ஸ்பைஸ்ஜெட் நிறுவனத்தின் தலைமை நிதி அதிகாரி சஞ்சீவ் தனேஜா ராஜினாமா.!

குறைந்த கட்டண விமான சேவை நிறுவனமான ஸ்பைஸ்ஜெட்டின் தலைமை நிதி அதிகாரி சஞ்சீவ் தனேஜா ராஜினாமா செய்துள்ளார் . கொரோனா தொற்று பரவலால் ஏற்கெனவே நட்டத்தை சந்தித்து வந்த ஸ்பைஸ் ஜெட், விமான எரிபொருளுக்கான விலையேற்றம் மற்றும் டாலருக்கு நிகரான ரூபாய் மதிப்பு வீழ்ச்சி உள்ளிட்டவற்றால் வீழ்ச்சியை சந்தித்து வருகிறது. இந்நிலையில், பாதுகாப்பு குறைபாடு தொடர்பான சம்பவங்களினாலும், பொருளாதார இழப்புகளினாலும் அந்நிறுவனத்தின் தலைமை நிதி அதிகாரி சஞ்சீவ் தனேஜா பதவியை ராஜினாமா செய்தார். ஜூன் 30-ஆம் தேதியுடன் … Read more

புதிய மதுபான கொள்கையில் ஊழல் விசாரணையை தொடர்ந்து டெல்லியில் அரசு மது விற்பனை

டெல்லி: தமிழ்நாட்டை போலவே, டெல்லியிலும் மதுபான கடைகளை அரசே நடத்த உள்ளது. புதிய மதுபான கொள்கையில் ஊழல் நடந்துள்ளதாக சிபிஐ விசாரணை நடைபெறும் நிலையில், இன்று முதல் மாநில அரசே மது விற்பனை செய்ய உள்ளது.

ஜொமோட்டோவின் 'இன்டர்சிட்டி லெஜெண்ட்ஸ்' திட்டம் – இனி இந்தியாவின் மற்ற நகர உணவுகளையும் ஆர்டர் செய்யலாம்

சென்னை: ஜொமோட்டோ, புதிதாக ‘இன்டர்சிட்டி லெஜெண்ட்ஸ்’ (Intercity legends) என்கிற புதிய சேவையைத் தொடங்கியுள்ளது. இந்த சேவையானது நகரங்களுக்கு இடையேயான உணவு விநியோக சேவையை வழங்கவுள்ளது. அதாவது, கொல்கத்தாவின் தனித்துவ அடையாளமான ரசகுல்லாவையும், ஹைதராபாத்தின் பேமஸ் உணவான பிரியாணியையும் நீங்கள் சென்னையில் இருந்தே ஆர்டர் செய்து பெற முடியும். இந்தியாவின் பிற நகரங்களில் உள்ள பிரபலமான உணவகங்களில் இருந்து ஸ்பெஷல் உணவுகளை மற்ற நகரங்களில் இருந்து ஆர்டர் செய்ய முடியும். ஆனால், இன்று ஆர்டர் செய்தால் அதிகபட்சமாக … Read more

கடத்தல் வழக்கில் சிக்கிய அமைச்சர் கார்த்திக் குமார் திடீர் ராஜினாமா.!

பீஹாரில் கடத்தல் வழக்கில் சிக்கிய சட்ட அமைச்சர் கார்த்திக் குமார் இலாகா மாற்றப்பட்ட சிலமணி நேரங்களில் திடீரென தனது பதவியை ராஜினாமா செய்தார். அமைச்சர் கார்த்திக் குமார் மீது, கடத்தல் வழக்குப் பதிவு செய்யப்பட்டிருந்தது, அவர் பதவியில் நீடிக்க பா.ஜ., உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் கடும் எதிர்ப்பு தெரிவித்து போராட்டம் நடத்தி வந்தன. இதையடுத்து, முதல்வர் நிதிஷ் குமார் நேற்று அவரை சட்ட அமைச்சர் பொறுப்பிலிருந்து விடுவித்து, கரும்புத் துறைக்கு மாற்றினார்.தனது இலாகா மாற்றிய சில மணி நேரங்களில் … Read more

இலங்கையில் திருப்பம் 12 ஆளும் கட்சி எம்பி.க்கள் எதிர்கட்சிக்கு திடீர் தாவல்

கொழும்பு: இலங்கையில் ஆளும் கட்சியை சேர்ந்த 12 எம்பி.க்கள் அதிருப்தியில் இருந்த நிலையில், அவர்கள் அனைவரும் எதிர்க்கட்சியில் சேர்ந்தனர். இலங்கையில் கடும் பொருளாதார நெருக்கடி ஏற்பட்டதால் அரசுக்கு எதிராக மக்கள் போராட்டம் நடத்தினர். இதனால், அதிருப்தியடைந்த ஆளும் இலங்கை பொதுஜன பெரமுன கட்சியை சேர்ந்த முன்னாள் அமைச்சர் ஜி.எல்.பீரிஸ், டலஸ் அழகப்பெரும, டிலான் பெரேரா மற்றும் நாலக கொடஹேவா உட்பட 12 எம்பிக்கள் தனியாக செயல்பட தொடங்கினர். மக்கள் போராட்டம் வலுத்ததால் பிரதமர் மகிந்த ராஜபக்சே ராஜினாமா … Read more

இந்தியா-சீனா ராணுவ உயர் அதிகாரிகள் இடையே பேச்சுவார்த்தை..!

