4 ஆண்டுகளாக இளைஞர்களுக்கு ஜெகன்மோகன் ஆட்சியில் வேலை வாய்ப்பு இல்லை-தெலுங்கு தேசம் கட்சி குற்றச்சாட்டு

திருப்பதி: ‘4 ஆண்டுகால ஜெகன்மோகன் ஆட்சியில் இளைஞர்களுக்கு வேலை வாய்ப்பு இல்லை’ என்று தெலுங்கு தேசம் கட்சி இளைஞர் அணி விமர்சித்துள்ளது.திருப்பதியில் தெலுங்கு தேசம் கட்சி இளைஞர் அணி மாநில செயலாளர் ரவி செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டியில் கூறியதாவது: ஒய்எஸ்ஆர் காங்கிரஸ் கட்சி ஆட்சிக்கு வந்து 4 ஆண்டுகள் ஆகியும் இளைஞர்களுக்கு வேலை வழங்கவில்லை.  தேர்தலுக்கு முன் முதல்வர் ஜெகன்மோகன் ரெட்டி வேலையில்லாதோருக்கான வேலை காலண்டரை வெளியிடுவோம் என்று கூறி இதுவரை அதனை செயல்படுத்தவில்லை.  ஜெகன்மோகன் ரெட்டியின் … Read more

பஞ்சாப் | இந்திய ஒற்றுமை யாத்திரைக்கு முன்பாக ஃபதேகர் சாஹிப் குருத்வாரா சென்ற ராகுல் காந்தி

ஃபதேகர் சாஹிப்(பஞ்சாப்): பஞ்சாபில் இருந்து தனது இந்திய ஒற்றுமை யாத்திரையைத் தொடங்குவதற்கு முன்பாக ராகுல் காந்தி, ஃபதேர் சாஹிப் குருத்வாரா சென்று வழிபட்டார். காங்கிரஸ் முக்கிய தலைவர் ராகுல் காந்தி தனது இந்திய ஒற்றுமை யாத்திரை பயணத்தை புதன் கிழமை பஞ்சாப் மாநிலம் ஃபதேகர் சாஹிப் மாவட்டத்தில் உள்ள சிர்ஹிந் பகுதியில் இருந்து தொடங்கினார். இதற்காக அவர் செவ்வாய்க்கிழமை மாலையிலேயே சிர்ஹிந்த் வந்தடைந்தார். புதன்கிழமை காலையில் யாத்திரை தொடங்குவதற்கு முன்பாக, ஃபதேகர் சாஹிபில் உள்ள குருத்வாரா சென்று … Read more

பொதுக்குழு கூட்டத்தில் இடம்பெறாத நிகழ்ச்சி நிரலை கொண்டு ஓபிஎஸ் எவ்வாறு கட்சியில் இருந்து நீக்கப்பட்டார்?: உச்சநீதிமன்ற நீதிபதிகள் கேள்வி

டெல்லி: ஜனநாயக அடிப்படையில் பலம் பொருந்திய ஒரு எதிர்க்கட்சியை செயல்படவிடாமல் தடுப்பதை ஏற்க முடியாது என்று உச்சநீதிமன்றத்தில் எடப்பாடி பழனிசாமி தரப்பில் வாதிடப்பட்டது. உச்சநீதிமன்றத்தில் நடைபெற்று வரும் பொதுக்குழு வழக்கில் எடப்பாடி பழனிசாமி தரப்பில் மூத்த வழக்கறிஞர் சி.எஸ்.வைத்தியநாதன் வாதம் செய்தார். கட்சியில் என் ஆதரவும் இல்லாத ஒருவர் பொதுக்குழு கூட்டத்தையும், அதன் முடிவையும் எதிர்ப்பது அடிப்படையற்றது என தெரிவிக்கப்பட்டது. பொதுக்குழுவுக்கே உச்சபட்ச அதிகாரம்: எடப்பாடி தரப்பு வாதம் அதிமுக கட்சியில் உச்சபட்ச அதிகாரத்தை பொதுக்குழு கொண்டுள்ளது. … Read more

சீர்திருத்தம், மாற்றம், முன்னேற்றம் எனும் பாதையில் 2014 முதல் இந்தியா செல்கிறது: பிரதமர் மோடி

புதுடெல்லி: சீர்திருத்தம், மாற்றம், முன்னேற்றம் எனும் பாதையில் கடந்த 2014 முதல் இந்தியா பயணிக்கிறது என்று பிரதமர் நரேந்திர மோடி தெரிவித்துள்ளார். மத்தியப் பிரதேசம் சார்பில் உலக முதலீட்டாளர்கள் மாநாடு அம்மாநிலத்தின் இந்தூர் மாநகரில் நடைபெற்று வருகிறது. புதுடெல்லியில் இருந்தவாறு பிரதமர் நரேந்திர மோடி இதில் கலந்து கொண்டு உரையாற்றினார். அப்போது, ”வலிமையான ஜனநாயகம், நிறைந்த இளைஞர் சக்தி, நிலையான அரசு ஆகியவை இந்தியாவுக்கு நம்பிக்கையையும் உற்சாகத்தையும் அளித்து வருகிறது. இதன் காரணமாக அனைவருக்கும் சிக்கலற்ற வாழ்க்கையை … Read more

பீகாரில் சாதிவாரி கணக்கெடுப்புக்கு எதிரான மனு – ஜன.20ல் விசாரணை..!!

