கும்பகர்ணன் தூக்கம் போதும் பிளீஸ் கெட்அப்: ராகுல் காந்தி அறிவுரை

புதுடெல்லி: ‘வார்த்தை ஜால அரசியலை நிறுத்தி விட்டு பொருளாதார சீர்திருத்தங்களை உடனே செய்யுங்கள்,’ என ஒன்றிய அரசை ராகுல் காந்தி வலியுறுத்தி உள்ளார். காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி நேற்று பேஸ்புக்கில் வெளியிட்டுள்ள பதிவு வருமாறு: மோடி பிரதமராவதற்கு முன் இந்திய ரூபாயின் மதிப்பு குறித்து பல்வேறு பிரசாரங்களை செய்துள்ளார். ஆனால், அவர் பதவிக்கு வந்த பின் போலியான பாசாங்குதனத்தால் 75 ஆண்டுகளில் இல்லாத அளவு நாட்டை பின்னோக்கி தள்ளிவிட்டார். வரலாற்றில் இல்லாத அளவில், டாலருக்கு … Read more

ஜனாதிபதி தேர்தலை முன்னிட்டு கோவா காங்கிரஸ் எம்எல்ஏக்கள் திடீரென சென்னைக்கு மாற்றம்: அதிருப்தி கோஷ்டியினர் வரவில்லை

பனாஜி: ஜனாதிபதி தேர்தலையொட்டி, கோவா காங்கிரஸ் எம்எல்ஏக்கள் 5 பேர் திடீரென சென்னைக்கு அழைத்து வரப்பட்டு ரகசிய இடத்தில் தங்க வைக்கப்பட்டுள்ளனர். ஜனாதிபதி தேர்தல் நாளை நடக்க உள்ளது. இந்நிலையில், கோவா காங்கிரஸ் எம்எல்ஏக்கள் 5 பேர் நேற்று முன்தினம் இரவு சென்னைக்கு அழைத்து வரப்பட்டு, ரகசிய இடத்தில் தக்க வைக்கப்பட்டுள்ளனர். இதற்கான ஏற்பாடுகளை தமிழகத்தை சேர்ந்த மூத்த தலைவர் ஒருவர் ஏற்பாடு செய்துள்ளதாக தகவல் வெளியாகி இருக்கிறது. இது குறித்து கோவா மாநில காங்கிரஸ் மூத்த … Read more

சிரஞ்சீவி வீட்டில் ஆமிர் கான் படம் பிரீவியூ

ஐதராபாத்: தெலுங்கு நடிகர் சிரஞ்சீவியின் வீட்டில் பாலிவுட் நடிகர் ஆமிர் கான் தயாரித்து நடித்த இந்திப் படத்தின் பிரீவியூ நடந்தது. தற்போது அந்த போட்டோக்கள் வைரலாகியுள்ளது. இந்தியில் பிரமாண்டமாக உருவாகியுள்ள படம், ‘லால் சிங் சத்தா’. இது ‘பாரஸ்ட் கம்ப்’ என்ற நாவலைத்தழுவி, கடந்த 1994ல் அதே பெயரில் அமெரிக்காவில் வெளியான படத்தின் அடிப்படையில் உருவாக்கப்பட்டுள்ளது. நடிகர் அதுல் குல்கர்னி திரைக்கதை எழுத, அத்வைத் சந்தன் இயக்கியுள்ளார். கடந்த 2019ல் இப்படத்தின் ஷூட்டிங் தொடங்கப்பட்டது. ஆமிர் கான், … Read more

யாரையும் நான் திருமணம் செய்யவில்லை: சுஷ்மிதா சென் ஆவேசம்

மும்பை: நடிகை சுஷ்மிதா சென்னுக்கு 46 வயது ஆகிறது. ஆனால், இன்னும் அவர் திருமணம் செய்துகொள்ளவில்லை. இந்நிலையில், இந்திய கிரிக்கெட் வாரியத்தில் 470 கோடி ரூபாய் மோசடி செய்துவிட்டு, இந்தியாவில் இருந்து தப்பியோடி லண்டனில் வசித்து வரும் ஐபிஎல் முன்னாள் தலைவர் லலித் மோடி, சுஷ்மிதா சென்னுடன் டேட்டிங் செய்து வருவதாக தனது சமூக வலைத்தளத்தில் சில போட்டோக்களுடன் ஒரு பதிவு வெளியிட்டிருந்தார். அதில், ‘சுஷ்மிதா சென்னுடன் புதிய வாழ்க்கையை தொடங்கி இருக்கிறேன். நிலவில் இருப்பது போல் … Read more

தூத்துக்குடி அருகே காதல் ஜோடி விஷம் குடித்து தற்கொலை..!!

தூத்துக்குடி மாவட்டம் நாசரேத் அருகே உள்ள சின்னமாடன் குடியிருப்பு பகுதியில் வசித்து வரும் தாசன் என்பவரின் மகன் விஜய் (17). பனையேறும் தொழிலாளியான அவர், அதே ஊரைச் சேர்ந்த சுடலைமணி மகள் மேகலா (16) என்பவரை காதலித்து வந்துள்ளனர். இவர்களது காதலுக்கு இருவரது குடும்பத்தினரும் எதிர்ப்பு தெரிவித்தனர். இதனால் இவர்கள் இருவரும் பெற்றோர்களுக்கு தெரியாமல் சில மாதங்களுக்கு முன்பு ஊரைவிட்டு ஓடிப்போய் கோவிலில் தாலி கட்டி குடும்பம் நடத்தியுள்ளனர். இதனிடையே தனது மகளை காணவில்லை என பெண்ணின் … Read more

கடிதம் எழுதிவிட்டு மாணவி தற்கொலை!! அரியலூரில் பரபரப்பு..!!

