காங். வழிகாட்டுதல் குழுவில் முடிவு காரிய கமிட்டி உறுப்பினர்களை நியமிக்க கார்கேவுக்கு அதிகாரம்

நவ ராய்ப்பூர்: காங்கிரசின் உயர்மட்ட முடிவுகளை எடுக்கும் அதிகாரம் கொண்ட காரிய கமிட்டியின் உறுப்பினர்களை நியமிக்கும் அதிகாரத்தை கட்சியின் தேசிய தலைவர் மல்லிகார்ஜுன கார்கேவுக்கே வழங்கிட வழிகாட்டுதல் குழுவில் ஒருமனதாக முடிவு செய்யப்பட்டது. காங்கிரஸ் கட்சியின் 85வது மாநாடு சட்டீஸ்கரின் நவ ராய்ப்பூரில் நேற்று தொடங்கியது. இதில், இந்த ஆண்டு நடக்க உள்ள 9 மாநில தேர்தல்கள், கட்சியில் மேற்கொள்ள உள்ள சீர்த்திருத்தங்கள் குறித்து முக்கிய முடிவுகள் எடுக்க உள்ளன. இந்நிலையில், மாநாடு தொடங்கிய நிலையில், காங்கிரஸ் … Read more

அதானி குழுமம் குறித்த செய்திகளுக்கு தடைவிதிக்க முடியாது: உச்சநீதிமன்றம் மறுப்பு

புதுடெல்லி: அதானி குழும விவகாரங்கள் குறித்த செய்திகளை வெளியிட ஊடங்களுக்கு தடை விதிக்க உச்சநீதிமன்றம் மறுத்து விட்டது. அதானி குழும நிறுவனங்கள் மோசடியில் ஈடுபட்டதாக அமெரிக்காவின் ஹிண்டன்பர்க் நிறுவனம் வெளியிட்ட அறிக்கை பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. ஹிண்டன்பர்க் அறிக்கையை அடுத்து அதானி குழும நிறுவனங்களின் பங்கு மதிப்பு கடும் சரிவை சந்தித்து வருகின்றன. இந்நிலையில், இது குறித்து செய்திகளை வெளியிட தடை கோரி உச்ச நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது. மூத்த வக்கீலான எம்.எல்.சர்மா தாக்கல் செய்துள்ள … Read more

சிறுத்தையைப் பிடிப்பதற்காக வைக்கப்பட்ட கூண்டுக்குள் கோழியைப் பிடிக்க சென்று சிக்கிய நபர்.!

உத்தரபிரதேசத்தில் சிறுத்தையைப் பிடிப்பதற்காக வைக்கப்பட்ட இரும்புக் கூண்டுக்குள் இருந்த கோழியைப் பிடிக்கச் சென்ற ஒருவர் உள்ளே சிக்கிக் கொண்டு கதறிய காட்சி நகைப்பை ஏற்படுத்தியது. புலன்ஷார் பகுதியிலுள்ள கிராமத்துக்குள் சிறுத்தை ஒன்று அடிக்கடி நுழைந்து கால்நடைகளை வேட்டையாடி வந்துள்ளது. சிறுத்தையை பிடிப்பதற்காக இரும்புக் கூண்டு அமைத்த வனத்துறையினர், அதற்குள் உயிருள்ள கோழி ஒன்றை வைத்துள்ளனர். அந்த கோழிக்கு ஆசைப்பட்டு, நள்ளிரவில் ஒரு நபர் கூண்டுக்குள் புகுந்துள்ளார். உடனடியாக கூண்டு மூடிக்கொண்ட நிலையில், காலையில் அவ்வழியாகச் சென்றவர்களைப் பார்த்து … Read more

மகாராஷ்டிரா விவசாயியின் கண்ணீர் கதை 512 கி. வெங்காயத்தை 70 கிமீ கொண்டு சென்று விற்றதில் கிடைத்தது ரூ.2 மட்டுமே: நடவடிக்கை எடுக்குமா ஒன்றிய அரசு?

மும்பை: விவசாயி ஒருவர் தனது நிலத்தில் விளைவித்த 512 கிலோ வெங்காயத்தை 70 கிமீ பயணம் செய்து எடுத்து விற்றதில் வெறும் ரூ.2க்கு விற்றிருக்கும் பரிதாப நிலை மகாராஷ்டிராவில் நடந்துள்ளது. இதுபோல விவசாயிகளுக்கு கண்ணீரை வரவழைக்கும் வெங்காய விலை வீழ்ச்சிக்கு ஒன்றிய அரசு நடவடிக்கை எடுக்க வேண்டுமென வலியுறுத்தி உள்ளனர். மகாராஷ்டிராவில் சோலாபூர் மாவட்டம் பர்ஷி தாலுகா பர்கோன் கிராமத்தை சேர்ந்தவர் ராஜேந்திர துகாராம் சவான் (58). விவசாயி. இவர் தனது நிலத்தில் விளைந்த 512 கிலோ … Read more

மாதவிடாய் காலங்களில் விடுப்பு அளிக்க கோரிய மனு; உச்சநீதிமன்றம் தள்ளுபடி.!

