அம்பேத்கருக்கு நோபல் பரிசு – பசவராஜ் பொம்மை கோரிக்கை

பெங்களூரு: பாபாசாகேப் அம்பேத்கரின் பொருளாதார முனைவர் பட்ட ஆய்வேடான‌ ‘ரூபாயின் சிக்கல்’ வெளியாகி 100 ஆண்டுகள் நிறைவடைந்ததை முன்னிட்டு பெங்களூருவில் அவரது பொருளாதார சிந்தனைகள் குறித்த பன்னாட்டு கருத்தரங்கம் நேற்று நடைபெற்றது. இந்த கருத்தரங்கை கர்நாடக முதல்வர் பசவராஜ் பொம்மை தொடங்கி வைத்தார். அப்போது அவர் பேசியதாவது: நாட்டின் கடைசி மனிதனுக்கும் சுதந்திரம், சமத்துவம், நீதி கிடைக்க வேண்டும் என பாபாசாகேப் அம்பேத்கர் பாடுபட்டார். நாட்டின் அரசியலமைப்பு சட்டத்தை வடித்த அவர், முதல் சட்ட அமைச்சராகவும் திறம்பட … Read more

ஜம்மு காஷ்மீர் புல்வாமாவில் பண்டிட் சமூகத்தை சேர்ந்த ஒருவர் பயங்கரவாதிகளால் சுட்டுக்கொலை: தீவிர பாதுகாப்பில் ராணுவம்.!

ஸ்ரீநகர்: ஜம்மு காஷ்மீர் புல்வாமாவில் பயங்கரவாதிகளால் சுடப்பட்டு காயமடைந்த பொதுமக்களில் ஒருவர் உயிரிழந்துள்ளார். பயங்கரவாதிகள் பண்டிட் சமூகத்தை சேர்ந்த நபரை  சுட்டுக்கொன்ற நிலையில் ராணுவத்தினர் தீவிர பாதுகாப்பில் ஈடுபட்டுள்ளனர். ஜம்மு-காஷ்மீரில் சிறுபான்மையினராக உள்ள இந்து மதத்தினரான பண்டிட் சமுகத்தினரை குறிவைத்து தொடர்ந்து பயங்கரவாத தாக்குதல் சம்பவங்கள் நடைபெற்று வருகிறது. பயங்கரவாத தாக்குதலை தடுக்க பாதுகாப்பு படையினர் பல்வேறு நடவடிக்கை எடுத்து வருகின்றனர். இந்நிலையில், காஷ்மீரின் புல்வாமா மாவட்டத்தில் பண்டிட் சமுகத்தை சேர்ந்தவரை பயங்கரவாதிகள் இன்று காலை சுட்டுக்கொன்றனர். … Read more

கர்நாடக பேருந்தில் சிறுநீர் கழித்த பொறியாளர்

பெங்களூரு: கர்நாடக மாநிலம் விஜயபுராவில் இருந்து மங்களூருவுக்கு கடந்த புதன்கிழமை இரவு கர்நாடக அரசு பேருந்து சென்றது. ஹூப்ளியில் நள்ளிரவு 2 மணிக்கு தேநீர் அருந்துவதற்காக பேருந்து நிறுத்தப்பட்டது. அப்போது பயணிகள் பேருந்தில் இருந்து கீழே இறங்கி தேநீர் அருந்த சென்றனர். அப்போது 32 வயதான பொறியாளர் ஒருவர் பெண் பயணி அமர்ந்திருந்த இருக்கையின் மீது சிறுநீர் கழித்தார். தேநீர் அருந்திவிட்டு பேருந்தில் ஏறிய அந்த பயணி இருக்கையில் சிறுநீர் கழிக்கப்பட்டதை கண்டு அதிர்ச்சி அடைந்தார். உடனடியாக … Read more

பெங்களூருவில் வந்தே பாரத் ரயில் மீது கற்கள் வீச்சு – ஜன்னல்கள் சேதம்..!

கர்நாடக மாநிலம் மைசூருவில் இருந்து சென்னை நோக்கி சென்ற வந்தே பாரத் ரயில் மீது கற்கள் வீசப்பட்டதில் அந்த ரயிலின் ஜன்னல்கள் சேதம் அடைந்தன. இந்த விபத்தில் பயணிகள் யாருக்கும் காயம் ஏற்படவில்லை என தென்மேற்கு ரயில்வே தகவல் தெரிவித்துள்ளது. கிருஷ்ணராஜபுரம்- பெங்களூரு கண்டோண்ட்மெண்ட் ரயில் நிலையங்களுக்கு இடையே இந்த சம்பவம் நடைபெற்றதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதுகுறித்து ரயில்வே போலீசார் வழக்குப் பதிவு செய்து வந்தே பாரத் ரயில் மீது கற்களை வீசிய நபர்களை தேடி வருகின்றனர். Source … Read more

சுகாதாரத்துறை இ-சஞ்சீவினி திட்டம் டிஜிட்டல் இந்தியாவில் முக்கிய மைல் கல்லை எட்டியுள்ளது: பிரதமர் மோடி பெருமிதம்

டெல்லி: சுகாதாரத்துறை இ-சஞ்சீவினி திட்டம் டிஜிட்டல் இந்தியாவில் முக்கிய மைல் கல்லை எட்டியுள்ளது என்று பிரதமர் மோடி பெருமிதம் அடைந்த்துள்ளார். இ-சஞ்சீவினி திட்டத்தின் மூலம் இதுவரை 10 கோடி பேர் பயனடைந்தாக பிரதமர் மோடி கூறியுள்ளார்.

