பொருளாதாரத்தை மீட்டெடுப்பதை விட யுரேனஸ், ப்ளூட்டோ மீதே நிதி அமைச்சருக்கு ஆர்வம்: காங்கிரஸ் விமர்சனம்
புதுடெல்லி: ‘நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமனுக்கு நாட்டின் பொருளாதாரத்தை மீட்டெடுப்பதை காட்டிலும் யுரேனஸ், ப்ளூட்டோவில் தான் அதிக ஆர்வம்’ என்று காங்கிரஸ் விமர்சித்துள்ளது. ஜேம்ஸ் வெப் தொலைநோக்கி எடுத்த பிரபஞ்சத்தின் அற்புத புகைப்படத்தை நாசா நேற்று முன்தினம் வெளியிட்டது. இந்த புகைப்படத்தை ஒன்றிய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் தனது டிவிட்டரில் மறுபதிவு செய்திருந்தார். இதற்கிடையே, நாட்டின் பணவீக்கம் தொடர்பான புள்ளி விவரங்களை அரசு வெளியிட்டிருந்தது. இதை ஒப்பிட்டு, நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமனை காங்கிரஸ் கட்சி … Read more