சபரிமலை கோயிலில் தங்க கூரை சீரமைப்பு பணி இன்று துவக்கம்

திருவனந்தபுரம்: சபரிமலை கோயில் தங்க மேற்கூரையில் ஏற்பட்டுள்ள நீர்க்கசிவை சீரமைக்கும் பணிகள் இன்று தொடங்குகிறது. சபரிமலை  ஐயப்பன் கோயில் தங்க மேற்கூரையிலிருந்து நீர்க்கசிவு ஏற்பட்டது  சமீபத்தில் கண்டுபிடிக்கப்பட்டது. இதையடுத்து சீரமைப்புப் பணிகளை தொடங்க  திருவிதாங்கூர் தேவசம் போர்டு நடவடிக்கை எடுத்தது. கூரை முழுவதும்  தங்கத் தகடுகள் வேயப்பட்டிருப்பதால் சபரிமலை கோயில் தங்க கொடிமரத்திற்கான  பணிகளை மேற்கொண்ட தலைமை சிற்பி பழனி ஆசாரியை வரவழைத்து நீர்க்கசிவு  எங்கிருந்து வருகிறது என கண்டுபிடிக்க தீர்மானிக்கப்பட்டது. அதன்படி கடந்த  3ம்தேதி தலைமை சிற்பி … Read more

சிறு தானிய உற்பத்தியை அதிகரிக்க வேண்டும்: ‘மனதின் குரல்’ நிகழ்ச்சியில் விவசாயிகளுக்கு பிரதமர் மோடி வேண்டுகோள்

புதுடெல்லி: உலகம் முழுவதும் சிறுதானியங்களின் மீதான ஆர்வம் அதிகரித்து வருகிறது. எனவே சிறு தானிய உற்பத்தியை விவசாயிகள் அதிகரிக்க வேண்டும்என ‘மனதின் குரல்’ நிகழ்ச்சியில் பிரதமர் நரேந்திர மோடி வேண்டுகோள் விடுத்துள்ளார். பிரதமர் நரேந்திர மோடி ஒவ்வொரு மாதமும் கடைசி ஞாயிற்றுக்கிழமையில் ‘மனதின் குரல்’ (மன் கி பாத்) என்ற தலைப்பில் வானொலியில் உரையாற்றி வருகிறார். அதன்படி, 92-வது ‘மனதின் குரல்’ நிகழ்ச்சியில் பிரதமர் மோடி நேற்று பேசியதாவது: சில நாட்களுக்கு முன்பு தகவல் ஒலிபரப்பு அமைச்சகத்தின் … Read more

கேரள மார்க்சிஸ்ட் புதிய செயலாளர் கோவிந்தன்

திருவனந்தபுரம்: கேரள மாநில மார்க்சிஸ்ட் செயலாளராக கடந்த 2015ம் ஆண்டு கோடியேரி பாலகிருஷ்ணன் நியமிக்கப்பட்டார். இந்நிலையில், இவருக்கு புற்றுநோய் பாதிப்பு ஏற்பட்டதை தொடர்ந்து பதவி விலக தீர்மானித்தார். இதையடுத்து, புதிய மாநில செயலாளரை தேர்வு செய்வதற்காக மாநில கமிட்டி கூட்டம் நேற்று திருவனந்தபுரத்தில் நடைபெற்றது. இதில் புதிய செயலாளராக உள்துறை அமைச்சரான கோவிந்தனை நியமிக்க முடிவு செய்யப்பட்டது.  ஏற்கனவே, இந்திய அரசியலமைப்பு சட்டம் குறித்து சர்ச்சை கருத்துக்களை தெரிவித்ததை தொடர்ந்து மீன்வளத்துறை அமைச்சர் சஜி செரியான் ராஜினாமா … Read more

