தேனிலவில் குதிரை சவாரி செய்ய ஆசைப்பட்ட புது மாப்பிள்ளை பலியான சோகம்..!!

மகாராஷ்டிரா மாநிலம் மும்பை பகுதியைச் சேர்ந்தவர் முகமது காஷிப் இம்தியாஸ் சாயிக் (23). இவருக்கு சமீபத்தில் திருமணம் நடைபெற்றது. இதையடுத்து, முகமது காஷிப் தனது மனைவியுடன் தேனிலவு கொண்டாடுவதற்கு மகாராஷ்டிராவில் உள்ள தேனிலவு செல்வதற்கு புகழ்பெற்ற இடமான மாதேரனுக்கு சென்றுள்ளார். இவர்களுடன் மற்றுமொரு தம்பதியும் தேனிலவிற்கு சென்றுள்ளனர். தேனிலவிற்கு சென்ற தம்பதிகள் மாதேரனில் பல இடங்களையும் சுற்றிப்பார்த்த நிலையில், முகமது காஷ்யப், அவரது மனைவி மற்றும் இவர்களுடன் சென்ற மற்ற தம்பதிகள் இருவரும் குதிரை சவாரி செல்ல … Read more

பட்ஜெட் கூட்டத்தொடர் – அனைத்து கட்சி கூட்டத்தில் தலைவர்கள் பங்கேற்பு

புதுடெல்லி: மத்திய பட்ஜெட் கூட்டத்தொடர் இன்று தொடங்கும் நிலையில், மத்திய அரசு ஏற்பாடு செய்திருந்த அனைத்துக் கட்சிக் கூட்டத்தில் பல்வேறு கட்சிகளின் தலைவர்கள் பங்கேற்று விவாதித்தனர். ஆண்டுதோறும் ஜனவரி மாத இறுதியில் அந்த ஆண்டின் முதல்பட்ஜெட் கூட்டத்தொடர் தொடங்கும். அந்த வகையில் இன்று (ஜனவரி 31) இந்த ஆண்டு பட்ஜெட் கூட்டத்தொடர் தொடங்கவுள்ளது. இந்த கூட்டத்துக்குப் பின் மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் பொருளாதார ஆய்வறிக்கையை தாக்கல் செய்கிறார். இந்த அறிக்கையில் 2022-2023-ம் ஆண்டின் திட்டங்கள் குறித்து … Read more

பட்ஜெட் கூட்டத்தொடர்: பெருசா கவனிக்க வைக்கும் பொருளாதார ஆய்வறிக்கை!

மத்திய பட்ஜெட் கூட்டத்தொடர் இன்று தொடங்குகிறது. நடப்பாண்டின் முதல் கூட்டத்தொடர் என்பதால் குடியரசு தலைவர் திரவுபதி முர்மு உரையுடன் தொடங்கவுள்ளது. இவர் கடந்த ஆண்டு ஜூலையில் இந்தியாவின் 15வது குடியரசு தலைவராக பதவியேற்றுக் கொண்டார். இந்நிலையில் நாடாளுமன்றத்தில் இன்றைய தினம் தனது முதல் உரையை திரவுபதி முர்மு ஆற்றவுள்ளது குறிப்பிடத்தக்கது. பட்ஜெட் கூட்டத்தொடர் இதையடுத்து காலை 11 மணிக்கு பொருளாதார ஆய்வறிக்கை 2023ஐ மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தாக்கல் செய்கிறார். இதில் 2022ஆம் நிதியாண்டு எப்படி … Read more

டெல்லியில் இருசக்கர வாகனத்தில் வீடு திரும்பிக் கொண்டிருந்த பெண் சுட்டு கொலை

டெல்லி: டெல்லியில் இருசக்கர வாகனத்தில் வீடு திரும்பிக் கொண்டிருந்த 32 வயது பெண், மர்ம நபரால் சுட்டுக்கொல்லப்பட்டார். டெல்லி பாசிம் விஹாரில் நடந்த கொலை தொடர்பாக போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

காதலனோடு இருந்த சிறுமிக்கு பாலியல் வன்கொடுமை!!

மும்பையில் ஆட்கள் நடமாட்டம் இல்லாத கடலின் கழிமுகப்பகுதியில் 17 வயது சிறுமியும் அவரின் காதலனும் வீடியோ, புகைப்படம் எடுத்துக்கொண்டிருந்தனர். அப்போது இரண்டு பேர் தங்களை போலீஸ் என்று அவர்களிடம் கூறினர். இந்த இடத்துக்கு தனியாக ஏன் வந்தீர்கள் என மிரட்டி, விசாரிக்க வேண்டும் என்று கூறி, அந்த இளைஞரை அழைத்துச் சென்றனர். அந்த சிறுமியை வேறு இடத்துக்கு அழைத்து சென்றனர். பின்னர் அந்த சிறுமியிடம் காதலனுக்கு போன் செய்து, சம்பவ இடத்திலிருந்து தப்பித்துவிட்டதாகவும், தன்னை பற்றிக் கவலைப்பட … Read more

ஒரே ஒரு ஆய்வறிக்கையால் உலகின் 3-வது பெரிய பணக்காரராக இருந்தவர் 7-வது இடத்துக்கு சரிவு..!!

