கடத்தல் வழக்கில் சிக்கிய அமைச்சர் கார்த்திக் குமார் திடீர் ராஜினாமா.!

பீஹாரில் கடத்தல் வழக்கில் சிக்கிய சட்ட அமைச்சர் கார்த்திக் குமார் இலாகா மாற்றப்பட்ட சிலமணி நேரங்களில் திடீரென தனது பதவியை ராஜினாமா செய்தார். அமைச்சர் கார்த்திக் குமார் மீது, கடத்தல் வழக்குப் பதிவு செய்யப்பட்டிருந்தது, அவர் பதவியில் நீடிக்க பா.ஜ., உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் கடும் எதிர்ப்பு தெரிவித்து போராட்டம் நடத்தி வந்தன. இதையடுத்து, முதல்வர் நிதிஷ் குமார் நேற்று அவரை சட்ட அமைச்சர் பொறுப்பிலிருந்து விடுவித்து, கரும்புத் துறைக்கு மாற்றினார்.தனது இலாகா மாற்றிய சில மணி நேரங்களில் … Read more

இலங்கையில் திருப்பம் 12 ஆளும் கட்சி எம்பி.க்கள் எதிர்கட்சிக்கு திடீர் தாவல்

கொழும்பு: இலங்கையில் ஆளும் கட்சியை சேர்ந்த 12 எம்பி.க்கள் அதிருப்தியில் இருந்த நிலையில், அவர்கள் அனைவரும் எதிர்க்கட்சியில் சேர்ந்தனர். இலங்கையில் கடும் பொருளாதார நெருக்கடி ஏற்பட்டதால் அரசுக்கு எதிராக மக்கள் போராட்டம் நடத்தினர். இதனால், அதிருப்தியடைந்த ஆளும் இலங்கை பொதுஜன பெரமுன கட்சியை சேர்ந்த முன்னாள் அமைச்சர் ஜி.எல்.பீரிஸ், டலஸ் அழகப்பெரும, டிலான் பெரேரா மற்றும் நாலக கொடஹேவா உட்பட 12 எம்பிக்கள் தனியாக செயல்பட தொடங்கினர். மக்கள் போராட்டம் வலுத்ததால் பிரதமர் மகிந்த ராஜபக்சே ராஜினாமா … Read more

இந்தியா-சீனா ராணுவ உயர் அதிகாரிகள் இடையே பேச்சுவார்த்தை..!

லடாக் எல்லையில் பதற்றத்தைத் தணிக்க இந்தியா-சீனா ராணுவ மேஜர் ஜெனரல்கள் மட்டத்தில் பேச்சுவார்த்தை நடைபெற்றது. இந்திய- சீனா ராணுவ உயர் அதிகாரிகள் மட்டத்தில் 16 வது சுற்றுப் பேச்சுவார்த்தை நடந்து முடிந்துள்ள நிலையில், இருநாட்டு ராணுவ மேஜர் ஜெனரல்கள் தங்கள் படைத்தளபதிகளுடன் சந்தித்துப் பேச்சுவார்த்தை நடத்தினர். அசல் எல்லைக் கோடு பகுதியில் வெளிப்படைத்தன்மை மற்றும் அமைதியை கடைபிடிக்க இருதரப்பினரும் தீவிர ஆலோசனையில் ஈடுபட்டனர். எல்லைப் பகுதியில் பதற்றத்தைத் தணிக்கவும் அமைதியை கடைபிடிக்கவும் இதுபோன்ற முன்னறிவிக்கப்படாத ராணுவ பேச்சுவார்த்தைகள் … Read more

சோவியத் யூனியனின் கடைசி அதிபர் மிகைல் கார்பசேவ் மரணம்: பனிப்போரை முடிவுக்கு கொண்டு வந்தவர்

