குலாம் நபி ஆசாத்தின் விலகல் வேதனையளிக்கிறது: உமர் அப்துல்லா ட்வீட்

ஸ்ரீநகர்: சமீபகாலமாக காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர்கள் ராஜினாமா செய்து வரும் நிலையில் குலாம் நபி ஆசாத்தின் விலகல் வேதனையளிக்கிறது என ஜம்மு-காஷ்மீர் முன்னாள் முதலமைச்சர் உமர் அப்துல்லா தெரிவித்துள்ளார். இந்தியாவின் மிகப்பெரிய,பழமையான கட்சி நிலைகுலைவதை பார்ப்பதற்கு கவலையாகவும், பயமாகவும் உள்ளது எனவும் குறிப்பிட்டுள்ளார்.

இலவசங்கள் வழங்க தடை கோரி வழக்கு 3 நீதிபதிகள் அமர்வுக்கு மாற்றம்: ஓய்வு பெறும் நாளில் உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி ரமணா உத்தரவு

புதுடெல்லி: உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி ரமணா நேற்றுடன் ஓய்வு பெற்றார். தனது கடைசி நாள் பணியில், தேர்தல் இலவசங்கள் வழங்க தடை கோரிய வழக்கை 3 நீதிபதிகள் அமர்வுக்கு அவர் மாற்றினார். தேர்தலின் போதும், அதற்குப் பிறகும் அரசியல் கட்சிகள் இலவசங்களை வழங்க தடை விதிக்கக் கோரி, வழக்கறிஞர் அஸ்வினி உபாத்யாய் உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார். இவ்வாறு வழங்கப்படும் இலவசங்கள், மக்களுக்கு வாழ்க்கையை உயர்த்தும் நலத்திட்டங்களே என்பதால் தடை விதிக்கக் கூடாது என திமுக, … Read more

பிரபலமான உலகத் தலைவர்கள்.. பைடனை பின்னுக்கு தள்ளி முதலிடத்தில் பிரதமர் மோடி!

பிரபலமான உலகத் தலைவர்கள் வரிசையில் இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி முதலிடம் பிடித்துள்ளார். ஆஸ்திரேலியா, ஆஸ்திரியா, அமெரிக்கா, பிரிட்டன், ஜப்பான் உள்ளிட்ட 22 நாடுகளின் தலைவர்களின் செயல்பாடுகள் குறித்து, அமெரிக்காவை தலைமையிடமாகக் கொண்ட MORNING CONSULT என்ற அமைப்பு ஆய்வு நடத்தியது. ஆகஸ்ட் 17 முதல் 23 வரையிலான ஒருவார காலத்தில் எடுத்த ஆய்வு முடிவுகளை அந்த அமைப்பு வெளியிட்டுள்ளது. அதன்படி, இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி 75 சதவிகித ஆதரவுடன், பிரபலமான தலைவர்கள் பட்டியலில் முதலிடத்தைப் பிடித்துள்ளார். மெக்சிகோ அதிபர் ஆன்ட்ரஸ் மானுவேல் லோபெஸ் ஆப்ரடார் (ANDRES MANUEL LOPEZ OBRADOR) 63 சதவிகிதத்துடன் … Read more

மனைவி, மகனை துப்பாக்கியால் சுட்டுக் கொன்றுவிட்டு தொழிலதிபர் தற்கொலை: உத்தரபிரதேசத்தில் பயங்கரம்

அவுரையா: உத்தரபிரதேசத்தில் மனைவி, மகனை துப்பாக்கியால் சுட்டுக் கொன்றுவிட்டு தொழிலதிபர் துப்பாக்கியால் சுட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. உத்தரபிரதேச மாநிலம் அவுரையாவை சேர்ந்த உரக்கடை உரிமையாளர் சந்தீப் போர்வால் (52), அவரது மனைவி மீரா போர்வால் (48) மகன் சிவம் போர்வால் (26) ஆகிய மூன்று பேரும் தங்களது மேல்மாடியில் இருந்தனர். நீண்ட நேரமாகியும் வீட்டிற்குள் இருப்பவர்களை தொடர்பு கொள்ள முடியாததால், அப்பகுதியினர் போலீசுக்கு தகவல் கொடுத்தனர். சம்பவ இடத்திற்கு வந்த … Read more

