ஆசியாவில் யாரும் படைக்காத சாதனை; உலக பணக்காரர்களில் 3-ம் இடத்தில் அதானி

புதுடெல்லி: உலகின் பெரும் பணக்காரர்கள் பட்டியலில் 3வது இடத்திற்கு முன்னேறினார் கவுதம் அதானி. அமெரிக்காவைச் சேர்ந்த ப்ளூம்பெர்க் பில்லியனர்கள் குறியீடு தினசரி அடிப்படையில் புதுப்பிக்கப்பட்டு வருகிறது. அந்த வகையில், நேற்றைய புதுப்பித்தலில், உலகின் பெரும் பணக்காரர்கள் பட்டியலில் இந்தியாவின் கவுதம் அதானி 4வது இடத்தில் இருந்து 3வது இடத்திற்கு முன்னேறி உள்ளார். இவர் பிரான்சின் பெர்னார்ட் அர்னால்டை முந்தி உள்ளார். அதானியின் சொத்து மதிப்பு ரூ.10.85 லட்சம் கோடியாக உள்ளது. கடந்த ஜூலை மாதம் இப்பட்டியலில் பில் … Read more

பிரதமர் மோடி நாளை கேரளா வருகை

புதுடெல்லி / பெங்களூரு: பிரதமர் நரேந்திர மோடி செப்டம்பர் 1, 2் தேதிகளில் கேரளா, கர்நாடகாவில் சுற்றுப்பயணம் மேற்கொள்கிறார். இதுகுறித்து பிரதமர் அலுவலகம் வெளியிட்டுள்ள நிகழ்ச்சி நிரலில் கூறியிருப்பதாவது: பிரதமர் நரேந்திர மோடி செப். 1-ம் தேதி மாலை 6 மணிக்கு கேரள மாநிலம் காலடி கிராமத்தில் உள்ள ஆதி சங்கராச்சாரியாரின் பிறப்பிடமான ஸ்ரீ ஆதி சங்கரர் ஜென்ம பூமி க் ஷேத்திரத்துக்கு செல்கிறார். செப்டம்பர் 2-ம் தேதி காலை 9.30 மணிக்கு கொச்சியில் உள்ள கொச்சி ஷிப்யார்ட் … Read more

பிரதமர் மோடி மீது ராகுல் தாக்கு; நண்பர்களை மட்டும் பணக்காரர் ஆக்குகிறார்

புதுடெல்லி: பிரதமர் மோடி தனது நண்பர்களை மட்டும் பணக்காரர்களாக்கி வருவதாக காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல்காந்தி குற்றம் சாட்டியுள்ளார். காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல்காந்தி நேற்று தனது டிவிட்டரில் ‘2 இந்தியர்கள்’ என்ற ஹேஷ்டேக்குடன் வெளியிட்ட பதிவில், ‘ஒவ்வொரு மணி நேரத்திற்கும் தினசரி கூலிக்கு வேலை செய்யும் 5 தொழிலாளர்கள் தற்கொலை செய்து கொள்கின்றனர். ஆனால் ஒவ்வொரு மணி நேரத்துக்கும் பிரதமர் மோடியின் விருப்பத்திற்குரிய நண்பர் கணக்கில் ரூ.85 கோடி பணம் சேர்கிறது. சாமானியர்களிடம் இருந்து கொள்ளையடித்து … Read more

கேரளாவில் கனமழை காரணமாக ஏற்பட்ட நிலச்சரிவில் புதைந்த எஜமானர்களின் கடைசி உடல் கிடைக்கும் வரை உடன் இருந்த நாய்

