1-ம் வகுப்பில் சேர 6 வயது நிறைவு கட்டாயம் : அனைத்து மாநிலங்களுக்கு ஒன்றிய அரசு உத்தரவு!!

டெல்லி : 6 வயது முடிந்த பிறகே முதல் வகுப்பில் குழந்தைகளை சேர்க்க வேண்டும் என்று ஒன்றிய அரசு உத்தரவிட்டுள்ளது.புதிய தேசிய கல்விக் கொள்கையின் அடிப்படையில் இந்த உத்தரவை அனைத்து மாநில மற்றும் யூனியன் பிரதேசங்களுக்கு ஒன்றிய கல்வித்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது. ஒன்றிய அரசு நாடு முழுவதும் புதிய கல்விக் கொள்கையை அமல்படுத்தியுள்ளது. குழந்தைகளுக்கு 3 முதல் 6 வயது வரை மூளை வளரும் பருவம் என்பதால் கல்வி கற்பிப்பதை 6 வயதுக்குப் பின்னரே துவங்க வேண்டும் … Read more

ஹிஜாப் விவகாரம் | கர்நாடக மாணவிகளின் மனுவினை பரிசீலிக்க உச்ச நீதிமன்றம் ஒப்புதல்

புதுடெல்லி: கர்நாடகாவில் உள்ள அரசு கல்வி நிறுவனங்களில் ஹிஜாப் அணிந்து தேர்வெழுத அனுமதிக்க கோரி முஸ்லிம் மாணவிகள் தாக்கல் செய்த மனுவினை பட்டியலிடுவது குறித்து பரிசீலனை செய்வதகாக தலைமை நீதிபதி சந்திரசூட் புதன்கிழமை தெரிவித்துள்ளார். கர்நாடகா மாநிலத்தில் மார்ச் 9-ம் தேதி தேர்வுகள் தொடங்க உள்ள நிலையில், அரசு கல்வி நிறுவனங்களில் ஹிஜாப் அணிந்து தேர்வெழுத அனுமதி வழங்க வேண்டும் என்று முஸ்லிம் மாணவிகளில் சிலர் இன்று (புதன்கிழமை) உச்ச நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தனர். மாணவிகள் … Read more

ரயிலில் உணவு ஆர்டர் செய்வர்களுக்கு ரயில்வே துறை முக்கிய அறிவிப்பு!

இந்திய ரயில்வேயின் உணவு: ரயிலில் பயணம் செய்பவர்களுக்கு அதிர்ச்சி செய்தி. இனி நீங்கள் ரயிலில் உணவு ஆர்டர் செய்தால் கூடுதலாக பணம் செலுத்த வேண்டி இருக்கும். அதன்படி ரயில்வே உணவுப் பொருட்களின் விலையை உயர்த்தியுள்ளது. அதன்படி இனி மக்கள் ரயில்வேயில் விலை (indian railways food price list) உயர்ந்த உணவுகளை மட்டுமே பெற முடியும். இந்த விலை உயர்வு ரொட்டி முதல் தேநீர் வரை அனைத்திலும் பொருந்தும். மெனுவில் பல புதிய உணவுகள் சேர்க்கப்பட்டுள்ளரயில்வே உணவு … Read more

தேர்தல் ஆணைய துணை ஆணையர் அஜய் தலைமையில் இன்று மாலை ஆலோசனைக் கூட்டம்

டெல்லி: தேர்தல் ஆணைய துணை ஆணையர் அஜய் தலைமையில் இன்று மாலை ஆலோசனைக் கூட்டம் நடைபெற உள்ளது. தலைமைச்செயலகத்திலிருந்து, தலைமைத் தேர்தல் அதிகாரி சத்யபிரதா சாகு காணொலி முலம் மாலை 5 மணிக்கு நடைபெறவுள்ள ஆலோசனையில், கலந்துகொள்கிறார். ஈரோடு மாவட்ட தேர்தல் அதிகாரி, தேர்தல் பார்வையாளர்கள் உள்ளிட்டோரும் ஆலோசனைக் கூட்டத்தில் பங்கேற்கவுள்ளனர்.

இந்தியாவுக்கு ரூ.2.07 லட்சம் கோடி கடன் வழங்க ஆசிய வளர்ச்சி வங்கி ஆர்வம்

புதுடெல்லி: இந்தியாவின் வளர்ச்சித் திட்டங்களுக்கு உதவும் நோக்கில் ரூ.2.07 லட்சம் கோடியை கடனாக வழங்க விரும்புவதாக ஆசிய வளர்ச்சி வங்கி தெரிவித்துள்ளது. ஆசிய வளர்ச்சி வங்கியின் தலைவர் மாசாத்சுகு அசாகவா, பிரதமர் நரேந்திர மோடியை டெல்லியில் இன்று(புதன் கிழமை) சந்தித்து பேச்சுவார்த்தை நடத்தினார். பின்னர், நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமனையும் அவர் சந்தித்து ஆலோசனை மேற்கொண்டார். இதையடுத்து, ஆசிய வளர்ச்சி வங்கி சார்பில் அறிக்கை வெளியிடப்பட்டது. அதில் கூறப்பட்டிருப்பதாவது: ”பிரதமர் நரேந்திர மோடியை, மாசாத்சுகு அசாகவா இன்று … Read more

மெக்கின்சி நிறுவனம் 2,000 ஊழியர்களை பணியிலிருந்து நீக்க உள்ளதாக அறிவிப்பு

மும்பை: நிர்வாக ஆலோசனை நிறுவனமான மெக்கின்சி அன்ட் கோ 2,000 ஊழியர்களை பணியிலிருந்து நீக்க உள்ளதாக அறிவித்துள்ளது. ஆள்குறைப்பு தொடர்பாக பல நிறுவனங்களுக்கு ஆலோசனை அளித்து வந்த  நிறுவனமே தன் பணியாளர்களை குறைக்க உள்ளது. மெக்கின்சியில் பணிபுரியும் 45,000 பேரில் வாடிக்கையாளர், நிறுவனங்களுடன் தொடர்பில் இல்லாத ஊழியர்கள் சிலரை நீக்கவுள்ளதாக அந்நிறுவனம் தெரிவித்துள்ளது.

