ரயில்வே திட்டத்தில் முறைகேடு லாலுவின் பழைய வழக்கை மீண்டும் விசாரிக்கிறது சிபிஐ
புதுடெல்லி: லாலு பிரசாத் மீது பழைய வழக்கு ஒன்றை சிபிஐ மீண்டும் தூசி தட்டி எடுத்துள்ளது. ஐமு கூட்டணி ஆட்சியின் போது ரயில்வே அமைச்சராக இருந்த லாலு பிரசாத், ரயில்வே நிலங்களை ஒதுக்கீடு செய்வதில் ஊழல் செய்ததாகக் கூறி கடந்த 2018 ம் ஆண்டு சிபிஐ வழக்கு தொடர்ந்தது. மும்பை, பாந்த்ராவில் ரயில்வேக்கு சொந்தமான இடத்தை குத்தகைக்கு விடுவதில் டிஎல்எப் குழுமத்துக்கு லாலு சாதகமாக இருந்ததாகவும் அதற்காக அவருக்கு டெல்லியில் ஒரு பங்களா லஞ்சமாக வழங்கப்பட்டதாகவும் குற்றம்சாட்டப்பட்டது. … Read more