ஜம்மு என்கவுன்ட்டரில் 4 தீவிரவாதி உயிரிழப்பு

ஜம்முவில் இருந்து காஷ்மீர் நோக்கிச் சென்ற ஒரு லாரியை சித்ரா பாலம் அருகில் உள்ள சோதனை சாவடியில் பாதுகாப்பு படையினர் நேற்று சந்தேகத்தின் பேரில் நிறுத்தினர். லாரி டிரைவர் தப்பியோடியதை தொடர்ந்து லாரியை சோதனையிட முயன்றனர். அப்போது லாரியில் பதுங்கியிருந்த தீவிரவாதிகள், பாதுகாப்புப் படையினர் மீது துப்பாக்கிச் சூடு நடத்தினர். இதையடுத்து இரு தரப்பிலும் கடும் மோதல் ஏற்பட்டது. இதில்லாரி தீப்பற்றியது. தீயணைப்பு படை யினர் வந்து தீயை அணைத்தனர். பின்னர் லாரியில் கருகிய நிலையில் இருந்த … Read more

ஒமிக்ரான் BF.7 தொற்று 16 மடங்கு அதிகம் பரவக்கூடியது… சட்டென்று அதிகரிக்கும் கொரோனா?

Omicron BF.7 : சீனா, பிரேசில், அமெரிக்கா, ஜப்பான் உள்ளிட்ட நாடுகளில் கொரோனா தொற்று பரவல் அதிகமாகியுள்ளது. தொடர்ந்து, சீனாவில் கடுமையாக பரவி பெரும் தாக்கத்தை ஏற்படுத்திய ஒமிக்ரான் BF.7 கொரோனா தொற்று வகை இந்தியாவில் 4 பேரிடம் கண்டறியப்பட்டதை அடுத்து, முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் முடுக்கிவிடப்பட்டுள்ளது.  அதன்படி, கடந்த டிச. 24ஆம் தேதியில் இருந்து விமான நிலையங்களில் வெளிநாட்டில் இருந்து வருபவர்களில் 2 சதவீதத்தினருக்கு கொரோனா பரிசோதனை மேற்கொள்ள உத்தரவிடப்பட்டது. இதன்படி, விமான நிலையங்களில் கொரோனா தொற்று … Read more

மின் இணைப்பில் ஆதார் எண் சேர்ப்பு உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீடு

புதுடெல்லி: மின் இணைப்பில் ஆதாரை இணைக்கும் விவகாரத்தில் உயர்நீதிமன்றம் வழங்கிய உத்தரவுக்கு எதிராக உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீட்டு மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.  தமிழகத்தில்  வீட்டு மின் இணைப்புகளுக்கு முதல் நூறு யூனிட் மின்சாரத்துக்கான கட்டணத்தை அரசு மானியமாக வழங்குகிறது. இந்த மானியத்தைப் பெற மின் நுகர்வோர், தங்கள் மின் இணைப்பு  எண்ணுடன், ஆதார் எண்ணை இணைக்க வேண்டும் என கடந்த அக்டோபர் 6ம் தேதி அரசாணை பிறப்பிக்கப்பட்டது.   இந்த அரசாணையை ரத்து செய்யக் கோரி தேசிய … Read more

நாடு முழுவதும் மருத்துவமனைகளில் 2.8 லட்சம் கொரோனா தனிமை படுக்கைகள் தயார்: ஒன்றிய அரசு தகவல்

புதுடெல்லி : நாடு முழுவதும் மேற்கொள்ளப்பட்ட ஒத்திகையில் 2.8 லட்சம் தனிமைப்படுத்தப்பட்ட கொரோனா படுக்கைகள் தயார் நிலையில் இருப்பது உறுதி செய்யப்பட்டிருப்பதாக ஒன்றிய சுகாதார அமைச்சகம் தெரிவித்துள்ளது. கொரோனா சிகிச்சைக்கு தயார் நிலையில் இருப்பதை உறுதி செய்ய நாடு முழுவதும் அரசு மருத்துவமனைகள் மற்றும் கொரோனா சுகாதார மையங்களில் நேற்று முன்தினம் ஒத்திகை நடத்தப்பட்டது. இதன் மூலம் கிடைத்த புள்ளி விவரங்களை ஒன்றிய சுகாதார அமைச்சக அதிகாரிகள் நேற்று வெளியிட்டனர். அவர்கள் கூறியிருப்பதாவது: நாடு முழுவதும் 37 … Read more

அடுத்த வாரம் முதல் சீனா உள்பட 6 நாடு பயணிகளுக்கு கொரோனா பரிசோதனை கட்டாயம்

புதுடெல்லி : அடுத்த வாரம் முதல் சீனா உள்பட 6 நாடுகளில் இருந்து வரும் பயணிகளுக்கு கொரோனா பரிசோதனை கட்டாயமாக்கப்பட இருப்பதாக ஒன்றிய அரசு வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.சீனாவில் பரவி வரும் உருமாறிய பிஎப்.7 கொரோனா வைரஸ் இந்தியாவில் பரவுவதை கட்டுப்படுத்தும் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகிறது. இது தொடர்பாக பிரதமர் மோடி தலைமையில் டெல்லியில் ஆலோசனைக் கூட்டம் நடந்தது. இதன் தொடர்ச்சியாக, மாநிலங்களின் சுகாதாரத் துறை அமைச்சர்களுடன் ஒன்றிய சுகாதாரத் துறை அமைச்சர் மன்சுக் மாண்டவியா ஆலோசனை … Read more

