குரங்கு அம்மை தடுப்பு நடவடிக்கை தொடர்பாக மாநில அரசுகளுக்கு மத்திய அரசு சுற்றறிக்கை

குரங்கு அம்மை நோய் பாதிப்பு தொடர்பாக மருத்துவ வசதிகளை தயார் நிலையில் வைத்திருக்க அனைத்து மாநில அரசுகளுக்கும் மத்திய அரசு அறிவுறுத்தியுள்ளது. இது குறித்து மத்திய சுகாதாரத்துறை செயலாளர் அனுப்பிய கடிதத்தில், குரங்கு அம்மை பாதிப்புள்ள நாடுகளில் இருந்து வரும் பயணிகளை விமான நிலையத்தில் பரிசோதிக்க வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. Source link

ஜஸ்வந்த் சிங் பயோபிக்கில் அக்‌ஷய்

மும்பை: கடந்த 1989ல் மேற்கு வங்க மாநில சுரங்கம் ஒன்றில் வெள்ளத்தில் சிக்கிய பல தொழிலாளர்களை மீட்டவர், ஜஸ்வந்த் சிங். பஞ்சாப் மாநிலத்தின் அமிர்தசரஸ் பகுதியில் கடந்த 1939ல் பிறந்த அவர், சுரங்க பொறியாளராகப் பணியாற்றினார். பிறகு 2019ல் மரணம் அடைந்தார். ரியல் ஹீரோவாகப் போற்றப்பட்ட அவரது வாழ்க்கை வரலாறு தற்போது திரைப்படமாக உருவாக்கப்படுகிறது. தினு சுரேஷ் தேசாய் இயக்குகிறார். இதன் படப்பிடிப்பு லண்டனில் தொடங்கியுள்ளது. இதர நடிகர், நடிகைகள் மற்றும் தொழிற்நுட்பக் கலைஞர்கள் பற்றிய அறிவிப்பு … Read more

உலக நாடுகளுக்கு உணவு வழங்குவோம் – ஐ2யு2 மாநாட்டில் பிரதமர் நரேந்திர மோடி உறுதி

புதுடெல்லி: உலகின் உணவு பாதுகாப்பு தேவையை பூர்த்தி செய்ய ஐ2யு2 நாடுகள் ஒன்றிணைந்து செயல்படும் என்று பிரதமர் நரேந்திர மோடி தெரிவித்துள்ளார். கடந்த 2021 அக்டோபரில் இந்தியா, இஸ்ரேல், ஐக்கிய அரபு அமீரகம், அமெரிக்கா ஆகிய 4 நாடுகள் இணைந்து ஐ2யு2 என்ற கூட்டமைப்பை உருவாக்கின. இதன் முதல் மாநாடு நேற்று நடைபெற்றது. இதில் 4 நாடுகளின் தலைவர்களும் காணொலி வாயிலாக பங்கேற்றனர். இதில் பிரதமர் நரேந்திர மோடி பேசியதாவது: ஐ2யு2 கூட்டமைப்பில் ஒத்த கருத்துடைய நாடுகள் … Read more

மும்பை – அகமதாபாத் புல்லட் ரயில் திட்டம் வேகமெடுக்கிறது

மும்பை – அகமதாபாத் இடையிலான புல்லட் ரயில் திட்டத்திற்கு அனைத்து அனுமதிகளும் வழங்கப்பட்டுள்ளதாக மகாராஷ்டிரா துணை முதலமைச்சர் தேவேந்திர பட்னாவிஸ் அறிவித்துள்ளார். அமைச்சரவை கூட்டத்திற்குப் பின் பேசிய அவர் இதனை கூறினார். ஒரு லட்சத்து 10 ஆயிரம் கோடி ரூபாய் மதிப்பில் செயல்படுத்தப்படும் புல்லட் ரயில் திட்டத்திற்காக மராட்டியத்தில் சில இடங்களில் நிலம் கையகப்படுத்துவதற்கு கடந்த 3 ஆண்டுகளாக உரிய அனுமதி அளிக்கப்படாமல் இருந்தது. தற்போது அந்தப் பிரச்சனை தீர்க்கப்பட்டுள்ளதால் திட்டப் பணிகள் வேகமெடுக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. … Read more

முன்னோட்டம் வெளியானது இந்திரா காந்தி போல் நடிக்கும் கங்கனா

மும்பை: பாலிவுட்டில் கங்கனா ரனவத் நடிக்கும் புதிய படம், ‘எமர்ஜென்சி’. இதில் அவர், மறைந்த முன்னாள் இந்திய பிரதமர் இந்திரா காந்தி வேடத்தில் நடிக்கிறார். மேலும், இப்படத்தை அவரே இயக்குகிறார். இது இந்திரா காந்தியின் வாழ்க்கையைப் பற்றிசொல்லும் படம் இல்லை. இந்திரா காந்தி பிரதமராக இருந்தபோது, அவர் கொண்டு வந்த எமர்ஜென்சியை மையமாக வைத்து உருவாக்கப் படும் படம். இதன் திரைக்கதை, வசனத்தை ரித்தேஷ் ஷா எழுதி இருக்கிறார். இந்திரா காந்தியை சர்வாதிகாரி போல் சித்தரித்து, அவரது … Read more

