இந்தியா அடுத்த 5 ஆண்டுகளில் 3-வது பெரிய பொருளாதாரமாக உருவெடுக்கும் – சர்வதேச முதலீட்டாளர்கள் மாநாட்டில் பிரதமர் உறுதி

புதுடெல்லி: அடுத்த 5 ஆண்டுகளில் உலகின் 3-வது பெரிய பொருளாதார நாடாக இந்தியா உருவெடுக்கும் என்று பிரதமர் நரேந்திர மோடி தெரிவித்துள்ளார். மத்திய பிரதேசத்தின் இந்தூரில் சர்வதேச முதலீட்டாளர்கள் மாநாடு நேற்று தொடங்கியது. 2 நாட்கள் நடைபெறும் இந்த மாநாட்டில் பிரதமர் நரேந்திர மோடி காணொலி வாயிலாக பங்கேற்றார். அவர் பேசியதாவது: வளரும் நாடு என்ற நிலையில் இருந்து வளர்ந்த நாடு என்ற இலக்கை எட்ட நாம் ஒன்றிணைந்து செயல்படுகிறோம். உலக பொருளாதாரத்தில் இந்தியா பிரகாசமாக ஜொலிக்கிறது … Read more

விஐபிக்களுக்கான ஹஜ் இடஒதுக்கீட்டை ரத்து செய்ய மத்திய அரசு முடிவு – சிறுபான்மைத்துறை அமைச்சர் ஸ்மிருதி இரானி அறிவிப்பு!

உயர்மட்ட அரசியலமைப்பு பதவிகள் மற்றும் சிறுபான்மை விவகார அமைச்சகத்தில் உள்ள முக்கிய பிரமுகர்களுக்கான ஹஜ் இட ஒதுக்கீடுட்டை ரத்து செய்ய மத்திய அரசு முடிவு செய்துள்ளதாக சிறுபான்மைத்துறை அமைச்சர் ஸ்மிருதி இரானி தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் பேசும் போது, காங்கிரஸ் ஆட்சிக் காலத்தில்தான் விஐபி கலாச்சாரம் நடைமுறைக்கு வந்ததாகக் குறிப்பிட்ட அவர், மத்திய அரசின் இந்த முடிவுக்கு பல்வேறு மாநிலங்களில் உள்ள ஹஜ் கமிட்டிகள் ஆதரவு தெரிவித்துள்ளதாகவும் குறிப்பிட்டுள்ளார்.  Source link

உச்ச நீதிமன்றத்தில் விசாரணை நிறைவு: அதிமுக பொதுக்குழு வழக்கில் தீர்ப்பு ஒத்திவைப்பு; பொதுக்குழு தீர்மானமின்றி ஓ.பி.எஸ்சை நீக்கியது எப்படி?; எடப்பாடி தரப்புக்கு நீதிபதி சரமாரி கேள்வி

புதுடெல்லி: நடத்தப்பட்ட அதிமுக பொதுக்குழுவில் ஓ.பன்னீர்செல்வத்தை நீக்க வேண்டும் என்ற தீர்மானமே இல்லாதபோது அவரை எப்படி நீக்கினீர்கள் என எடப்பாடி பழனிசாமி மற்றும் அதிமுக தரப்புக்கு உச்ச நீதிமன்றம் சரமாரி கேள்வியெழுப்பியுள்ளது. கடந்த ஜூலை 11ம் தேதி நடத்தப்பட்ட அதிமுக பொதுக்குழுவுக்கு எதிராக ஓ.பன்னீர்செல்வம் மற்றும் அவரது ஆதரவாளர்கள் தரப்பில் தாக்கல் செய்யப்பட்ட மேல்முறையீட்டு மனு  உச்ச நீதிமன்றத்தில் நீதிபதிகள் தினேஷ் மகேஸ்வரி தலைமையிலான அமர்வில் நேற்று ஐந்தாவது நாளாக விசாரணைக்கு வந்தது. அப்போது அதிமுக கட்சி … Read more

மெட்ரோ நிர்வாகத்தின் அலட்சியத்தால் பறிபோன தாய் மற்றும் 2 வயது மகனின் உயிர்..!!

கர்நாடக மாநிலம் பெங்களூருவின் நாகவரா பகுதியில் மெட்ரோ ரயில் பணி நடந்து வருகிறது. கல்யாண் நகரில் இருந்து எச்.ஆர்.பி.ஆர். பகுதி வழித்தடத்தில் மெட்ரோ ரயில் மேம்பாலத்துக்காக தூண்கள் அமைக்கப்பட்டு வருகிறது. இந்த நிலையில் நாகவரா பகுதியில் நேற்று முன்தினம் காலை 11 மணி அளவில் மெட்ரோ ரயில் பாதைக்கான தூண் ஒன்று இடிந்து சாலையில் சென்றவர்கள் மீது விழுந்து விபத்துக்குள்ளானது. இதில் அந்த பைக்கில் சென்ற ஒரு தம்பதி, 2 குழந்தைகள் கம்பிகளுக்கு அடியில் சிக்கி கொண்டனர். … Read more

ஒற்றுமை யாத்திரை – 21 கட்சிகளுக்கு காங். அழைப்பு!..

