டெல்லி துணை முதல்வர் மணிஷ் சிசோடியா கைது; அதிரடி காட்டிய சிபிஐ.!

தலைநகர் டெல்லியின் புதிய மதுபான கொள்கை அமல்படுத்தப்பட்டது. ஆனால் மதுபான வியாபாரிகளுக்கு உரிமம் வழங்கும் டெல்லி அரசின் கொள்கை, சில வியாபாரிகளுக்கு சாதகமாக இருப்பதாக குற்றம்சாட்டப்பட்டது. பல்வேறு சர்ச்சைகள் எழுந்த நிலையில் புதிய மதுபான கொள்கை திரும்ப பெறப்பட்டது. அதைத் தொடர்ந்து டெல்லி துணை முதல்வர் மற்றும் நிதி, கல்வித்துறை அமைச்சராக இருக்கும் மணிஷ் சிசோடியா மீது புதிய மதுபான கொள்கையில் ஊழல் நடந்ததாக அவரது வீடு உள்ளிட்ட 21 இடங்களில் சிபிஐ ரெய்டு நடத்தியது. அதையடுத்து … Read more

டெல்லி துணை முதல்வர் சிசோடியா கைது… சிபிஐ விசாரணையில் என்ன நடந்தது?

ஆம் ஆத்மி கட்சியை சேர்ந்தவரு்ம, டெல்லி துணை முதலமைச்சருமான  மனீஷ் சிசோடியா மீது மதுபான ஊழல் தொடரப்பட்டது. கலால் துறை அமைச்சரான சிசோடியா, டெல்லியில் புதிய மதுபான விற்பனை கொள்கையை கொண்டு வந்ததில், அவர் மீது ஊழல் குற்றச்சாட்டுகளை வைக்கப்பட்டது. இந்த வழக்கில் 7 பேர் தொடர்புடைய நிலையில், வழக்கின் குற்றப்பத்திரிகையில் சிசோடியாவின் பெயர் இடம்பெறவில்லை. ஆனால், விரைவில் துணை குற்றப்பத்திரிகையை சிபிஐ தாக்கல் செய்யும் என எதிர்பார்க்கப்படுகிறது. 2021 மதுபானக் கொள்கையை வகுப்பதில் மதுபான நிறுவனங்களுக்கு … Read more

தற்கொலை செய்து கொண்ட நர்சுக்கு 66 நாட்கள் கழித்து இடமாற்ற உத்தரவு: ம.பி. சுகாதாரத்துறையின் அலட்சியம்

ஷிவ்புரி: மத்திய பிரதேசத்தில் தற்கொலை செய்து கொண்ட நர்சுக்கு 66 நாட்கள் கழித்து அம்மாநில சுகாதாரத்துறை இடமாற்ற உத்தரவு வழங்கியுள்ள சம்பவம் நடந்துள்ளது. மத்திய பிரதேச மாநிலம் ஷிவ்புரி மாவட்டம் பெது பகுதியில் உள்ள ஆரம்ப சுகாதார நிலையத்தில் செவிலியராக தன்வி தப்டே (28) என்பவர் வசித்து வந்தார். இவர் தன்னை இடமாற்றம் செய்யுமாறு சுகாதாரத் துறை அதிகாரிகளிடம் கோரிக்கை விடுத்தார். ஆனால் அதிகாரிகள் அவருக்கு இடமாற்ற உத்தரவு வழங்கவில்லை. இதனால் மன உளைச்சலுக்கு ஆளான தன்வி … Read more

அருணாச்சல் பிரதேசம் டூ குஜராத்; ராகுல் காந்தியின் அடுத்த பாதயாத்திரை அறிவிப்பு.!

இந்தியாவில் அடுத்த ஆண்டு மக்களவை தேர்தல் நடைபெற உள்ளது. இரண்டு முறை தொடர்ந்து ஆட்சி அமைத்த பாஜக, மூன்றாவது முறையாக தொடர் வெற்றியடைய பல்வேறு முயற்சிகளில் ஈடுபட்டு வருகிறது. அதேசமயம் பாஜகவை தோற்கடிக்க எதிர்கட்சிகள் தீவிரமாக நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றன. ஆனாலும் எதிர்கட்சிகளின் ஒற்றுமை கேள்விக்குறியாகவே உள்ளது. தெலங்கானா முதல்வர் சந்திரசேகர ராவ், மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி, உத்தரபிரதேச எதிர்கட்சி தலைவர் அகிலேஷ் யாதவ், கேரள முதல்வர் பினராய் விஜயன் ஆகியோர் காங்கிரஸ் அல்லாத … Read more

Old Pension Scheme: விரைவில் அரசு தரப்பிலிருந்து சூப்பர் செய்தி?

