பெண்களுக்கு பாதுகாப்பு இல்லாத நகரங்களின் பட்டியலில் டெல்லி முதலிடம்

டெல்லி: பெண்களுக்கு பாதுகாப்பு இல்லாத நகரங்களின் பட்டியலில், டெல்லி முதலிடத்தில் உள்ளதாக தேசிய குற்ற ஆவண காப்பகம் கூறியுள்ளது. 2-வது இடத்தில் மும்பைக்கும், 3-வது இடத்தில் பெங்களூருவுக்கு உள்ளது. டெல்லியில் பெண்களுக்கு எதிரான குற்றங்கள் ஓராண்டில் 40 % அதிகரித்துள்ளதாக தேசிய குற்ற ஆவண காப்பகம் தகவல் தெரிவித்துள்ளது.

ரபேல் விமான வழக்கு.. மீண்டும் மீண்டும் முடிந்து போன வழக்கை விசாரிக்க முடியாது – உச்சநீதிமன்றம்

ரஃபேல் விமான ஒப்பந்தம் தொடர்பான வழக்கை மீண்டும் விசாரிக்க கோரிய பொதுநல மனுவை உச்சநீதிமன்றம் ஏற்க மறுத்ததை அடுத்து, மனுதாரர் வழக்கை திரும்ப பெற்றார். 36 ரபேல் போர் விமானங்கள் வாங்க கையெழுத்தான புதிய ஒப்பந்தத்தில் ஊழல் நடந்திருப்பதாக காங்கிரஸ் கட்சி குற்றம்சாட்டியது. இது தொடர்பான வழக்குகளை விசாரித்த உச்ச நீதிமன்றம், ஒப்பந்தத்தில் முறைகேடு இல்லை எனக்கூறி தள்ளுபடி செய்தது. இந்நிலையில், வழக்கறிஞர் எம்.எல்.ஷர்மா என்பவர் தாக்கல் செய்த பொதுநல மனு தலைமை நீதிபதி யு.யு.லலித், நீதிபதி … Read more

டெல்லி விவசாயிகள் போராட்டத்தில் வெளிநாட்டு சதி இருப்பதாக கற்பனை செய்ய வேண்டாம்: என்ஐஏ விசாரணை கோரிய மனு தள்ளுபடி

புதுடெல்லி: விவசாயிகள் போராட்டம் தொடர்பான பின்னணியை ஆராய என்ஐஏ விசாரணைக்கு உத்தரவிடக் கோரிய மனுவை உச்சநீதிமன்றம் தள்ளுபடி செய்தது. ஒன்றிய அரசு கொண்டு வந்த புதிய வேளாண் சட்டங்களை எதிர்த்து டெல்லியில் விவசாயிகள் ஓராண்டாக போராட்டம் நடத்தினர். அந்த போராட்டமானது, சில இடங்களில் வன்முறையாகவும் மாறியது. இந்த விவகாரம் தொடர்பாக உச்சநீதிமன்றத்தில் ரமேஷ் என்பவர் தாக்கல் செய்த மனுவில், ‘டெல்லியில் நடந்த விவசாயிகள் போராட்டத்தின் பின்னணியில் வெளிநாட்டு சதி உள்ளது. அந்நிய நாடுகளில் இருந்து சட்டவிரோதமான முறையில் … Read more

செப். 5ம் தேதிக்கு வழக்கு ஒத்திவைப்பு ஹிஜாப் தடை விவகாரத்தில் கர்நாடக அரசுக்கு நோட்டீஸ்

