யூபிளக்ஸ் நிறுவனத்தில் ஐடி ரெய்டு

புதுடெல்லி: நாட்டின் மிகப்பெரிய பேக்கேஜிங்  நிறுவனமான யூப்ளக்ஸ் உடன் தொடர்புடைய இடங்களில் வருமான வரித்துறை அதிகாரிகள் நேற்று சோதனை நடத்தினார்கள். டெல்லி, நொய்டா, ஜம்மு காஷ்மீர், குஜராத், மேற்கு வங்கம், தமிழ்நாடு, கர்நாடகா உட்பட நிறுவனத்துக்கு சொந்தமான அலுவலகங்கள், அவற்றுடன் தொடர்புடைய சுமார் 70 இடங்களில் சிபிஐ அதிகாரிகள் சோதனை மேற்கொண்டனர். இது தொடர்பாக நிறுவனம் எந்த விளக்கமும் தரவில்லை.

சொன்ன சம்பளத்தில் பாதிதான்! மெயில் அனுப்பிய ’விப்ரோ’ நிறுவனம்.. கலக்கத்தில் பிர‌ஷர்கள்!

புதிதாக பணியமர்த்தப்பட்ட ஊழியர்களின் சம்பளத்தை 50 சதவிகிதம் வரை குறைத்துள்ளது விப்ரோ நிறுவனம். கொரோனா தொற்று சமயத்தில் அதிகப்படியான ஆட்களை வேலைக்கு எடுத்த தொழில்நுட்ப நிறுவனங்கள், உலகம் இயல்பு வாழ்க்கைக்குத் திரும்பியதும் ஊழியர்களைப் பணி நீக்கம் செய்து வருகின்றன. கூகுள், மெட்டா, அமேசான், ட்விட்டர், மைக்ரோசாப்ட் என வரிசையாகப் பல முன்னணி நிறுவனங்கள் ஊழியர்களை கொத்துகொத்தாக பணியில் இருந்து நீக்கி வருகின்றன. இச்சூழலில், இந்தியாவின் முன்னணி தொழில்நுட்ப நிறுவனமான விப்ரோ, ஏற்கனவே ஆட்குறைப்பு செய்த நிலையில், தற்போது ஊழியர்களின் … Read more

தாய்மொழியை அதிகம் பயன்படுத்துவோம் என உறுதிமொழி எடுங்கள்: அமித்ஷா

டெல்லி: தாய்மொழியை அதிகம் பயன்படுத்துவோம் என உறுதிமொழி எடுங்கள் என்று அமித்ஷா தெரிவித்துள்ளார். உலகின் மூத்த மொழிகளில் ஒன்று செம்மொழியான தமிழ் மொழி. இது போன்ற பழமைமிக்க மொழிகள் மட்டுமல்லாது உலகம் முழுவதும் பேசப்பட்டு வரும் மொழிகளுக்காக ஆண்டுதோறும் சர்வதேச தாய்மொழி தினம் கடைபிடிக்கப்படுகிறது. தாய்மொழிகளின் சிறப்பையும், அவசியத்தையும் எடுத்துணர்த்த, ஒவ்வொரு வருடமும் பிப்ரவரி 21ம் நாள் சர்வதேச தாய்மொழிகள் தினமாகக் கொண்டாடப்படுகின்றது. பன்மொழி கலாச்சாரத்தை அனுசரிக்கவும், ஆதரிக்கவும் தாய்மொழி தினம் அனுசரிக்கப்படுகிறது. இந்த நிலையில், சர்வதேச … Read more

இந்தியாவின் UPI-உடன் சிங்கப்பூரின் "பே நவ்" ஒப்பந்தம் – காணொலி மூலம் பங்கேற்ற பிரதமர் மோடி

இந்தியாவின் யூபிஐ-சிங்கப்பூரின் “பே நவ்” நிகழ்நேர பணப்பரிமாற்ற இணைப்பை அறிவிக்கும் நிகழ்ச்சியில் இன்று காணொலிக்காட்சி மூலம் பிரதமர் நரேந்திர மோடி மற்றும் சிங்கப்பூர் பிரதமர் லீ சியன் லூங் ஆகியோர் பங்கேற்றனர். இந்திய ரிசர்வ் வங்கி ஆளுநர் சக்திகாந்த தாஸ், மற்றும் சிங்கப்பூர் நிதி ஆணைய மேலாண்மை இயக்குநர் ரவி மேனன் ஆகியோர் தங்களது மொபைல் போன்கள் மூலம் எல்லை தாண்டிய பரிவர்த்தனைகளை நடத்தி, இணைப்பை தொடங்கி வைத்தனர். எல்லை தாண்டிய யூபிஐ வசதி மூலம் ஒரு … Read more

இத்தன பேரோட காதலா…! முகநூலில் அடித்துக் கொண்ட அழகான ஆபீசர்ஸ் மாற்றம்..! குழாயடி சண்டையால் நடவடிக்கை

முகநூலில் அந்தரங்க தகவல்களை பகிர்ந்து சண்டையிட்ட பெண் ஐபிஎஸ் மற்றும் ஐஏஎஸ் அதிகாரிகள் இருவர் காத்திருப்போர் பட்டியலுக்கு மாற்றப்பட்டுள்ளனர். பெண் ஐ.பி.எஸ் அதிகாரிக்கு உதவியதாக கணவரும் இடமாற்றம் செய்யப்பட்டார். சசிகலா பரப்பன அஹ்ரகாரா சிறையில் இருந்து வெளியே ஷாப்பிங் சென்று வந்ததாக புகார் கிளப்பி பரபரப்பை ஏற்படுத்தியவர் ஐ.பி.எஸ்.அதிகாரி ரூபா. தற்போது கைவினை பொருட்கள் ஆணையத்தின் தலைவராக பணியாற்றி வந்த ரூபா ஐபிஎஸ், அங்கு அறநிலையத்துறை ஆணையராக பணியாற்றி வந்த 39 வயதான ரோகிணி சிந்தூரி ஐ.ஏ.எஸ் … Read more

ஆன்லைன் ரம்மி தொடர்பான தமிழ்நாடு அரசின் மேல்முறையீட்டு மனு விசாரணையை 4 வாரங்களுக்கு ஒத்திவைத்தது உச்சநீதிமன்றம்..!

