டெல்லியில் பழைய 4 மாடி கட்டடம் திடீரென விழுந்ததில் 3 பேர் பலி

டெல்லி: டெல்லியில் பழமையான 4 மாடி கட்டடம் திடீரென இடிந்து விழுந்ததில் 3 பேர் உயிரிழந்ததாக காவல்துறை தகவல் தெரிவித்துள்ளது. கட்டட இடிபாடுகளில் மேலும் சிலர் சிக்கி இருக்கலாம் என அஞ்சப்படும் நிலையில் தீயணைப்புத்துறை மீட்பு பணியில் ஈடுபட்டுள்ளது. 

ராணி எலிசெபத் திருமணத்திற்கு காந்தி கொடுத்த பரிசு: இரங்கல் ட்வீட்டில் மோடி பகிர்ந்த குறிப்பு

புதுடெல்லி: “இங்கிலாந்தின் இரண்டாம் எலிசபெத் ராணியின் அன்பையும், வர்வேற்பையும் என்றும் மறக்க முடியாது” என்று குறிப்பிட்டு, அவரது மறைவிற்கு பிரதமர் .நரேந்திர மோடி இரங்கல் தெரிவித்துள்ளார். பிரதமர் மோடி தனது ட்விட்டர் பதிவில், “சமகாலத்தில் வாழ்ந்த ஒரு வலிமையான தலைவரான இரண்டாம் எலிசபெத் ராணியை என்றென்றும் நமது நினைவுகளில் நிலைத்திருப்பார். தேசத்திற்கும், மக்களுக்கும் ஊக்கமளிக்கும் தலைவராக திகழ்ந்தவர். பொது வாழ்வில் கண்ணியத்தையும், நேர்மையையும் கடைபிடித்தவர். அவருடைய மறைவால் வேதனையடைந்தேன். இந்த சோகமான நேரத்தில் எனது சிந்தனைகள் அவருடைய … Read more

சட்டவிரோதமாக கடன் வழங்கும் செயலிகளை ஒடுக்க ஒன்றிய அரசு நடவடிக்கை: நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தகவல்

டெல்லி: சட்டவிரோதமாக கடன் வழங்கும் செயலிகளை ஒடுக்க ஒன்றிய அரசு நடவடிக்கை எடுக்கப்படும் என நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தகவல் தெரிவித்துள்ளார். சட்டவிரோத கடன் செயலிகளால் பல தற்கொலைகள் தூண்டப்பட்டு இருப்பதை தொடர்ந்து, நிதியமைச்சர் தலைமையில் நடைபெற்ற உயர்மட்ட ஆலோசனை கூட்டத்திற்கு பின் முடிவு செய்யப்பட்டது.

கல்லீரலை தானம் கொடுத்து தனது தந்தையை காப்பாற்ற போராடும் சிறுவன்… அரசின் நிலைப்பாடு என்ன?

கல்லீரல் பாதிக்கப்பட்டுள்ள தனது தந்தைக்கு, தனது கல்லீரலின் ஒரு பகுதியை வழங்குவதற்கு அனுமதி கோரி உத்தரப்பிரதேசம்  மாநிலத்தைச் சேர்ந்த 17 வயது சிறுவன் தொடர்ந்த வழக்கில் பதில் அளிக்க உச்சநீதிமன்றம் உத்தரப்பிரதேச அரசுக்கு நோட்டீஸ் பிறப்பித்துள்ளது. உத்தரப்பிரதேசம் மாநிலத்தை சேர்ந்த 17 வயது சிறுவன் தனது தந்தைக்கு தனது கல்லீரலின் ஒரு பகுதியை வழங்க அனுமதி கோரி உச்சநீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்திருந்தார். தனது தந்தையின் தனிப்பட்ட வருமானத்தில் மட்டுமே குடும்பம் செயல்பட்டு வரும் நிலையில் தங்களால் … Read more

சித்தூர் கைலாசபுரம் பகுதியில் ₹29.20 கோடியில் நீர்நிலை தேக்க தொட்டி கட்ட அடிக்கல் நாட்டு விழா-எம்எல்ஏ தொங்கி வைத்தார்

சித்தூர் : சித்தூர் கைலாசபுரம் பகுதியில் ₹29.20 கோடியில் நீர்நிலை தேக்க தொட்டி கட்டுவதற்கான அடிக்கல் நாட்டு விழா நேற்று நடந்தது. இதனை எம்எல்ஏ ஜங்காளப்பள்ளி சீனிவாசலு தொடங்கி வைத்தார். சித்தூர் கைலாசபுரம் பகுதியில் ₹29.20 கோடியில் நீர் நிலை தேக்க தொட்டி கட்டுவதற்கான அடிக்கல் நாட்டு விழா நேற்று நடைபெற்றது. எம்எல்ஏ ஜங்காளப்பள்ளி   சீனிவாசலு தலைமை தாங்கி தொடங்கி வைத்தார். அப்போது, அவர் பேசியதாவது: சித்தூர் மாநகரத்திற்கு எப்போதுமே குடிநீர் பிரச்னை பெரும் பிரச்சனையாக இருக்கிறது. … Read more

ஆன்லைன் ரம்மி விளையாட்டை நடத்தும் நிறுவனங்களுக்கு நோட்டீஸ்: தமிழ்நாடு அரசு தொடர்ந்த மேல்முறையீட்டு வழக்கில் உச்சநீதிமன்றம் உத்தரவு

