மும்பை, தாராவி பகுதியில் பயங்கர தீ விபத்து

மும்பை : மும்பை, தாராவி பகுதியில் பயங்கர தீ விபத்து ஏற்பட்டுள்ளது. இந்த தீ விபத்தில் 25க்கும் மேற்பட்ட வீடுகள் சேதம் அடைந்துள்ளன. 3 மணி நேர போராட்டத்துக்குப் பின்தீயணைப்புத்துறையினர் தீயை கட்டுக்குள் கொண்டு வந்தனர்.

மக்களவைத் தேர்தலில் எதிர்க்கட்சிகள் ஓரணியில் திரண்டால் பாஜகவை தோற்கடிக்க முடியும் – ராகுல் காந்தி கருத்து

புதுடெல்லி: இத்தாலியை சேர்ந்த முன்னணி நாளிதழான கூரியர் டெல்லா சீராவுக்கு காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி அளித்த பேட்டியில் கூறியிருப்பதாவது: இந்தியாவில் பாசிசம் இருக்கிறது. ஜனநாயக அமைப்பு கள் சீர்குலைக்கப்படுகின்றன. அனைத்து அரசு துறைகளிலும்ஆர்எஸ்எஸ் ஊடுருவுகிறது. நாடாளுமன்றம் செயல்படவில்லை. அதானி குழுமம் குறித்து ஹிண்டன்பர்க் வெளியிட்ட அறிக்கை தொடர்பாக நாடாளுமன்றத்தில் பேசமுடியவில்லை. கருத்து சுதந்திரம்,பத்திரிகை சுதந்திரம் பாதிக்கப்பட்டிருக்கிறது. வறுமை, கல்வியறிவின்மை, பணவீக்கம் உள்ளிட்ட உண்மையான பிரச்சினைகளை பாஜக அரசு மூடி மறைக்கிறது. கரோனா பெருந்தொற்று காலத்துக்குப் … Read more

ஜார்கண்ட் ஊரக வளர்ச்சி துறை முறைகேடு நாடு முழுவதும் 20 இடங்களில் அமலாக்கத்துறை ரெய்டு

புதுடெல்லி: ஜார்கண்ட் மாநிலத்தில் ஊரக வளர்ச்சி துறையில் அரசு பணியை வழங்குவதற்கு லஞ்சம் பெற்றதாக குற்றச்சாட்டு எழுந்தது. இது தொடர்பான ஆதாரங்களின் அடிப்படையில் நாடு தழுவிய அளவில் அமலாக்கத்துறை அதிகாரிகள் நேற்று சோதனை நடத்தினார்கள். இந்த பணமோசடியில் தொடர்புடைய ஊரக மேம்பாட்டு துறை அதிகாரிகள், இடைத்தரகர்கள் உள்ளிட்டோருக்கு சொந்தமான இடங்களில் இந்த சோதனை நடத்தப்பட்டுள்ளது. ராஞ்சி, ஜாம்ஷெட்பூர் மற்றும் டெல்லி உட்பட 20க்கும் மேற்பட்ட இடங்களில் சோதனை நடத்தப்பட்டுள்ளது.

மும்பை தாக்குதல் தீவிரவாதிகள் பாகிஸ்தானில் உலா – லாகூர் நிகழ்ச்சியில் ஜாவேத் அக்தர் குற்றச்சாட்டு

புதுடெல்லி: மும்பை தாக்குதல் தீவிரவாதிகள் பாகிஸ்தானில் சுதந்திரமாக உலா வருகிறார்கள் என்று பாலிவுட் பாடலாசிரியர் ஜாவேத் அக்தர் குற்றம்சாட்டி உள்ளார். பாகிஸ்தானின் லாகூரில் சமீபத்தில் இலக்கிய விழா நடைபெற்றது. இந்நிகழ்ச்சியில் பாலிவுட் பாடலாசிரியர் ஜாவேத் அக்தர் பங்கேற்றார். அப்போது அங்கிருந்த பார்வையாளர்களுடன் கலந்துரையாடிய அக்தர், பாகிஸ்தானுக்கு அதன் கோர முகத்தை கண்ணாடியில் காட்டுவது போல் ஒரு கருத்தைக் கூறினார். இந்தியா-பாகிஸ்தான் இடையிலான உறவில் ஏற்பட்டுள்ள விரிசல்குறித்து பேசிய அக்தர், “பாகிஸ்தான் மீது இந்தியர்களுக்கு கோபம் ஏற்பட காரணம் … Read more

“கோவில் நிர்வாகிகளாக அரசியல் கட்சி பிரதிநிதிகளுக்கு இடம் இல்லை” – கேரள உயர்நீதிமன்றம்

ஆலய நிர்வாக அமைப்புகளில் அரசியல் கட்சிகளின் பிரதிநிதிகளுக்கு இடம் இல்லை என்று கேரள உயர்நீதிமன்றம் தெரிவித்துள்ளது. பாலக்காடு மாவட்டத்தில் உள்ள பூக்கோட்டு காலிக்காவு பகவதி அம்மன் கோவில் மலபார் தேவசம் வாரியத்தால் பராமரிக்கப்பட்டு வருகிறது. இதன் நிர்வாகக் குழுவில் மார்க்சிஸ்ட் கட்சியைச் சேர்ந்த பிரதிநிதிகளை சேர்ப்பதற்கு எதிரான மனுவை கேரள உயர்நீதிமன்றம் பரிசீலித்து வந்தது. மலபார் தேவசம் வாரியத்தின் கீழ் வரும் எந்த ஒரு கோவிலிலும் அரசியல் பிரதிநிதிகளை நிர்வாகிகளாக நியமிக்கக் கூடாது என்று நீதிபதிகள் உத்தரவிட்டனர். … Read more

