பஞ்சாயத்து மேம்பாட்டு அதிகாரிக்கு தொடர்ந்து பாலியல் தொல்லை.? வழக்குப்பதிவு செய்து போலீசார் நடவடிக்கை..!

கர்நாடக மாநிலம் தும்கூர் அருகே ஊராட்சி மன்ற அலுவலகத்தில் பணிபுரியும் பெண்ணிற்கு பல நாட்களாக பாலியல் தொல்லை அளித்து வந்ததாக கூறப்படும் நபர் மீது போலீசார் வழக்கு பதிவு செய்தனர். சின்ன நாயக்கனஹள்ளி கிராமத்தில் வார்டு மெம்பராக உள்ள பிரசன்ன குமார் என்பவர், பஞ்சாயத்து மேம்பாட்டு அதிகாரியாக பணியாற்றிய பெண்ணிற்கு அலுவலகத்தில் வைத்து பாலியல் தொல்லை அளிப்பது போல் ஏராளமான சிசிடிவி காட்சிகள் இணையத்தில் பரவி வருகின்றன. சம்பந்தப்பட்ட பெண்ணிடம் விசாரணை நடத்திய போலீசார் பிரசன்ன குமார் … Read more

ஆன்லைனில் பூஜை செய்யும் வசதி அறிமுகம் அமர்நாத் பனி லிங்கத்தை வீட்டிலேயே தரிசிக்கலாம்: ரூ.1100-5100 வரை கட்டணம்

ஸ்ரீநகர்: அமர்நாத் யாத்திரயைில் பங்கேற்க முடியாதவர்களின் வசதிக்காக ஆன்லைனில் பூஜை மற்றும் யாகம் செய்யும் முறை அறிமுகப்படுத்தப்பட்டு உள்ளது. ஜம்மு  காஷ்மீரில் உள்ள அமர்நாத் குகையில் ஆண்டுதோறும் ஜூன், ஆகஸ்ட்  மாதங்களில் பனிலிங்க வடிவில் சிவபெருமான் அருள்பாலித்து வருகிறார். இந்த பனி லிங்கத்தை தரிசிக்க ஆண்டுதோறும் நாடு முழுதும் இருந்து லட்சக்கணக்கான பக்தர்கள் அமர்நாத் யாத்திரை மேற்கொள்வது வழக்கம். இந்தாண்டுக்கான அமர்நாத் புனித யாத்திரை கடந்த மாதம் 30ம் தேதி தொடங்கியது. இந்நிலையில், புனித யாத்திரையில் பங்கேற்க … Read more

மகாராஷ்டிரச் சட்டப்பேரவை தலைவர் தேர்தலில் பாஜகவின் ராகுல் நர்வேகர் வெற்றி!

மகாராஷ்டிரச் சட்டப்பேரவைத் தலைவராக பாஜகவின் ராகுல் நர்வேகர் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார். மகாராஷ்டிரச் சட்டப்பேரவையின் சிறப்புக் கூட்டத்தில் பாஜகவின் ராகுல் நர்வேகர் 164 வாக்குகளுடன் வெற்றிபெற்றார். அவருக்கு எதிராக 107 வாக்குகள் பதிவாகின. சபாநாயகர் தேர்தலில் ஆளும் கூட்டணியின் பாஜக வேட்பாளர் அதிக வாக்குகளுடன் வெற்றிபெற்றுள்ளதால் திங்களன்று நடைபெறும் நம்பிக்கை வாக்கெடுப்பிப்பிலும் ஏக்நாத் சிண்டே அரசு எளிதாக வெற்றிபெறும் என அரசியல் நோக்கர்கள் கருதுகின்றனர். Source link

மகாராஷ்டிராவில் ஷிண்டே தலைமையிலான அரசு மீது இன்று நம்பிக்கை வாக்கெடுப்பு: பாஜ வேட்பாளர் ராகுல் நர்வேகர் சபாநாயகர் தேர்தலில் வெற்றி

