ம.பி.யில் டயர் வெடித்து பயங்கர விபத்து : 3 பேருந்துகள் மீது லாரி மோதியதில் 14 பேர் பலி; 60க்கும் மேற்பட்டோர் படுகாயம் : முதல்வர் நிதியுதவி!!

போபால் : மத்தியபிரதேச மாநிலத்தில், கட்டுப்பாட்டை இழந்த சிமெண்ட் லாரி சாலையோரம் நிறுத்தப்பட்டிருந்த 3 பேருந்துகள் மீது அடுத்தடுத்து மோதியதில் 14 பேர் உயிரிழந்துள்ளனர். மத்திய பிரதேச மாநிலத்தில் 14 பேருடன் சிமெண்ட் லாரி ஒன்று ஒன்றிய அமைச்சர் அமித்ஷாவின் பேரணியின் கலந்து கொண்டு ஊர் திரும்பிக் கொண்டு இருந்தது. ரேவா-சத்னா எல்லையோத்தில் மொஹானியா சுரங்கப்பாதைக்கு அருகே இரவு 9 மணியளவில் மகாகும்பத்தில் கலந்து கொண்டு திரும்பிய பயணிகளுக்கு உணவு பொட்டலங்களை வழங்குவதற்காக 3 பேருந்துகள் நிறுத்தப்பட்டிருந்தன. … Read more

இந்தியா வந்துள்ள ஜெர்மனி பிரதமரை குடியரசுத் தலைவர் மாளிகையில் வரவேற்ற பிரதமர் மோடி

புதுடெல்லி: இந்தியா வந்துள்ள ஜெர்மனி பிரதமர் ஓலஃப் ஸ்கோல்ஸ்-ஐ, குடியரசுத் தலைவர் மாளிகையில் பிரதமர் நரேந்திர மோடி வரவேற்றார். ஜெர்மனி பிரதமர் ஓலஃப் ஸ்கோல்ஸ் இரண்டு நாள் பயணமாக இன்று காலை இந்தியா வந்தார். அவருக்கு குடியரசுத் தலைவர் மாளிகையில் ராணுவ அணிவகுப்பு மரியாதை அளிக்கப்பட்டது. இதையடுத்து, அவரை கைகுலுக்கி வரவேற்ற பிரதமர் நரேந்திர மோடி, அவருக்கு இந்திய அமைச்சர்கள் மற்றம் உயரதிகாரிகளை அறிமுகப்படுத்தினார். பின்னர், ஜெர்மனி பிரதமருடன் வந்துள்ள அந்நாட்டு அமைச்சர்கள் மற்றும் உயரதிகாரிகளை அவர் … Read more

2 நாள் அரசு முறை பயணமாக இந்தியா வந்த ஜெர்மனி பிரதமருக்கு சிவப்பு கம்பள வரவேற்பு

2 நாள் அரசு முறை பயணமாக ஜெர்மனி பிரதமர் ஓலாஃப் ஸ்கோல்ஸ் இன்று இந்தியா வந்தார். டெல்லி விமான நிலையத்துக்கு இன்று காலை வந்த அவருடன் ஜெர்மனியை சேர்ந்த மூத்த அரசு அதிகாரிகள் கொண்ட குழுவும் வந்தது. இதையடுத்து குடியரசுத் தலைவர் மாளிகையில் ஜெர்மனி பிரதமருக்கு பாரம்பரிய முறையிலான சிவப்பு கம்பள வரவேற்பு அளிக்கப்பட்டது. ஜெர்மனி பிரதமரை நேரில் வரவேற்று, மத்திய அமைச்சர்கள் மற்றும் உயரதிகாரிகளுக்கு பிரதமர் மோடி அறிமுகம் செய்து வைத்தார். இதைத் தொடர்ந்து செய்தியாளர்களிடம் … Read more

சத்தீஸ்கர் மாநிலம் சுக்மா அருகே நக்சலைட்டுகளின் தாக்குதல்: 3 காவல்துறையினர் வீரமரணம்

சத்தீஸ்கர்: சத்தீஸ்கர் மாநிலம் சுக்மா அருகே நக்சலைட்டுகளின் தாக்குதலில் 3 காவல்துறையினர் வீரமரணம் அடைந்தனர். ஜகர்குண்டா வனப்பகுதியில் நடைபெற்ற துப்பாக்கிச் சண்டையில் காவல்துறையினர் 3 பேர் உயிரிழந்தனர்.

ஜெர்மன் நாட்டு பிரதமர் ஓலாஃப் இரண்டு நாள் அரசு முறை பயணமாக இந்தியா வருகை

டெல்லி: ஜெர்மன் நாட்டு பிரதமர் ஓலாஃப் இரண்டு நாள் அரசு முறை பயணமாக இந்தியா வந்தடைந்தார். குடியரசு தலைவர் மாளிகையில் ஜெர்மன் பிரதமர் ஓலாப்புக்கு பிரதமர் நரேந்திர மோடி உற்சாகம் வரவேற்பளித்தார். இரு நாடுகள் இடையே புதிய தொழில்நுட்பம், பொருளாதாரம் உள்ளிட்ட முக்கிய ஒப்பந்தங்கள் கையெழுத்து ஆகின்றன.

எம்.எல்.ஏ கொலை வழக்கில் முக்கிய சாட்சி படுகொலை!!