பஞ்சாபி பாடலுக்கு ஒரே நேரத்தில் நடனமாடிய இந்தியா – பாக். ராணுவ வீரர்கள் – வைரல் வீடியோ

மறைந்த பஞ்சாபி பாடகர் சித்து மூஸ்வாலாவின் பாடலுக்கு இந்தியா – பாகிஸ்தான் ராணுவ வீரர்கள் இணைந்து நடனமாடிய வீடியோ சமூக வலைத்தளங்களில் வேகமாக பரவிவருகிறது. பஞ்சாபி பாடகர்கள் சித்து மூஸ்வாலா மற்றும் அம்ரீத் மான் ஆகிய இருவரும் சேர்ந்து பாடிய ‘பாம்பிஹா போலே’ என்ற பாடலுக்கு இந்தியா – பாகிஸ்தான் ராணுவ வீரர்கள் இணைந்து நடனமாடிய வீடியோ தற்போது நெட்டிசன்களை வெகுவாக கவர்ந்து வருகிறது. எல்லைக் கட்டுப்பாட்டுக் கோட்டில் எடுக்கப்பட்ட இந்த வீடியோவை டெல்லி காவல்துறை அதிகாரி … Read more

போலி பல்கலைக்கழங்கள் பட்டியலை அறிவித்த யுஜிசி…!- ஓர் அதிர்ச்சி ரிப்போர்ட்..!

இந்தியாவில் பல்வேறு பல்கலைகழகங்கள் செயல்பட்டு வருகின்றன. இந்த நிலையில் நாட்டில் 21 போலிபல்கலைக்கழகங்கள்இருப்பதாகபல்கலைக்கழக மானியக்குழு அறிவித்துள்ளது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இந்தியாவில் உயர்கல்வி நிறுவனங்கள் அனைத்தும் பல்கலைக்கழக மானியக்குழுவின் கீழ் செயல்பட்டு வருகின்றன.நாட்டில் உள்ளசுயநிதிக் கல்லூரிகள் தவிர பிற கல்லூரிகள் அனைத்தும்பல்கலைக்கழகங்களின் கட்டுப்பாட்டில் இயங்குகின்றன. அந்த வகையில் கடந்த ஆண்டு நிலவரங்களின் படி இந்தியாவில் , 54 மத்திய பல்கலைக்கழகங்கள், 425 மாநிலப் பல்கலைக்கழகங்கள், 125 நிகர்நிலைப் பல்கலைக்கழகங்கள் , 380 தனியார் பல்கலைக்கழகங்கள் என மொத்தம் … Read more

ஒரே நாடு, ஒரே உரம் திட்டம்: உர மூட்டையில் ‘பாரத்’ பெயர் கட்டாயம்

புதுடெல்லி: ஒரே நாடு, ஒரே உரம் என்ற அடிப்படையில் உர மூட்டையில் பாரத் என்ற பெயர் கட்டாயம் இடம் பெற்றிருக்க வேண்டும் என்று ஒன்றிய அரசு உத்தரவிட்டுள்ளதால் உர தயாரிப்பாளர்கள் கடும் எதிர்ப்பை தெரிவித்து வருகின்றனர். ஒன்றிய அரசின் உரத்துறை அமைச்சகம் வெளியிட்ட அறிவிப்பில், ‘நாடு முழுவதும் உரம் உற்பத்தி செய்யும் நிறுவனங்கள், ‘பாரத்’ என்ற பொதுவான பெயரிலேயே உரத்தை விற்பனை செய்ய வேண்டும். பேக்கிங்கில் தங்களது நிறுவனத்தின் பெயரை எங்காவது ஓரிடத்தில் பிரிண்ட் செய்யலாம். யூரியாவாக … Read more