மாஸ்கோ: சோவியத் யூனியனின் கடைசி அதிபரும், அமெரிக்கா உடனான பனிப்போரை முடிவுக்கு கொண்டு வந்தவருமான மிகைல் கார்பசேவ் காலமானார். அவருக்கு வயது 91. கடந்த 1917ம் ஆண்டில் நடந்த ரஷ்ய புரட்சியின் மூலம், உலகின் மாபெரும் சக்தியாக மிகப்பெரிய பிரதேசமாக சோவியத் யூனியன் உருவானது. இதில் 15 நாடுகள் உறுப்பினர்களாக ஒன்றுபட்டு இருந்தன. கம்யூனிஸ்ட் நாடுகளின் தலைமைப் பொறுப்பை வகித்த சோவியத் யூனியன், உலகின் மிக சக்தி வாய்ந்த நாடாக திகழ்ந்தது. அதே சமயம், கடுமையான கட்டுப்பாடுகள் … Read more

லடாக்கில் விமானப்படை உதவி 17,000 அடி உயர மலையில் சிக்கிய இஸ்ரேலியர் மீட்பு

ஸ்ரீநகர்: ஸ்ரீநகரில் உள்ள ராணுவ தளத்துக்கு லடாக்கின் மர்கா பள்ளத்தாக்கு அருகே உள்ள நிமலிங் முகாமில் இருந்து நேற்று அவசர அழைப்பு வந்தது. அதில், இஸ்ரேல் நாட்டை சேர்ந்த ஒருவர், அடார் ககானா மலை உச்சியில் சிக்கி இருப்பதாகவும் வாந்தி, ஆக்சிஜன் குறைபாடு ஆகியவற்றால் பாதிக்கப்பட்டிருக்கும் அவரை உடனடியாக மீட்க வேண்டும் என்றும் கூறப்பட்டது. இதையடுத்து, விங் கமாண்டர் ஆஷிஷ் கபூர் தலைமையில் 3 பேர் கொண்ட குழு, ஹெலிகாப்டரில் அங்கு சென்றது. அங்கு 16 ஆயிரத்து … Read more

காங். தலைவர் பதவி தேர்தல் நான் மட்டுமே அல்லமேலும் பலர் போட்டி: சசிதரூர் புதிய தகவல்

திருவனந்தபுரம்: காங்கிரஸ் தலைவர் பதவிக்கு 22 வருடங்களுக்குப் பிறகு, அக்டோபர் 17ம் தேதி தேர்தல் நடைபெற உள்ளது. . இந்நிலையில், தலைவர் தேர்தலில் கட்சியின் மூத்த தலைவர்களில் ஒருவரும், திருவனந்தபுரம் எம்பி.யுமான சசிதரூர் போட்டியிட உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. இந்நிலையில், திருவனந்தபுரத்தில் நேற்று சசிதரூர் அளித்த பேட்டியில், ‘தலைவர் பதவிக்கு போட்டி ஏற்படுவது கட்சிக்கு நல்லதுதான். காங்கிரஸ் என்றால் அது ஒரு தனி நபரை சார்ந்தது அல்ல. ஒரு குடும்பத்தில் இருந்து தலைவர் வர வேண்டுமா? … Read more

எம்டி படிப்புக்கு 19ல் கவுன்சலிங்

புதுடெல்லி:  முதுகலை மருத்துவ படிப்புகளுக்கான கவுன்சலிங் வரும் 19ம் தேதி தொடங்கும் என்று தகவல்கள் வெளியாகி உள்ளது. முதுகலை மருத்துவ படிப்புக்கான (எம்டி) நுழைவுத் தேர்வு (நீட்-பிஜி) வழக்கமாக ஜனவரியில் நடத்தப்பட்டு, மார்ச்சில்  கவுன்சலிங் தொடங்கும். ஆனால், கொரோனா தொற்று மற்றும் கடந்தாண்டு சேர்க்கை செயல் முறை தாமதம் காரணமாக, இந்தாண்டு தேர்வு கடந்த மே 21ம் தேதிதான் நடத்தப்பட்டது. இதன் முடிவுகள் ஜூன் 1ம் தேதி அறிவிக்கப்பட்டன. இதைத் தொடர்ந்து, செப்டம்பர் 1ம் தேதி முதல் … Read more

