நடிகையை தொடர்ந்து இன்ஸ்டா பிரபலம் தற்கொலை!!

இன்ஸ்டா பிரபலமான சத்தீஸ்கரை சேர்ந்த இளம்பெண் ஒருவர் தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்டுள்ளார். ராய்கரில் கெலோ விஹார் காலனியில் வசித்து வந்த லீனா நாக்வன்ஷி (22) என்ற இளம்பெண் இன்ஸ்டாகிராமில் மிகவும் பிரபலம். சமூக வலைதளங்களில் ஆக்டிவாக இருக்கும் இவர் தனியாக யூடியூப் சேனல் ஒன்றையும் வைத்துள்ளார். பி.காம் மூன்றாம் ஆண்டு படித்து வந்த இவருக்கு ஒரு ஆண் நண்பர் இருந்ததாக கூறப்படுகிறது. இந்த நிலையில் இவர் வீட்டிலுள்ள தனது அறையில் தூக்கில் தொங்கிய நிலையில் கண்டெடுக்கப்பட்டார். இதனையடுத்து … Read more

சபரிமலையில் மண்டல பூஜை நிறைவு!!

சபரிமலை ஐயப்பன் கோயிலில் நேற்றுடன் மண்டல பூஜை நிறைவடைந்தது. கேரளாவில் சபரிமலை ஐயப்பன் கோயில் நடை மண்டல -மகரவிளக்கு பூஜைக்காக நவம்பா் 17ஆம் தேதி திறக்கப்பட்டது. 41 நாள் மண்டலம் நேற்றுடன் நிறைவடைந்து மண்டல பூஜை நடைபெற்றது. மண்டல பூஜையையொட்டி 453 பவுன் கொண்ட ஐயப்பனுக்கான ‘தங்க அங்கி’ கோயிலை அடைந்தது. அதற்கு திருவிதாங்கூா் அரச குடும்பத்தினரும் பக்தா்களும் கோயில் நிா்வாகிகளும் சிறப்பான வரவேற்பு அளித்தனா். நேற்று முன்தினம் மாலை ஐயப்பனுக்கு தங்க அங்கி அணிவிக்கப்பட்டு சிறப்பு … Read more

சீனா உட்பட வெளிநாடுகளில் இருந்து பெங்களூரு வந்த 12 பேருக்கு கரோனா

பெங்களூரு: சீனா உள்ளிட்ட வெளிநாடுகளில் இருந்து கர்நாடக மாநிலம் பெங்களூரு கெம்பே கவுடா சர்வதேச விமான நிலையத்துக்கு வந்த 12 பயணிகளுக்கு கரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதையடுத்து 12 பேரின் மாதிரிகளும் சேகரிக்கப்பட்டு புனேவில் உள்ள தேசிய வைராலஜி பரிசோதனை மையத்துக்கு ஆய்வுக்காக அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. சீனாவில் இருந்து வந்த 37 வயதான பயணி உத்தர பிரதேசத்தை சேர்ந்தவர். பணி நிமித்தமாக சீனாவுக்கு சென்று விட்டு பெங்களூரு வந்த போது கரோனா தொற்று கண்டறியப்பட்டது. … Read more

அதிமுக மாநில செயலாளர் அன்பழகன் திடீர் கைது..!

புதுச்சேரியில், அ.தி.மு.க. சார்பில் இன்று முழு அடைப்பு போராட்டம் அறிவிக்கப்பட்ட நிலையில் அக்கட்சியின் மாநில செயலாளர் அன்பழகன் போலீசாரால் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக கைது செய்யப்பட்டார். புதுச்சேரிக்கு மாநில அந்தஸ்து வழங்கக் கோரி புதுவை, காரைக்கால் உள்ளிட்ட பகுதிகளில் காலை 6 மணிமுதல் மாலை 6 மணிவரை அ.தி.மு.க. சார்பில் முழுஅடைப்பு போராட்டம் நடைபெறும் என்று அக்கட்சியின் மாநில செயலாளர் அன்பழகன் அறிவித்திருந்தார். இந்நிலையில், போராட்டம் தொடங்குவதற்கு முன்பு அன்பழகனை காவல்துறையினர் கைது செய்தனர். Source link

ஒன்றிய அரசின் டிஜிட்டல் தனிநபர் தரவு பாதுகாப்பு மசோதாவால் RTI சட்டம் வலுவிழந்துவிடும்: சமூக ஆர்வலர்கள் அச்சம்

டெல்லி: ஒன்றிய அரசு மீண்டும் கொண்டு வரவுள்ள டிஜிட்டல் தனிநபர் தரவு பாதுகாப்பு மசோதாவால் தகவல் அறியும் உரிமை சட்டம் வலுவிழந்துவிடும் என RTI ஆர்வலர்கள் அச்சம் தெரிவிக்கின்றனர். உலகின் அதிக அளவிலான இணையதள பயன்பாடு கொண்ட நாடாக இந்தியா மாறியுள்ளது. பிற நாடுகளை போல, இணையதள பயன்பாடுகளுக்கு கட்டுப்பாடுகள் இல்லாமல் இந்தியாவில் அனைவரும் அணுகும் வகையில் இருப்பதால் ஆபத்துக்கும் அளவில்லை. பொது தளத்தில் அதிகரித்திருக்கும் தரவுகளை முறையாக கையாளும் நோக்கில், டிஜிட்டல் தனி நபர் தரவு … Read more

கொரோனா பணியில் ஆசிரியர்கள்? – முக்கிய முடிவு!!

