தேசிய சின்னம் சர்ச்சை: பின்னணி என்ன?
இந்திய தேசிய சின்னம் சாரநாத்தில் பேரரசர் அசோகர் எழுப்பிய அசோகத் தூணை அடிப்படையாகக் கொண்டு வடிவமைக்கப்பட்டது. உத்தரப்பிரதேச மாநிலம் சாரநாத்தில் அமைந்துள்ள அசல் தூணில் (தற்போது இது சாரநாத் அருங்காட்சியகத்தில் வைக்கப்பட்டுள்ளது) நான்கு ஆசியச் சிங்கங்கள் அடுத்தடுத்து நின்றவாறு உள்ளன. இவை அதிகாரம், வீரம், பெருமை, நம்பிக்கை என்ற நான்கு பண்புகளைக் குறிக்கின்றன. இவை வட்ட வடிவ பீடத்தில் நிறுத்தப்பட்டுள்ளன. இந்தப் பீடத்தில் (கிழக்கில்) யானை, (மேற்கில்) குதிரை, (தெற்கே) எருது, (வடக்கே) சிங்கம் ஆகிய விலங்குருக்கள் … Read more