காஷ்மீரில் 30-ந் தேதி நடக்கும்,ஒற்றுமை பாதயாத்திரை நிறைவு விழாவில் பங்கேற்க 21 கட்சிகளுக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல்காந்தி, கடந்த செப்டம்பர் 7-ந் தேதி கன்னியாகுமரியில் நாடுதழுவிய பாதயாத்திரையை தொடங்கினார். கேரளா, கர்நாடகா, ஆந்திரா, தெலுங்கானா, மராட்டியம், மத்தியபிரதேசம், ராஜஸ்தான், டெல்லி, உத்தரபிரதேசம், அரியானா ஆகிய மாநிலங்கள் வழியாக யாத்திரை பஞ்சாபை அடைந்துள்ளது. இதுவரை 3 ஆயிரத்து 300 கி.மீ.க்கு மேல் நடைபயணம் மேற்கொண்டுள்ளார். காஷ்மீர் தலைநகர் ஸ்ரீநகரில், இம்மாதம் 30-ந் தேதி யாத்திரை … Read more

நான் ரூ.1 கோடி தருகிறேன்.. என் மகளின் உயிரை திருப்பி தர முடியுமா? : பெங்களூரு விபத்தில் உயிரிழந்த பெண்ணின் தந்தை கேள்வி

பெங்களூரு: ‘‘நான் ரூ.1 கோடி தருகிறேன். விபத்தில் உயிரிழந்த என்மகள், பேரனின் உயிரை திருப்பிதர முடியுமா?” என உயிரிழந்த பெண்ணின் தந்தை கேள்வி எழுப்பியுள்ளார். பெங்களூருவில் நேற்று முன்தினம் மெட்ரோ ரயிலின் 40 அடி உயர‌ தூண் சரிந்து சாலையில் விழுந்ததில் தேஜஸ்வினி (28), அவரதுமகன் விஹன் (2) ஆகியோர் உயிரிழந்தனர். அரசு இழப்பீடு: காயமடைந்த தேஜஸ்வினியின் கணவர் லோஹித், மகள் வீனா மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்ற‌னர். இந்த விபத்துக்கு பெங்களூரு மெட்ரோ ரயில் நிர்வாகத்தின் … Read more

பிரதமர் மோடி தொடங்கி வைக்க உள்ள வந்தே பாரத் ரயில் மீது விஷமிகள் கல்வீச்சு..!

ஆந்திர மாநிலம் விசாகப்பட்டினத்தில் வரும் 19ம் தேதி பிரதமர் மோடி தொடங்கி வைக்க உள்ள வந்தே பாரத் ரயில் மீது விஷமிகள் கல்வீசியதில் ரயிலின் 2 கண்ணாடி ஜன்னல்கள் சேதம் அடைந்தன. ரயிலின் பராமரிப்புப் பணிகள் முடிந்து சோதனை ஓட்டம் நடைபெற்ற போது காஞ்சராபாலம் என்ற இடத்தில் சிலர் கல்வீசினர். இந்த சம்பவத்தையடுத்து கண்காணிப்பு கேமராக்கள் மூலம் கல்வீசியவர்களை அடையாளம் காண ரயில்வே போலீசார் முயற்சி மேற்கொண்டுள்ளனர். அவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று அதிகாரிகள் … Read more

2 ஆண்டு இடைவெளிக்கு பிறகு வாகன கண்காட்சி துவங்கியது

புதுடெல்லி: இரண்டு ஆண்டுகளுக்கு பிறகு வாகன கண்காட்சி டெல்லியில் நேற்று துவங்கியது. துவக்க நாளான நேற்று மாருதி சுசூகி, ஹூண்டாய், கியா, எம்ஜி மோட்டார்ஸ் உள்ளிட்ட நிறுவனங்கள் தங்கள் தயாரிப்புகளை காட்சிப்படுத்தின. இந்தியாவில் வாகன கண்காட்சி 2 ஆண்டுக்கு ஒரு முறை நடைபெறுவது வழக்கம். இதற்கு முன்பு கடந்த 2020ம் ஆண்டு நடந்தது. ஆனால், கொரோனா கட்டுப்பாடுகளால் கடந்த ஆண்டு நடைபெறவில்லை. இந்நிலையில், இந்த ஆண்டுக்கான கண்காட்சி கிரேட்டர் நொய்டாவில் உள்ள இந்தியா எக்ஸ்போ மார்ட்டில் மின்சார … Read more

லட்சத்தீவு எம்.பி முகமது பைசலுக்கு 10 ஆண்டு சிறை தண்டனை

கொச்சி: கொலை முயற்சி வழக்கில், லட்சத்தீவைச் சேர்ந்த தேசியவாத காங்கிரஸ் எம்.பி முகமது பைசலுக்கு லட்சத்தீவு நீதிமன்றம் 10 ஆண்டு சிறை தண்டனை விதித்துள்ளது. லட்சத்தீவு பகுதியில் தேசியவாத காங்கிரஸ் கட்சி சார்பில் மக்களவைக்கு தேர்ந்தெடுக்கப்பட்டவர் முகமது பைசல். கடந்த 2009-ம் ஆண்டு நடந்த மக்களவை தேர்தல் பிரசாரத்தின்போது இவருக்கும், லட்சத்தீவு முன்னாள் எம்.பி.,யும், காங்கிரஸ் மூத்த தலைவருமான மறைந்த பி.எம்.சயீத்தின் மருமகன் முகமது சலே என்பவருக்கும் மோதல் ஏற்பட்டது. அப்போது முகமது பைசல், அவரது சகோதரர்கள் … Read more

சோனியாகாந்தி டிஸ்சார்ஜ்

புதுடெல்லி: காங்கிரஸ் முன்னாள் தலைவர் சோனியா காந்தி கடந்த 4ம் தேதி சுவாசப் பாதையில் ஏற்பட்ட தொற்று காரணமாக டெல்லியில் உள்ள கங்கா ராம் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது. பின்னர் சோனியா காந்தியின் உடல்நிலை சீராக உள்ளது. படிப்படியாக அவர் குணமடைந்து வருகிறார் என மருத்துவமனை நிர்வாகம் தெரிவித்திருந்தது. இந்நிலையில்  சோனியா காந்தி  மருத்துவமனையில் இருந்து டிஸ்சார்ஜ் செய்யப்பட்டார்.