கொரோனா பணியில் ஆசிரியர்களை ஈடுபடுத்தும் முடிவை டெல்லி அரசு திரும்பப்பெற்றது. நாட்டில் கொரோனா பரவலை கட்டுப்படுத்த, அனைத்து மாநிலங்களும் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றன. குறிப்பாக நாட்டில் உள்ள அனைத்து விமான நிலையங்களில் கண்காணிப்பு தீவிரப்படுத்தப்பட்டுள்ளது. வெளிநாட்டிலிருந்து வருபவருக்கு கொரோனா பரிசோதனை கட்டாயம் என்று உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில், மாவட்ட பேரிடர் மேலாண்மை ஆணையம் சார்பில், அரசு பள்ளி ஆசிரியர்களை டெல்லி விமான நிலையத்தில் கொரோனா பணியில் ஈடுபடுத்த உத்தரவிடப்பட்டது. டிசம்பர் 31 முதல் ஜனவரி 15 … Read more

பரபரப்பு.. அதிமுக மாநில செயலாளர், முன்னாள் எம்எல்ஏ உட்பட 17 பேர் கைது..!

புதுச்சேரியில் பந்த் அறிவித்த அதிமுக மாநில செயலாளர் அன்பழகன், முன்னாள் எம்எல்ஏ பாஸ்கரன் உள்ளிட்ட 17 அதிமுக நிர்வாகிகள் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக கைது செய்யப்பட்டுள்ளனர். புதுச்சேரிக்கு மாநில அந்தஸ்து இல்லாததால் திட்டங்களை நிறைவேற்றுவதில் காலதாமதம் ஏற்படுவதாகவும், அதிகாரிகள் தங்கள் இஷ்டம்போல் செயல்படுவதாகவும் சமீபத்தில் முதல்வர் ரங்கசாமி வேதனை தெரிவித்தார். முதல்வரின் இந்த கருத்துக்கு ஆதரவும், எதிர்ப்பும் கிளம்பின. இதைத் தொடர்ந்து, மத்திய அரசு புதுச்சேரிக்கு மாநில அந்தஸ்து வழங்க வேண்டும் என்று வலியுறுத்தி அதிமுக சார்பில் இன்று … Read more

ஜம்முவில் என்கவுன்ட்டர் | 3 தீவிரவாதிகள் சுட்டுக் கொலை: மேலும் ஒருவரை தேடுகிறது பாதுகாப்புப் படை

ஜம்மு: ஜம்முவில் இன்று காலை வாகன சோதனையின் போது நடந்த துப்பாக்கிச் சூட்டில் 3 தீவிரவாதிகள் கொல்லப்பட்டனர். தப்பி ஓடிய ஓட்டுநரை பாதுகாப்புப் படையினர் தேடி வருகின்றனர். டெல்லியில் இன்று மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா தலைமையில் ஜம்மு காஷ்மீர் பாதுகாப்பு நிலவரம் குறித்து ஆலோசனைக் கூட்டம் நடைபெறவுள்ள சூழலில் இந்தத் தாக்குதல் நடந்துள்ளது. இது குறித்து ஜம்முவின் டிஜிபி முகேஷ் சிங் கூறுகையில், “இன்று காலை வழக்கம் போல் ஜம்முவில் வாகனச் சோதனையில் ஈடுபட்டிருந்தோம். … Read more

ஜம்மு காஷ்மீரில் பாதுகாப்பு படையினர் – பயங்கரவாதிகள் இடையே மோதல்: 3 பயங்கரவாதிகள் என்கவுண்டரில் சுட்டுக்கொலை

ஸ்ரீநகர்: ஜம்மு – காஷ்மீர் மாநிலம் சித்ரா பகுதியில் லாரியில் பதுங்கியிருந்த 2 பயங்கரவாதிகள் என்கவுண்டரில் சுட்டுக்கொலை செய்யப்பட்டனர். சோதனையின் போது லாரியில் பதுங்கியிருந்த பயங்கரவாதிகள் துப்பாக்கியால் பாதுகாப்பு படையினரை சுட்டனர். தொடர்ந்து நடந்த மோதலில் 2 2 பயங்கரவாதிகள் சுட்டுக் கொல்லப்பட்டனர். ஜம்முவில் பாதுகாப்பு படையினர் – பயங்கரவாதிகள் இடையே துப்பாக்கிச்சண்டை நடைபெறுகிறது. ஜம்மு-காஷ்மீர் யூனியன் பிரதேசத்தில் பாதுகாப்பு படையினர் மற்றும் காஷ்மீர் போலீசார் இணைந்து பயங்கரவாத ஒழிப்பு நடவடிக்கையில் ஈடுபட்டு வருகின்றனர். இந்நிலையில், ஜம்முவின் … Read more

முக்கிய 7 நகரங்களில் 3.65 லட்சம் வீடு விற்பனை: அனராக் ஆய்வில் தகவல்

புதுடெல்லி: சென்னை, கொல்கத்தா, டெல்லி-என்சிஆர், மும்பை மெட்ரோபாலிட்டன் மண்டலம் (எம்எம்ஆர்), பெங்களூரு, ஹைதராபாத் மற்றும் புனே ஆகிய 7 நகரங்களில் நடப்பாண்டில் 3.65 லட்சம் வீடுகள் விற்பனை செய்யப்பட்டுள்ளன. இது முன்னெப்போதும் காணப்படாத அதிகபட்ச விற்பனை அளவாகும். இதற்கு முன்பாக, கடந்த 2014-ம் ஆண்டில்தான் இந்த முக்கிய 7 நகரங்களில் வீடு விற்பனையானது 3.43 லட்சம் என்ற சாதனை அளவை தொட்டிருந்தது. எட்டு ஆண்டுகளுக்குப் பிறகு தற்போதுதான் அந்த சாதனை விற்பனை அளவு முறியடிக்கப்பட்டுள்ளது. கடன் வட்டி … Read more