இடுக்கி: கேரளாவில் நிலச்சரிவில் புதைந்த எஜமானர்களின் கடைசி உடல் கிடைக்கும் வரை, அவர்கள் வளர்த்த நாய் உடன் இருந்துள்ளது. கேரள மாநிலத்தில் பருவமழை தீவிரமாக பெய்ததில் இடுக்கியில் நிலச்சரிவு ஏற்பட்டது. இதில் குடயாதூர் கிராமத்தில் ஏற்பட்ட நிலச்சரிவில் சோமன் என்பவரின் குடும்பத்தைச் சேர்ந்த 5 பேரை காணவில்லை. இவர்கள் மண்ணில் புதைந்திருக்கலாம் என கருதி இங்கு தேடுதல் பணிகள் மேற்கொள்ளப்பட்டன. அப்போது ஒரு நாய் காலில் காயத்துடன், மீட்புக் குழுவினருடன் சேர்ந்து சுற்றியது. அந்த நாய் சோமன் … Read more

உச்ச நீதிமன்றம் உத்தரவு குஜராத் கலவர வழக்குகள் அனைத்தும் முடித்து வைப்பு

புதுடெல்லி: கடந்த 2002ம் ஆண்டு குஜராத்தில் மதக்கலவரம் ஏற்பட்டது. அதைத் தொடர்ந்து நடைபெற்ற கோத்ரா ரயில் எரிப்புச் சம்பவத்தில் குழந்தைகள் உள்பட 50க்கும் மேற்பட்டோர் பலியாகினர். இந்த கலவரம் தொடர்பாக சிபிஐ விசாரிக்க கோரியும், இழப்பீடு கோரியும் 10 மனுக்கள் உச்ச நீதிமன்றத்தில் நிலுவையில் இருந்தன. இந்நிலையில், இந்த வழக்குகள் அனைத்தும் காலாவதி ஆகிவிட்டதால் அவற்றை முடித்து வைப்பதாக உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி யு.யு. லலித் தலைமையிலான அமர்வு கூறியுள்ளது. இதே போல, பாபர் மசூதி இடிப்பு … Read more

பொருளாதார நிபுணர் அபிஜித் சென் மறைவு

புதுடெல்லி: பிரபல பொருளாதார நிபுணரும், முன்னாள் திட்ட ஆணையத்தின் உறுப்பினருமான அபிஜித் சென் நேற்று முன்தினம் இரவு உயிரிழந்தார். நாட்டின் பிரபல கிராமப்புற பொருளாதார நிபுணர் அபிஜித் சென். இவர் மன்மோகன் சிங் பிரதமராக இரந்தபோது 2004ம் ஆண்டு முதல் 2014ம் ஆண்டு வரை திட்ட ஆணையத்தின் உறுப்பினராக இருந்தார். 2010ம் ஆண்டு இவருக்கு ஒன்றிய அரசு பத்மபூஷண் விருது வழங்கி கவுரவித்தது. 2104ம் ஆண்டு தேசிய ஜனநாயக கூட்டணி ஆட்சிக்கு வந்ததும் நீண்ட கால தானியக் … Read more

சீன நிறுவனங்களின் ரூ.12 ஆயிரத்துக்கு குறைவான ஸ்மார்ட் போன்களுக்கு தடை இல்லை – மத்திய இணை அமைச்சர் விளக்கம்

சீன நிறுவனங்கள் தயாரிக்கும் 12 ஆயிரம் ரூபாய்க்கு குறைவான ஸ்மார்ட் போன்களை இந்தியாவில் தடைவிதிக்கும் எண்ணம் எதுவும் அரசுக்கு இல்லை என்று மத்திய இணை அமைச்சர் ராஜீவ் சந்திரசேகர் தெரிவித்துள்ளார். செல்போன் உற்பத்தியில் உள்நாட்டு நிறுவனங்களை ஊக்குவிக்கும் நடவடிக்கைகள் தொடர்ந்து மேற்கொள்ளப்படும் என்றும், இருப்பினும் ஒரு குறிப்பிட்ட நிறுவனங்களின் செல்போன் விற்பனையை இந்தியாவில் தடை செய்யும் எண்ணம் எதுவும் அரசிடம் கிடையாது என்றும் அவர் விளக்கம் அளித்துள்ளார். இந்தியாவிலிருந்து ஏற்றுமதி செய்வதை அதிகரிக்குமாறு சில சீன மொபைல் … Read more

