18 குழந்தைகள் பலி எதிரொலி நொய்டா மருந்து நிறுவனத்தின் உற்பத்தி தற்காலிகமாக நிறுத்தம்

புதுடெல்லி: உஸ்பெகிஸ்தானில் இருமல், மருந்து குடித்த 18  குழந்தைகள் பலியானதால்,நொய்டா மருந்து நிறுவனத்தில் உற்பத்தி தற்காலிக நிறுத்தப்பட்டுள்ளது. நொய்டாவில் உள்ள மரியன் பயோடெக் நிறுவனம் டோக் 1 மேக்ஸ் என்ற குழந்தைகளுக்கான இருமல், சளிக்கான மருந்து தயாரிக்கிறது. இந்த இருமல் மருந்தை உட்கொண்ட 18 குழந்தைகள் பலியானதாக, உஸ்பெகிஸ்தான் நாட்டின் சுகாதாரத்துறை குற்றம் சாட்டியது. ஏற்கெனவே, காம்பியாவில் இந்திய நிறுவனம் தயாரித்த இருமல் மருந்தை உட்கொண்ட 66 குழந்தைகள், இறந்த சம்பவம் சமீபத்தில் அதிர்ச்சியை ஏற்படுத்தியிருந்தது. இதுகுறித்து … Read more

அதிர்ச்சி..!! உயிரை காப்பாற்ற வேண்டிய ஆக்ஸிஜன் சிலிண்டர் 2 பேரின் உயிரை காவு வாங்கியது..!!

உத்தரபிரதேச மாநிலம் சந்தோலி மாவட்டத்தில் முகல்சராய் நகரின் ரவி நகர் பகுதியில் தயாள் மருத்துவனை ஒன்று இயங்கி வருகிறது. இந்த மருத்துவமனையின் வெளியே இன்று காலை 9 மணியளவில் திடீரென வெடி விபத்து ஏற்பட்டது.இதில், மருத்துவமனை மற்றும் வீடுகளின் ஜன்னல் கண்ணாடிகள் அதிர்ந்து விழுந்து நொறுங்கின. இந்த விபத்தில் சிக்கி 2 பேர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். விபத்து குறித்து தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு, உள்ளூர் காவல் கண்காணிப்பாளர் மற்றும் முகல்சராய் எம்எல்ஏ வந்தனர். இதையடுத்து … Read more

ஃபேஸ்புக் லைவ்வில் 27 வயது இளைஞர் தற்கொலை.. காரணம் இது தான்..!!

அசாம் மாநிலம் கவுகாத்தியில் ஜெயதீப் ராய் (27) என்ற இளைஞர் தற்கொலை செய்து கொண்டார். குடும்பத்தினர் வற்புறுத்துவதால் எனது காதலி என்னை திருமணம் செய்து கொள்ள மறுத்ததாக கூறி தற்கொலை செய்து கொண்டார். எனது மகனின் மரணத்திற்கு பெண்ணின் குடும்பமே காரணம் என இளைஞனின் குடும்பத்தினர் கடும் குற்றச்சாட்டை முன்வைத்துள்ளனர். மருத்துவ விற்பனை பிரதிநிதியாக பணிபுரிந்து வந்த ஜெயதீப் ராய், சில்சாரில் உள்ள வாடகை அறையில் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார். ஃபேஸ்புக் லைவ்வில், “நான் ஒரு … Read more

பிரதமரின் தாயார் 100-வது வயதில் காலமானார் – அரசு மரியாதை தவிர்ப்பு; எளிமையான இறுதிச் சடங்கு

