அடேங்கப்பா! 365 நாட்களில் 3330 உணவு ஆர்டர்: டெல்லி இளைஞரின் சுவாரசிய சாதனை

புதுடெல்லி: உணவு டெலிவரி நிறுவனத்தின் மூலம் ஒரு வருடம் முழுவதும் டெல்லியை சேர்ந்த இளைஞர் ஒருவர் 3330 உணவு ஆர்டர் செய்துள்ளதாக அந்நிறுவனம் வெளியிட்ட வருடாந்திர சுவாரசிய அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. வாடிக்கையாளர்களின் வசதிக்காக பல்வேறு நிறுவனங்கள் நேரடியாக வீட்டிற்கே சென்று உணவு டெலிவெரி செய்து வருகின்றன. இந்நிலையில் அதில் ஒரு  நிறுவனமான சோமோட்டோ, 2022ம் ஆண்டிற்கான வருடாந்திர சுவாரசிய அறிக்கையை அதன் செயலியில் நேற்று வெளியிட்டுள்ளது. அதில்,‘‘டெல்லியைச் சேர்ந்த அங்கூர் என்பவர் 2022 ஆண்டில் 3330 முறை … Read more

ஆந்திர தேசிய நெடுஞ்சாலையில் போர் விமானங்கள் இறக்க சோதனை ஓட்டம்

திருமலை: ஆந்திர தேசிய நெடுஞ்சாலையில் அவசர காலத்தில் போர் விமானங்கள் இறங்க சோதனை ஓட்டம் நேற்று நடைபெற்றது. இதனால், போக்குவரத்து மாற்றம் செய்யப்பட்டது. பிரதமரின் கதி சக்தி மிஷன் திட்டத்தின்கீழ் அவசர காலத்தில் தரையிறங்கும் விமான ஓடுபாதைகள் நாடு முழுவதும் 20 இடங்களில்  அமைக்கப்பட்டு வருகிறது. தென்னிந்தியாவில் முதல் முறையாக ஆந்திர மாநிலம், பாபட்லா மாவட்டத்தில் சென்னை- கொல்கத்தா தேசிய நெடுஞ்சாலையில் ரேணங்கிவரம்-  அட்டாங்கி  இடையே 4.1 கிமீ நீளம் மற்றும் 33 மீட்டர் அகலம் கொண்ட … Read more

தூங்கும் வசதியுடன் வந்தே பாரத் ரயில் – சென்னை ஐசிஎப்.க்கு ரயில்வே உத்தரவு

புதுடெல்லி: நாட்டில் பயண நேரத்தை குறைக்கும் நோக்கில், வந்தே பாரத் அதிவேக ரயில்கள் தயாரிக்கப்பட்டு வருகின்றன. ‘மேக் இன் இந்தியா’ திட்டத்தின் கீழ் இந்த ரயில்களுக்கான பெட்டிகள் இருக்கை வசதியுடன் சென்னை ஐசிஎப் தொழிற்சாலையில் தயாரிக்கப்பட்டு வருகின்றன. மொத்தம் 117 வந்தே பாரத் ரயில்களுக்கான பெட்டிகள் தயாரிக்க ஐசிஎப் ஆர்டர் பெற்றுள்ளது. இந்நிலையில், இவற்றில் 75 ரயில்கள் மட்டும் இருக்கை வசதியுடன் தயாரிக்கப்படும். மீதமுள்ள ரயில்களில் இரவு நேர பயணத்தின் போது தூங்கும் வசதி ஏற்படுத்தப்படும் என்று … Read more

குடியரசு தின விழா அணிவகுப்பில் 7வது ஆண்டாக பீகார் புறக்கணிப்பு: ஒன்றிய அரசு மீது ஆளும் ஐ.ஜ.த குற்றச்சாட்டு