சீன கடன் ஆப்களை தடை செய்யுங்கள்; ஒன்றிய அரசுக்கு காங். கோரிக்கை

புதுடெல்லி: சீன கடன் ஆப்களை தடை செய்ய வேண்டுமென ஒன்றிய அரசுக்கு காங்கிரஸ் வலியுறுத்தி உள்ளது. டெல்லியில் காங்கிரஸ் செய்தி தொடர்பாளர் கவுரவ் வல்லபா அளித்த பேட்டியில், ‘‘கடந்த 2021ம் ஆண்டு ஜனவரி முதல் பிப்ரவரி வரையிலான விசாரணையில் கூகுள் ப்ளே ஸ்டோரில் 1100 டிஜிட்டல் கடன் ஆப்கள் இருப்பது தெரியவந்துள்ளது. இதில் சுமார் 600 ஆப்கள் சட்டவிரோதமாக செயல்படுவதை ரிசர்வ் வங்கி ஏற்றுக்கொண்டுள்ளது. இதுவரை 52 பேர் இதுபோன்ற இந்த கடன் ஆப்கள் மூலமாக மிரட்டல்களால் … Read more

ஜார்க்கண்ட் | வீட்டு சிறை; இரும்பு கம்பியால் தாக்குதல் – 8 வருடமாக பணிப்பெண்ணை சித்ரவதை செய்த பாஜக பிரமுகர் நீக்கம்

ராஞ்சி: வீட்டுப் பணிப்பெண் ஒருவரை எட்டு வருடமாக சித்ரவதை செய்த பாஜகவைச் சேர்ந்த நபர் கட்சியில் இருந்து சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளார். ஜார்க்கண்ட் மாநில பாஜக தலைவர் சீமா பத்ரா தான் தனது வீட்டில் பணிப்பெண்ணாக வேலைபார்த்து வந்த சுனிதா என்றா பழங்குடியின பெண்ணை கொடூரமாக சித்ரவதை செய்துள்ளது தெரியவந்துள்ளது. சூடான பாத்திரங்களை கொண்டும், இரும்பு கம்பிகளை கொண்டும் பணிப்பெண்ணை சீமா பத்ரா தாக்கியுள்ளார். இரும்பு கம்பி கொண்டு தாக்கி சுனிதாவின் பற்கள் உடைக்கப்பட்டுள்ளது. உணவு மற்றும் தண்ணீர் … Read more

பரஸ்பர சம்மதத்துடன் உறவு கொள்ளும் போது ஆதார், பான் வைத்து வயதை உறுதிப்படுத்த அவசியமில்லை; மைனர் பெண் பலாத்கார வழக்கில் டெல்லி ஐகோர்ட் உத்தரவு

புதுடெல்லி:  டெல்லியில் 18 வயதுக்கு உட்பட்ட சிறுமி ஒருவரை இளைஞர் ஒருவர் பாலியல் பலாத்காரம் செய்ததாக புகார் அளிக்கப்பட்டது. இந்த வழக்கில் ஜாமீன் கோரி குற்றம்சாட்டப்பட்ட இளைஞர் டெல்லி உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தார். இந்த மனு நீதிபதி ஜஸ்மீத் சிங் அமர்வில் விசாரணைக்கு வந்தது. அப்போது, இளைஞர் தரப்பில், ‘‘சிறுமியும், இளைஞரும் பரஸ்பர சம்மதத்துடனே உறவு கொண்டுள்ளனர். ஆனால், அந்த சிறுமி 18 வயதுக்கு குறைவானர் என்பதால் பலாத்கார வழக்கு தொடரப்பட்டுள்ளது. சிறுமிக்கு அதிகாரப்பூர் … Read more