கொரோனாவுக்கு சிகிச்சை பெற்று வரும் முதல்வர் மு.க.ஸ்டாலினிடம் உடல் நலம் விசாரித்தார் பிரதமர் நரேந்திர மோடி..!!

டெல்லி: கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ள முதலமைச்சர் மு.க.ஸ்டாலினிடம் பிரதமர் நரேந்திர மோடி நலம் விசாரித்தார். காவேரி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் முதல்வரிடம் தொலைபேசி மூலம் தொடர்புகொண்டு பிரதமர் மோடி பேசினார்.

82 வயது மூதாட்டியை கடித்தே கொன்ற பிட்புல் நாய் – உ.பி.யில் பயங்கரம்

உத்தரபிரதேசத்தில் 82 வயது மூதாட்டியை பிட்புல் வகை நாய் கடித்து குதறியதில் அவர் பரிதாபமாக உயிரிழந்தார். உத்தரபிரதேச மாநிலம் லக்னோவைச் சேரந்தவர் அமித். அங்குள்ள பல ஜிம்களில் பயிற்சியாளராக இவர் வேலை செய்து வருகிறார். அமித் தனது வீட்டில் பிட்புல் வகை நாயை வளர்த்து வந்தார். மிகவும் ஆபத்தானதாக அறியப்படும் இந்த பிட்புல் நாயை வீட்டில் வைத்து வளர்க்க வேண்டாம் என அக்கம்பக்கத்தினர் கூறிய போதிலும் அதனை அமித் கேட்கவில்லை. இதனிடையே, கடந்த 12-ம் தேதியன்று காலை … Read more

பள்ளி மாணவா்கள் இவைகளை அணிந்து வரத் தடை.. நிபந்தனைகளை விதித்த அரசு !!

பள்ளி மாணவா்கள் கைகளில் கயிறு கட்டக்கூடாது என சமூக பாதுகாப்புத்துறை உத்தரவு பிறப்பித்துள்ளது. தமிழகத்தில் சில பள்ளிகளில் மாணவர்கள் கைகளில் சாதி கயிறு கட்டிக்கொண்டு வருகின்றனர். தலைமுடியை நீளமாக வளர்க்கின்றனர் போன்ற புகார்கள் உள்ளன. இதனால் மாணவர்கள் ஒழுக்கம் தவறுவதுடன் கல்வி பாதிக்கப்படுவதாக புகார் எழுந்தது. இதனையடுத்து நடவடிக்கை எடுத்துள்ள தமிழக அரசு நிபந்தனைகளை விதித்துள்ளது. இது தொடா்பாக, சமூக பாதுகாப்பு துறை சாா்பில் மாவட்ட முதன்மை கல்வி அதிகாரிகளுக்கு அனுப்பியுள்ள சுற்றறிக்கையில் கூறியிருப்பதாவது: மாணவ, மாணவிகள் … Read more

இது என்ன கொடுமை? அரிசிக்கு 5% ஜிஎஸ்டியா !

அரிசி, தானியங்களுக்கு 5 % ஜிஎஸ்டி விதிப்பை கண்டித்து அரிசி ஆலைகள், அரிசி மொத்த, சில்லறை விற்பனையாளா்கள் போராட்டம் அறிவித்துள்ளனா். இதுகுறித்து, தமிழ்நாடு அரிசி ஆலை உரிமையாளா்கள் நெல் அரிசி வணிகா் சங்கங்களின் சம்மேளன மாநில தலைவா் டி.துளசிலிங்கம் கூறியது, பஞ்சாப் மாநிலம், சண்டீகா் நகரில் அண்மையில் நடைபெற்ற ஜிஎஸ்டி கவுன்சில் கூட்டத்தில் பேக்கிங் செய்யப்பட்ட அரிசி, கோதுமை, பருப்பு உள்ளிட்ட உணவுப் பொருள்களுக்கு 5 சதவீத ஜிஎஸ்டி விதிப்பதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இதுவரை பதிவு செய்யப்பட்ட பிராண்டுக்கு மட்டுமே … Read more

பிஹாரில் பிரதமர் மோடியை கொல்ல சதி; 3 தீவிரவாதிகள் கைது: 26 பேர் மீது வழக்கு

பாட்னா: பிரதமர் மோடி கடந்த 12-ம் தேதி பிஹார் தலைநகர் பாட்னா சென்றார். மாநில சட்டப்பேரவையின் நூற்றாண்டு நிறைவு நிகழ்ச்சியில் பங்கேற்றார். அப்போது பிரதமரை கொலை செய்ய சதித் தீட்டம் தீட்டியிருப்பது கண்டு பிடிக்கப்பட்டது. உளவுத் துறை அளித்த தகவலின்படி, கடந்த 11-ம் தேதி மாலை பாட்னாவின் நயா டோலா பகுதியில் பாட்னா போலீஸார் திடீர் சோதனை நடத்தினர். அங்கு முகமது ஜலாலுதீன், அக்தர் பர்வேஸ் ஆகிய 2 தீவிரவாதிகள் கைது செய்யப்பட்டனர். இதில் அக்தர் பர்வேஸ், … Read more

145 நாட்களுக்கு பின் 20 ஆயிரத்தை கடந்த கொரோனா.. 2வது நாளாக 20,038 பேருக்கு பாதிப்பு ; ஒரே நாளில் 47 பேர் பலி!!