லடாக் எல்லையில் பதற்றத்தைத் தணிக்க இந்தியா-சீனா ராணுவ மேஜர் ஜெனரல்கள் மட்டத்தில் பேச்சுவார்த்தை நடைபெற்றது. இந்திய- சீனா ராணுவ உயர் அதிகாரிகள் மட்டத்தில் 16 வது சுற்றுப் பேச்சுவார்த்தை நடந்து முடிந்துள்ள நிலையில், இருநாட்டு ராணுவ மேஜர் ஜெனரல்கள் தங்கள் படைத்தளபதிகளுடன் சந்தித்துப் பேச்சுவார்த்தை நடத்தினர். அசல் எல்லைக் கோடு பகுதியில் வெளிப்படைத்தன்மை மற்றும் அமைதியை கடைபிடிக்க இருதரப்பினரும் தீவிர ஆலோசனையில் ஈடுபட்டனர். எல்லைப் பகுதியில் பதற்றத்தைத் தணிக்கவும் அமைதியை கடைபிடிக்கவும் இதுபோன்ற முன்னறிவிக்கப்படாத ராணுவ பேச்சுவார்த்தைகள் … Read more

சோவியத் யூனியனின் கடைசி அதிபர் மிகைல் கார்பசேவ் மரணம்: பனிப்போரை முடிவுக்கு கொண்டு வந்தவர்

மாஸ்கோ: சோவியத் யூனியனின் கடைசி அதிபரும், அமெரிக்கா உடனான பனிப்போரை முடிவுக்கு கொண்டு வந்தவருமான மிகைல் கார்பசேவ் காலமானார். அவருக்கு வயது 91. கடந்த 1917ம் ஆண்டில் நடந்த ரஷ்ய புரட்சியின் மூலம், உலகின் மாபெரும் சக்தியாக மிகப்பெரிய பிரதேசமாக சோவியத் யூனியன் உருவானது. இதில் 15 நாடுகள் உறுப்பினர்களாக ஒன்றுபட்டு இருந்தன. கம்யூனிஸ்ட் நாடுகளின் தலைமைப் பொறுப்பை வகித்த சோவியத் யூனியன், உலகின் மிக சக்தி வாய்ந்த நாடாக திகழ்ந்தது. அதே சமயம், கடுமையான கட்டுப்பாடுகள் … Read more

லடாக்கில் விமானப்படை உதவி 17,000 அடி உயர மலையில் சிக்கிய இஸ்ரேலியர் மீட்பு

ஸ்ரீநகர்: ஸ்ரீநகரில் உள்ள ராணுவ தளத்துக்கு லடாக்கின் மர்கா பள்ளத்தாக்கு அருகே உள்ள நிமலிங் முகாமில் இருந்து நேற்று அவசர அழைப்பு வந்தது. அதில், இஸ்ரேல் நாட்டை சேர்ந்த ஒருவர், அடார் ககானா மலை உச்சியில் சிக்கி இருப்பதாகவும் வாந்தி, ஆக்சிஜன் குறைபாடு ஆகியவற்றால் பாதிக்கப்பட்டிருக்கும் அவரை உடனடியாக மீட்க வேண்டும் என்றும் கூறப்பட்டது. இதையடுத்து, விங் கமாண்டர் ஆஷிஷ் கபூர் தலைமையில் 3 பேர் கொண்ட குழு, ஹெலிகாப்டரில் அங்கு சென்றது. அங்கு 16 ஆயிரத்து … Read more

காங். தலைவர் பதவி தேர்தல் நான் மட்டுமே அல்லமேலும் பலர் போட்டி: சசிதரூர் புதிய தகவல்

திருவனந்தபுரம்: காங்கிரஸ் தலைவர் பதவிக்கு 22 வருடங்களுக்குப் பிறகு, அக்டோபர் 17ம் தேதி தேர்தல் நடைபெற உள்ளது. . இந்நிலையில், தலைவர் தேர்தலில் கட்சியின் மூத்த தலைவர்களில் ஒருவரும், திருவனந்தபுரம் எம்பி.யுமான சசிதரூர் போட்டியிட உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. இந்நிலையில், திருவனந்தபுரத்தில் நேற்று சசிதரூர் அளித்த பேட்டியில், ‘தலைவர் பதவிக்கு போட்டி ஏற்படுவது கட்சிக்கு நல்லதுதான். காங்கிரஸ் என்றால் அது ஒரு தனி நபரை சார்ந்தது அல்ல. ஒரு குடும்பத்தில் இருந்து தலைவர் வர வேண்டுமா? … Read more

எம்டி படிப்புக்கு 19ல் கவுன்சலிங்

புதுடெல்லி:  முதுகலை மருத்துவ படிப்புகளுக்கான கவுன்சலிங் வரும் 19ம் தேதி தொடங்கும் என்று தகவல்கள் வெளியாகி உள்ளது. முதுகலை மருத்துவ படிப்புக்கான (எம்டி) நுழைவுத் தேர்வு (நீட்-பிஜி) வழக்கமாக ஜனவரியில் நடத்தப்பட்டு, மார்ச்சில்  கவுன்சலிங் தொடங்கும். ஆனால், கொரோனா தொற்று மற்றும் கடந்தாண்டு சேர்க்கை செயல் முறை தாமதம் காரணமாக, இந்தாண்டு தேர்வு கடந்த மே 21ம் தேதிதான் நடத்தப்பட்டது. இதன் முடிவுகள் ஜூன் 1ம் தேதி அறிவிக்கப்பட்டன. இதைத் தொடர்ந்து, செப்டம்பர் 1ம் தேதி முதல் … Read more