மைசூருவில் கார் விபத்தில் பிரதமர் மோடியின் சகோதரர் காயம்: இன்னும் சில தினங்களில் வீடு திரும்புவார் எனத் தகவல்
பெங்களூரு: பிரதமர் நரேந்திர மோடியின் சகோதரர் பிரஹலாத் மோடி சென்ற கார் மைசூருவில் விபத்தில் சிக்கியது. இதில் காயமடைந்த பிரஹலாத் மோடி உள்ளிட்ட 6 பேர் தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். பிரதமர் நரேந்திர மோடியின் சகோதரர் பிரஹலாத் மோடி (66). தனது மனைவி, மகன் குடும்பத்தினருடன் கடந்த இரு தினங்களுக்கு முன்பு கர்நாடக மாநிலம் மைசூருவுக்கு சுற்றுலா சென்றார். அங்கு அரண்மனையை பார்த்துவிட்டு பந்திப்பூர் தேசிய உயிரியல் பூங்காவுக்கு மெர்சடிஸ் பென்ஸ் எஸ்யூவி காரில் சென்றார். கட்கலா … Read more