டெல்லி: ஆன்லைன் ரம்மி விளையாட்டு தடை சட்டத்தை ரத்து செய்த சென்னை உயர்நீதிமன்ற உத்தரவுக்கு எதிரான தமிழ்நாடு அரசின் மேல்முறையீட்டு மனு விசாரணையை 4 வாரங்களுக்கு உச்சநீதிமன்றம் தள்ளிவைத்தது. ஆன்லைன் சூதாட்ட விளையாட்டுகளுக்கு தடை விதித்து கடந்த 2020ம் ஆண்டு நவம்பர் 21ம் தேதி தமிழக அரசு சட்டம் இயற்றியது.  இந்த சட்டத்தை ரத்து செய்யக் கோரி ஆன்லைன் விளையாட்டு நிறுவனங்கள் சார்பில் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது. அப்போது, ‘கடந்த 5 ஆண்டுகளில் ஆன்லைன் … Read more

தனியாக நடந்துச் சென்ற 5 வயது சிறுவனை கடித்து குதறிய வெறிநாய்கள்..!

தெலுங்கானாவில், தந்தை வேலைப்பார்க்கும் கார் சர்வீஸ் சென்டரை சுற்றிப்பார்த்துக் கொண்டிருந்த சிறுவனை தெரு நாய்கள் சூழ்ந்துக் கொண்டு கடித்துக் குதறியதில் சிறுவன் உயிரிழந்தான். நிஜாமாபாத்தில் உள்ள கார் சர்வீஸ் சென்டரில் காவலாளியாக வேலைப்பார்த்து வரும் கங்காதர், தனது 5 வயது மகன் பிரதீப்பை தான் வேலைப்பார்க்கும் இடத்தை காண்பிப்பதற்காக அழைத்து வந்தார். அங்கு பணியிலிருந்த மற்றொரு காவலாளியிடம் கங்காதர் பேசிக் கொண்டிருந்த போது, சிறுவன் தனியாக அப்பகுதியில் நடந்துச் சென்ற போது சில தெரு நாய்கள் சூழ்ந்துக் … Read more

மோடியின் தந்தை குறித்து சர்ச்சை கருத்து: காங்கிரஸ் செய்தி தொடர்பாளர் மீது வழக்கு

புதுடெல்லி: மோடியின் தந்தை குறித்து சர்ச்சைக்குரிய கருத்து கூறிய காங்கிரஸ் செய்தி தொடர்பாளர் பவன் கேரா மீது போலீசார் வழக்குபதிவு செய்துள்ளனர். ஒன்றிய பாஜக அரசுக்கும், காங்கிரஸ் கட்சிக்கும் இடையே நாளுக்கு நாள் மோதல் வலுத்து வருகிறது. இந்த ஆண்டு 9 மாநிலங்களில் நடைபெறும் சட்டசபை தேர்தல் மற்றும் அடுத்தாண்டு நடைபெற உள்ள மக்களவை தேர்தலால், இரு கட்சிகளுக்கும் இடையே வார்த்தை போர் அதிகரித்துள்ளது. இந்நிலையில் பிரதமர் மோடியின் மறைந்த தந்தை குறித்து, காங்கிரஸ் செய்தித் தொடர்பாளர் … Read more

கூடுதல் பென்சனுக்கு ’EPFO’ வெளியிட்ட அறிவிப்பு.. மார்ச் 3ம் தேதி விண்ணப்பிக்க கடைசிநாள்!

பணியாளர் வருங்கால வைப்பு நிதி அமைப்பின் புதிய ஓய்வூதிய திட்டத்தில் இணைவதற்கு போதிய அவகாசம் வழங்கப்படவில்லை என்ற புகார்கள் எழுந்துள்ளது. ஊழியர்கள் வாங்கும் மாதச்சம்பளத்தில் 12 சதவீதம் பிடித்தம் செய்யப்பட்டு பணியாற்றும் நிறுவனம் அதற்கு சமமான தொகையையும் சேர்த்து வருங்கல வைப்பு நிதி ஆணையத்தில் முதலீடு செய்யும். இதுவே பி.ஃஎப்., எனப்படும் வருங்கால வைப்பு நிதி ஆகும். இதில் 8.33 சதவீதம் ஓய்வூதிய திட்டத்திற்கும், 3.7 சதவீதம் வருங்கால வைப்பு நிதியாகவும், 0.50 சதவீதம் காப்பீட்டிற்கும் செலுத்தப்படும். … Read more

ஒடிசாவில் இருந்து வான்வழி ஏவுகணை அமைப்பை வெற்றிகரமாக சோதனை செய்தது டிஆர்டிஓ

ஒடிசா: ஒடிசாவில் இருந்து வான்வழி ஏவுகணை அமைப்பை டிஆர்டிஓ வெற்றிகரமாக சோதனை செய்தது. Su-30MKI போர் விமானத்தில் இருந்து ஏவப்படும் ஏவுகணையானது 100 கிமீ எல்லைக்கு அப்பால் உள்ள இலக்குகளைத் தாக்கும் திறன் உடையது. உள்நாட்டு LCA தேஜாஸ் Mark1A போர் விமானத்தில் பொருத்தப்பட்டிருக்கும்.