புதுடெல்லி: ஹிஜாப் வழக்கை வரும் செப். 5ம் தேதிக்கு ஒத்திவைத்த உச்சநீதிமன்றம், நேரடியாக வாதம் செய்வதற்காக கர்நாடக அரசுக்கு நோட்டீஸ் பிறப்பித்துள்ளது. கர்நாடகாவில் கடந்த பிப்ரவரியில், கல்லூரிகளில் மாணவிகள் ஹிஜாப் அணிய தடை விதிக்கப்பட்டது. இதற்கு எதிராக தொடுத்த வழக்கை விசாரித்த கர்நாடக உயர் நீதிமன்றம், ‘ஹிஜாப் இஸ்லாமிய சட்டத்தில் அத்தியாவசியமான வழக்கம் அல்ல. எனவே கல்வி நிலைய‌ங்களில் ஹிஜாப் அணிய விதிக்கப்பட்ட தடை செல்லும்’ என்று தீர்ப்பு வழங்கியது. இந்த தீர்ப்பை எதிர்த்து மாணவிகள் 6 … Read more

குலாம் நபி ஆசாத் பேட்டி: காங்.கில் இருந்து வெளியேற கட்டாயப்படுத்தப்பட்டேன்

புதுடெல்லி:காங்கிரஸ் கட்சியில் இருந்து வெளியேற கட்டாயப்படுத்தப்பட்டேன்’ என குலாம் நபி ஆசாத் பேசி உள்ளார்.காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவரான குலாம் நபி ஆசாத் கடந்த வெள்ளியன்று திடீரென கட்சியில் இருந்து விலகினார். அவர், கட்சித் தலைவர் சோனியா காந்திக்கு அனுப்பிய விலகல் கடிதத்தில் ராகுலை கடுமையாக விமர்சித்திருந்தார். இதனால், காங்கிரசின் மற்ற மூத்த தலைவர்கள் குலாம் நபி ஆசாத்தை கடுமையாக தாக்கி கருத்துக்களை வெளியிட்டனர். பாஜ பக்கம் ஆசாத் சாய்ந்து விட்டதாக கூறினர். இதுதொடர்பாக முதல் முறையாக … Read more

சட்டவிரோத கட்டுமானம் தகர்ப்பு.! 9 விநாடிகளில்…!

விதிகளை மீறிக் கட்டப்பட்ட நொய்டாவின் இரட்டை கோபுர கட்டிடங்கள் வெடி வைத்துத் தகர்க்கப்பட்டதில் 10 நொடிகளுக்குள் அது கல் மற்றும் மண்குவியலாக மாறியது. டெல்லியை அடுத்த உத்தரப்பிரதேச மாநிலத்தின் நொய்டா நகரில் சூப்பர்டெக் நிறுவனம் கட்டிய எமரால்ட் என்ற குடியிருப்பு வளாகத்திற்குள் சுமார் 500 கோடி ரூபாய் செலவில் 32 மற்றும் 29 மாடிகளைக் கொண்டு இரட்டைக் கோபுர கட்டங்களில் 900க்கும் அதிகமான ஃபிளாட்டுகள் வரை கட்டப்பட்டன. 2012 ஆம் ஆண்டு அனுமதிக்கப்பட்ட 14 மாடிகளை 40 … Read more

மாநில ஏற்றத்தாழ்வுகளை அகற்ற 5 தலைநகரங்கள் அமைக்கலாமா?: அசாம் முதல்வர் கேள்வி

கவுகாத்தி: பிராந்திய ஏற்றத்தாழ்வுகளை களைய நாட்டின் ஒவ்வொரு மண்டலத்துக்கும் ஒன்று என 5 தலைநகரங்கள் அமைக்கலாமா என்று டெல்லி முதல்வர் கெஜ்ரிவாலுக்கு, அசாம் முதல்வர் ஹிமந்தா பிஸ்வா சர்மா கேள்வி கேட்டுள்ளார்.ஆம் ஆத்மி தலைவரும் டெல்லி முதல்வர் கெஜ்ரிவால், பாஜவை சேர்ந்த அசாம் மாநில முதல்வர் ஹிமந்தா பிஸ்வா சர்மாவுக்கும் இடையே  அரசு பள்ளிகள் தொடர்பாக  டிவிட்டரில் கருத்து மோதல் வலுத்து வருகிறது. அசாமில் மோசமான முடிவுகள் காரணமாக அந்த மாநில அரசு 34 பள்ளிகளை மூடியதாக … Read more