தெலங்கானாவில் தொடர் கனமழையால் வெள்ளப்பெருக்கு – ஜேசிபி இயந்திரத்தில் சிக்கிய இருவரை ஹெலிகாப்டர் மூலம் மீட்ட துணை ராணுவம்

தெலங்கானா, ஆந்திரா மாநிலங்களில் பெய்து வரும் தொடர் கனமழையால் கோதாவரி ஆற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. இதனால் மாவட்டத்தின் பல்வேறு பகுதிகள் வெள்ளக் காடாக காட்சியளிக்கிறது. கோதாவரி நதி கரையோர கிராம மக்கள் மீட்கப்பட்டு முகாம்களை தங்க வைக்கப்பட்டுள்ளனர். இந்நிலையில், குடியிருப்பு பகுதிகளில் வெள்ளம் சூழ்ந்ததால் தெலங்கானாவின் மர்ரி பாடு என்ற கிராமத்தில் மூன்று மாத கைக்குழந்தையை, உறவினர்கள் கூடையில் வைத்து மீட்டு எடுத்து சென்றனர். அதேபோல், சோமனப்பள்ளி கிராமத்தில் ஜேசிபி வாகனத்தில் சிக்கிய இருவரை துணை ராணுவத்தினர் … Read more

நடிகையின் பலாத்கார காட்சிகள் ஆபாச இணையதளத்தில் வெளியீடா? நீதிமன்ற ஊழியர்களை விசாரிக்க முடிவு

திருவனந்தபுரம்: பிரபல மலையாள நடிகையின் பலாத்கார காட்சிகள், டார்க் வெப் என்ற ஆபாச இணையதளத்தில் வெளியாகி இருக்கலாம் என்ற சந்தேகம் எழுந்திருப்பது மிகப்பெரிய பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. கேரள மாநிலம் கொச்சியில் பிரபல மலையாள நடிகை கடத்தி பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டார். இதில் நேரடியாக ஈடுபட்டதாக, நடிகையின் முன்னாள் டிரைவரான சுனில் குமார் உள்பட 7 பேரும், சதித்திட்டம் தீட்டியதாக கூறப்பட்ட புகாரில் நடிகர் திலீப்பும் கைது செய்யப்பட்டனர். அந்த நடிகையை பலாத்காரம் செய்த கும்பல், அந்த காட்சிகளை … Read more

நித்யானந்தா ஆச்சர்யம் 3 மாதத்தில் உலகமே மாறி போயிருக்கே… சமாதி நிலையில் இருந்து எழுந்தார்

புதுடெல்லி: சமாதிநிலையில் இருப்பதாக அறிவித்திருந்த நித்யானந்தா திடீரென தோன்றி பேசியது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. கைலாசா என்ற தனி நாட்டை உருவாக்க அங்கு  இருப்பதாக கூறி வரும் நித்யானந்தா, சமாதி நிலையில் இருந்து பேசுவதாக கூறி, தொடர்ந்து சில கருத்துக்களை பதிவிட்டு வந்தார். இந்நிலையில், குருபூர்ணிமா நாளான ஜூலை 13ம் தேதி மீண்டும் நேரில் தோன்றுவதாக அவர் அறிவித்தார். அதன்படி நேற்று முன்தினம் இரவு சமூக வலைதளங்கள் மூலம் நேரில் தோன்றி பக்தர்களுக்கு அருளாசி வழங்கினார். அப்போது நித்தியானந்தா … Read more

அதிர வைக்கும் வீடியோ: தும்பிக்கையே துணை கரை புரளும் வெள்ளத்தில் பாகனுடன் மூழ்கிய யானை

பீகார்: பீகார் மாநிலத்தில் பெய்த கனமழையால், கங்கை ஆற்றில் பெரும் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. வைசாலி மாவட்டத்தில் உள்ள ரகோபுர் பகுதியில் கடந்த செவ்வாய்க்கிழமை இந்த வெள்ளத்தில்  சிக்கிய யானை முழுவதுமாக  மூழ்கியது. அதன் மீது பாகனும் அமர்ந்திருந்தார். யானை, பாகனின் உயிருக்கு ஆபத்து ஏற்படும் என்று கருதப்பட்ட நிலையில், யானை தனது தும்பிக்கையை மட்டும் தண்ணீருக்கு மேல் உயர்த்தி நீந்த தொடங்கியது. ஒரு கிமீ தூரத்துக்கு விடாமல் மூழ்கியபடியே  நீந்தி, பாட்னா கெதுக்கி என்ற இடத்தில் கரையேறியது. … Read more

மம்தாவின் நேற்றைய ஸ்பெஷல் ‘மோமோ’

கொல்கத்தா: டார்ஜிலிங் சென்றுள்ள மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி நேற்று மோமோ செய்தார். இந்த வீடியோவை அவர் தனது சமூகவலைதளத்தில் பதிவிட்டுள்ளார். மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி மூன்று நாள் பயணமாக கடந்த செவ்வாயன்று டார்ஜிலிங் சென்றார். பல்வேறு நிகழ்ச்சிகளில் பங்கேற்ற அவர், டார்ஜிலிங் மலையில் நடைபயணம் சென்ற அவர் அங்குள்ள உணவு கடையில் பானி பூரி தயாரித்து குழந்தைகளுக்கு வழங்கினார். இந்நிலையில், மம்தா நேற்று தனது சமூக வலைதளத்தில் வீடியோ ஒன்றை வெளியிட்டு … Read more