குருஜிக்கு வாஸ்து சரியில்லை.. குனிந்தவரை குத்திய கொடூரம்.. ஆசீர்வாதம் பெற்று சம்பவம்..! தகவல் அறிந்து முதல் அமைச்சர் ஆவேசம்.!

ஓட்டல் அறையில் அமர்ந்து வாஸ்து சொல்லி வந்த பிரபல வாஸ்து குருஜியிடம் ஆசீர்வாதம் வாங்குவது போல சென்ற மர்ம நபர்கள் அவரை குத்தி கொலை செய்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. வாஸ்துநிபுணர் கொலையான சம்பவத்தின் பகீர் பின்னணி குறித்து விவரிக்கின்றது இந்த செய்தி தொகுப்பு கர்நாடகாவின் பிரபல வாஸ்து நிபுணர் சந்திரசேகர் குருஜி பாகல்கோட்டை மாவட்டம் போடகிகல்லு பகுதியைச் சேர்ந்த 59 வயதான சந்திரசேகர் குருஜி வீடு கட்டவும், பல்வேறு சுபகாரியங்களை நடத்தும் இடங்கள் குறித்தும் … Read more

மணிப்பூரில் இருந்து மியான்மர் சென்ற 2 தமிழர்கள் தீவிரவாதிகளால் சுட்டுக் கொலை : உடல்களை நாடு கொண்டு வர ஒன்றிய அரசு தீவிர முயற்சி!!

மியான்மர் : மியான்மர் நாட்டின் தமு எல்லைப் பகுதியில் தமிழர்கள் 2 பேரை தீவிரவாதிகள் சுட்டுக் கொலை செய்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. தமிழ்நாட்டைச் சேர்ந்த பி மோகன் என்ற ஆட்டோ ஓட்டுனரும் எம். அய்யனார் என்ற வியாபாரியும் மணிப்பூர் மாநிலத்தில் வசித்து வந்தனர். சமீபத்தில் அவர்கள் இருவரும் மணிப்பூர் மாநிலத்தில் உள்ள மொரே என்ற இடத்தில் இருந்து மியான்மருக்கு சென்றுள்ளனர். அப்போது தமு என்ற இடத்தில் இவர்கள் இருவரையும் இரு சக்கர வாகனத்தில் வந்த … Read more

நுபுர் சர்மா விவகாரம் | நீதிபதிகள் லட்சுமணன் கோட்டை தாண்டிவிட்டனர் – முன்னாள் நீதிபதிகள், ஐஏஎஸ் அதிகாரிகள் 117 பேர் கருத்து

புதுடெல்லி: நுபர் சர்மா வழக்கை விசாரித்த உச்ச நீதிமன்ற நீதிபதிகள், லட்சுமணன் கோட்டை தாண்டிவிட்டனர் என்று முன்னாள் நீதிபதிகள், ஐஏஎஸ் அதிகாரிகள் 117 பேர் தெரிவித்துள்ளனர். பாஜக முன்னாள் செய்தித் தொடர்பாளர் நுபுர் சர்மா, இறைதூதர் முகமது நபி குறித்து கூறிய கருத்து சர்வதேச அளவில் விவாதப் பொருளாகி உள்ளது. இதையடுத்து, பாஜகவின் அடிப்படை உறுப்பினர் பதவியில் இருந்து அவர் நீக்கப்பட்டுள்ளார். எனினும் நுபுர் சர்மாவுக்கு எதிராக பல்வேறு போராட்டங்கள் நடத்தப்பட்டு வருகின்றன. அவருக்கு ஆதரவாக கருத்து … Read more

இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் 16,159 பேருக்கு கொரோனா வைரஸ் பாதிப்பு உறுதி… 28 பேர் பலி!!

டெல்லி: நாட்டில் கொரோனாவால் உயிரிழந்தோர் எண்ணிக்கை 5 லட்சத்தை தாண்டியது. அதே போல், பாதிப்பு 4 கோடியை தாண்டியது. இன்று காலை 9 மணியுடன் முடிந்த 24 மணி நேரத்தில், நாட்டில் கொரோனாவால் புதிதாக பாதித்தவர்கள், குணமடைந்தோர், பலியானோர், இறப்பு விகித நிலவரம் குறித்து மத்திய சுகாதார அமைச்சகம் வெளியிட்டுள்ள அறிக்கை வருமாறு:* புதிதாக 16,159 பேர் பாதித்துள்ளனர்.* இதன் மூலம், மொத்த பாதிப்பு எண்ணிக்கை 4,35,31,706 ஆக உயர்ந்தது.* புதிதாக 28 பேர் இறந்துள்ளனர்.* இதனால், … Read more

கேரள தம்பதியர் வாங்கிய கடனுக்காக தமிழக நண்பர் கடத்தல் – இளைஞர் கைது

ஈரோட்டில் மசாஜ் சென்டர் உரிமையாளர் பெற்ற கடனுக்காக அவரது நண்பரை கடத்திச் சென்ற கேரள இளைஞரை போலீசார் கைது செய்து சிறையில் அடைத்தனர். கேரளாவை சேர்ந்த இர்பான் – சோனி தம்பதியினர் ஈரோட்டில் தங்கி மசாஜ் சென்டர் நடத்தி வருகின்றனர். இந்நிலையில், இர்பான் கடந்த சில வருடங்களுக்கு முன்பு கேரளாவை சேர்ந்த ஷெரீப் என்பவரிடம் ஒரு லட்சம் ரூபாய் கடனாக பெற்றுள்ளார். இதையடுத்து ஐம்பதாயிரத்தை மட்டுமே திருப்பிக் கொடுத்த இர்பான் ,மீதமுள்ள பணத்தை தராமல் காலம் தாழ்த்தி … Read more

