நடிகர் சுஷாந்த் சிங் தற்கொலை வழக்கு – சிக்கும் நடிகை; என்சிபியின் பகீர் அறிக்கை

தற்கொலை செய்து கொண்ட பாலிவுட் நடிகர் சுஷாந்த் சிங்குக்கு போதைப்பொருட்களை சப்ளை செய்ததாக தொடரப்பட்ட வழக்கில் அவரது தோழியும், நடிகையுமான ரியா சக்கரவர்த்தி மீது நீதிமன்றத்தில் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டது. அதிர்ச்சியை ஏற்படுத்திய தற்கொலை பாலிவுட்டில் முன்னணி கதாநாயகர்களில் ஒருவராக வலம் வந்தவர் நடிகர் சுஷாந்த் சிங் ராஜ்புட். பிகார் மாநிலத்தைச் சேர்ந்தவரான இவர், எந்த சினிமா பின்புலமும் இல்லாமல் தனது கடின உழைப்பால் பாலிவுட் திரையுலகுக்குள் நுழைந்தவர் ஆவார். இவரது நடிப்பில் வெளியான ‘தில் பச்சாரா’, … Read more

கூடங்குளம் அணுக்கழிவுகளை சேகரித்து வைப்பதற்கான தொலைத்தூர அணுக்கழிவு பாதுகாப்பு கட்டமைப்பு 2026ம் ஆண்டு வரை தேவைப்படாது: உச்சநீதிமன்றத்தில் ஒன்றிய அரசு தகவல்

டெல்லி: கூடங்குளம் அணுக்கழிவுகளை சேகரித்து வைப்பதற்கான  தொலைத்தூர அணுக்கழிவு பாதுகாப்பு கட்டமைப்பு 2026ம் ஆண்டு வரை தேவைப்படாது என உச்சநீதிமன்றத்தில் ஒன்றிய அரசு தெரிவித்துள்ளது. நெல்லை மாவட்டம் கூடங்குளம் அனல்மின்நிலையம் அணுக்கழிவுகளை பாதுகாப்பாக சேகரித்து வைப்பதற்க்காக தொலைதூர கட்டமைப்பை உருவாக்கக்கோரி பூவுலகின் நண்பர்கள் அமைப்பு வழக்கு தொடர்ந்துள்ளது. இந்த வழக்கு உச்சநீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்த போது பதில் மணு தாக்கல் செய்த இந்திய அணுசக்தி கழகம் அணு உலை 1, மற்றும் 2ல் தற்போது உள்ள எரிபொருளை முறையே … Read more

அதிமுக பொதுக்குழு முடிவு, தீர்மானங்களை தலைமை தேர்தல் ஆணையத்திடம் தந்தார் சி.வி.சண்முகம்

டெல்லி: ஜூலை 11-ம் தேதி நடைபெற்ற அதிமுக பொதுக்குழு முடிவு, தீர்மானங்களை தேர்தல் ஆணையத்திடம் முன்னாள் அதிமுக அமைச்சர் சி.வி.சண்முகம் தந்துள்ளார். டெல்லியில் உள்ள தலைமை தேர்தல் ஆணையத்துக்கு நேரில் சுமேரு  முடிவு, தீர்மானங்களை சி.வி.சண்முகம் வழங்கியுள்ளார்.

மக்கள் கூச்சலிட்டும் கேட்காத ஓட்டுநர்: காரை அடித்துச்சென்ற காட்டாற்று வெள்ளம்; 3 பேர் பலி

மகாராஷ்டிராவில் பாலத்தை கார் கடக்க முயன்ற போது காட்டாற்று வெள்ளத்தில் சிக்கி அடித்து செல்லப்பட்டதில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 3 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர். மேலும் மாயமான 3 பேரை தேடும் பணி தீவிரமாக நடைபெற்று வருகிறது. மகாராஷ்டிராவில் பல்வேறு பகுதிகளில் கடந்த இரண்டு வாரங்களுக்கும் மேலாக கனமழை பெய்து வருகிறது. இதில் பல மாவட்டங்கள் வெள்ளத்தில் மூழ்கியுள்ளன. மழை – வெள்ளத்துக்கு இதுவரை அங்கு உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 84-ஆக உயர்ந்துள்ளது. வெள்ளத்தில் சிக்கியுள்ள மக்களை மீட்கும் பணியில் … Read more

இந்தியாவில் ஒரே நாளில் 16,906 பேருக்கு கொரோனா… 45 பேர் பலி: ஒன்றிய சுகாதாரத்துறை அறிக்கை..!