மும்பை: மகாராஷ்டிராவில் சட்டப்பேரவையில் நேற்று நடந்த சபாநாயகர் தேர்தலில், பாஜ சார்பில் போட்டியிட்ட ராகுல் நர்வேகர் வெற்றி பெற்றார். கவர்னர் கோஷ்யாரி உத்தரவுப்படி ஷிண்டே தலைமையிலான அரசு பெரும்பான்மையை நிரூபிக்க இன்று வாக்கெடுப்பு நடக்கிறது. மகாராஷ்டிராவில் கடந்த 2019ம் ஆண்டு நடந்த சட்டப்பேரவை தேர்தலில் பாஜ, சிவசேனா கூட்டணி வெற்றி பெற்றது. ஆனால், முதல்வர் பதவி யாருக்கு என்ற மோதலில் பாஜ பதவியை விட்டுத்தராததால் சிவசேனா தலைவர் உத்தவ் தாக்கரே அதிருப்தி அடைந்தார். பின்னர் உத்தவ் தாக்கரே … Read more

வயலில் வேலை செய்தபோது விபத்தில் சிக்கிய இளைஞர்.. ஆற்றின் குறுக்கே ரோப் கட்டி மீட்ட ராணுவத்தினர்..!

ஜம்மு காஷ்மீரின் கிஷ்த்வாரில் செனாப் ஆற்றின் குறுக்கே வயலில் வேலை செய்துகொண்டிருந்த போது விபத்தில் சிக்கியவரை ஆற்றின் குறுக்கே இருபுறமும் ரோப் கட்டி ராணுவத்தினர் மீட்டனர். குண்டல் கிராமத்தை சேர்ந்த 24 வயதான அங்கித் குமார் கை டிராக்டருடன் வயலில் வேலை செய்யும்போது இரு கால்களிலும் பலத்த காயம் ஏற்பட்டதை அடுத்து அவர் மீட்கப்பட்டு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார். Source link

பேருந்து உரசியதில் நிலைதடுமாறி விழுந்த தந்தை, மகள்.. சக்கரம் ஏறி இறங்கியதில் தந்தை கை நசுங்கியது..!

கேரளாவில், தனியார் பேருந்து பக்கவாட்டில் உரசியதில் கட்டுப்பாட்டை இழந்த இருசக்கர வாகனம் நிலைதடுமாறி கீழே விழுந்த நிலையில், அதில் பயணித்த தந்தை, மகள் நூலிழையில் உயிர்தப்பிய காட்சி சிசிடிவியில் பதிவாகியுள்ளது. நென்மாரா பகுதியைச் சேர்ந்த சுரேஷ்குமார், தனது மகளுடன் பேருந்து நிலையம் நோக்கிச் சென்ற போது பக்கவாட்டில் வந்த பேருந்து, இருசக்கர வாகனத்தின் மீது உரசியது. இதில் நிலைதடுமாறி சுரேஷ்குமாரும் அவரது மகளும் பேருந்தின் சக்கரத்துக்கு அருகில் விழுந்த நிலையில், சுரேஷ்குமாரின் கை மீது பேருந்தின் முன்சக்கரம் … Read more

ஜம்முவில் ஏ47 துப்பாக்கியுடன் பிடிபட்ட தீவிரவாதி பாஜக நிர்வாகியாக இருந்தவர்-பரபரப்பு தகவல்

ஜம்முவில் பிடிபட்ட லஷ்கர் – இ – தொய்பா தீவிரவாதி ஒருவர் பாஜக நிர்வாகியாக இருந்து வந்தது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. ஜம்முவின் ரியாஸி கிராமத்தில் புதிதாக வந்து தங்கியிருந்த இரு இளைஞர்களின் நடவடிக்கை தொடர்ந்து சந்தேகத்துக்கு இடமாக இருந்து வந்துள்ளது. பகலில் வெளியே செல்வதும் நடு இரவில் வீடு திரும்புவதுமாக அவர்கள் இருந்து வந்துள்ளனர். இதனால் சந்தேகமடைந்த பொதுமக்கள், நேற்று இரவு அவர்களின் வீட்டின் பூட்டை உடைத்து உள்ளே சென்றனர். அப்போது அவர்களின் வீட்டில் ஏகே … Read more

இந்தியாவின் இளம் வயது சபாநாயகர் இவர் தான்!