‘அப்படியே காலில் விழுந்துடுவோம்’ – ஓட்டுக்காக படுத்தேவிட்ட மாணவர்கள்.. வைரலாகும் வீடியோ

ராஜஸ்தானில் கல்லூரி மாணவர் சங்கத் தேர்தலில் போட்டியிடும் மாணவர்கள், மாணவிகளின் காலில் விழுந்து ஓட்டு சேகரிக்கும் வீடியோ வெளியாகி வைரலாகி வருகிறது. ராஜஸ்தான் மாநிலம் பாரன், பாரத்பூர் மாவட்ங்களில் தான் இந்த சம்பவம் நிகழ்ந்துள்ளது. அங்குள்ள கல்லூரி, பல்கலைக்கழகங்களில் கொரோனா தொற்று காரணமாக கடந்த இரு ஆண்டுகளாக மாணவர் சங்க தேர்தல் நiடபெறவில்லை. தற்போது கல்லூரிகளில் நேரடி வகுப்புகள் நடைபெற்று வருகின்றன. இந்நிலையில் அம்மாநிலத்தில் கல்லூரி, பல்கலைகழகங்களில் மாணவர் சங்க தேர்தல் நடத்த நிர்வாகம் அனுமதி அளித்துள்ளது. … Read more

அரசியல் கட்சிகள் தேர்தல் பரப்புரையில் இலவசங்களை அறிவிப்பதற்கு தடை விதிக்க சுப்ரீம் கோர்ட் மறுப்பு: வழக்கு விசாரணை 3 நீதிபதிகள் அமர்வுக்கு மாற்றம்..!!

டெல்லி: அரசியல் கட்சிகள் தேர்தல் பரப்புரையில் இலவசங்களை அறிவிப்பதற்கு தடை விதிக்க மறுத்துவிட்ட உச்சநீதிமன்றம், வழக்கு விசாரணையை 3 நீதிபதிகள் அமர்வுக்கு மாற்றி உத்தரவிட்டுள்ளது. தேர்தல் பிரச்சாரத்தின் போது அரசியல் கட்சிகள், இலவச அறிவிப்புகளை வெளியிட அனுமதிக்கக்கூடாது என்று தேர்தல் ஆணையத்திற்கு உத்தரவிடக்கோரி வழக்கறிஞரும், பாஜக பிரமுகருமான அஷ்வினி உபாத்யாய் உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்திருந்தார். மாநில பொருளாதாரத்தில் நிதியின் தாக்கம் குறித்த எந்த மதிப்பீடும் இல்லாமல் வெறும் வாக்கு வங்கியை கவர வேண்டும் என்ற நோக்கில் இலவச … Read more

முதல்வர் பிறப்பித்த அதிரடி உத்தரவு… இனி எல்லாமே தெலுங்கில்தான்!

‘பள்ளி, கல்லுாரி மாணவர்கள் தமிழில் தங்களது பெயரை எழுதும்போது அவர்களின் இனிஷியலையும் தமிழில் எழுதும் நடைமுறையை கொண்டுவர வேண்டும்.. அத்துடன் பள்ளியில் மாணவ்ர் சேர்க்கை விண்ணப்பம், வருகை பதிவேடு, பள்ளி மற்றும் கல்லுாரி படிப்பை முடித்ததும் பெறப்படும் சான்றிதழ்கள் என அனைத்தும் மாணவர்களின் தமிழ் முன் எழுத்தில் இருக்கும் நடைமுறையை செயல்படுத்த வேண்டும்’ என தொடக்க கல்வி இயக்குநரகம் அனைத்து பள்ளிகளின் ஆசிரியர்களுக்கு அண்மையில் அறிவிப்பாணை அனுப்பி இருந்தது. தாய் மொழியான தமிழின் முக்கியத்துவத்தை மாணவர்களுக்கு உணர்த்தும் … Read more