சில நிறுவனங்களின் காப்புரிமை காலாவதியாவதால் 45 வகை மருந்துகளின் விலை மாற்றியமைப்பு; தேசிய மருந்து விலை நிர்ணய ஆணையம் தகவல்
புதுடெல்லி: சில நிறுவனங்களின் காப்புரிமை காலாவதியாவதால் சர்க்கரை நோய் உள்ளிட்ட நோய்களுக்கான 45 வகை மருந்துகளின் விலையை தேசிய மருந்து விலை நிர்ணய ஆணையம் மாற்றியமைத்துள்ளது. தேசிய மருந்து விலை நிர்ணய ஆணையம் (என்பிபிஏ), நாடு முழுவதும் மருந்து விலைக் கட்டுப்பாட்டு ஆணை-2013-ன்படி சர்க்கரை நோய் உள்ளிட்ட பல்வேறு நோய்களுக்கு சிகிச்சை அளிக்க பயன்படுத்தப்படும் 45 வகையான மருந்துகளின் சில்லறை விலையை மாற்றி அமைத்துள்ளது. இதுதொடர்பாக வெளியிடப்பட்ட அறிக்கையில், ‘சர்க்கரை நோய், ரத்த அழுத்தம், ஜலதோஷம், நோய்த்தொற்றுகள், … Read more