பாட்னா: குடியரசு தின அணிவகுப்பில் 7வது ஆண்டாக பீகார் புறக்கணிக்கப்பட்டதாக அம்மாநிலத்தில் ஆளும் ஐக்கிய ஜனதா தளம் மூத்த தலைவர் குற்றம்சாட்டி உள்ளார். வரும் 2023ம் ஆண்டு ஜனவரி 26ம் தேதி குடியரசு தின விழா கொண்டாடப்படுகிறது. தலைநகர் டெல்லியில் குடியரசு தலைவர் திரவுபதி முர்மு பதவியேற்று முதன் முறையாக தேசியக் கொடியை ஏற்றிவைத்து நாட்டு மக்களுடன் உரையாற்றுவார். தொடர்ந்து பல்வேறு கலை நிகழ்ச்சிகளும் நடைபெறும். அன்றைய தினம் பல்வேறு மாநிலங்களின் அடையாளங்களை பிரதிபலிக்கும் வகையிலான அணிவகுப்பும் … Read more

காங்கிரஸ் கட்சியின் 138-வது நிறுவன தின விழா

புதுடெல்லி: காங்கிரஸ் கட்சியின் 138-வது நிறுவன தின நிகழ்ச்சி டெல்லியில் நேற்று கொண்டாடப்பட்டது. இதில் காங்கிரஸ் முன்னாள் தலைவர்கள் சோனியா காந்தி, ராகுல் காந்தி ஆகியோர் கலந்து கொண்டனர். இதில் காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே பேசியதாவது: மக்களிடையே பாஜக பிரி வினையை உருவாக்கி, நாட்டில் வேலைவாய்ப்பின்மையை நீடிக்க வைக்கிறது. இந்தியா என்ற எண்ணத்தின் மீதே தொடர் தாக்குதல் நடத்தப்படுகிறது. நாடு முழுவதும் வெறுப்புணர்வை ஒவ்வொரு நாளும் பாஜக அதிகப்படுத்துகிறது. பணவீக்கம் மற்றம் வேலைவாய்ப்பின்மை ஆகியவை மக்களுக்கு … Read more

மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள மோடியின் தாயார் எப்படி இருக்கிறார்?: விரைவில் குணமடைய பிரார்த்தனை

அகமதாபாத்: மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள பிரதமர் மோடியின் தாயாரின் உடல்நிலையில் முன்னேற்றம் இருப்பதாகவும், விரைவில் அவர் வீடு திரும்புவார் என்று மருத்துவமனை வட்டாரங்கள் தெரிவித்தன. பிரதமர் மோடியின் தாயார் ஹீராபென் உடல்நலக் குறைவால் அகமதாபாத்தில் உள்ள மருத்துவமனையில் நேற்று அனுமதிக்கப்பட்டார். இதையறிந்த பிரதமர் மோடி, அகமதாபாத் மருத்துவமனைக்கு நேரில் சென்று அவரது தாயாரை சந்தித்து நலம் விசாரித்தார். தற்போது ஹீராபெனின் உடல்நிலை சீராக இருப்பதாக மருத்துவமனை வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. அடுத்த இரண்டு நாட்களில் அவர் மருத்துவமனையில் இருந்து … Read more

பாரத் பயோடெக், பயோலாஜிக்கல் இ நிறுவனத்திடம் 25 கோடி கரோனா தடுப்பூசி டோஸ்கள் கையிருப்பு

ஹைதராபாத்: ஹைதராபாத்தில் உள்ள தடுப்பூசி தயாரிப்பு நிறுவனங்களான பயோலாஜிக்கல் இ மற்றும் பாரத் பயோடெக்கிடம் 25 கோடி கரோனா தடுப்பூசி டோஸ்கள் கையிருப்பு உள்ளன. அதிகபட்சமாக பயோலாஜிகல் இ நிறுவனத்திடம் 20 கோடி டோஸ்களும், பாரத் பயோடெக் நிறுவனத்திடம் 5 கோடி டோஸ்களும் உள்ளன. பயோலாஜிகல் இ நிறுவனத்தின் உற்பத்திப் பிரிவின் நிர்வாகத் துணைத் தலைவர் விக்ரம் பரத்கர் கூறுகையில், “நாங்கள் 30 கோடி கார்ப்வேக்ஸ் டோஸ்களைத் தயாரித்தோம். இவற்றில் 10 கோடி டோஸ்களை கடந்த மார்ச் … Read more