காந்திநகர்: பிரதமர் நரேந்திர மோடியின் தாயார் ஹீராபென் தனது 100-வது வயதில் நேற்று காலமானார். குஜராத் தலைநகர் காந்திநகரில் அவரது உடல் தகனம் செய்யப்பட்டது. அரசு மரியாதை இல்லாமல், எளிமையான முறையில் இறுதிச் சடங்கு நடைபெற்றது. 1923 ஜூன் 18-ம் தேதி குஜராத்தின் மெஹ்சானா மாவட்டம் விஸ்நகரில் பிறந்தவர் ஹீராபென். அருகில் உள்ள வட்நகரைச் சேர்ந்த தாமோதர்தாஸ் மூல்சந்த் மோடியை சிறுவயதிலேயே திருமணம் செய்தார். வட்நகர் ரயில் நிலையத்தில் தாமோதர் தாஸ், தேநீர் விற்பனை செய்து வந்தார். … Read more

புதிய நாடாளுமன்றத்தில் பட்ஜெட் 2வது கூட்டம்?

புதுடெல்லி: புதிய நாடாளுமன்ற கட்டிடம் கட்ட கடந்த 2020ம் ஆண்டு பிரதமர்  மோடி அடிக்கல் நாட்டினார். மொத்தம் 64,500 சதுர மீட்டர் பரப்பளவில், 4 மாடிகளுடன் முக்கோண வடிவில்  நாடாளுமன்றத்துக்கு கட்டிடம் கட்டப்படுகிறது. சென்டிரல் விஸ்டா திட்டத்தின் கீழ்  கட்டப்படும் வளாகத்தில் பிரதமர் இல்லம்,  துணை ஜனாதிபதி இல்லம், ஒன்றிய செயலகம் உள்ளிட்டவை கட்டப்படுகின்றன. கடந்த மாதம் ஒன்றிய நகர்புற வளர்ச்சி துறை அமைச்சர் ஹர்தீப் சிங் புரி பேட்டியளிக்கையில், ‘‘நாடாளுமன்ற கட்டிட கட்டுமான பணிகள் வேகமாக … Read more

வக்கீல்கள் கிடைக்காமல் 63 லட்சம் வழக்கு தேக்கம்: தலைமை நீதிபதி சந்திரசூட் பேச்சு

அமராவதி: வழக்குகளில் வாதாட வக்கீல்கள் கிடைக்காததால் நாடு முழுவதும் 63 லட்சம் வழக்குகள் தேங்கியுள்ளன என உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி சந்திரசூட் தெரிவித்துள்ளார். ஆந்திர மாநிலம்,அமராவதியில் ஆந்திர பிரதேச நீதித்துறை அகாடமி துவக்க விழா நேற்று நடந்தது. இதில், உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி சந்திரசூட் பேசும்போது,‘‘இந்திய கிரிமினல் நீதி அமைப்பின்படி வழக்குகளில் ஜெயில் தண்டனையை விட ஜாமீன் வழங்குவது முக்கியமானது. ஆனால் செயல்முறையில், இந்தியாவில் சிறைகளில் இருக்கும் விசாரணை கைதிகள் எண்ணிக்கை அதிகம். ஒருநாள் சிறை என்பது … Read more

மேற்கு வங்கத்தில் வந்தே பாரத் சேவை தொடக்கம்; ரயில்வேயை நவீனமயமாக்க வரலாறு காணாத முதலீடு: பிரதமர் மோடி பேச்சு

கொல்கத்தா: மேற்கு வங்கத்தில் நாட்டின் 7வது வந்தே பாரத் ரயில் சேவையை தொடங்கி வைத்து பேசிய பிரதமர் மோடி, “நாட்டின் ரயில்வே கட்டமைப்பை நவீனமயமாக்க வரலாறு காணாத வகையில் முதலீடு செய்யப்படுகிறது,’’ என்று கூறினார். மேற்கு வங்கத்தில், வடகிழக்கின் நுழைவுவாயிலாக கருதப்படும் ஹவுரா – நியூஜல் பைகுரியை இணைக்கும் வந்தே பாரத் ரயில் சேவையை பிரதமர் மோடி நேற்று தொடங்கி வைத்தார்.  இதன் மூலம், ஹவுரா-நியூ ஜல்பைக்குரி இடையேயான 600 கி.மீ தூரத்தை 7.45 மணி நேரத்தில் … Read more

