நாம் அனைவரும் பொதுவான நோக்கம், நலன்களைக் கொண்டுள்ளோம் – ஐ2யு2 உச்சி மாநாட்டில் பிரதமர் உரை

புதுடெல்லி: உலகளாவிய நிச்சயமற்ற தன்மை அதிகரித்து வரும் வேளையில், ஐ2யு2 நாடுகளின் கூட்டுறவு கட்டமைப்பு, நடைமுறை ஒத்துழைப்புக்கு சிறந்த முன்மாதிரியாக திகழ்கிறது என்று பிரதமர் மோடி தெரிவித்துள்ளார். நான்கு நாடுகளின் கூட்டமைப்பான ஐ2யு2 -ன் முதல் மெய்நிகர் உச்சி மாநாட்டில் பிரதமர் மோடி வியாழக்கிழமை உரையாற்றினார். அப்போது அவர் பேசியாதாவது. “முதலாவதாக புதிதாக இஸ்ரேலின் பிரதமர் பொறுப்பை ஏற்றுள்ள லேபிட்டுக்கு பாராட்டுக்கள், நல்வாழ்த்துக்களை தெரிவிக்கும் அதே வேலையில், இன்றைய உச்சி மாநாட்டை நடத்துவதற்காகவும் அவருக்கு நான் நன்றி … Read more

மழைக்காக ஒத்திவைக்க முடியாது திட்டமிட்டபடி 17ல் நீட் தேர்வு நடக்கும்: டெல்லி உயர் நீதிமன்றம் உத்தரவு

புதுடெல்லி: நாடு முழுவதும் வரும் 17ம் தேதி நடைபெற உள்ள நீட் தேர்வை தள்ளிவைக்க முடியாது என டெல்லி உயர் நீதிமன்றம் அறிவித்துள்ளது. வரும் 17ம் தேதி நாடு முழுவதும் அகில இந்திய மருத்துவ கல்விக்கான இளநிலை நீட் தேர்வு நடைபெற உள்ளது. இதில், 18 லட்சம் மாணவர்கள் பங்கேற்க உள்ளனர். மேலும், தேர்வுக்கான ஹால் டிக்கெட் தரவிறக்கம் செய்யப்பட்டு வரப்படுகிறது. இந்நிலையில், உத்தரப் பிரதேசம், கேரளா, தெலங்கானா உட்பட பல்வேறு மாநிலங்களைச் சேர்ந்த 15 மாணவர்கள், … Read more

கேரளாவில் ஒருவருக்கு குரங்கு அம்மை உறுதி: விரைந்தது மத்தியக் குழு

திருவனந்தபுரம்: கேரள மாநிலத்தில் ஒருவருக்கு குரங்கு அம்மை உறுதி செய்யப்பட்டுள்ளது. அதையடுத்து மத்திய மருத்துவக் குழு விரைந்துள்ளது. குரங்கு அம்மை நோய் பாதிப்பின் எதிரொலியாக அனைத்து மாநிலங்களையும் தேவையான மருத்துவ வசதிகளை தயார் நிலையில் வைத்திருக்க மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் அறிவுறுத்தியுள்ளது. கடந்த மூன்று நாட்களுக்கு முன்னர் 35 வயது மதிக்கத்தக்க நபர் ஒருவர் அமீரகத்தில் இருந்து கேரள மாநில தலைநகர் திருவனந்தபுரத்திற்கு திரும்பியுள்ளார். அவர் கொல்லம் பகுதியை சேர்ந்தவர் என தெரிகிறது. அவருக்கு உடல்நிலை பாதிப்பு … Read more

இந்தியாவுக்கும் வந்தது குரங்கு அம்மை

திருவனந்தபுரம்: இந்தியாவில் முதன் முறையாக கேரளாவை சேர்ந்த ஒருவருக்கு குரங்கு அம்மை பாதிப்பு கண்டறியப்பட்டுள்ளது. ஆப்பிரிக்காவில் முதன் முதலில் கண்டறியப்பட்ட குரங்கு அம்மை (மங்கிபாக்ஸ்) நோய், தற்போது உலகம் முழுவதும் 50க்கும் மேற்பட்ட நாடுகளில் வேகமாக பரவி வருகிறது. 6 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் பாதிக்கப்பட்டு உள்ளனர். இந்நிலையில், இந்த நோய் இந்தியாவுக்கும்  வந்து விட்டது. கேரள மாநிலம், கெல்லத்தை சேர்ந்த நபர் கடந்த 12ம் தேதி அமீரகத்தில் இருந்து வந்தார். கடந்த 2 நாட்களுக்கு முன் இவருக்கு … Read more

பீகாரில் பிரதமரை கொல்ல சதி – இருவரை கைதுசெய்து போலீசார் விசாரணை

பீகார் மாநிலத்தில் பிரதமர் நரேந்திர மோடியை கொல்ல சதி செய்ததாக இரண்டு பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். இந்தியாவை 2047ஆம் வருடத்துக்குள் இஸ்லாமிய நாடாக மாற்றவேண்டும் என திட்டம் தீட்டப்பட்டுள்ளதாக கைது செய்யப்பட்ட இருவர் மூலம் தகவல் கிடைத்துள்ளதாக பீகார் போலீஸ் தெரிவித்துள்ளது. செவ்வாய்க்கிழமை பீகார் மாநிலம் சென்றிருந்த பிரதமர் நரேந்திர மோடி சட்டசபை விழாவில் கலந்துகொண்டார். அப்போது அவரைக் கொல்ல சதிசெய்ததாக அத்தர் பர்வேஸ் மற்றும் முஹம்மத் ஜலாலுதீன் ஆகியோர் கைது செய்யப்பட்டுள்ளனர். தீவிரவாத அமைப்புகளும் இதில் தொடர்புள்ளதாக பீகார் … Read more