தமிழ், இந்தி உள்ளிட்ட 13 மொழிகளில் நீட் தேர்வு நடைபெறும் நிலையில், 18.72 லட்சம் மாணவர்கள் நீட் தேர்வை எதிர்கொள்கின்றனர். நீட் தேர்வு நாளை நடைபெற உள்ள நிலையில், அரியலூர் ரயில்வே காலனியை சேர்ந்த நிஷாந்தி என்ற மாணவி தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டுள்ளார். அரியலூர் ரயில்வே ஸ்டேஷன் குடியிருப்பு பகுதியில் வசித்து வருபவர் நடராஜன். இவர் கடந்த 10 ஆண்டுகளாக வெளிநாட்டில் பணிபுரிந்து வருகிறார். இவரது மனைவி உமா. இவர்களுக்கு நிஷாந்தி என்ற மகளும் நிஷாந்த் … Read more

ஆந்திராவில் வெள்ளத்தால் தீவு போல் மாறிய கிராமம் – படகு சவாரி மூலம் திருமணம் செய்த தம்பதி

கோனசீமா: ஆந்திராவில் கனமழை காரணமாக மணப்பெண் படகு சவாரி செய்து திருமணம் முடித்து வீடியோ வைரலாகி வருகிறது. ஆந்திராவில் 36 ஆண்டுகளில் இல்லாத அளவு கனமழை பொழிந்து வருகிறது. இதனால் மாநிலத்தின் பல மாவட்டங்கள் நீரில் தத்தளிக்கின்றன. குறிப்பாக கோதாவரி ஆற்றின் நீர்மட்டம் நாளுக்கு நாள் அதிகரித்து வருவதால், மேற்கு கோதாவரி மற்றும் கோனாசீமா மாவட்டங்களில் உள்ள பல்லாயிரக்கணக்கான கிராமங்கள் வெள்ளத்தில் மூழ்கும் அபாயம் ஏற்பட்டுள்ளது. இதனிடையே, மாமிடிகுடுரு பகுதிக்கு அருகில் உள்ள பெடப்பட்டினம் கிராமத்தைச் சேர்ந்த … Read more

கர்நாடகாவில் கட்டுப்பாட்டை இழந்து ஆற்றில் விழுந்த கார்.. காருடன் தத்தளித்த ஓட்டுநர் பத்திரமாக மீட்பு..!

கர்நாடக மாநிலம் பெல்காம் மாவட்டத்தில் கட்டுப்பாட்டை இழந்து ஆற்றில் விழுந்த காரை, அதன் ஓட்டுநருடன் அப்பகுதி மக்கள் பத்திரமாக மீட்டனர். மகாராஷ்டிராவின் புனேவில் இருந்து வந்த வாடகை கார் ஒன்று, பெல்காம் அருகே வாடிக்கையாளர்களை இறக்கி விட்டு திரும்பியது. சிக்கோடி என்ற பகுதியை கார் கடந்த போது எதிர்பாராவிதமாக கட்டுப்பாட்டை இழந்து துத்கங்கா ஆற்றில் விழுந்தது. இதைக் கண்ட அப்பகுதி மக்கள், மீட்பு நடவடிக்கையை தொடங்கியபோது, அதன் ஓட்டுநர் காரின் மேல் அமர்ந்து கொண்டார். பின்னர், காரின் … Read more

30% ரசிகர்கள் மட்டுமே வந்து செல்வதால் ஆந்திராவில் 400 தியேட்டர்கள் மூடல்: உரிமையாளர்கள் அதிரடி முடிவு

திருமலை: ஆந்திராவில் தியேட்டர்களுக்கு 30 சதவீத ரசிகர்கள் மட்டுமே வந்து செல்வதால், உடனடி யாக 400 தியேட்டர்களை அதன் உரிமையாளர்கள்  மூடிவிட்டனர். இது திரையுலக வட்டாரத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.ஆந்திராவில் முதல்வர் ஜெகன் மோகன் தலைமையிலான அரசு மாநகராட்சி, நகராட்சி, பேரூராட்சி, பஞ்சாயத்து என்று, நகரவாரியாக சினிமா தியேட்டர்களில் டிக்கெட் விலையைக் குறைத்தது. பிறகு அதை ஏ, பி, சி என்று தரம் பிரித்து விலை நிர்ணயம் செய்தது. இதனால் வசூல் தொகை பெருமளவில் குறைந்ததால், தியேட்டர்களை … Read more

நாட்டின் முதல் குடிமகனால் என்ன செய்ய முடியும்… பாய்ந்தால் புலி

நாட்டின் 15வது ஜனாதிபதியை தேர்வு செய்வதற்கான தேர்தல் நாளை நடக்க உள்ளது. ஜனநாயகமும், அரசியலமைப்பும் தத்தளித்துக் கொண்டிருக்கும் இந்த காலக்கட்டத்தில், அவற்றை கட்டிக்காக்க வேண்டிய பொறுப்புடைய நாட்டின் முதல் குடிமகனுக்கு, என்ன மாதிரியான அதிகாரங்கள் உள்ளன, அத்தகைய அதிகாரங்களை முந்தைய ஜனாதிபதிகள் எப்படியெல்லாம் பயன்படுத்தி உள்ளனர் என்பதைப் பற்றி பார்ப்போம்… உலகின் பிற நாடுகளைப் போல் இல்லாமல், இந்தியாவில் ஜனாதிபதி பதவி மிகவும் வித்தியாசமானது. அவர்களுக்கு ஏராளமான அதிகாரங்கள் வழங்கப்பட்டுள்ள போதிலும், அவற்றை பயன்படுத்த முடியாது. சுருக்கமாக … Read more