பழைய ஓய்வூதியத் திட்டம்: நாடு முழுவதும் பழைய ஓய்வூதிய முறைக்கான தேவை அதிகரித்து வருகிறது. புதிய ஓய்வூதிய முறையுடன் ஒப்பிடும்போது, ​​பல மாநிலங்களில் பழைய ஓய்வூதியத் திட்டத்துக்கான கோரிக்கை விடுக்கப்பட்டு வருகிறது. அதே நேரத்தில், பல மாநிலங்கள் புதிய ஓய்வூதியத் திட்டத்தை ரத்து செய்து பழைய ஓய்வூதியத் திட்டத்தை (ஓபிஎஸ்) அமல்படுத்தியுள்ளன. இதற்கிடையில் பழைய ஓய்வூதியத் திட்டம் குறித்து விரைவில் மத்திய அரசு பெரிய முடிவை எடுக்கக்கூடும் என எதிர்பார்க்கப்படுகின்றது. ஒட்டுமொத்த நாட்டின் கோரிக்கையை கருத்தில் கொண்டு, … Read more

மதுபான கொள்கை முறைகேடு வழக்கு; டெல்லி துணை முதல்வர் கைதா?: பதற்றத்தால் 144 தடை உத்தரவு

புதுடெல்லி: மதுபான கொள்கை முறைகேடு வழக்கில் சிக்கிய டெல்லி துணை முதல்வர் மணிஷ் சிசோடியா, இன்று டெல்லி சிபிஐ முன் ஆஜரானார். அவரிடம் சிபிஐ விசாரணை நடத்தியது. அவர், ‘தான் கைது செய்யப்படலாம்’ என்று தெரிவித்ததால் பரபரப்பு ஏற்பட்டது. டெல்லியில் முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் தலைமையிலான ஆம் ஆத்மி கட்சி அரசு, மதுபான கொள்கைகளை தளர்த்தி, தனியாருக்கு மதுக்கடை உரிமங்களை வழங்கியதில் முறைகேடு நடந்ததாக புகார் எழுந்தது. அதையடுத்து துணை முதல்வர் மணிஷ் சிசோடியா உள்ளிட்டோர் அலுவலகம் … Read more

தேர்தலில் படுதோல்வி அடைந்ததால் மாணவர்களை தாக்கிய ஏபிவிபி!!

ஐதராபாத் பல்கலைக்கழக தேர்தலில் படுதோல்வி அடைந்த ஏ.பி.வி.பி அமைப்பினர், வெற்றி பெற்ற மாணவர்கள் மீது கொலைவெறி தாக்குதல் நடத்திய சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. ஐதராபாத் மத்திய பல்கலைக்கழகத்தில் நடைபெற்ற மாணவர் சங்க தேர்தலில் இடதுசாரி மாணவர் கூட்டமைப்பு அனைத்து இடங்களிலும் வெற்றி பெற்றது. ஏ.பி.வி.பி அமைப்பினர் ஒரு இடங்களில் கூட வெற்றி பெறவில்லை என்று கூறப்படுகிறது. இதனைப் பொறுத்துக்கொள்ள முடியாத ஏ.பி.வி.பி அமைப்பினர் இந்துத்வா கட்சி கும்பலின் ஆதரவோடு வெளியாட்களை அழைத்து வந்தும், மது போதையில் … Read more

நடனமாடிய 19 வயது இளைஞர் சுருண்டு விழுந்து உயிரிழப்பு!! VIDEO

திருமண நிகழ்ச்சியில் நடனமாடிய 19 வயது இளைஞர் சுருண்டு விழுந்து உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. தெலங்கானா மாநிலம் அடிலாபாத் மாவட்டத்தில் நடைபெற்ற திருமண நிகழ்ச்சியில் இந்த சோக சம்பவம் நடந்துள்ளது. சித்தையா என்பவரின் குடும்ப திருமண வரவேற்பு நிகழ்ச்சியில் அவரது உறவினரான மகாராஷ்டிராவைச் சேர்ந்த 19 வயது இளைஞர் முத்யம் என்பவர் கலந்துகொண்டார். திருமண வீட்டார் சார்பாக ஆடல் பாடல் நிகழ்ச்சி ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. அப்போது தெலுங்கு பாடல்களுக்கு முத்யம் உற்சாகமாக நடனமாடினார். அப்போது … Read more

2024 தேர்தலுக்கு பிறகு பாஜக அழித்தொழிக்கப்படும்; லாலு பிரசாத் யாதவ் சூளுரை.!

ஒன்றிய உள்துறை அமைச்சர் அமித்ஷா, பீகாரின் மேற்கு சம்பரான் மாவட்டத்தில் உள்ள லாரூயாவில் நடந்த பேரணியில் நேற்று உரையாற்றினார். அப்போது அவர் பேசும்போது, பீகாரை காட்டு ராஜ்ஜியத்தில் மூழ்கடித்ததற்கு முதல்வர் நிதிஷ் குமாரே காரணம் என்றும், ஜனதா தளத்துடனான நிதிஷ்குமாரின் கூட்டணி என்பது தண்ணீரில் எண்ணெய் கலக்க முயற்சி என்றும் அவர் கூறினார். இந்தநிலையில் 2024ம் ஆண்டுக்கு பிறகு பாஜக அழிக்கப்படும் என பிகார் முன்னாள் முதல்வர் லாலு பிரசாத் யாதவ் கூறியுள்ளார். சிறுநீரக மாற்று அறுவை … Read more

ரூ.16,800 கோடியை விவசாயிகளின் வங்கிக் கணக்குகளுக்கு செலுத்தும் திட்டத்தை தொடங்கி வைக்கிறார் பிரதமர் மோடி

டெல்லி: 8 கோடி விவசாயிகளுக்கு நாளை ரூ.16,800 கோடியை அவர்களின் வங்கிக் கணக்குகளுக்கு நேரடியாக பணம் செலுத்தும் திட்டத்தை பிரதமர் மோடி தொடங்கி வைக்கிறார். பிரதமர் கிசான் சம்மன் நிதி திட்டத்தில் 13வது தவணையாக பிரதமர் மோடி ரூ.16,800 கோடி விடுவிக்கிறார்.