2037-க்குள் உலகின் 3-வது பெரிய பொருளாதார சக்தியாக இந்தியா மாறும்..!

2037-ம் ஆண்டுக்குள் 10 டிரில்லியன் டாலர் பொருளாதாரத்துடன் உலகின் 3-வது பெரிய பொருளாதார சக்தியாக இந்தியா மாறும் என இங்கிலாந்தை சேர்ந்த பொருளாதாரம் மற்றும் வணிக ஆராய்ச்சி மையம் கணித்துள்ளது. அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவின் ஒட்டுமொத்த பொருளாதார வளர்ச்சி விகிதம் சராசரியாக 6.4 சதவீதமாக இருக்குமென்றும், அதற்கடுத்த 9 ஆண்டுகளில் இந்த விகிதம் சராசரியாக 6.5 சதவீதமாக இருக்கும் என எதிர்பார்ப்பதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. கொரோனா காலத்தில் பொருளாதார வளர்ச்சி பின்தங்கிய நிலையில், அதற்கு பிந்தைய 2021-22-ம் … Read more

புதுச்சேரியில் பால் விலை லிட்டருக்கு ரூ. 4 உயர்வு

புதுச்சேரி: புதுச்சேரியில் பால் விலை லிட்டருக்கு ரூ. 4 உயர்கிறது. கொள்முதல் செய்யப்படும் பால் விலையையும் லிட்டருக்கு ரூ. 3 அதிகரிக்க அரசு திட்டம் செய்துள்ளது. கடந்த ஓராண்டாக பாண்லே தொடர்  நஷ்டத்தில் இயங்குவதால் நஷ்டத்தை ஈடுகட்ட  பால் விலை உயர்த்தப்பட்டுள்ளது.

ஏழுமலையானுக்கு ரூ.70 லட்சம் மதிப்புள்ள வீடு: நன்கொடை வழங்கிய தமிழக பெண் பக்தர்

திருப்பதி: திருப்பதி ஏழுமலையானுக்கு இந்தியா முழுவதும் மட்டுமல்லாமல் வெளிநாடுகளிலும் அசையா சொத்துகள் உள்ளன. காஷ்மீர் முதல் கன்னியாகுமரி வரை ஏழுமலையானுக்கு சொந்தமாக வீடுகள், வீட்டு மனைகள், நிலங்கள் உள்ளன. நாடு முழுவதும் ஏழுமலையானுக்கு 930 இடங்களில் அசையா சொத்துகள் உள்ளதாக தெரியவந்துள்ளது. நேபாளத்திலும் சுவாமிக்கு சொத்துகள் உள்ளன. இந்த அசையா சொத்துகளின் இன்றைய மதிப்பு ரூ.85,705 கோடியாகும். இது தவிர, தங்கம், வைரம், வைடூரியம், முத்து, பவளம் என நவரத்தினங்களால் ஆன நகைகள், கிரீடங்கள் என பல … Read more

தலைநகர் டெல்லியில் 4,300-க்கும் மேற்பட்டோருக்கு டெங்கு பாதிப்பு..!

தலைநகர் டெல்லியில் இந்த ஆண்டில் 4 ஆயிரத்து 300-க்கும் மேற்பட்டோருக்கு டெங்கு உறுதியாகியுள்ள தகவல் வெளியாகியுள்ளது.  அக்டோபர் மாதம் 1238 பேருக்கும், நவம்பர் மாதம் 1420 பேருக்கும் டெங்கு உறுதிப்படுத்தப்பட்டுள்ளதாகவும், குறிப்பாக இந்த மாதம் மட்டும் 700க்கும் மேற்பட்டோருக்கு டெங்கு உறுதியாகியுள்ளதாகவும் மாநகராட்சி கூறியுள்ளது. இதேபோல் டெங்குவுக்கு இதுவரை 7 பேர் பலியாகியிருப்பதாகவும் மாநகராட்சி தெரிவித்துள்ளது. மேலும் 258 பேருக்கு மலேரியாவும், 47 பேருக்கு சிக்கன்குனியாவும் உறுதிப்படுத்தப்பட்டதாக டெல்லி மாநகராட்சி அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.  Source link

நடை திறக்கப்பட்டு 39 நாட்களில் சபரிமலை ஐயப்பன் கோவிலில் 29 லட்சம் பக்தர்கள் சாமி தரிசனம்: ரூ.223 கோடி வருமானம்.!

பம்பை: சபரிமலை ஐயப்பன் கோவிலில் இதுவரை 29 லட்சம் பக்தர்கள் சாமி தரிசனம் செய்துள்ளனர். திருவனந்தபுரம், நடப்பு மண்டல, மகரவிளக்கு பூஜைக்காக கடந்த மாதம் 16-ந் தேதி நடை திறக்கப்பட்டது. அன்று முதல் தினமும் பக்தர்கள் ஐயப்பனை தரிசிக்க அனுமதிக்கப்பட்டு வருகிறார்கள். இந்த சீசனில் வரலாறு காணாத கூட்டம் சபரிமலையில் அலைமோதியது. இந்தநிலையில் சீசனின் சிகர நிகழ்ச்சியான மண்டல பூஜை இன்று நடக்கிறது. இதனையொட்டி நேற்று மாலையில் அய்யப்பனுக்கு தங்க அங்கி அணிவித்து சிறப்பு தீபாராதனை நடைபெற்றது. … Read more