“2024ல் பாஜகவை ஆட்சியில் இருந்து அகற்றுவதே எனது கடைசிப் போராட்டமாக இருக்கும்” – மம்தா பானர்ஜி

கொல்கத்தா: 2024ல் மத்தியில் ஆட்சியில் இருந்து பாஜகவை வெளியேற்றுவதுதான் எனது கடைசி போராட்டமாக இருக்கும் என்றும் மேற்குவங்க முதல்வர் மம்தா பானர்ஜி தெரிவித்துள்ளார். பேரணி ஒன்றில் கலந்துகொண்ட மம்தா, “2024 நாடாளுமன்றத் தேர்தலில் பாஜக தோற்கடிக்கப்பட வேண்டும். மத்தியில் காவி கட்சியை ஆட்சியில் இருந்து அகற்றுவதற்கான போராட்டமே எனது கடைசிப் போராட்டம். பாஜகவை ஆட்சியில் இருந்து அகற்றுவேன் என்று நான் உறுதியளிக்கிறேன். எப்படியும் பாஜகவை தோற்கடிக்க வேண்டும். மேற்கு வங்கத்தை காப்பாற்றுவதே எங்களின் முதல் போராட்டம். எங்களை … Read more

செப். 3வது வாரத்தில் நீட்-பிஜி கவுன்சலிங்: ஒன்றிய அரசு அறிவிப்பு

புதுடெல்லி: முதுகலை மருத்துவ படிப்புகளுக்கான கவுன்சிலங், செப்டம்பர் 3வது வாரத்தில் நடக்கும் என்று ஒன்றிய சுகாதார அமைச்சகம் தெரிவித்துள்ளது. முதுகலை மருத்துவ படிப்புக்கான தேசிய தகுதி மற்றும் நுழைவுத் தேர்வு (நீட்-பிஜி) ஜனவரியில் நடத்தப்பட்டு, மார்ச் மாதத்தில் கவுன்சிலிங் தொடங்கும். ஆனால் கொரோனா தொற்று மற்றும் கடந்த ஆண்டு சேர்க்கை செயல்முறை தாமதம் காரணமாக, இந்த ஆண்டு தேர்வு கடந்த மே 21 அன்று நடத்தப்பட்டு ஜூன் 1 அன்று முடிவுகள் அறிவிக்கப்பட்டன. அதன்படி, செப்.1ம் தேதி … Read more

திருமலையில் பக்தர்கள் அறை முன்பதிவு ஆன்லைனில் இன்று வெளியீடு

ராஞ்சி: ஜார்க்கண்ட் முதல்வர் ஹேமந்த் சோரனின்  பதவி பறிப்பு குறித்து முடிவெடுப்பதில்  ஆளுனர் தாமதப்படுத்துவதால் குதிரை பேரம் நடக்க வாய்ப்பு உள்ளது என்று ஐமு கூட்டணி கட்சிகள்  அச்சம் தெரிவித்துள்ளன. சுரங்க ஒதுக்கீடு ஊழல் குற்றச்சாட்டு தொடர்பாக ஜார்க்கண்ட் முக்தி மோர்ச்சா(ஜேஎம்எம்) தலைவரும், முதல்வருமான ஹேமந்த் சோரனை எம்எல்ஏ பதவியிலிருந்து தகுதி நீக்கம் செய்ய ஆளுநருக்கு தேர்தல் ஆணையம் பரிந்துரை செய்துள்ளது.  இதனால், சோரனின்  பதவிக்கு நெருக்கடி ஏற்பட்டுள்ளது. ஆளுனர் தனது முடிவை நேற்று (திங்கள்கிழமை) அறிவிப்பார் … Read more