பெண் மாணவர்கள் மற்றும் பணிபுரியும் பெண்களுக்கு மாதவிடாய் விடுப்புக்கான விதிகளை வகுக்க அனைத்து மாநிலங்களுக்கும் உத்தரவிடக் கோரிய பொது நல வழக்கை உச்சநீதிமன்றம் இன்று தள்ளுபடி செய்தது. இந்த விவகாரம் அரசாங்கத்தின் கொள்கைக் களம் சார்ந்தது என கூடிய தலைமை நீதிபதி சந்திரசூட் தலைமையிலான அமர்வு, மனுவைத் தள்ளுபடி செய்து, மனுதாரருக்கு, மத்திய பெண்கள் மற்றும் குழந்தைகள் மேம்பாட்டு அமைச்சகத்தை அணுகி, இந்த விவகாரத்தில் கொள்கை முடிவு எடுக்க அனுமதி அளித்தது. “இது ஒரு கொள்கை விவகாரம், … Read more

2 நாட்கள் அரசு முறை பயணமாக நாளை இந்தியா வருகிறார் ஜெர்மனி பிரதமர்..!

இரண்டு நாட்கள் அரசுமுறை பயணமாக ஜெர்மனி பிரதமர் ஓலாஃப் ஸ்கோல்ஸ் நாளை இந்தியா வரும் நிலையில், 520 கோடி அமெரிக்க டாலர் மதிப்பில் கூட்டாக 6 நீர்மூழ்கி கப்பல் கட்டும் ஒப்பந்தம் கையெழுத்தாகலாம் என தகவல் வெளியாகி உள்ளது. இந்தியப் பெருங்கடலில் சீனாவின் ஆதிக்கத்தை எதிர்கொள்ள, 16 பழைய நீர்மூழ்கிக் கப்பல்களில் 11 கப்பல்களை மாற்ற இந்தியா முடிவு செய்துள்ளது. இந்திய கடற்படையில் இரண்டு அணுசக்தி நீர்மூழ்கி கப்பல்கள் உள்ளன. பல தசாப்தங்களாக அதிக ஆயுதங்கள் இறக்குமதி செய்யும் … Read more

ஐந்து நாடுகளின் தூதர்கள் தங்கள் நியமனத்திற்கான ஆதாரச் சான்றிதழ்களை குடியரசுத் தலைவரிடம் வழங்கினார்

டெல்லி: தெற்கு சூடான், ஓமன், பெரு மற்றும் கம்போடியா, செஷல்ஸ் ஆகிய நாடுகளின் தூதர்கள் மற்றும் துணைத் தூதர்கள் குடியரசுத் தலைவர் திரௌபதி முர்முவை சந்தித்து தங்கள் நியமனத்திற்கான ஆதாரச் சான்றிதழ்களை வழங்கினார். குடியரசுத் தலைவர் மாளிகையில் இன்று நடைபெற்ற நிகழ்ச்சியில் முர்மு அந்த சான்றிதழ்களை ஏற்றுக் கொண்டார்.

ஒன்றாக அமர்ந்து மது குடித்த போது நண்பனை சுட்டுக் கொன்ற மற்றொரு நண்பன்

புதுடெல்லி: டெல்லியில் நண்பர்கள் சிலர் ஒன்றாக அமர்ந்து மது அருந்திக் கொண்டிருந்த போது, அவர்களில் ஒருவர் மற்றொரு நண்பரை சுட்டுக் கொன்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. டெல்லியின் கெவ்ரா தொழில்துறை பகுதியில் அமைந்துள்ள குடியிருப்பின் ஒரு அறையில் சுயநினைவின்றி ரத்த வெள்ளத்தில் ஒருவர் கிடப்பதாக போலீசாருக்கு தகவல் கிடைத்தது. சம்பவ இடத்திற்கு சென்ற போலீசார், அந்த நபரின் சடலத்தை கைப்பற்றி விசாரித்தனர். இதுகுறித்து போலீஸ் அதிகாரிகள் கூறுகையில், ‘ரத்த வெள்ளத்தில் இறந்து கிடந்த நபரின் பெயர் … Read more

நீட் முதுநிலை தேர்வை ஒத்திவைக்க கோரும் மனு மீது வரும் 27-ம் தேதி விசாரணை

டெல்லி: நீட் முதுநிலை தேர்வை ஒத்திவைக்க கோரும் மனுவை வரும் 27-ம் தேதி விசாரிப்பதாக உச்சநீதிமன்றம் அறிவித்துள்ளது. கடந்த ஆண்டு நீட் தேர்வு விவரங்கள், பாதிக்கப்பட்ட மாணவர்களின் விவரங்களை சமர்ப்பிக்க நீதிபதிகள் உத்தரவிட்டனர்.

காதலனை கரம் பிடிக்க இந்தியாவிற்குள் ஊடுருவிய பாகிஸ்தான் சிறுமி.. பெற்றோரிடம் ஒப்படைத்த இந்திய அதிகாரிகள்!

காதலனை கரம் பிடிக்க, இந்தியாவிற்குள் ஊடுருவிய பாகிஸ்தான் நாட்டு சிறுமியை போலீசார் மீட்டு, பெற்றோரிடம் ஒப்படைத்தனர். இக்ரா ஜீவனி என்ற 16 வயது சிறுமிக்கு, ஆன்லைன் கேம்ஸ் மூலம் உத்தர பிரதேச இளைஞருடன் காதல் ஏற்பட்டுள்ளது. இளைஞரை மணக்க தீர்மானித்த இக்ரா, இந்திய விசா கிடைக்காததால், நகைகளை விற்று, விமானம் மூலம் துபாய் சென்று, அங்கிருந்து நேபாளம் வந்துள்ளார். இக்ராவின் இந்திய காதலனும் நேபாளம் சென்று, அவரை மணமுடித்து, பின் இருவரும் எல்லை வழியாக இந்தியா வந்துள்ளனர். … Read more