காங்கிஸுக்கு வெறும் கைப்பாவை தலைவர் தேவையில்லை: மூத்த தலைவர் பிருதிவிராஜ் சவான் கருத்து
காங்கிரஸ் கட்சிக்கு ஒரு கைப்பாவை தலைவர் தேவையில்லை. தொண்டர்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட உண்மையான தலைவரே தேவை என்று கூறியுள்ளார் மூத்த தலைவர் பிருதிவிராஜ் சவான். காங்கிரஸ் கட்சியிலிருந்து விலகுவதாக குலாம் நபி ஆசாத் நேற்று அறிவித்தார். இதனை ஒட்டி செய்தியாளர்களை சந்தித்த பிருதிவிராஜ் சவான், “காங்கிரஸ் காரிய கமிட்டியில் வெறும் துதிபாடுவோர்கள் மட்டுமே இருந்தால் எந்த ஒரு முடிவும் எடுக்க முடியாது. காங்கிரஸ் தலைவருக்கு அவர்களால் சரியான அறிவுரையை வழங்கமுடியாது. வெத்து குற்றச்சாட்டுகளை முன்வைப்பதைவிட உள்ளார்ந்து சிந்திக்க வேண்டும். … Read more