டெல்லி விமான நிலையத்துக்கு வந்த வெளிநாட்டு பயணிகளில் 0.5% பேருக்கு கரோனா

புதுடெல்லி: சீனாவில் கரோனா தொற்று அதிகரித்து வருவதால் இந்தியாவுக்கு வரும் வெளிநாட்டுப் பயணிகளுக்கு கரோனா பரிசோதனையை மத்திய சுகாதாரத் துறை அமைச்சகம் நடத்தி வருகிறது. கடந்த 2 நாட்களில் டெல்லி இந்திரா காந்தி விமானநிலையத்துக்கு வந்த வெளிநாட்டுப் பயணிகளில் 0.5 சதவீதம் பேருக்கு கரோனா தொற்று உறுதியாகியுள்ளதாக ஜெனஸ்டிரிங்ஸ் டயகனாஸ்டிக் மையம் தெரிவித்துள்ளது. இதுகுறித்து டெல்லி விமான நிலையத்தில் கரோனா பரிசோதனை செய்துவரும் ஜெனஸ்டிரிங்ஸ் டயகனாஸ்டிக் சென்டர் என்ற மருத்துவ மையத்தின் அதிகாரி ஒருவர் கூறியதாவது: கடந்த … Read more

நீதித்துறையை மத்திய அரசு கட்டுப்படுத்தவில்லை.. நீதித்துறை நாட்டு மக்களுக்கு கட்டுப்பட்டுள்ளது – மத்திய சட்டத்துறை அமைச்சர்

நீதித்துறையை மத்திய அரசு கட்டுப்படுத்தவில்லை என்றும், நாட்டு மக்களுக்குதான் நீதித்துறை கட்டுப்பட்டுள்ளது என்றும் மத்திய சட்டத்துறை அமைச்சர் கிரன் ரிஜிஜூ தெரிவித்துள்ளார். நீதித்துறையை மத்திய அரசு கட்டுப்படுத்துவதாக எதிர்க்கட்சிகள் தொடர்ந்து குற்றம்சாட்டி வருகின்றன.இந்த குற்றச்சாட்டுக்கு ஹரியானாவில் நடைபெற்ற அகில பாரதிய ஆதிவக்த பரிசத்தின் தேசிய மாநாட்டில் உரையாற்றியபோது கிரண் ரிஜிஜு பதிலளித்தார். மேலும் அவர், வழக்கறிஞர்கள் சிலர் வழக்கொன்றுக்கு 30 லட்சம் முதல் 40 லட்சம் ரூபாய் வரை கட்டணம் பெறுவதாகவும், பெரிய வழக்கறிஞர்கள் கோடிக்கணக்கில் சம்பாதிப்பதாகவும், … Read more

இந்திய ராணுவத்தை ராகுல் சிறுமைப்படுத்த வேண்டாம்: ஒன்றிய அமைச்சர் கடும் தாக்கு

போபால்:  இந்திய ராணுவத்தை ராகுல் தொடர்ந்து சிறுமைப்படுத்த வேண்டாம் என ஒன்றிய அமைச்சர் கூறினார். நேற்று முன்தினம்  முன்னாள் ராணுவ வீரர்களுடன் முன்னாள் காங். தலைவர் ராகுல் காந்தி எம்பி. கலந்துரையாடினார். அப்போது, அவர் பேசும்போது,‘‘ பாகிஸ்தான்,சீனா நாடுகள் ஒன்றுக்கொன்று நெருக்கமாக உள்ளன. எனவே, போர் ஏற்பட்டால் ஒரு நாடு அல்ல, 2 நாடுகளுடன் போரிட வேண்டிய நிலை உருவாகும். இதில் நம் நாட்டுக்கு பெரிய பாதிப்பு ஏற்படும். எனவே இப்போதே நாம் செயல்படாவிட்டால், மிக பெரிய … Read more

இந்தியாவில் புதிய வகை கொரோனா பரவினால் அதன் தாக்கம் இப்படி தான் இருக்கும்

புதிய கொரோனா தொடர்பாக பேட்டி அளித்த உயிர்மம், மூலக்கூறு ஆய்வு மையத்தின் தலைவர் வினய் நந்தி கூறியதாவது, புதிய கொரோனா பி.எப்-7 வைரஸ் பற்றி தேவையற்ற தகவல்கள் பரவி உள்ளன. பி.எப்-7 வைரஸ் ஒமைக்ரான் மரபணு மாற்றங்களில் இருந்து உருவான ஒரு வைரஸ் ஆகும். இந்த வைரசுக்கு வீரிய சக்தியே கிடையாது. இந்த வைரஸ் வேகமாக பரவும் தன்மை கொண்டது. ஆனால் மிகப்பெரிய பாதிப்புகளை ஏற்படுத்தாது. எனவே இந்தியாவில் இன்னொரு அலை வந்துவிடுமோ என்ற பயம் தேவையில்லை.அலை … Read more

சபரிமலை ஐயப்பன் கோயிலில் இன்று மண்டல பூஜை!..

சபரிமலை ஐயப்பன் கோயிலில் நடப்பு சீசனின் சிகர நிகழ்ச்சியாக மண்டல பூஜை இன்று நடக்கிறது. மண்டல, மகர விளக்கு பூஜைக்காக சபரிமலை கோவில் நடை கடந்த மாதம் 16-ந் தேதி திறக்கப்பட்டு தினமும் பக்தர்கள் அனுமதிக்கப்பட்டு வருகிறார்கள். கொரோனா கட்டுப்பாடுகள் முற்றிலும் தளர்த்தப்பட்டதால் நடை திறந்த நாள் முதல் தினமும் பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் தரிசனத்திற்காக வந்தனர். ஆன்லைன் முன்பதிவு மற்றும் உடனடி முன்பதிவு மூலம் தரிசனம் செய்யும் நடைமுறை பின்பற்றப்படுகிறது. இதில் ஒரு சில நாட்களில் முன்பதிவு … Read more