சீனா உடனான உறவு இயல்பாக இல்லை!: சைப்ரஸில் வெளியுறவு அமைச்சர் பேச்சு
புதுடெல்லி: சீனாவுடனான இந்திய உறவுகள் இயல்பானதாக இல்லை என்று சைப்ரஸ் நாட்டில் நடந்த நிகழ்ச்சியில் வெளியுறவு அமைச்சர் ஜெய்சங்கர் பேசினார். ஒன்றிய வெளியுறவுத் துறை அமைச்சர் ஜெய்சங்கர் தனது முதல் அதிகாரபூர்வ பயணமாக சைப்ரஸ் நாட்டிற்கு மூன்று நாள் பயணமாக சென்றுள்ளார். அங்கு அவர் முன்னாள் சைப்ரஸ் வெளியுறவு அமைச்சர் நிக்கோஸ் கிறிஸ்டோடோலிட்ஸை சந்தித்தார். தொடர்ந்து நடந்த நிகழ்ச்சியில் அமைச்சர் ஜெய்சங்கர் பேசுகையில், ‘உலக பொருளாதாரத்தில் இந்தியா வேகமாக வளர்ந்து வருகிறது. பிரதமர் மோடி தலைமையிலான அரசானது, … Read more