பாகிஸ்தானில் இருந்து ஊருடுவல் 4 தீவிரவாதிகள் சுட்டுக்கொலை

ஜம்மு: பாகிஸ்தானில் இருந்து ஜம்முவுக்கு ஊடுருவிய 4 தீவிரவாதிகள் சுட்டுக்கொல்லப்பட்டனர். அவர்களிடம் இருந்து ஏராளமான ஆயுதங்கள் பறிமுதல் செய்யப்பட்டன.ஜம்முவின் சித்ரா நகரில் புறப்பட்ட லாரி காஷ்மீர் நோக்கி  சென்றுகொண்டிருந்தது. ஜம்முவின் தவி நகர் பாலத்தில் நேற்று காலை 7.30  மணியளவில் வந்த லாரியை மறித்து பாதுகாப்பு படையினர் சோதனை செய்தனர்.  அப்போது, லாரிக்குள் பதுங்கி இருந்த தீவிரவாதிகள் திடீரென பாதுகாப்பு  படையினர் நோக்கி துப்பாக்கிச்சூடு நடத்தி விட்டு தப்பியோட முயற்சித்தனர்.  இதையடுத்து, லாரியை சுற்றி வளைத்த பாதுகாப்பு … Read more

இந்திய ஒற்றுமை யாத்திரையில் ராகுலுக்கு உரிய பாதுகாப்பு அளிக்க வேண்டும்: அமித்ஷாவுக்கு காங்கிரஸ் கடிதம்

புதுடெல்லி: இந்திய ஒற்றுமை யாத்திரை மேற்கொள்ளும் ராகுல் காந்திக்கு உரிய பாதுகாப்பு அளிக்க வேண்டும் என உள்துறை அமைச்சர் அமித்ஷாவுக்கு காங்கிரஸ் கடிதம் எழுதி உள்ளது. காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல்காந்தி இந்திய ஒற்றுமை யாத்திரை மேற்கொண்டு வருகிறார். கன்னியாகுமரியில் தொடங்கிய அவரது யாத்திரை தற்போது டெல்லி சென்றடைந்துள்ளது. ஜனவரி 3ம் தேதி முதல் மீண்டும் அவர் யாத்திரை தொடங்க உள்ளார். இந்த நிலையில் ராகுலுக்கு உரிய பாதுகாப்பு அளிக்க கேட்டு காங்கிரஸ் பொதுச்செயலாளர் கே.சி. வேணுகோபால் … Read more

மதம் மாறியவர்களுக்கு எஸ்.சி. அந்தஸ்து? – ஆணையத்தை எதிர்த்து உச்ச நீதிமன்றத்தில் வழக்கு

புதுடெல்லி: நாடு சுதந்திரம் அடைந்தபோது தாழ்த்தப்பட்ட பிரிவுகளை சேர்ந்த இந்துக்களுக்கு மட்டும் எஸ்.சி.அந்தஸ்தில் இடஒதுக்கீடு வழங் கப்பட்டது. கடந்த 1956-ம் ஆண்டில் சீக்கிய மதம், 1990-ம் ஆண்டில் பவுத்த மதத்தை சேர்ந்த தாழ்த்தப்பட்டோருக்கும் எஸ்.சி. பிரிவுக்கான இடஒதுக்கீடு சலுகை அளிக்கப்பட்டது. இதேபோன்று இந்து மதத்தில் இருந்து முஸ்லிம், கிறிஸ்தவம் உள்ளிட்ட மதங்களுக்கு மாறிய தாழ்த்தப்பட்டோருக்கும் எஸ்.சி. அந்தஸ்து வழங்க வேண்டும் என்று கோரி உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டு உள்ளது. இதனிடையே மதம் மாறியவர்களுக்கு எஸ்.சி. அந்தஸ்து … Read more

பிரதமர் மோடியின் தாயார் மருத்துவமனையில் அனுமதி

அகமதாபாத்: பிரதமர் மோடியின் தாயார் ஹீராபென் உடல்நலக்குறைவு காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். அகமதாபாத்தில் உள்ள யு.என் மேத்தா மருத்துவமனையில் அவர் அனுமதிக்கப்பட்டுள்ளார். தற்போது அவருக்கு உடல்நிலை சீராக இருப்பதாக மருத்துவமனை தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. குஜராத் சட்டசபை தேர்தலுக்கு முன்பாக காந்திநகரில் வசித்து வரும் தனது தாயார் ஹீராபென்னை சந்தித்து பிரதமர் மோடி ஆசி பெற்றார். குஜராத் தேர்தலில் பிரதமர் மோடியின் தாயார் ஹீராபென், சக்கர நாற்காலியில் வந்து வாக்களித்து சென்றார். பிரதமர் மோடி தாயார் ஹீராபென்னுக்கு நேற்றுமுன்தினம் … Read more

மைசூருவில் கார் விபத்தில் பிரதமர் மோடியின் சகோதரர் காயம்: இன்னும் சில தினங்களில் வீடு திரும்புவார் எனத் தகவல்

பெங்களூரு: பிரதமர் நரேந்திர மோடியின் சகோதரர் பிரஹலாத் மோடி சென்ற கார் மைசூருவில் விபத்தில் சிக்கியது. இதில் காயமடைந்த பிரஹலாத் மோடி உள்ளிட்ட 6 பேர் தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். பிரதமர் நரேந்திர மோடியின் சகோதரர் பிரஹலாத் மோடி (66). தனது மனைவி, மகன் குடும்பத்தினருடன் கடந்த இரு தினங்களுக்கு முன்பு கர்நாடக மாநிலம் மைசூருவுக்கு சுற்றுலா சென்றார். அங்கு அரண்மனையை பார்த்துவிட்டு பந்திப்பூர் தேசிய உயிரியல் பூங்காவுக்கு மெர்சடிஸ் பென்ஸ் எஸ்யூவி காரில் சென்றார். கட்கலா … Read more