டெல்லி:  சாதிவாரி கணக்கெடுப்பு நடத்தும் பீகார் அரசின் நடவடிக்கைக்கு எதிரான வழக்கை ஜன.20ல் விசாரிப்பதாக உச்சநீதிமன்றம் அறிவித்துள்ளது. மக்கள் தொகை கணக்கெடுப்பை நடத்தும் அதிகாரம் ஒன்றிய அரசுக்கு மட்டுமே உள்ளதாகக்கூறி உச்சநீதிமன்றத்தில் வழக்கு. விதிகளை மீறி பீகார் அரசால்  நடத்தப்படும் சாதிவாரி மக்கள் தொகை கணக்கெடுப்புக்கு தடை விதிக்க கோரியும் வழக்கு தொடரபட்டது.

டெல்லி: தொடரும் அடர்ந்த பனிமூட்டம்… குறைந்த பார்வை திறனால் விமானங்கள், ரயில்கள் தாமதம்!

டெல்லி உள்ளிட்ட வட மாநிலங்களில் நிலவும் மோசமான வானிலை காரணமாக பொது போக்குவரத்து பாதித்துள்ளது. கடுமையான குளிர் நிலவிவந்த சூழ்நிலை படிப்படியாக குறையும் என இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இருப்பினும் இன்று டெல்லியில் அடர்ந்த பனிமூட்டம் காரணமாக 10 விமானங்கள் தாமதமாகியுள்ளது; 26 ரயில்களும் தாமதமாக இயக்கப்படுகின்றன. மூடுபனி காரணமாக கடந்த சில நாட்களாகவே வட மாநிலங்களில் ரயில் மற்றும் விமான சேவை பாதிக்கப்பட்டுள்ளது. அதில் இன்று அதிகாலை முதல் டெல்லியில் பனிமூட்டம் சூழ்ந்துள்ளதால், குறைந்த பார்வைத் … Read more

ஜம்மு காஷ்மீர் | பள்ளத்தாக்கில் கவிழ்ந்து ராணுவ வாகனம் விபத்து – மூன்று வீரர்கள் உயிரிழப்பு

குப்வாரா: ஜம்மு காஷ்மீர் மாநிலம் குப்வாரா அருகே ரோந்து சென்ற ராணுவ வாகனம் பள்ளத்தாக்கில் கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில் அதில் பயணித்த மூன்று ராணுவ வீரர்கள் உயிரிழந்தனர். குப்வாரா மாவட்டத்தில் மச்சல் என்ற பகுதியில் வாகனத்தில் சென்றபடி இன்று வழக்கமான ரோந்து பணிகளை ராணுவ வீரர்கள் மேற்கொண்டனர். ஒரு இளநிலை அதிகாரி உள்பட மூன்று ராணுவ வீரரகள் இதில் பயணித்தனர். இவர்கள் சென்ற வாகனம், பனியில் சருக்கி ஆழமான பள்ளத்தாக்கில் விழுந்து விபத்துக்குள்ளானது. இந்த விபத்தில் வாகனத்தில் பயணித்த … Read more

சபரிமலை யாத்திரை மேற்கொண்டிருந்த தமிழ்நாட்டை சேர்ந்த 2 ஐயப்ப பக்தர்கள் மாரடைப்பால் உயிரிழப்பு

கேரளா: சபரிமலை யாத்திரை மேற்கொண்டிருந்த தமிழ்நாட்டை சேர்ந்த இரண்டு ஐயப்ப பக்தர்கள் மாரடைப்பால் உயிரிழந்தனர். விருதுநகரை சேர்ந்த முருகன் (62), சென்னை மயிலாப்பூரை சேர்ந்த கன்னியப்பன் (74) ஆகியோர் மாரடைப்பால் உயிரிழந்தனர்.

22 கிலோ கேன்சர் கட்டியை தொப்பை என நினைத்த பெண் – அகற்றியது எப்படி?

டெல்லியில் தொப்பை என நினைத்து சிகிச்சை எடுத்துக்கொள்ளாமல் இருந்த பெண்ணின் வயிற்றில் 22 கிலோ கேன்சர் கட்டி இருந்தது கண்டறியப்பட்டு வெற்றிகரமாக அகற்றப்பட்டது. டெல்லியைச் சேர்ந்த 32 வயது பெண் ஒருவர் உடல் எடையை குறைக்க டயட் இருந்துள்ளார். ஆனால் அவருடைய வயிறு மட்டும் பெரிதாகிக்கொண்டே சென்றுள்ளது. தனது டயட் முறையில் ஏதோ தவறு நேர்ந்ததால் தொப்பை கூடிவருவதாக நினைத்த அந்த பெண், வெறும் பழங்கள் மற்றும் காய்கறிகளை மட்டும் சாப்பிட்டுள்ளார். இருப்பினும், நாளாக ஆக வயிறு … Read more

2040-க்குள் உலக எரிபொருள் தேவையில் இந்தியா 25 சதவீத பங்களிப்பினை வழங்கும்

புதுடெல்லி: மத்திய பெட்ரோலியம், இயற்கை எரிவாயு துறை அமைச்சர் ஹர்தீப் சிங் புரி நேற்று கூறியது: வரும் 2040-க்குள் உலகளாவிய எரிபொருள் தேவையில் இந்தியா 25 சதவீத பங்களிப்பினை வழங்கும். அதேபோன்று, 2025-க்குள் பெட்ரோலில் 20% எத்தனால் கலக்கும் இலக்கும் எட்டப்படும். 2013-14-ல் 1.53% ஆக இருந்தபெட்ரோலில் எத்தனால் கலப்பு விகிதம் 2022-ல் 10.17%த்தைஎட்டியது. எனவே, அடுத்தபடியாக 2025 முதல் 2030-க்குள் பெட்ரோலில் எத்தனால் கலப்பு விகிதத்தை 20% ஆக உயர்த்துவதே அரசின் புதிய இலக்காக உள்ளது. … Read more