ஒரே மாதத்தில் 2வது முறையாக ட்விட்டர் தளம் முடக்கம்

புதுடெல்லி: ஒரே மாதத்தில் இரண்டாவது முறையாக இன்று ட்விட்டர் தளம் முடக்கப்பட்டதால் பயனர்கள் கடும் சிரத்திற்கு ஆளாகினர். சமூக ஊடக தளமான ட்விட்டர், இன்று காலை முடங்கியது. அதனால் அனைத்து பயனர்களும் ட்விட்டர் தளத்திற்குள் நுழைவதில் சிக்கல்களை எதிர்கொண்டனர். ஒரே மாதத்தில் இரண்டாவது முறையாக ட்விட்டர் முடக்கப்பட்டுள்ளது. கடந்த 11ம் தேதி ட்விட்டர் தளம் ஏற்கனவே முடக்கப்பட்டு, பின்னர் மீட்டெடுக்கப்பட்டது. இன்று காலை 7.30 மணியளவில் 8,700 பயனர்கள் தாங்கள் எதிர்கொள்ளும் பிரச்னைகள் குறித்து அதனை புகாராக … Read more

ஹவுரா – நியூ ஜல்பாய்குரி வரையிலான வந்தே பாரத் எக்ஸ்பிரஸ் ரயில் – என்ன ஸ்பெஷல்?

ஹவுரா – நியூ ஜல்பாய்குரி வரையிலான வந்தே பாரத் எக்ஸ்பிரஸ் ரயிலை பிரதமர் மோடி நாளை தொடங்கி வைக்கிறார். பல்வேறு திட்டங்களை அடிக்கல் நாட்ட நாளை மேற்கு வங்கம் செல்லும் பிரதமர் மோடி, ஹவுரா ரயில் நிலையத்தில், ஹவுரா- புதிய ஜல்பைகுரியை இணைக்கும், வந்தே பாரத் எக்ஸ்பிரஸ் ரயிலை கொடியசைத்து தொடங்கி வைக்கிறார். ரயில் எங்கெங்கே நிற்கும்: பல்வேறு நவீன வசதிகளுடன் கூடிய இந்த ரயில், மால்டா டவுன், பர்சோய், கிஷான்கஞ்ச் ரயில் நிலையங்களில் நின்று செல்லும். … Read more

எங்களின் 865 கிராமங்களை சொந்தம் கொண்டாடுவதா? – மகாராஷ்டிர தீர்மானத்துக்கு கர்நாடகா கண்டனம் 

பெங்களூரு: கர்நாடகாவில் உள்ள 865 கிராமங்களை மகாராஷ்டிராவுடன் இணைப்பது தொடர்பாக மகாராஷ்டிரா சட்டப்பேரவையில் தீர்மானம் நிறைவேற்றியதற்கு கர்நாடக அரசு கடும் கண்டனம் தெரிவித்துள்ளது. 1956-ஆம் ஆண்டு மொழிவாரி மாநிலங்கள் பிரிக்கப்பட்டதில் இருந்து கர்நாடகா – மகாராஷ்டிரா இடையே எல்லைப் பிரச்சினை நீடிக்கிறது. கர்நாடகாவில் உள்ள பெலகாவி, பீதர், கார்வார் உள்ளிட்ட எல்லையோர‌ மாவட்டங்களில் உள்ள 865 கிராமங்களை மகாராஷ்டிராவுடன் இணைக்க வேண்டும் என மராத்திய அமைப்பினர் தொடர் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். இது தொடர்பாக மகாராஷ்டிர அரசு கடந்த … Read more