கனமழையால் மூணாறில் தொடரும் மண்சரிவு : வீடுகள் சேதம் ஒருவர் பலி
மூணாறு: தொடரும் கனமழையால் மூணாறில் நேற்று ஏற்பட்ட மண்சரிவில் ஒருவர் உயிரிழந்தார். கேரளாவில் தென்மேற்கு பருவமழை தீவிரமாகி, கனமழை பெய்து வருகிறது. இடுக்கி மாவட்டத்தின் பல இடங்களில், மண்சரிவோடு, மரங்களும் வேரோடு சாய்ந்து வருவதால் போக்குவரத்து பாதிக்கப்பட்டுள்ளது. நேற்று பெய்த கனமழையால், மூணாறு லட்சுமி எஸ்டேட்டில் உள்ள ஒரு வீட்டின் மீது மண் சரிந்து விழுந்ததில், பண்டாரம் (75) என்பவர் உயிரிழந்தார். தீயணைப்பு துறையினர் உடலை மீட்டனர். இம்மாவட்டத்தில் கனமழைக்கு பலியானோர் எண்ணிக்கை 5 ஆக உயர்ந்துள்ளது. … Read more