உலகப் பணக்காரர்களில் ஒருவராக இருப்பவர் கௌதம் அதானி. இவர் 1988-ம் ஆண்டு குஜராத் மாநிலம் அகமதாபாத்தை தலைமையிடமாக கொண்டு பல்வேறு நிறுவனங்களை நடத்தி வருகிறார். இந்நிலையில், அதானி குழுமம் பங்குச் சந்தை முறைகேட்டில் ஈடுபட்டதாக அமெரிக்க சந்தை ஆய்வு நிறுவனமான ஹிண்டன்பர்க் ரிசர்ச் குற்றஞ்சாட்டியுள்ளது. இதுகுறித்து ஹிண்டன்பர்க் ரிசர்ச் கடந்த புதன்கிழமை ஆய்வறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது. அதில், அதானி குழுமத்தைச் சேர்ந்த 7 முக்கிய நிறுவனங்கள் தங்களது நிதிநிலையை உண்மைக்குப் புறம்பான முறையில் வலுவாகக் காட்டுவது, ஏராளமான … Read more

மகாத்மா காந்தி நினைவு நாளில் குடியரசுத் தலைவர் முர்மு பிரதமர் மோடி அஞ்சலி

புதுடெல்லி: மகாத்மா காந்தியின் 75-வது நினைவு நாள் நேற்று அனுசரிக்கப்பட்டது. இதையொட்டி டெல்லியில் உள்ள அவரது நினைவிடத்தில் குடியரசுத் தலைவர் திரவுபதி முர்மு, குடியரசு துணைத் தலைவர் ஜெகதீப் தன்கர், பிரதமர் மோடி, மக்களவை சபாநாயகர் ஓம் பிர்லா, பாதுகாப்புத் துறை அமைச்சர் ராஜ்நாத் உள்ளிட்டோர் அஞ்சலி செலுத்தினர். பிரதமர் மோடி ட்விட்டரில் வெளியிட்ட பதிவில், “காந்தியடிகளின் நினைவு நாளில் அவரை வணங்குகிறேன், அவரது ஆழ்ந்த சிந்தனைகளை நினைவு கூர்கிறேன். நமது நாட்டுக்காக தியாகம் செய்த அனைவருக்கும் … Read more

அந்தமான் நிக்கோபார் தீவில் 4.9 ரிக்டர் அளவிற்கு நிலநடுக்கம்

அந்தமான்: அந்தமானில் இருந்து 77 கி.மீ. தொலைவில் மிதமான நிலநடுக்கம்: ரிக்டர் அளவுகோளில் 4.9ஆக பதிவாகியுள்ளது. இந்த நிலநடுக்கம் அதிகாலை 3.40 மணி அளவில் நிலநடுக்கம் ஏற்பட்டதாக தேசிய நில அதிர்வு மையம் தெரிவித்துள்ளது

இன்று தொடங்குகிறது நாடாளுமன்ற கூட்டத்தொடர்!!

குடியரசு தலைவர் உரையுடன் நாடாளுமன்ற பட்ஜெட் கூட்டத் தொடரின் முதல் அமர்வு இன்று தொடங்கி பிப்ரவரி 14ஆம் தேதி வரை நடைபெற உள்ளது. பிபிசி ஆவணப்படம், அதானி விவகாரம் உள்ளிட்ட முக்கிய பிரச்னைகள் குறித்து நாடாளுமன்றத்தில் கேள்வி எழுப்ப வேண்டும் என்று திமுக தலைவரும், முதலமைச்சருமான மு.க.ஸ்டாலின் வலியுறுத்தியுள்ளார். ஆண்டுதோறும் ஜனவரி மாத இறுதியில் அந்த ஆண்டின் முதல் பட்ஜெட் கூட்டத்தொடர் நடைபெறும். அந்த வகையில் இன்று இந்த ஆண்டின் பட்ஜெட் கூட்டத்தொடர் தொடங்குகிறது. இந்நிலையில் அனைத்துக்கட்சி … Read more

பிபிசி ஆவண படத்துக்கு தடையை நீக்கக் கோரி வழக்கு – உச்ச நீதிமன்றத்தில் பிப்.6-ம் தேதி விசாரணை

புதுடெல்லி: பிபிசி ஆவண படத்துக்கு விதிக்கப்பட்டிருக்கும் தடையை நீக்கக் கோரிய வழக்குகள், உச்ச நீதிமன்றத்தில் பிப்.6-ம் தேதி விசாரணை நடத்தப்பட உள்ளது. குஜராத் கலவரம் தொடர்பாக இங்கிலாந்து ஊடகமான பிபிசி அண்மையில் ஆவண படத்தை வெளியிட்டது. தகவல் தொழில்நுட்ப சட்டத்தின் கீழ் இந்த ஆவண படத்துக்கு மத்திய அரசு தடை விதித்துள்ளது. இந்த தடையை நீக்கக் கோரி மூத்த வழக்கறிஞர் எம்.எல். சர்மா உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்துள்ளார். அவர் தாக்கல் செய்த மனுவில், “பிபிசியின் ஆவண … Read more