எம்.எல்.ஏ கொலை வழக்கில் தொடர்புடைய சாட்சி பட்டப்பகலில் படுகொலை செய்யப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. உத்தரப்பிரதேசத்தில் பகுஜன் சமாஜ் கட்சி எம்.எல்.ஏ. ராஜூ பால் என்பவர் கடந்த 2005ஆம் ஆண்டு கொலை செய்யப்பட்டார். இந்த வழக்கில் சமாஜ்வாதி கட்சி முன்னாள் எம்.எல்.ஏவும், எம்.பி.யுமான அதிக்யு அகமது கைது செய்யப்பட்டார். மாபியா கும்பலை சேர்ந்த அதிக்யு அகமது தற்போது குஜராத் சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். எம்.எல்.ஏ. ராஜூ பால் கொலை வழக்கில் முக்கிய சாட்சி உமேஷ் பால் என்பவராவார். … Read more

தெலங்கானா | மருத்துவமனையில் இளைஞர் திருமணம்

ஹைதராபாத்: தெலங்கானா மாநிலம், மஞ்சிராலா மாவட்டம்,சென்னூர் கிராமத்தை சேர்ந்த சைலஜாவுக்கும், ஜெயசங்கர் பூபாலபல்லி மாவட்டம், பஸ்வராஜு பல்லியை சேர்ந்ததிருப்பதி என்பவருக்கும் நேற்று திருமணம் நடைபெற இருந்தது. ஆனால், திருமணத்திற்கு முந்தைய நாள் சிறிய விபத்தில் மணப்பெண்ணின் கால் எலும்பு முறிந்தது. இதனால் அவரை மருத்துவமனையில் சேர்த்தனர். இந்நிலையில், மணமகன் திருப்பதி, திருமணம் நிச்சயம் செய்யப்பட்ட நாளிலேயே மணமகள் கழுத்தில் தாலிகட்ட விரும்பினார். அதற்கு மணமகளும் சம்மதித்தார். இதையடுத்து மருத்துவமனை அனுமதியுடன் இரு வீட்டார் முன்னிலையில், மணமகன் திருப்பதி,படுக்கையில் … Read more

கர்நாடக சட்டப்பேரவையில் இறுதி உரை ஆற்றிய எடியூரப்பாவுக்கு பிரதமர் நரேந்திர மோடி பாராட்டு

பெங்களூரு: கர்நாடக சட்டப்பேரவையில் இறுதியாக உரை ஆற்றிய முன்னாள் முதல்வர் எடியூரப்பாவை பிரதமர் மோடி பாராட்டியது நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. கர்நாடக முதல்வராக இருந்த எடியூரப்பா, முதுமையின் காரணமாக கடந்த ஆண்டு தனது பதவியை ராஜினாமா செய்தார். அரசியல் செயல்பாடுகளில் இருந்து ஒதுங்கியுள்ள அவர், வருகிற சட்டப்பேரவைத் தேர்தலில் போட்டியிடப் போவதில்லை என அறிவித்துள்ளார். கர்நாடகாவில் இன்னும் ஓரிரு மாதங்களில் சட்டப்பேரவைத் தேர்தல் நடைபெற உள்ள நிலையில், இறுதியாக நேற்றுஅவர் அவையில் உரையாற்றினார். அப்போது எடியூரப்பா பேசியதாவது: நான் … Read more

எந்த ஒரு விவசாயிக்கு இப்படி நடக்க கூடாது..!! 512 கிலோ வெங்காயம் வெறும் 2 ரூபாய்க்கு விற்பனை..!!

மகாராஷ்டிர மாநிலம் சோலாப்பூர் மாவட்டத்தின் பர்ஷி தாலுகாவில் வசித்து வருபவர் விவசாயி ராஜேந்திர சவான் (63). இந்தச் சம்பவம் குறித்து அவர் கூறுகையில், “நான் சோலாப்பூரில் உள்ள வெங்காய வியாபாரி ஒருவருக்கு ஐந்து குவிண்டால்களுக்கு மேல் எடையுள்ள 10 மூட்டை வெங்காயத்தை விற்பனைக்கு அனுப்பி இருந்தேன். ஆனால் சரக்கை ஏற்றுதல், போக்குவரத்து, தொழிலாளர் மற்றும் பிறவற்றிற்கான கட்டணங்களைக் கழித்தது போக வெறும் 2 ரூபாய் 49 காசுகளை மட்டுமே நிகர லாபமாக கிடைத்ததாக தெரிவித்தார். வெங்காயத்தை கொள்முதல் … Read more

ரூ.40,000 செலவு செய்து விளைவித்த 512 கிலோ வெங்காயத்துக்கு மகாராஷ்டிராவில் ரூ.2 பெற்ற விவசாயி

கோலாபூர் / நாசிக்: மகாராஷ்டிர மாநிலம் சோலாபூர் மாவட்டம், பர்ஷி தாலுகாவில் உள்ள போர்காவ்ன் கிராமத்தைச் சேர்ந்தவர் ராஜேந்திர துக்காராம் சாவன் (58). இவர் தனது நிலத்தில் அறுவடை செய்த 512 கிலோ வெங்காயத்தை எடுத்துக் கொண்டு 70 கி.மீ. தூரத்தில் உள்ள சோலாப் மண்டிக்கு (வேளாண் விளைபொருட்கள் மார்க்கெட் கமிட்டி) சென்றார். அங்கு ஒரு கிலோ ஒரு ரூபாய்க்கு மட்டுமே விலை நிர்ணயிக்கப்பட்டது. வேறு வழியின்றி ராஜேந்திர துக்காராம் வெங்காயத்தை வந்த விலைக்கு விற்று விட்டார். … Read more