குடியரசு துணைத் தலைவர் தேர்தல் எதிர்க்கட்சிகளின் பொதுவேட்பாளராக மார்கரெட் ஆல்வா அறிவிப்பு

டெல்லி: குடியரசு துணைத் தலைவர் தேர்தல் எதிர்க்கட்சிகளின் பொதுவேட்பாளராக மார்கரெட் ஆல்வா அறிவிக்கப்பட்டுள்ளார். காங்கிரஸ் கட்சி மூத்த தலைவர்களில் ஒருவரான மார்கரெட் ஆல்வா மத்திய அமைச்சராகவும், ஆளுநராகவும் பணியாற்றியுள்ளார்.

நிலச்சரிவில் மாட்டிக்கொண்ட மானசரோவர் யாத்திரை பக்தர்கள் – ஹெலிகாப்டர் மூலம் மீட்பு

கைலாஷ் மானசரோவர் யாத்திரைக்கு செல்லும் வழியில் நிலச்சரிவில் மாட்டிக்கொண்ட 40 பக்தர்கள் ஹெலிகாப்டர்கள் மூலம் பத்திரமாக மீட்கப்பட்டனர். இந்தியாவில் இருந்து ஆண்டுதோறும் ஜூன் மாதம் முதல் செப்டம்பர் வரை கைலாஷ் மானசரோவர் புனித யாத்திரை மேற்கொள்ளப்படுகிறது. இமயமலை உச்சியில் 19 ஆயிரம் அடி உயர மலை பகுதியை பக்தர்கள் நடை பயணமாக சென்று தரிசனம் செய்து வருகிறார்கள். கைலாஷ் மானசரோவருக்குச் செல்ல இரண்டு வழிகள் உள்ளன. உத்தரகண்ட் மாநிலத்தின் லிபுலேக் கணவாய், சிக்கமில் உள்ள நாது லா … Read more

விஜயவாடா: துபாயிலிருந்து வந்த சிறுமிக்கு குரங்கு அம்மை அறிகுறி: மருத்துவமனையில் சிகிச்சை

விஜயவாடா: . துபாயிலிருந்து விஜயவாடாவிற்கு வந்த ஒரு சிறுமிக்கு குரங்கு அம்மை அறிகுறி சந்தேகம் எழுந்துள்ளது. இதனை தொடர்ந்து  சிறுமியின் குடும்பத்தினர் தனிமப்படுத்தப்பட்டு, புனே ஆய்வகத்துக்கு மாதிரிகள் அனுப்பிவைக்கப்பட்டுள்ளது

குடியரசு தலைவர் தேர்தல் எப்படி நடக்கிறது? எம்எல்ஏக்களின் வாக்கு மதிப்பு என்ன? -முழு விவரம்

இந்தியாவின் 16-வது குடியரசுத் தலைவரை தேர்வு செய்வதற்கான தேர்தல் நாளை நாடு முழுவதும் நடைபெற உள்ள நிலையில் இதுவரை நடைபெற்ற தேர்தல்கள் மற்றும் தேர்தல்களில் வெற்றி பெற்றவர்கள் யார், யார் என்பது தொடர்பாக விரிவாக இந்த தொகுப்பில் பார்ப்போம். இந்திய குடியரசு தலைவரை மாநிலங்கள், யூனியன் பிரதேசங்களின் சட்டப்பேரவை உறுப்பினர்கள், மாநிலங்களவை உறுப்பினர்கள், மக்களவை உறுப்பினர்கள் வாக்களித்து தேர்வு செய்வது வழக்கம். இவர்கள் “எலக்ட்ரோரல் காலேஜ்” எனப்படும் வாக்காளர் குழுமம் என்று அழைக்கப்படுவார்கள். சில மாநிலங்களில் மேலவை … Read more

'சிங்கப்பூருக்கு போக அனுமதி கொடுங்க' – பிரதமர் மோடிக்கு முதல்வர் கெஜ்ரிவால் கடிதம்!

சிங்கப்பூர் நாட்டிற்கு செல்ல அனுமதி அளிக்கக் கோரி, பிரதமர் நரேந்திர மோடிக்கு, டெல்லி முதலமைச்சர் அரவிந்த் கெஜ்ரிவால் கடிதம் எழுதி உள்ளார். சிங்கப்பூர் நாட்டில் இம்மாத இறுதியில், உலக நகரங்கள் மாநாடு நடைபெற உள்ளது. இந்த மாநாட்டில் கலந்து கொள்ள வரும்படி, ஆம் ஆத்மி கட்சி தலைவரும், டெல்லி முதலமைச்சருமான அரவிந்த் கெஜ்ரிவாலுக்கு, கடந்த ஜூன் மாதம் அழைப்பு விடுக்கப்பட்டு இருந்தது. இதை ஏற்றுக் கொண்ட அரவிந்த் கெஜ்ரிவால், மாநாட்டில் கலந்து கொள்வதாக உறுதி அளித்து இருந்தார். … Read more