டெல்லி: நாட்டில் கொரோனாவால் உயிரிழந்தோர் எண்ணிக்கை 5 லட்சத்தை தாண்டியது. அதே போல், பாதிப்பு 4 கோடியை தாண்டியது. இன்று காலை 9 மணியுடன் முடிந்த 24 மணி நேரத்தில், நாட்டில் கொரோனாவால் புதிதாக பாதித்தவர்கள், குணமடைந்தோர், பலியானோர், இறப்பு விகித நிலவரம் குறித்து மத்திய சுகாதார அமைச்சகம் வெளியிட்டுள்ள அறிக்கை வருமாறு:* புதிதாக 20,038 பேர் பாதித்துள்ளனர்.* இதன் மூலம், மொத்த பாதிப்பு எண்ணிக்கை 4,37,10,027 ஆக உயர்ந்தது.* புதிதாக 47 பேர் இறந்துள்ளனர்.* இதனால், … Read more

கருமுட்டை விற்பனை.. 2 மருத்துவமனைகள் மூடல்.. அமைச்சர் அதிரடி..!

ஈரோட்டில், சிறுமியின் கருமுட்டையை தானம் என்ற பெயரில் சட்டத்துக்குப் புறம்பாக விற்பனை செய்யப்பட்ட விவகாரம் தமிழகத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. இது தொடர்பாக சிறுமியின் தாயார் உட்பட 4 பேர் கைது செய்யப்பட்டனர். இந்த விவகாரத்தில் விசாரணை அறிக்கை தாக்கல் செய்யப்பட்ட நிலையில், தமிழக மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் செய்தியாளர்களிடம் கூறியதாவது: “சிறுமியின் உண்மையான பெயர், வயதை மறைத்து கருமுட்டை தானம் பெறப்பட்டுள்ளது. அடையாளத்திற்காக பெறப்பட்ட ஆதார் அட்டை போலி என தெரிந்தும் மருத்துவமனைகள் பயன்படுத்தி … Read more

சோகத்தில் மக்கள்.. வீட்டின் முன்பு கட்டிப்பிடித்தவாறு தாய், தந்தை, பிள்ளைகள் பலி !!

ஒரே குடும்பத்தில் தாய், தந்தை, குழந்தைகள் என 4 பேர் கட்டிப்பிடித்தவாறு உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. தெலங்கானா மாநிலம் காமாரெட்டி மாவட்டத்திற்குட்பட்ட பீடி தொழிலாளர்கள் காலனி பகுதியில் அகமது – பர்வீன் தம்பதி வசித்து வந்தனர்.  இவர்களுக்கு அத்னான் என்ற மகனும், மஹீம் மீதும் என்ற மகளும் இருந்தனர்.  இந்நிலையில் பர்வீன் தங்களது குடிசை வீட்டின் சுவற்றில் கட்டப்பட்டிருந்த இரும்பு கம்பியில் துணிகளை காயவைத்துள்ளார். பின்னர் காய்ந்த துணிகளை பர்வீன் எடுத்தபோது மின்கசிவு ஏற்பட்டு அவர் மீது மின்சாரம் … Read more

பெட்ரோல், டீசல் விலையை குறைத்தது மகாராஷ்டிர அரசு

மும்பை: மகாராஷ்டிர அரசு பெட்ரோல் விலையை லிட்டருக்கு ரூ.5-ம், டீசல் விலையை ரூ.3-ம் குறைத்துள்ளது. மும்பையில் நேற்று நடைபெற்ற அமைச்சரவை கூட்டத்தில் இதற்கான முடிவு எடுக்கப்பட்டது. இந்த விலைக் குறைப்பு இன்று அதிகாலை முதல் அமலுக்கு வந்தது. இதுகுறித்து முதல்வர் ஏக்நாத் ஷிண்டே கூறும்போது, “கடந்த மே 4-ம் தேதி பெட்ரோல், டீசல் மீதான உற்பத்தி வரியை மத்திய அரசு குறைத்தது. இதுபோல மாநில அரசுகளும் எரிபொருள் மீதான வாட் வரியை குறைக்க வேண்டும் என வலியுறுத்தியது. … Read more

குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்துக்கு அடுத்த வாரம் பிரியா விடை..!!

டெல்லி: குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்துக்கு அடுத்த வாரம் பிரியா விடை வழங்கப்படவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. நாடாளுமன்ற மக்களவையும், மாநிலங்களவையும் இணைந்து குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்துக்கு அடுத்த வாரம் பிரியா விடை அளிக்கவுள்ளது. குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் பதவிக்காலம் இந்த மாதம் 24ம் தேதியுடன் நிறைவு பெறுகிறது.