டெல்லி: தமிழ்நாட்டில் ஆன்லைன் ரம்மி விளையாட்டிற்கு தடை செய்யும் தமிழக அரசின் தடை சட்டத்தை ரத்து செய்த சென்னை உயர்நீதிமன்றத்தின் உத்தரவை எதிர்த்து தமிழக அரசு தாக்கல் செய்த மேல்முறையீட்டு மனு மீது இன்று உட்சநீதிமன்றம் நோட்டிஸ் அனுப்பியுள்ளது. இந்த விளையாட்டை ஊக்குவித்து வந்த ஜங்லி கேம்ஸ், பிளே கேம்ஸ், ரீட் டிஜிட்டல் போன்ற நிறுவனங்களுக்கு மட்டுமல்லாமல் அகில இந்திய ஃபெடரேஷன் ஆப் கேமிங் என்ற அமைப்பிற்கும் உச்சநீதிமன்றம் நோட்டிஸ் பிறப்பித்துள்ளது. கடந்த 2020-ம் ஆண்டு தமிழ்நாட்டில் … Read more

பிட்புல் நாய் கடித்துக் குதறியதில் சிறுவனின் முகத்தில் 200 தையல்கள்!

உத்தரப்பிரதேசத்தில் பிட் புல் வகை நாய் கடித்ததில் படுகாயம் அடைந்த 11 வயது சிறுவனின் முகத்தில் 200 தையல்கள் போடப்பட்டுள்ளன. உத்தரப்பிரதேசம் மாநிலம்  காஜியாபாத்தில் 11 வயது சிறுவன் ஒருவன் தனது வீட்டின் அருகே உள்ள பூங்காவில் விளையாடிக் கொண்டிருந்தான். அப்போது பெண்ணுடன் நடைபயிற்சிக்கு வந்த பிட்புல் நாய் அந்த சிறுவனை தாக்கத் தொடங்கியது. இதில் அலறியடித்தபடி கீழே விழுந்தான் சிறுவன். ஆனாலும் விடாத நாய் அவனது முகம் உள்ளிட்ட இடங்களில் கடித்துக் குதறியது. இதைக்கவனித்த அவ்வழியாக … Read more

இங்கிலாந்து மகாராணி மறைவு.. பிரதமர் நரேந்திர மோடி இரங்கல்..!

இங்கிலாந்து மகாராணி இரண்டாம் எலிசபெத்துக்கு திடீரென உடல்நலக்குறைவு ஏற்பட்டது. இதையடுத்து, மகாராணியின் அதிகாரப்பூர்வ மருத்துவக்குழுவினர் ராணிக்கு சிகிச்சை அளித்து வந்தனர். இந்நிலையில், உடல்நலக்குறைவால் பாதிக்கப்பட்டிருந்த மகாராணி எலிசபெத் தன்னுடைய 96-வது வயதில் உயிரிழந்தார். இதையடுத்து, இங்கிலாந்து மகாராணி எலிசபெத் மறைவுக்கு உலக நாடுகளின் தலைவர்கள் இரங்கல் தெரிவித்து வருகின்றனர். இந்நிலையில், மகாராணி எலிசபெத் மறைவுக்கு பிரதமர் நரேந்திர மோடி இரங்கல் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக அவர் தனது ட்விட்டர் பக்கத்தில், “மகாராணி இரண்டாம் எலிசபெத் நம்முடைய காலத்தின் … Read more

சமூக வலைதளங்களில் விளம்பரம்.. பிரபலங்களுக்கு கிடுக்கிப்பிடி கட்டுப்பாடு..!

தற்போதைய தகவல் தொழில்நுட்ப புரட்சியால், சமூக வலைதளங்களின் பயன்பாடு அதிகரித்துள்ளது. அதுபோல, ஆன்லைன் மூலம் பொருட்கள் வாங்குவதும் அதிகரித்துள்ளது. இவைகளில் மோசடிகள் நடப்பதை தடுப்பது தொடர்பாக, மத்திய நுகர்வோர் நலத்துறை பல கட்டங்களாக ஆய்வுகள் செய்து, சில கட்டுப்பாடுகளை வரையறுத்துள்ளது. இவை, அடுத்த 15 நாட்களுக்குள் நடைமுறைக்கு வரும் என எதிர்பார்க்கப்படுகிறது. அதன்படி, நடிகர்கள், விளையாட்டு வீரர்கள் போன்று பிரபலமாக உள்ளோர் சமூக வலைதளங்களில் சில பொருட்களை வாங்கும்படி பரிந்துரை செய்கின்றனர். இவ்வாறு பரிந்துரைக்கும்போது, அந்த நிறுவனத்துடனான … Read more

தடுப்பூசி போட்டும் இரண்டு மாணவிகள் மரணம்; கேள்வி குறியாகும் ரேபிஸ் மருந்துகள்

கேரளா மாநிலம் பத்தனம்திட்டாவை சேர்ந்தர் 12 வயதான அபிராமி. இவரை கடந்த ஆகஸ்ட் மாதம் 13 ஆம் தேதி வீட்டருகே இருந்த தெரு நாய் ஒன்று அபிராமியின் கண் பகுதி உட்பட 6 இடங்களில் பலமாக கடித்துள்ளது. உடனே சிறுமியை மீட்டு கோட்டயம் அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அங்கு சிறுமிக்கு ரேபிஸ் தடுப்பூசியும் போடப்பட்டுள்ளது. தொடர்ந்து தீவிர சிகிச்சையில் இருந்து வந்த அபிராமி கடந்த திங்கட்கிழமை அன்று பரிதாபமாக உயிரிழந்தார். அபிராமியின் மரணம் கேரளா சுகாதாரத்துறை … Read more