CUET நுழைவுத் தேர்வில் குழப்பம், மையங்கள் மாற்றப்பட்டதால் மாணவர்கள் அவதி

டெல்லி: நாடு முழுவதும் மத்திய பல்களை கழகங்களில் சேருவதற்க்காக CUET எனப்படும் பொது நுழைவு தேர்வு நடத்த படுகிறது. நீட் தேர்வுக்கு அடுத்தபடியாக நடத்தப்படும் நாட்டின் 2-வது பெரிய பொது நுழைவு தேர்வு இதுவாகும். 500 மையங்களில் சுமார் 8.30 லட்சம் பேர், இந்த தேர்வை எழுதுகிறார்கள். 12 வகுப்பு முடித்து கல்லூரி கனவுகளோடு  மத்திய பல்களைகழக படிப்புகளில் சேர விண்ணப்பித்தவர்களின் ஒரு பிரிவினருக்கு நேத்து முன்தினம் தேர்வு நடைபெற்றது. தேர்வு எழுதிவர்களின் பலருக்கு கடைசி நாள் … Read more

”கை தான் இல்லை.. ஆனா தன்னம்பிக்கை..” – பாவ் பாஜி விற்று ஊக்கமளிக்கும் மிதேஷ்.. யார் இவர்?

தன்னம்பிக்கை என்ற ஒன்று இருந்தால் போதும், எதையும் சாதிக்கும் பலம் வரும் என்பது ஒரு கையை இழந்த மிதேஷ் குப்தா என்பவரின் செயல் மூலம் நிரூபணமாகியிருக்கிறது. பிறந்தோம், இருந்தோம், இறந்தோம் என்பதற்கு பதில், இழப்பதற்கு இனி எதுவுமே இல்லை என நினைக்கும் வேளையில் இருப்பதை கொண்டு வாழ்ந்து காட்டி சாதனை படைப்போம் என்ற கோட்பாட்டை உறுதியாக கொண்டு தனது நாட்களை கடத்தி வருகிறார் மிதேஷ் குப்தா என்ற நபர். யார் இந்த மிதேஷ் குப்தா? என்பதை காணலாம். … Read more

நடிகர் சரத்குமார் குடும்பத்தில் புகுந்த கொரோனா !!

தமிழ், தெலுங்கு, மலையாளம் என தென்னிந்திய மொழிப் படங்களில் இவர் அடுத்தடுத்த படங்களில் நடித்து வருகிறார். இந்நிலையில் தனக்கு கொரோனா பாதித்துள்ளதாக அவர் தனது ட்விட்டர் பக்கத்தில் வீடியோ மூலம் தெரிவித்துள்ளார். நடிகை வரலட்சுமி சரத்குமார் தமிழ், தெலுங்கு உள்ளிட்ட தென்னிந்திய மொழி படங்களில் நடித்து வருகிறார். சிம்புவுடன் போடா போடி என்ற படத்தின் மூலம் தமிழ் திரையுலகில் அறிமுகமானார். இதையடுத்து விக்ரம் வேதா, தாரை தப்பட்டை, மாரி 2, சண்டக்கோழி 2, சர்தார் போன்ற படங்களில் … Read more

நாடு முழுவதும் இளநிலை மருத்துவப் படிப்புக்கான நீட் நுழைவுத் தேர்வு தொடங்கியது

டெல்லி:இளநிலை மருத்துவப் படிப்பில் சேருவதற்கான நீட் நுழைவுத் தேர்வு நாடு முழுவதும் தொடங்கியது. தமிழ், ஆங்கிலம், இந்தி உள்ளிட்ட 13 மொழிகளில் நீட் தேர்வு நடபெற்று வருகிறது. தமிழ் மொழியில் 31,803 பேர் உள்பட தமிழகத்தில் இருந்து 1,42,286 பேர் நீட் தேர்வு எழுதுகின்றனர்.

நாளை குடியரசுத் தலைவர் தேர்தல் – தமிழக தலைமைச் செயலகத்தில் ஏற்பாடுகள் தீவிரம்

குடியரசுத் தலைவர் நாளை நடைபெறவுள்ளதை முன்னிட்டு தமிழக தலைமைச் செயலகத்தில் இதற்கான ஏற்பாடுகள் மும்முரமாக நடைபெற்று வருகின்றன. இந்தியாவின் அடுத்த குடியரசுத் தலைவரை தேர்ந்தெடுப்பதற்கான தேர்தல் நாளை நடைபெறுகிறது. மத்தியில் ஆளும் பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணி சார்பில் திரவுபதி முர்மு குடியரசுத் தலைவர் வேட்பாளராக நிறுத்தப்பட்டுள்ளார். எதிர்க்கட்சிகள் தங்கள் தரப்பில் யஷ்வந்த் சின்ஹா வேட்பாளராக நிறுத்தப்பட்டிருக்கிறார். இந்த தேர்தலில் சட்டமன்ற, நாடாளுமன்ற உறுப்பினர்கள் வாக்களிக்க உள்ளனர். வாக்குப்பதிவுக்கு ஓட்டுசீட்டுகள் பயன்படுத்தப்படுகின்றன, நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கு பச்சை … Read more