24 காரட் தங்க தோசை – ஹைதராபாத்தில் விற்பனை

ஹைதராபாத்: ஹைதராபாத்தில் 24 கேரட் தங்க தோசை ஆயிரம் ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது. ஹைதராபாத் தில் பஞ்சாரா ஹில்ஸ் பகுதியில் உள்ள ‘ஹவுஸ் ஆஃப் தோசாஸ்’ என்ற உணவகத்தில் 24 காரட் தங்க தோசை விற்பனைக்கு வந்துள்ளது. இந்த தோசையில் 24 கேரட் தங்க நெய் காகி தத்தை வைத்து தருவதால் இதன்விலை ரூ. 1000 ஆக நிர்ணயிக் கப்பட்டுள்ளது. ஆயினும் இதனை சாப்பிட குடும்பம், குடும்பமாக வருகின்றனர். அதிலும் வார இறுதி நாட்களில் இந்த உணவகத்தில் … Read more

“முறைகேடு வழக்கில் கைது செய்யப்பட்டு, சில மாதங்கள் சிறையில் இருந்தாலும் கவலைப்பட போவதில்லை” – டெல்லி துணை முதலமைச்சர் மணீஷ் சிசோடியா

மதுபான கொள்கை முறைகேடு வழக்கில், டெல்லி துணை முதலமைச்சர் மணீஷ் சிசோடியா, சிபிஐ முன் இன்று மீண்டும் விசாரணைக்கு ஆஜராகவுள்ளார். கடந்த 19-ம் தேதி விசாரணைக்கு ஆஜராக சிபிஐ கூறிய நிலையில், டெல்லி நிதிநிலை அறிக்கை தயாரிப்பை காரணம் காட்டி, ஒருவார காலம் சிசோடியா அவகாசம் கோரியிருந்தார். இன்று மீண்டும் விசாரணைக்காக சிசோடியா, சிபிஐ தலைமை அலுவலகம் செல்லவுள்ள நிலையில், அப்பகுதியில் 144 தடை உத்தரவு அமல்படுத்தப்பட்டுள்ளது. தான் விசாரணைக்கு முழு ஒத்துழைப்பு தருவதாகவும், கைது செய்யப்பட்டு … Read more

இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் 218 பேருக்கு கொரோனா: சிகிச்சை பெறுபவர்கள் எண்ணிக்கை உயர்வு.! ஒன்றிய சுகாதாரத்துறை தகவல்

டெல்லி: இந்தியாவில் கொரோனா பாதிப்புடன் சிகிச்சை பெறுபவர்கள் எண்ணிக்கை 2,149 ஆக உயர்ந்துள்ளது. இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் 218 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. கொரோனா பாதிப்புடன் சிகிச்சை பெறுபவர்கள் எண்ணிக்கை 2,149 ஆக உயர்ந்துள்ளது. கொரோனா பாதிப்புக்கு நாட்டில் இதுவரை உயிரிழந்தவர்கள் எண்ணிக்கை 5 லட்சத்து 30 ஆயிரத்து 769 ஆக உயர்ந்துள்ளது. கொரோனா பாதிப்பு சிக்கிமில் ஒருவர் உயிரிழந்துள்ளார். கேரளாவில் ஏற்கனவே ஏற்பட்ட 4 உயிரிழப்புகள் தற்போது கணக்கில் … Read more

இந்திய கல்வி முறையை வலுப்படுத்த பட்ஜெட்டில் அதிக நிதி ஒதுக்கீடு – பிரதமர் நரேந்திர மோடி பெருமிதம்

புதுடெல்லி: 2023-24-ம் ஆண்டுக்கான மத்திய பட்ஜெட்டை நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் கடந்த பிப்ரவரி 1-ம் தேதி தாக்கல் செய்தார். இதில் இதுவரை இல்லாத வகையில் கல்விக்கு மத்திய அரசு 1.12 லட்சம் கோடி ஒதுக்கியுள்ளது. இது முந்தைய நிதியாண்டை விட 8.2 சதவீதம் அதிகமாகும். இந்நிலையில் ‘இளைஞர் சக்தியைப் பயன்படுத்துதல் – திறன் மேம்பாடு மற்றும் கல்வி’ என்ற தலைப்பில் பட்ஜெட்டுக்கு பிந்தைய இணைய வழி கலந்துரையாடல் டெல்லியில் நேற்று நடைபெற்றது. இதில் பிரதமர் நரேந்திர மோடி … Read more

சொகுசுக் கப்பலின் 50 நாள் நீர்வழிப் பயணம் 28ந் தேதி நிறைவு.. கப்பலை வரவேற்க மத்திய, மாநில அரசுகள் சார்பில் ஏற்பாடு..!

உலகின் மிகப் பெரிய நதி வழி சொகுசுக் கப்பல் எம்.வி.கங்கா விலாஸின் 50 நாள் பயணம் நாளை மறுநாள்  அஸ்ஸாம் மாநிலம் தீப்ருகரில் நிறைவு பெறுகிறது. கடந்த மாதம் 13ம் தேதி வாரணாசியில் இந்த சொகுசுக் கப்பலின் பயணத்தை பிரதமர் மோடி வாரணாசியில் தொடங்கி வைத்தார். சுமார் 3200 கிலோ மீட்டர் தூரம் பயணத்திற்குப்பின் சொகுசுக் கப்பலின் முதல் பயணம் நிறைவு பெறுகிறது. கப்பலை வரவேற்க மத்திய நீர்வழிப் போக்குவரத்துத் துறை சார்பிலும்அஸ்ஸாம் மாநில அரசு சார்பிலும் … Read more