“பணத்தின் மீதான மோகமே காரணம்” | சுகேஷின் குற்றங்களை தெரிந்தே நடிகை ஜாக்குலின் பழகினார் – அமலாக்கத்துறை

புதுடெல்லி: சுகேஷ் சந்திரசேகரின் குற்ற வரலாறுகளை தெரிந்தே நடிகை ஜாக்குலின் பெர்னாண்டஸ் அவருடன் பழகினார் என்று அமலாக்கத்துறை தெரிவித்துள்ளது. டெல்லியைச் சேர்ந்த தொழிலதிபர் மனைவியிடம் ரூ.200 கோடி மோசடி செய்ததாக இடைத்தரகர் சுகேஷ் சந்திரசேகர் என்பவர், கடந்த ஆண்டு கைதுசெய்யப்பட்டார். அவருடன் தொடர்புடையதாக இந்தி நடிகை ஜாக்குலின் பெர்னாண்டஸை அமலாக்கத் துறை விசாரித்தது. இந்த விவகாரத்தில் சமீபத்தில் தாக்கல் செய்யப்பட்ட குற்றப்பத்திரிகையில் நடிகை ஜாக்குலின் பெர்னாண்டஸ் பெயரை குற்றவாளிகளின் பெயருடன் இணைந்திருந்தது அமலாக்கத்துறை. இப்போது சுகேஷ் குற்றவாளி … Read more

ரூ.200 கோடி பண மோசடி நடிகை ஜாக்குலினுக்கு உயர் நீதிமன்றம் சம்மன்

புதுடெல்லி: மோசடி மன்னன் சுகேஷ் சந்திரசேகருக்கு எதிரான ரூ200 கோடி பண மோசடி வழக்கில் நடிகை ஜாக்குலின் பெர்ணான்டசுக்கு டெல்லி நீதிமன்றம் நேரில் ஆஜராக சம்மன் அனுப்பி உள்ளது.இரட்டை இலை சின்னத்தை பெற்றுத்தர தேர்தல் ஆணைய அதிகாரிகளுக்கு லஞ்சம் தர முயன்றதாக கைது செய்யப்பட்ட சுகேஷ் சந்திரசேகர், பல்வேறு மோசடிகளில் சம்பந்தப்பட்டவர். இவர் திகார் சிறையில் இருந்தபடியே போன் மூலமாக தொழிலதிபர்களை மிரட்டி ரூ200 கோடி பணம் பறித்துள்ளார். இது தொடர்பாக பண மோசடி தடுப்பு சட்டத்தின் … Read more

பாஜ இல்லாத இந்தியா சந்திர சேகர் அழைப்பு: பீகாரில் நிதிஷுடன் சந்திப்பு

பாட்னா:பாஜ இல்லாத இந்தியா’வை உருவாக்க, எதிர்க்கட்சிகள் ஓன்றிணைய வேண்டும்,’ என்று தெலங்கானா முதல்வர் சந்திரசேகர ராவ் அழைப்பு விடுத்துள்ளார்.ஐக்கிய ஜனதா தளம் கட்சியின் தலைவரும், பீகார் முதல்வருமான நிதிஷ் குமார் சமீபத்தில் பாஜ கூட்டணியை முறித்து கொண்டார். காங்கிரஸ், ராஷ்டிரிய ஜனதா தளம் உள்ளிட்ட கட்சிகளடன் இணைத்து, பீகாரில் புதிய ஆட்சியை அமைத்துள்ளார். வரும் நாடாளுமன்ற தேர்தலில் பாஜ.வை தோற்கடிப்பதற்காகன வியூகங்களை அவர் வகுத்து வருகிறார். இந்நிலையில், பாஜ.வுக்கு எதிராக தீவிரமாக செயல்பட்டு வரும் தெலங்கானா முதல்வர் … Read more