ராஜ்ஜியத்தை போக்க ஒரே வழி என உள்துறை அமைச்சர் அமித்ஷா தெரிவித்துள்ளார். பீகாரில் பொதுக்கூட்டத்தில் பங்கேற்று பேசிய அமித்ஷா, மாநிலத்தில் சட்டம் ஒழுங்கு சரியில்லை என்றும், அரசுக்கு எதிராக பேசும் பத்திரிக்கையாளர்கள் கொலை செய்யப்படுவதாகவும் தெரிவித்தார். நாள்தோறும் பாலியல் வன்கொடுமை மற்றும் கொலை குறித்ததான செய்திகளைக் கேள்விபடுவதாக தெரிவித்த அமித்ஷா, பீகார் மக்கள் நிதிஷ் குமாருக்கும் அவரது … Read more

பிளாஸ்டிக் கவர் பயன்பாட்டை ஒழிக்க பனை ஓலை கூடையில் திருப்பதி லட்டு: செயல் அதிகாரி தகவல்

திருமலை: ‘திருப்பதியில் பிளாஸ்டிக் கவர் பயன்பாட்டை முற்றிலும் ஒழிக்கும் வகையில், ஏழுமலையான் கோயில் லட்டு பிரசாதத்தை பனை ஓலை கூடையில் வழங்க முடிவு செய்யப்பட்டுள்ளது’ என்று செயல் அதிகாரி தர்மா கூறினார். திருமலை திருப்பதி தேவஸ்தானம் சுற்றுச்சூழலை பாதுகாக்கும் விதமாக பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகின்றனர். ஏற்கனவே பிளாஸ்டிக் தண்ணீர் பாட்டிலுக்கு முற்றிலும் தடை விதிக்கப்பட்டுள்ளது. இதற்கிடையே, கோயிலுக்கு வரும் பக்தர்கள் அனைவரும் லட்டு பிரசாதம் வாங்கி அவற்றை பிளாஸ்டிக் கவர்கள் மூலம் கொண்டு சென்றனர். இதனால் … Read more

“பாரத் ஜோடா யாத்திரையுடன் எனது இன்னிங்ஸ் முடிவடைவது மகிழ்ச்சி”-சோனியா காந்தி

காங்கிரஸ் கட்சிக்கு திருப்புமுனையாக அமைந்த இந்திய ஒற்றுமை நடைபயணத்துடன், தனது இன்னிங்ஸ் முடிவடைவது மகிழ்ச்சியளிப்பதாக, 85-வது காங்கிரஸ் மாநாட்டில் பேசிய சோனியா காந்தி தெரிவித்துள்ளார். சத்தீஸ்கரின் ராய்பூரில் நடைபெறும் 3 நாள் மாநாட்டில், இரண்டாம் நாளான இன்று கட்சியினரிடையே சோனியா காந்தி உரையாற்றினார். அப்போது பேசிய அவர், மன்மோகன்சிங் தலைமையில், கடந்த 2004, 2009 நாடாளுமன்ற தேர்தல்களில் பெற்ற வெற்றிகள், தனிப்பட்ட முறையில் தனக்கு திருப்தியளித்ததாக தெரிவித்தார். Source link

நக்சல்கள் தாக்குதல் 3 போலீசார் பலி

ராய்ப்பூர்:  சட்டீஸ்கரில் நக்சலுக்கு எதிரான நடவடிக்கையின்போது 3 போலீசார் பலியானார்கள். சட்டீஸ்கரின் சுக்மா மாவட்டத்தில் நக்சல்கள் பதுங்கி இருப்பதாக வந்த தகவலின்பேரில் மாவட்ட ரிசர்வ் போலீசார் விரைந்தனர். ஜகர்குண்டா மற்றும் குண்டட் கிராமங்கள் இடையே ரிசர்வ் போலீசார் நக்சல்கள் தேடுதல் வேட்டையில் ஈடுபட்டனர். அப்போது பதுங்கி இருந்த நக்சல்கள் வீரர்கள் மீது  துப்பாக்கி சூடு நடத்தினார்கள். இதனைதொடர்ந்து வீரர்களும் தகுந்த பதிலடி கொடுத்தனர். நக்சல்கள் தாக்கியதில் உதவி ஆய்வாளர் உட்பட 3 வீரர்கள் சம்பவ இடத்திலேயே பலியானார்கள். … Read more

இந்துத்துவ அமைப்புகளை தடை செய்ய வேண்டும்; இஸ்லாமிய தலைவர் கோரிக்கை.!

கடந்த பிப்ரவரி 16ம் தேதி ஹரியானா மாநிலம் பிவானியில் ஜுனைத் மற்றும் நசீர் உள்ளிட்ட இரு முஸ்லீம்களின் உடல்கள் எரிந்த நிலையில் கண்டெடுக்கப்பட்டன . பலியான இருவரும் பசு காவலர்களால் கடத்திச் செல்லப்பட்டு கொலை செய்யப்பட்டதாகக் கூறப்பட்டது. அவர்களது குடும்பத்தினர், இந்துத்துவ பஜ்ரங் தளத்துடன் தொடர்புடையதாகக் கூறப்படும் ஐந்து பேரின் பெயரை, போலீசில் அளித்த புகாரில் குறிப்பிட்டுள்ளனர். அதைத் தொடர்ந்து போலீசார் முதல் தகவல் அறிக்கை பதிவு செய்தனர். இந்த வழக்கில் முக்கிய குற்றவாளியான பஜ்ரங்க் தள் … Read more

உக்ரைனில் அமைதிக்கு இந்தியா பாடுபடும்; ஜெர்மன் அதிபருக்கு பிரதமர் உறுதி.!

ஜெர்மன் அதிபர் ஓலாஃப் ஷோல்ஸ் இரண்டு நாள் பயணமாக இன்று இந்தியா வந்தடைந்தார். அவரை ராணுவ மரியாதையுடம் பிரதமர் மோடி வரவேற்றார். கடந்த 2021 டிசம்பரில் ஜெர்மன் அதிபராக பதவியேற்ற பிறகு, அதிபர் ஸ்கோல்ஸ் முதல்முறையாக இந்தியா வந்துள்ளார். தூய்மையான எரிசக்தி, வர்த்தகம் மற்றும் புதிய தொழில்நுட்பங்கள் ஆகிய துறைகளில் இருதரப்பு உறவுகளை மேம்படுத்துவதில் கவனம் செலுத்தும் வகையில் பிரதமர் நரேந்திர மோடி மற்றும் ஜெர்மன் அதிபர் ஓலாஃப் ஷோல்ஸ் ஆகியோர் இன்று விரிவான பேச்சுவார்த்தை நடத்தினர். … Read more