இந்திய ராணுவத்தை ராகுல் சிறுமைப்படுத்த வேண்டாம்: ஒன்றிய அமைச்சர் கடும் தாக்கு

போபால்:  இந்திய ராணுவத்தை ராகுல் தொடர்ந்து சிறுமைப்படுத்த வேண்டாம் என ஒன்றிய அமைச்சர் கூறினார். நேற்று முன்தினம்  முன்னாள் ராணுவ வீரர்களுடன் முன்னாள் காங். தலைவர் ராகுல் காந்தி எம்பி. கலந்துரையாடினார். அப்போது, அவர் பேசும்போது,‘‘ பாகிஸ்தான்,சீனா நாடுகள் ஒன்றுக்கொன்று நெருக்கமாக உள்ளன. எனவே, போர் ஏற்பட்டால் ஒரு நாடு அல்ல, 2 நாடுகளுடன் போரிட வேண்டிய நிலை உருவாகும். இதில் நம் நாட்டுக்கு பெரிய பாதிப்பு ஏற்படும். எனவே இப்போதே நாம் செயல்படாவிட்டால், மிக பெரிய … Read more

இந்தியாவில் புதிய வகை கொரோனா பரவினால் அதன் தாக்கம் இப்படி தான் இருக்கும்

புதிய கொரோனா தொடர்பாக பேட்டி அளித்த உயிர்மம், மூலக்கூறு ஆய்வு மையத்தின் தலைவர் வினய் நந்தி கூறியதாவது, புதிய கொரோனா பி.எப்-7 வைரஸ் பற்றி தேவையற்ற தகவல்கள் பரவி உள்ளன. பி.எப்-7 வைரஸ் ஒமைக்ரான் மரபணு மாற்றங்களில் இருந்து உருவான ஒரு வைரஸ் ஆகும். இந்த வைரசுக்கு வீரிய சக்தியே கிடையாது. இந்த வைரஸ் வேகமாக பரவும் தன்மை கொண்டது. ஆனால் மிகப்பெரிய பாதிப்புகளை ஏற்படுத்தாது. எனவே இந்தியாவில் இன்னொரு அலை வந்துவிடுமோ என்ற பயம் தேவையில்லை.அலை … Read more

சபரிமலை ஐயப்பன் கோயிலில் இன்று மண்டல பூஜை!..

சபரிமலை ஐயப்பன் கோயிலில் நடப்பு சீசனின் சிகர நிகழ்ச்சியாக மண்டல பூஜை இன்று நடக்கிறது. மண்டல, மகர விளக்கு பூஜைக்காக சபரிமலை கோவில் நடை கடந்த மாதம் 16-ந் தேதி திறக்கப்பட்டு தினமும் பக்தர்கள் அனுமதிக்கப்பட்டு வருகிறார்கள். கொரோனா கட்டுப்பாடுகள் முற்றிலும் தளர்த்தப்பட்டதால் நடை திறந்த நாள் முதல் தினமும் பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் தரிசனத்திற்காக வந்தனர். ஆன்லைன் முன்பதிவு மற்றும் உடனடி முன்பதிவு மூலம் தரிசனம் செய்யும் நடைமுறை பின்பற்றப்படுகிறது. இதில் ஒரு சில நாட்களில் முன்பதிவு … Read more

கட்சி மாற எம்எல்ஏக்களுக்கு தலா ரூ. 100 கோடி பேரம் – வழக்கை சிபிஐயிடம் ஒப்படைக்க தெலங்கானா உயர் நீதிமன்றம் உத்தரவு

ஹைதராபாத்: தெலங்கானா மாநில ஆளும் கட்சியான பாரத் ராஷ்டிர சமிதி (பிஆர்எஸ்) கட்சியிலிருந்து பாஜகவிற்கு மாற ஒரு எம்.எல்.ஏவுக்கு ரூ. 100 கோடி வீதம் 4 எம்.எல்.ஏக்களை பேரம் பேசிய வழக்கை சிபிஐக்கு மாற்ற தெலங்கானா உயர் நீதிமன்றம் நேற்று உத்தரவிட்டது. தெலங்கானாவில் ஆளும் பிஆர்எஸ் கட்சியை சேர்ந்த 4 எம்.எல்.ஏக்கள் பாஜகவில் இணைய, நந்தகுமார், ராமச்சந்திரபாரதி மற்றும் சிம்ஹயாஜி ஆகியோர் ஒவ்வொரு எம்.எல்.ஏவுக்கும் தலா ரூ. 100 கோடி வழங்குவதாக பேரம் பேசியதாக, பிஆர்எஸ் கட்சி … Read more

சபரிமலை ஐயப்பன் கோயிலில் 39 நாளில் ரூ.220கோடி வருவாய்..!

சபரிமலை ஐயப்பன் கோவிலில் கடந்த 39 நாட்களில் மட்டும் 220கோடி ரூபாயினை பக்தர்கள் காணிக்கையாக செலுத்தி உள்ளனர். திருவிதாங்கூர் தேவஸ்தானம் போர்டு தலைவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், மகர விளக்கு மற்றும் மண்டல பூஜை தொடங்கிய கடந்த மாதம் 17ந்தேதி முதல் இதுவரை 222 கோடி ரூபாய் வருவாய் கிடைத்துள்ளதாக தெரிவித்துள்ளார். ஐயப்பனை தரிசிப்பதற்காக மாற்றுத் திறனாளிகள், முதியவர்கள் மற்றும் குழந்தைகளுக்காக சிறப்பு வரிசை அறிமுகப்படுத்தப்பட்டுள்ளதாகவும் கூறியுள்ளார்.  Source link