எந்தச் சொற்களுக்கும் தடை விதிக்கவில்லை. ஆனால்… – மக்களவைத் தலைவர் விளக்கம்

புதுடெல்லி: நாடாளுமன்ற நெறி பிறழ்ந்த சொற்கள் பட்டியல் – 2022 வெளியிடப்பட்டுள்ளது. அதற்கு நாடாளுமன்ற உறுப்பினர்கள், அரசியல் கட்சி தலைவர்கள் என பலரும் தங்களது கண்டனத்தை தெரிவித்துள்ளனர். அதற்கு விரிவான விளக்கம் கொடுத்துள்ளார் மக்களவை தலைவர் ஓம் பிர்லா. நாடாளுமன்ற மழைக்கால கூட்டத்தொடர் வரும் 18-ஆம் தேதி தொடங்கவுள்ள நிலையில், மக்களவைச் செயலர் அவை நாகரிகமற்ற வார்த்தைகள் அடங்கிய தொகுப்பை வெளியிட்டுள்ளார். அதிலுள்ள வார்த்தைகளைப் பயன்படுத்தத் தடை விதிக்கப்படுவதாகவும், மீறி பயன்படுத்தினால் அவைக் குறிப்பிலிருந்து அந்த வார்த்தைகள் … Read more

திருப்பதியில் அறைகள், தரிசனம், லட்டு டிக்கெட் பெறுவதில் முறைகேடு தடுக்க யுபிஐ க்யூ.ஆர். ஸ்கேன் பயன்படுத்த முடிவு

திருமலை: திருப்பதியில் அறைகள், தரிசனம், லட்டு டிக்கெட் பெறுவதில் முறைகேடுகளை தடுக்க யுபிஐ க்யூஆர் ஸ்கேன் பயன்படுத்த முடிவு செய்யப்பட்டுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்தனர். திருப்பதி ஏழுமலையான் கோயிலுக்கு வரும் பக்தர்கள் தங்கும் அறைகள், தரிசன டிக்கெட்டுகள் பெற பணம் செலுத்தும் நிலையில் இருந்து பணம் இல்லா பரிவர்த்தனை என்ற முறையில் டிஜிட்டல் பரிவர்த்தனையான கிரெடிட் மற்றும் டெபிட் கார்டு திட்டம் அறிமுகப்படுத்தப்பட்டது.இந்த திட்டத்தில் அறைகள் பெறும் பக்தர்கள் வழங்கும் டெபாசிட் தொகை, அறையை காலி செய்யும்போது தேவஸ்தானம் … Read more

இந்தியாவில் நுழைந்தது குரங்கு அம்மை – கேரளாவில் ஒருவருக்கு உறுதி

ஐக்கிய அரபு அமீரகத்தில் இருந்து கேரளா வந்தவருக்கு குரங்கு அம்மை பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. மங்கி பாக்ஸ் என்று அழைக்கப்படும் குரங்கு அம்மை நோய் தற்போது உலகம் முழுவதும் வேகமாக பரவி வருகிறது. ஆப்பிரிக்க நாடுகளில் மட்டுமே அதிகமாக பரவி வந்த இந்தக் காய்ச்சல் சமீப காலமாக பல்வேறு நாடுகளிலும் பரவத் தொடங்கியது. இங்கிலாந்து, ஐக்கிய அரபு அமீரக நாடுகள் உட்பட 57 நாடுகளில் 6,000க்கும் மேற்பட்டோருக்கு தற்போது இந்த நோய் பரவியுள்ளது. இதையடுத்து காய்ச்சலை கட்டுப்படுத்த … Read more

ஜூலை 12-இல் ஐக்கிய அரபு அமீரகத்தில் இருந்து கேரளாவுக்கு வந்த ஒருவருக்கு குரங்கு அம்மை பாதிப்பு

கேரள: ஜூலை 12-இல் ஐக்கிய அரபு அமீரகத்தில் இருந்து கேரளாவுக்கு வந்த ஒருவருக்கு குரங்கு அம்மை பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது என கேரள அமைச்சர் வீணா ஜார்ஜ் தெரிவித்துள்ளார். குரங்கு அம்மையால் பாதிக்கப்பட்ட நபரின் உடல்நிலை சீராக உள்ளது என அவர் கூறியுள்ளார்.  

கர்ப்பிணியை காப்பாற்ற முயன்றவர்களுக்கு நேர்ந்த துயரம் -வெள்ளத்தில் சிக்கிய இருவர் பலி

வெள்ளம் சூழ்ந்த பகுதியில் இருந்து கர்ப்பிணி பெண்ணை பாதுகாப்பாக வெளியே மீட்டு வர முயன்ற இரு இளைஞர்கள் வெள்ள நீரில் அடித்துச் செல்லப்பட்டு உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.    தெலுங்கானா மாநிலத்தில் கடந்த ஒரு வாரமாக தொடர் மழை பெய்து வருகிறது. தலைநகர் ஹைதராபாத் மற்றும் அதன் புறநகர் பகுதிகளிலும் விட்டு விட்டு பெய்து வரும் கனமழையால் தாழ்வான பகுதிகளில் வெள்ளம் சூழ்ந்துள்ளது. வெள்ளம் சூழ்ந்த வீடுகளில் தவிக்கும் மக்கள் தொடர்ந்து மீட்கப்பட்டு வருகின்றனர். மேலும் … Read more