இயக்குநர் லீனா மணிமேகலை மீது டெல்லி காவல்துறை எஃப்ஐஆர் பதிவு

காளி என்ற ஆவணப்படத்தின் போஸ்டரை வெளியிட்டு சர்ச்சையைக் கிளப்பியுள்ளார் இயக்குநர் லீனா மணிமேகலை. அவர் மீது டெல்லி காவல்துறையின் நுண்ணறிவு மற்றும் ஸ்ட்ராடஜிக் ஆப்பரேஷன்ஸ் பிரிவினர் எஃப்ஐஆர் பதிவு செய்துள்ளனர். லீனாவின் ட்விட்டர் பகிர்வு மதத்தின் அடிப்படையில் வெவ்வேறு குழுக்கள் இடையே வெறுப்பை ஊக்குவிக்கும் வகையில் உள்ளதாக வழக்குப்பதிவு செய்யப்பட்டது. லீனாவின் ட்விட்டர் பதிவு குறித்து காவல்துறை மூத்த அதிகாரி ஒருவர் கூறுகையில், “லீனாவின் கருத்து மதம், இனம் சார்ந்த பல்வேறு குழுக்கள் இடையே மோதலை ஏற்படுத்தும் … Read more

தையற்கலைஞர் கொல்லப்பட்ட வழக்கில் கொலையாளிகளுக்கு உதவியதாக மேலும் ஒருவர் கைது..!

ராஜஸ்தானின் உதய்பூர் நகரில் தையல்கலைஞர் கொல்லப்பட்ட வழக்கில் 5 வது நபரை போலீசார் கைது செய்துள்ளனர். உதய்பூரை சேர்ந்த 30 வயது வாலிபர் முகமது மோசின் என்பவரை போலீசார் நேற்று கைது செய்தனர். தேசியப் புலனாய்வு முகமை இந்த வழக்கை விசாரிப்பதால் என்.ஐ,ஏ நீதிமன்றத்தில் கைது செய்யப்பட்டவனை ஆஜர்ப்படுத்திய போலீசார் 12 ஆம் தேதி வரை காவலில் எடுத்து விசாரிக்க உத்தரவைப் பெற்றனர். தையல்கடைக்காரர் தலையை வெட்டிக் கொன்ற முகமது கவுஸ் மற்றும் முகமது ரியாஸ் ஆகியோர் … Read more

மியான்மர் நாட்டில் செயல்படும் 'பியூ ஷா தீ' என்னும் ஆயுதம் ஏந்திய பயங்கரவாத குழுவால் 2 தமிழர்கள் சுட்டுக்கொலை!!

மியான்மர் : மியான்மர் நாட்டில் செயல்படும் ‘பியூ ஷா தீ’ என்னும் ஆயுதம் ஏந்திய பயங்கரவாத குழுவால் 2 தமிழர்கள் சுட்டுக்கொலை செய்யப்பட்டனர். ஆட்டோ டிரைவரான மோகன் மற்றும் வியாபாரியான அய்யனார் ஆகிய 2 பேர் பயங்கரவாத கும்பலால் சுட்டுக் கொலை செய்யப்பட்டார்.

ஊழல்வாதிகளிடமிருந்து ஏழைகளை காப்பாற்றிய ‘டிஜிட்டல் இந்தியா’ – குஜராத் நிகழ்ச்சியில் பிரதமர் நரேந்திர மோடி தகவல்

காந்திநகர்: மத்திய அரசின் டிஜிட்டல் இந்தியா திட்டம், ஊழல்வாதிகளிடம் இருந்து ஏழைகளை காப்பாற்றியுள்ளது என்று பிரதமர் நரேந்திர மோடி பேசினார். குஜராத்தின் காந்திநகரில் ‘டிஜிட்டல் இந்தியா வாரம் 2022’ என்ற நிகழ்ச்சியை பிரதமர் நரேந்திர மோடி நேற்று தொடங்கி வைத்தார். இதில் அவர் பேசியதாவது: மக்களின் வாழ்க்கை முறையில் பெரும் மாற்றத்தை ஏற்படுத்தியதில் மத்திய அரசின் டிஜிட்டல் இந்தியா திட்டம் முக்கியப் பங்கு வகிக்கிறது. கடந்த 10 ஆண்டுகளுக்கு முன்பு பிறப்புச் சான்றிதழ், கட்டணம் செலுத்துதல், பள்ளி, … Read more

போர்பந்தரில் உள்ள குட்டித்தீவுகளில் தேசவிரோத கும்பல்கள்.. அதிரடி சோதனையை மேற்கொண்ட கடலோரக் காவல்படை..!

போதைப் பொருள் கும்பலின் நடமாட்டம் அதிகரித்துள்ளதையடுத்து குஜராத்தின் போர்பந்தர் மற்றும் துவாரகா அடுத்த கடல்பகுதியில் கடலோரக் காவல் படையினர் ரோந்துப் பணியை அதிகரித்துள்ளனர். ஆபரேசன் ஐலண்ட் வாட்ச் என்ற பெயரில் அருகில் உள்ள ஆளில்லாத 70 குட்டித் தீவுகளைக் கண்காணிக்கும் பணியில் அவர்கள் ஈடுபட்டுள்ளனர். அத்தீவுகளில் போதைப் பொருள் கடத்தல் மற்றும் தேச விரோத சக்திகள் சதி வேலைகளில் ஈடுபடுவதாக ரகசிய தகவல் கிடைத்ததையடுத்து கடல் கொந்தளிப்பு அதிகமாக உள்ள போதும் திடீரென அதிரடி சோதனைகளை அவர்கள் … Read more