தேர்தல் அறக்கட்டளைகள் மூலம் ஒரே ஆண்டில் பாஜவுக்கு ரூ351 கோடி நன்கொடை

புதுடெல்லி: 2021-22ம் ஆண்டில் தேர்தல் அறக்கட்டளைகள் மூலம் பாஜ கட்சி ரூ.351 கோடி நன்கொடை பெற்று முதலிடத்தில் உள்ளது. 2021-22 நிதியாண்டில் தேர்தல் அறக்கட்டளைகள் மூலம் அரசியல் கட்சிகளுக்கு எவ்வளவு பணம் வழங்கப்பட்டிருக்கிறது என்பது குறித்த அறிக்கையை ஜனநாயக சீர்திருத்தங்களுக்கான சங்கம் (ஏடிஆர்) வெளியிட்டுள்ளது.  அதன்படி 89 கார்ப்பரேட், வணிக நிறுவனங்கள், 40 தனிநபர்கள் மொத்தமாக ரூ.487.0551 கோடியை ஆறு தேர்தல் அறக்கட்டளைகளுக்கு நன்கொடையாக அளித்திருக்கிறார்கள். இந்த நிதி  பல்வேறு அரசியல் கட்சிகளுக்கு நன்கொடையாக அளிக்கப்பட்டுள்ளது. பாஜவுக்கு … Read more

2023 பட்ஜெட் கூட்டத்தொடரின் 2ம் பகுதி புதிய நாடாளுமன்றத்தில் நடைபெறும் என தகவல்!

புதுடெல்லி: பட்ஜெட் கூட்டத்தொடரின் இரண்டாம் பகுதிக்கான பாராளுமன்றம் கூடும் மார்ச் மாதம் புதிய பார்லிமென்ட் கட்டடம் திறக்கப்படும் என தெரிகிறது. நாடாளுமன்ற கட்டிடத்தின் பணிகள் முழுவீச்சில் நடைபெற்று வருவதாகவும், பிப்ரவரி மாதத்திற்குள் பணிகள் முடிவடையும் என்றும் அதிகாரிகள் தெரிவித்தனர். பட்ஜெட் கூட்டத்தொடரின் இரண்டாம் பகுதி புதிய பார்லிமென்ட் கட்டிடத்தில் நடைபெறும் என பிரஸ் பிடிஐ செய்தி நிறுவனத்திடம் அரசு வட்டாரங்கள் தெரிவித்தன. பட்ஜெட் கூட்டத்தொடர் வழக்கமாக இரண்டு பகுதிகளாக நடைபெறும். முதல் பகுதி வழக்கமாக ஜனவரி 30 … Read more

வைகுண்ட ஏகாதசியையொட்டி திருப்பதிக்கு சிறப்பு பஸ்

திருமலை: வைகுண்ட ஏகாதசியையொட்டி தமிழகத்தில் இருந்து 25 சிறப்பு பஸ்கள் இன்று முதல் இயக்கப்பட உள்ளதாக ஆந்திர மாநில போக்குவரத்து கழக திருப்பதி பிராந்திய மேலாளர் செங்கல்ரெட்டி தெரிவித்துள்ளார். ஆந்திர மாநிலம், திருப்பதியில் நேற்று மாநில போக்குவரத்து கழக திருப்பதி பிராந்திய மேலாளர் செங்கல்ரெட்டி நிருபர்களிடம் கூறியதாவது: ஜனவரி 1ம்  தேதி ஆங்கில புத்தாண்டு, 2ம் தேதி முதல் 11ம் தேதி வரை வைகுண்ட ஏகாதசிக்கான சொர்க்கவாசல் திறக்கப்பட்டு பக்தர்கள் தரிசனத்திற்கு அனுமதிக்கப்பட உள்ளனர். இதற்காக, திருமலை … Read more