பாக். டிரோனை சுட்டு வீழ்த்திய வீரர்கள்

சண்டிகர்:  பஞ்சாப் எல்லைப்பகுதியில் கடந்த வாரத்தில் மட்டும் பாகிஸ்தான் பகுதியில் இருந்து இந்திய எல்லைக்குள்  அத்துமீறி நுழைய முயன்ற 3 டிரோன்களை எல்லைப்பாதுகாப்பு படை வீரர்கள் சுட்டு வீழ்த்தினார்கள். இந்நிலையில் நேற்று முன்தினம் இரவு சுமார் 7.40மணியளவில் அமிர்தசரசில் சர்வதேச எல்லை அருகே இந்திய பகுதிக்குள் பாகிஸ்தான் டிரோன் நுழைந்தது. இதன் மீது வீரர்கள் துப்பாக்கி சூடு நடத்தினார்கள். இந்நிலையில் ராஜாடால் கிராமத்தில் டிரோன் விழுந்து கிடந்தது.  டிரோனை பறிமுதல் செய்த வீரர்கள் அதில் இருந்து எதுவும் … Read more

சூரியனுக்கு மிக அருகில் உள்ள நட்சத்திரத்துக்கு வாஜ்பாய் பெயர் சூட்டியது பாஜக

அவுரங்காபாத்: மகாராஷ்டிரா மாநிலம் அவுரங் காபாத் பாஜக தலைவர் ஷிரிஷ் போரல்கர் கூறியதாவது: முன்னாள் பிரதமர் வாஜ்பாய் பிறந்த நாளை போற்றும் விதமாக பூமியிலிருந்து 392.01 ஓளிஆண்டு தூரத்தில் ஒரு நட்சத்திரத்துக்கு அவரது பெயர் சூட்டப்பட்டுள்ளது. இந்த நட்சத்திரமானது சூரியனுக்கு மிக அருகில் அமைந்துள்ளது. இந்த நட்சத்திரத்துக்கு வாஜ்பாய் பெயரைச் சூட்டுவதற்காக சர்வதேச விண்வெளி அமைப்பில் பதிவு செய்தோம். இதற்கான பதிவு எண் சிஎக்ஸ்16408யுஎஸ் என்று தரப்பட்டுள்ளது. நட்சத்திரத்துக்கு வாஜ்பாய் பெயரை சூட்டுவதற்கான சர்வதேச விண்வெளி பதிவு … Read more

ரயில்வே திட்டத்தில் முறைகேடு லாலுவின் பழைய வழக்கை மீண்டும் விசாரிக்கிறது சிபிஐ

புதுடெல்லி: லாலு பிரசாத் மீது பழைய வழக்கு ஒன்றை சிபிஐ மீண்டும் தூசி தட்டி எடுத்துள்ளது. ஐமு கூட்டணி ஆட்சியின் போது ரயில்வே அமைச்சராக இருந்த லாலு பிரசாத், ரயில்வே நிலங்களை ஒதுக்கீடு செய்வதில் ஊழல் செய்ததாகக் கூறி கடந்த 2018 ம் ஆண்டு சிபிஐ வழக்கு தொடர்ந்தது. மும்பை, பாந்த்ராவில் ரயில்வேக்கு சொந்தமான இடத்தை குத்தகைக்கு விடுவதில் டிஎல்எப் குழுமத்துக்கு லாலு சாதகமாக இருந்ததாகவும் அதற்காக அவருக்கு டெல்லியில் ஒரு பங்களா லஞ்சமாக வழங்கப்பட்டதாகவும் குற்றம்சாட்டப்பட்டது. … Read more

நாடு முழுவதும் மருத்துவமனைகளில் கொரோனா தயார்நிலை குறித்து இன்று ஒத்திகை: அமைச்சர் மாண்டவியா டெல்லியில் ஆய்வு

புதுடெல்லி: கொரோனா சிகிச்சைக்கான தயார்நிலை குறித்து நாடு முழுவதும் மருத்துவமனைகள் மற்றும் சுகாதார மையங்களில் இன்று ஒத்திகை பயிற்சி நடக்க உள்ளது. கொரோனா பிஎப்.7 வைரஸ் பரவலை தொடர்ந்து, நாடு முழுவதும் கொரோனா சிகிச்சை அளிக்கும் மருத்துவமனைகள் மற்றும் சுகாதார மையங்களில் இன்று கொரோனா தயார் நிலை ஒத்திகை பயிற்சி நடத்த ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இதில், அனைத்து மாவட்டங்களிலும் உள்ள சுகாதார வசதிகள், தனிமைப்படுத்தப்பட்ட படுக்கைகள், ஆக்சிஜன், ஐசியு, வென்டிலேட்டர் வசதி கொண்ட படுக்கைகள் போதிய அளவில் … Read more

காந்தி, நேரு, இந்திரா, ராஜிவ், வாஜ்பாய் தலைவர்கள் நினைவிடங்களில் ராகுல் காந்தி அஞ்சலி

புதுடெல்லி:  காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல்காந்தி, மகாத்மா காந்தி மற்றும் முன்னாள் பிரதமர்கள் நினைவிடங்களில் நேரில் சென்று அஞ்சலி செலுத்தினார். காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல்காந்தி மேற்கொண்டுள்ள இந்திய ஒற்றுமை யாத்திரை இரண்டு நாட்களுக்கு முன் டெல்லியில் நுழைந்தது. பண்டிகை காலம் என்பதால் ஒரு வார ஒய்வுக்கு பின் இந்த யாத்திரை மீண்டும் தொடங்க உள்ளது. இந்நிலையில் ராகுல்காந்தி நேற்று தலைவர்களின் நினைவிடங்களில் அஞ்சலி செலுத்தினார். முதலில் மகாத்மா காந்தி நினைவிடத்தில் ராகுல்காந்தி அஞ்சலி செலுத்தினார். அதன் … Read more