நாடு முழுவதும் 100 கிலோ கடத்தல் தங்கம் சிக்கியது 10 பேர் கைது

மும்பை; இந்தியா-நேபாள எல்லை வழியாக கடத்தல் தங்கம் இந்தியாவுக்குள் கொண்டு வரப்படுவதாக ஒன்றிய வருவாய் புலனாய்வு அதிகாரிகளுக்கு தகவல் கிடைத்தது. இதையடுத்து ஒரே நேரத்தில் பாட்னா, புனே, மும்பை உள்ளிட்ட நகரங்களில் ஆபரேசன் கோல்டன் டான் என்ற பெயரில் அதிகாரிகள் சோதனை நடத்தினார்கள். இந்த சோதனையில் 101.7 கிலோ தங்கம், ரூ.1.35 கோடி இந்திய மற்றும் வெளிநாட்டு ரூபாய் நோட்டுகள் பறிமுதல் செய்யப்பட்டன. ரயில் மற்றும் விமானம் மூலம் கடத்தி வந்த சூடான் நாட்டை சேர்ந்த 7 … Read more

வேலை தேடும் பெண்கள் தான் என் டார்கெட்.. பிளிப்கார்ட் டெலிவரி ஊழியர் செய்த கொடூரம்!!

மகாராஷ்டிரா மாநிலம் மும்பையை சேர்ந்த பெண் ஒருவர் தனக்கு மர்ம நபர் ஒருவர் தொடர்ந்து ஆபாச வீடியோ அனுப்புவதாக போலீசில் புகார் அளித்தார். இதையடுத்து புகாரின் அடிப்படையில் போலீசார் இதுகுறித்து விசாரணை மேற்கொண்டனர். அப்போது அது மும்பையை சேர்ந்த மன்சூலே என்று தெரியவந்தது. மேலும் 27 வயதுடைய இந்த இளைஞர் பிளிப்கார்ட் டெலிவரி ஊழியராக பணிபுரிந்து வருவதும் கண்டுபிடிக்கப்பட்டது. இதனையடுத்து அவரை விரைந்து கைது செய்த போலீசார் சம்பவம் குறித்து அவரிடம் விசாரணை மேற்கொண்டனர். அப்போது பல … Read more

இந்திய உணவு கழக ஊழல் விவகாரம் – பஞ்சாபில் 30 இடங்களில் சிபிஐ சோதனை

புதுடெல்லி: பஞ்சாபில் தனியார் வணிகர்களுக்கு ஆதாயம் அளிக்கும் வகையில் தரம் குறைந்த தானியங்களை கொள்முதல் செய்த குற்றச்சாட்டில் இந்திய உணவுக் கழக அதிகாரிகளுக்கு சொந்தமான 30 இடங்களில் சிபிஐ அதிகாரிகள் நேற்று சோதனை நடத்தினர். பஞ்சாபில் உள்ள தனியார் வணிகர்கள் மற்றும் அரிசி ஆலையினர் பயன்பெறும் வகையில் தரம் குறைந்த உணவு தானியங்களை இந்திய உணவுக் கழகம் (எப்சிஐ) கொள்முதல் செய்ததாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது. ஆபரேஷன் கனக் 2: இந்த ஊழல் புகார் தொடர்பாக ‘‘ஆபரேஷன் கனக் … Read more

சிவசேனா கட்சியின் தலைவராகப் பொறுப்பேற்றார் ஷிண்டே..!

சிவசேனா தலைமைப் பொறுப்பை மும்பையில் நடைபெற்ற தேசிய செயற்குழுக் கூட்டத்தில் மகாராஷ்ட்ரா முதலமைச்சர் ஏக்நாத் ஷிண்டே முறைப்படி ஏற்றுக் கொண்டார். அதிகாரப்பூர்வமான கட்சியாக ஷிண்டே தரப்புக்கு தேர்தல் ஆணையத்தின் அங்கீகாரம் கிடைத்ததையடுத்து டெல்லி நாடாளுமன்ற வளாகத்தில் உள்ள சிவசேனா அலுவலகத்தை ஷிண்டே ஆதரவாளர்கள் கைப்பற்றினர் . இதனிடையே தேர்தல் ஆணையத்தின் முடிவுக்கு எதிர்ப்புத் தெரிவித்து, உத்தவ் தாக்கரே தரப்பில் தாக்கல் செய்யப்பட்ட மனு உச்சநீதிமன்றத்தில் இன்று விசாரணைக்கு வருகிறது.   Source link

கோழிக்கோட்டில் மது கொடுத்து நர்சிங் மாணவி கூட்டு பலாத்காரம்: 2 கல்லூரி மாணவர்களுக்கு வலை

திருவனந்தபுரம்: கேரள  மாநிலம் கோழிக்கோட்டில் கட்டாயப்படுத்தி மது கொடுத்து நர்சிங் மாணவி  கூட்டு பலாத்காரம் செய்யப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது.  இது தொடர்பாக 2 கல்லூரி மாணவர்களை போலீசார் தேடி வருகின்றனர். கேரள மாநிலம்  எர்ணாகுளத்தை சேர்ந்த இளம்பெண் கோழிக்கோட்டில் உள்ள ஒரு நர்சிங்  கல்லூரியில் முதலாம் ஆண்டு படித்து வருகிறார். இதற்காக கல்லூரிக்கு அருகில்  உள்ள ஒரு விடுதியில் தங்கி உள்ளார். இந்தநிலையில் மாணவிக்கும், அதே  பகுதியில் வசித்து வரும் எர்ணாகுளத்தை சேர்ந்த 2 … Read more