மகாராஷ்டிராவில் உத்தவ் தாக்கரே தலைமையிலான சிவசேனா ஆட்சி கவிழ்ந்ததையடுத்து, அதிருப்தி எம்எல்ஏக்களை அணி திரட்டிய அக்கட்சியை சேர்ந்த ஏக்நாத் ஷிண்டே, பாஜக ஆதரவுடன் மாநிலத்தின் புதிய முதல்வராக பொறுப்பேற்றுள்ளார். அலரது தலைமையிலான அரசு மகாராஷ்டிர மாநில சட்டப்பேரவையில் நாளை (ஜூலை 4) நம்பிக்கை வாக்கெடுப்பு கோர உள்ளது. இதற்கு முன்பாக, புதிய சபாநாயகரை தேர்ந்தெடுப்பதற்கான தேர்தல் சிறப்பு சட்டமன்ற கூட்டத்தில் இன்று நடைபெற்றது. இதில் பாஜக சார்பில் ராகுல் நர்வேக்கரும், சிவசேனா சார்பில் ராஜன் சால்வியும் போட்டியிட்டனர். … Read more

டோலிவுட் நடிகர் நரேஷை அவரது மூன்றாவது மனைவி செருப்பால் அடிக்க முயன்றதால் பரபரப்பு..!

மைசூருவில், விடுதியில் ஒன்றாகத் தங்கியிருந்த டோலிவுட் நடிகர் நரேஷ் மற்றும் நடிகை பவித்ரா லோகேஷை, நரேஷின் மூன்றாவது மனைவி ரம்யா ரகுபதி செருப்பால் அடிக்க முயன்றதால் பரபரப்பு ஏற்பட்டது. ஏராளமான தெலுங்கு திரைப்படங்களில் நடித்தவரான நரேஷ், தனது மூன்றாவது மனைவியான ரம்யா ரகுபதியிடம் இருந்து விவகாரத்து கோரி விண்ணப்பித்திருந்தார். நரேஷும், துணை நடிகை பவித்ரா லோகேஷும் தங்கியிருந்த விடுதிக்கு வந்த ரம்யா ரகுபதி அவர்களை ஆபாசமாகத் திட்டி விட்டு செருப்பால் அடிக்க முற்பட்ட போது அங்கிருந்த போலீசார் … Read more

குடியரசுத் தலைவர் தேர்தல்: எடப்பாடி பழனிசாமியிடம் ராகுல் காந்தி தொலைபேசியில் பேசினாரா?- ஜெய்ராம் ரமேஷ் விளக்கம்

புதுடெல்லி: குடியரசுத் தலைவர் தேர்தலில், எதிர்க்கட்சி வேட்பாளர் யஷ்வந்த் சின்ஹாவிற்கு ஆதரவு கேட்டு அதிமுக., தலைமையை ராகுல் தொடர்பு கொண்டதாக வெளியான தகவல் தவறானது என காங்கிரஸ் மூத்த தலைவர் ஜெய்ராம் ரமேஷ் கூறியுள்ளார். வரும் 18- ம் தேதி குடியரசுத் தலைவர் தேர்தல் நடைபெற உள்ளது. இந்த தேர்தலில் பாஜக கூட்டணி சார்பில் திரவுபதி முர்முவும், எதிர்க்கட்சிகளின் சார்பில் யஷ்வந்த் சின்ஹாவும் போட்டியிடுகின்றனர். இருவரும் பல்வேறு மாநிலங்களுக்கு சென்று ஆதரவு திரட்டி வருகின்றனர். இந்நிலையில், யஷ்வந்த் … Read more