நிதிஷிடம் கூட்டணிகள் நிர்பந்தம் சிபிஐ.க்கு முன் அனுமதி பீகாரில் விரைவில் ரத்து

பாட்னா: சிபிஐ விசாரணைக்கு அளிக்கும் முன் அனுமதியை ரத்து செய்யும்படி பீகார் முதல்வர் நிதிஷ்  குமாரை, கூட்டணி கட்சித் தலைவர்கள் வலியுறுத்தி உள்ளனர்.குற்ற சம்பவங்கள் தொடர்பாக மாநிலங்களுக்குள் சென்று சோதனை நடத்தவோ, கைதுகள் செய்யவோ, அந்த மாநில அரசின் பொது அனுமதியை சிபிஐ பெற வேண்டும் என்பது கட்டாயம். ஆனால், சிபிஐ.யை தங்களுக்கு எதிராக  ஒன்றிய அரசு துஷ்பிரயோகம்  செய்து வருவதாக எதிர்க்கட்சிகள் குற்றம்சாட்டி வருகின்றன. இதன் காரணமாக, எதிர்க்கட்சிகள் ஆட்சி செய்யும் மேற்கு வங்கம், சட்டீஸ்கர், … Read more

மனைவியுடன் தகாத உறவு வைத்திருந்ததாக இளைஞரை கொலை செய்த கணவன்

கேரளாவின் எர்ணாகுளத்தில் மனைவியுடன் தகாத உறவை வைத்திருந்ததாக இளைஞரை கொலை செய்த கணவனை சிசிவிடி காட்சிகளை வைத்து போலீசார் கைது செய்தனர். பாலக்காடு பகுதியை சேர்ந்த சுரேஷ் என்பவரது மனைவிக்கும், அதே பகுதியை சேர்ந்த அஜய் என்பவருக்கும் இடையே தகாத உறவு இருந்து வந்ததாக கூறப்படுகிறது. இதனால், சுரேஷ் – அஜய் இடையே அடிக்கடி பிரச்னை ஏற்பட்டு முன்விரோதம் இருந்ததாகவும் தெரிகிறது. இந்நிலையில், எர்ணாகுளம் நெட்டூர் பகுதியில் விடுதியில் வாடகை அறை எடுத்து தங்கி வேலை பார்த்து … Read more

நடிகை சோனாலி கொலை: 3 பேருக்கு 5 நாள் காவல்

பனாஜி: அரியானா மாநிலத்தை சேர்ந்த நடிகை சோனாலி, நண்பர்களுடன் கோவா சென்றபோது கடந்த 22ம் தேதி இரவு மர்மமான முறையில் மரணமடைந்தார். மாரடைப்பால் இறந்ததாக கூறப்பட்டது. ஆனால், அவரது சாவில் மர்மம் இருப்பதாக சோனாலியின் சகோதரர் புகார் அளித்தார். இதைத் தொடர்ந்து சோனாலியின் தனி உதவியாளர் சுதிர் சக்வான், சுக்விந்தர் சிங், கர்லிஸ் ஓட்டல் உரிமையாளர் எட்வின் நன்ஸ் கைது செய்யப்பட்டனர். சோனாலிக்கு போதைப்பொருள் விநியோகித்த ராம்தாஸ் மண்ட்ரேகர், தத்தாபிரசாத் கோயங்கரை போலீசார் கைது செய்தனர். இதுவரை … Read more

த்ரிஷ்யம் 3-ம் பாகம்; உறுதிப்படுத்திய மோகன்லால்

திருவனந்தபுரம்: ஜீத்து ஜோசப் இயக்கத்தில் மோகன்லால் நடித்த த்ரிஷ்யம் படம் 2013ம் ஆண்டு வெளியானது. பேமிலி த்ரில்லர் பாணியில் உருவான இந்த படத்தில் மீனா, எஸ்தர் அலி, ஆஷா சரத், அன்சிபா ஹசன் நடித்திருந்தார்கள். கேரளாவில் முதன் முறையாக 100 கோடி வசூலித்த படம் இது. தமிழ், தெலுங்கு, கன்னடம், இந்தி மொழிகளில் ரீமேக் ஆனது. அதற்கு பிறகு இந்த படத்தின் 2ம் பாகம் கடந்த ஆண்டு ஓடிடி தளத்தில் வெளியானது. அதுவும் நல்ல வரவேற்பை பெற்றது. … Read more