குழந்தையின் அரிய வகை நோய்க்கு சிகிச்சை: பெயர் வெளியிட விரும்பாத நபர் ரூ.11.6 கோடி நன்கொடை

மும்பை: கேரளாவின் பாலக்காட்டைச் சேர்ந்த சாரங் மேனன் மற்றும் ஆதித்தி நாயர் தம்பதி மும்பையில் வசிக்கின்றனர். இவர்களின் 15 மாத குழந்தை நிர்வானுக்கு ‘ஸ்பைனல் மஸ்குலர் ஆன்ட்ரோபி’ என்ற அரிய வகை மரபணு கோளாறு ஏற்பட்டது. இது உடலில் உள்ள தசைகளை பலவீனமடையச் செய்து இயங்க முடியாமல் ஆக்கும். இதற்கு சிகிச்சை அளிக்க ரூ.17.5 கோடி செலவாகும். இவ்வளவு அதிக தொகை செலவழிக்க அவர்களுக்கு வசதி இல்லாததால், ஆன்லைன் மூலம் பலரிடம் நன்கொடை வசூலிக்க முடிவு செய்தனர். … Read more

விஜய் பட பாணியில் நடத்துனர் மீது வழக்கு தொடர்ந்து இழப்பீடு பெற்ற நபர்!

கடந்த 2002-ம் ஆண்டு விஜய் நடிப்பில் வெளியான தமிழன் படம் குடிமக்களின் அடிப்படை சட்டங்களை பற்றிய விழிப்புணர்வை ஏற்படுத்திய படமாக அமைந்திருந்தது.  அந்த படத்தில் ஒரு காட்சியில் பேருந்தில் பயணம் செய்யும் பயணி ஒருவருக்கு மீதி சில்லறையை தராமல் நடத்துனர் அலட்சியம் செய்வார், உடனே அந்த நடத்துனர் மீது வழக்கு தொடர்ந்து நஷ்ட ஈடு  கோரப்படும்.  அதேபோன்ற ஒரு சம்பவம் தான் தற்போது பெங்களூரு பகுதியில் நடந்துள்ளது, பேருந்தில் ரூ.1 சில்லறை தர மறுத்ததால் பெங்களூரு நுகர்வோர் … Read more

திருப்பதி அடுத்த ரேணிகுண்டாவில் சர்வதேச விமான நிலைய வளர்ச்சி பணிகளை விரைந்து முடிக்க வேண்டும்-கலெக்டர் உத்தரவு

திருப்பதி : திருப்பதி அடுத்த ரேணிகுண்டாவில் உள்ள சர்வதேச விமான நிலைய வளர்ச்சி பணிகளை விரைந்து முடிக்க வேண்டும் என்று கலெக்டர் வெங்கடரமணா உத்தரவிட்டுள்ளார். திருப்பதி கலெக்டர் அலுவலகத்தில் விமான நிலைய வளர்ச்சி பணிகள் தொடர்பான ஆலோசனை கூட்டம் நேற்று நடைபெற்றது. கூட்டத்திற்கு கலெக்டர் வெங்கடரமணா தலைமை தாங்கினார். தொடர்ந்து, அவர் பேசியதாவது: திருப்பதி மாவட்டத்தில் உள்ள ரேணிகுண்டா சர்வதேச விமான நிலைய வளர்ச்சி பணிகள் விரைந்து நடக்க வேண்டும். விமான நிலையத்திற்கு தேவையான இடங்களை அரசு … Read more

அதிகமான விமானநிலையங்கள், சிறந்த இணைப்பு வசதி மக்களை நெருக்கமாக்குகிறது – பிரதமர் மோடி

புதுடெல்லி: விமான போக்குவரத்து துறை, அதிக விமான நிலையங்கள், சிறந்த இணைப்பு வசதிகளுடன் மக்களை நெருக்கமாக கொண்டு வருவதுடன், நாட்டின் முன்னேற்றத்திற்கும் ஊக்கமளிக்கிறது என்று பிரதமர் மோடி இன்று (பிப்.22) தெரிவித்தார். கோவிட்-19 தொற்றுக்குப் பின்னர், உள்நாட்டு விமானப் போக்குவரத்து பயணம், பிப்,19 ஆம் தேதி 4.45 லட்சம் என்ற புதிய இலக்கைத் தொட்டுள்ளதாக தெரிவித்துள்ள சிவில் விமான போக்குவரத்து துறை அமைச்சர் ஜோதிராதித்ய சிந்தியாவின் ட்வீட்டை பகிர்ந்துள்ளார். மேலும், அந்தப் பதிவில்,”அதிக விமான நிலையங்கள், சிறந்த … Read more