காஷ்மீர் 2022 | 93 என்கவுன்டர்களில் 172 பயங்கரவாதிகள் சுட்டுக்கொலை: காவல்துறை தகவல்
ஸ்ரீநகர்: காஷ்மீரில் 2022ல் 172 பயங்கரவாதிகள் சுட்டுக்கொல்லப்பட்டுள்ளதாக காஷ்மீர் ஏடிஜிபி விஜய் குமார் தெரிவித்துள்ளார். இந்தியாவில் பயங்கரவாதத் தாக்குதல் அதிகம் நிகழும் பகுதியாக காஷ்மீர் இருந்து வருகிறது. பொதுமக்களை பாதுகாக்கும் நோக்கில் பயங்கரவாதிகளுக்கு எதிராக பாதுகாப்புப் படையினர் தொடர்ந்து போராடி வருகின்றனர். 2022 இன்றுடன் முடிவடைய உள்ளதால், இந்த ஆண்டில் நிகழ்ந்த பயங்கரவாத தாக்குதல் தொடர்பான விவரங்களை காஷ்மீர் காவல்துறை வெளியிட்டுள்ளது. அதன்படி, இந்த ஆண்டு மொத்தம் 93 என்கவுன்டர்கள் நிகழ்ந்துள்ளன. இதில், 42 வெளிநாட்டு பயங்கரவாதிகள் … Read more