யுனெஸ்கோ பட்டியலில் கர்பா நடனமும் சேர்ப்பு: ஒன்றிய அரசு பரிந்துரை

புதுடெல்லி: யுனெஸ்கோவின் கலாசார பாரம்பரிய பட்டியலில் கர்பா நடனத்தை சேர்ப்பதற்கு ஒன்றிய அரசு பரிந்துரைத்துள்ளதாக ஐநா அதிகாரி தெரிவித்தார்.ஐக்கிய நாடுகள் கல்வி, அறிவியல் மற்றும் பண்பாட்டு அமைப்பு (யுனெஸ்கோ), ஐநா அவையின் முக்கிய துணை நிறுவனங்களில் ஒன்று. இந்நிறுவனம், இதன் உறுப்பு நாடுகளிடையே கல்வி, அறிவியல், பண்பாடு மற்றும் தொடர்புத் துறைகளில் ஒத்துழைப்பை ஊக்குவித்து வருகிறது. கொல்கத்தாவில் மிகவும் சிறப்புடன் கொண்டாடப்படும்  துர்கா பூஜை விழாவை  கலாசார பாரம்பரிய நிகழ்வுகள் பட்டியலில் கடந்தாண்டு யுனெஸ்கோ இணைத்தது. இது … Read more

6 ஆண்டு தண்டனை குற்றத்துக்கு தடயவியல் விசாரணை சோதனை கட்டாயம்: ஒன்றிய உள்துறை அமைச்சர் தகவல்

காந்திநகர் : ஆறு ஆண்டுகளுக்கும் மேலான தண்டனை பெறக் கூடிய குற்றங்களுக்கு தடயவியல் சோதனை கட்டாயமாக்கப்படும்,’ என்று ஒன்றிய உள்துறை அமைச்சர் அமித்ஷா கூறினார்.குஜராத் மாநிலம், காந்திநகரில் உள்ள  தேசிய தடயவில் பல்கலைக் கழகத்தில் நடந்த பட்டமளிப்பு விழாவில் ஒன்றிய உள்துறை அமைச்சர் அமித்ஷா கலந்து கொண்டார். அதில் அவர் பேசியதாவது: குற்றவியல் நீதி அமைப்புடன் தடயவியல் துறை இணைக்கப்படும்.  6 ஆண்டுகளுக்கும் மேலான தண்டனை பெறக் கூடிய குற்றங்களுக்கு தடயவியல் சோதனையும், விசாரணையும் கட்டாயமாக்கப்படும். இதற்காக, … Read more

டெல்லியில் புதிதாக கட்டப்படும் நாடாளுமன்ற பிரதான கட்டிட பணி முடிந்தது; டாடா நிறுவனம் தகவல்

புதுடெல்லி: நாடாளுமன்ற கட்டிடத்தின் முக்கிய பணிகள் அனைத்தும் முடிந்து விட்டது என்றும்  தற்போது உள் அலங்காரப் பணிகள் நடைபெற்று வருகிறது என்றும் டாடா புராஜக்ட்ஸ் நிறுவனத்தின் தலைமை நிர்வாக அதிகாரி வினாயக் பை தெரிவித்தார். டெல்லியில் தற்போதுள்ள நாடாளுமன்ற கட்டிடத்துக்கு பதிலாக, பிரமாண்டமான முறையில் புதிய நாடாளுமன்றம் கட்டிடம் கட்டுவதற்கு, கடந்த 2020ம் ஆண்டு டிசம்பர் 10-ம் தேதி பிரதமர்  மோடி அடிக்கல் நாட்டினார். இதில் எம்பி.க்கள், பார்வையாளர்களுக்கு நவீன வசதிகள் இடம் பெறுகின்றன. ஒன்றிய  அமைச்சர்கள் … Read more