டெல்லி: நாட்டில் கொரோனாவால் உயிரிழந்தோர் எண்ணிக்கை 5 லட்சத்தை தாண்டியது. அதே போல், பாதிப்பு 4 கோடியை தாண்டியது. இன்று காலை 9 மணியுடன் முடிந்த 24 மணி நேரத்தில், நாட்டில் கொரோனாவால் புதிதாக பாதித்தவர்கள், குணமடைந்தோர், பலியானோர், இறப்பு விகித நிலவரம் குறித்து மத்திய சுகாதார அமைச்சகம் வெளியிட்டுள்ள அறிக்கை வருமாறு:* புதிதாக 16,906 பேர் பாதித்துள்ளனர்.* இதன் மூலம், மொத்த பாதிப்பு எண்ணிக்கை 4,36,69,850ஆக உயர்ந்தது.* புதிதாக 45 பேர் இறந்துள்ளனர்.* இதனால், நாட்டின் … Read more

இந்தியாவில் 16,906 பேருக்கு கரோனா தொற்று உறுதி: 15,447பேர் குணமடைந்தனர்

புதுடெல்லி: இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் 16,906 பேருக்கு கரோனா தொற்று உறுதியாகி உள்ளது. மத்திய சுகாதார அமைச்சகம் வெளியிட்டுள்ள அறிவிப்பில் கூறப்பட்டுள்ளதாவது: இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் 16,906 பேருக்கு தொற்று உறுதியானது. பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 4,36,69,850 ஆனது. கடந்த 24 மணி நேரத்தில், 15,447பேர் குணமடைந்துள்ளனர். கரோனா தொற்றில் இருந்து மீண்டவர்களின் எண்ணிக்கை 4,30,11,874 ஆனது. நாடுமுழுவதும் தற்போது 1,32,457 பேர் சிகிச்சையில் உள்ளனர். கோவிட் காரணமாக கடந்த 24 மணணிநேரத்தில் … Read more

சிபிஎஸ்இ தேர்வு முடிவுகள் வெளியாகும் முன்னரே மாணவர் சேர்க்கைக்கான காலக்கெடுவை முடிக்க வேண்டாம்: யுஜிசி அறிவுறுத்தல்

டெல்லி: சிபிஎஸ்இ பொதுத்தேர்வு முடிவுகள் வெளியாவதற்கு முன்பாகவே மாணவர் சேர்க்கையை முடித்துக் கொள்ளக்கூடாது என யுஜிசி உத்தரவு பிறப்பித்திருக்கிறது. நாடு முழுவதும் மே மாதத்தில் நடந்த சிபிஎஸ்இ 10,12ம் வகுப்பு பொதுத்தேர்வு முடிவுகள் இதுவரை வெளியாகவில்லை. வடமாநிலங்களில் பெய்து வரும் தொடர் கனமழை காரணமாக விடைத்தாள்களை மதிப்பீடு செய்வதில் காலதாமதம் ஏற்பட்டிருக்கிறது. இதன் காரணமாக முடிவுகள் வெளியாகவில்லை. இந்நிலையில் தமிழகம் உட்பட பல மாநிலங்களில் உயர்கல்வி சேர்க்கை என்பது அந்தந்த மாநில பொதுத்தேர்வு முடிவுகள் வெளியிடப்பட்டதை தொடர்ந்து … Read more

மத்திய அரசு and டெல்லி அரசுக்கு இடையே அதிகார போட்டி: 5 நீதிபதிகள் கொண்ட அமர்வை அமைக்க உச்ச நீதிமன்றம் ஒப்புதல்

புதுடெல்லி: டெல்லியில் அதிகாரத்தைக் கட்டுப்பாட்டில் யார் வைத்திருப்பது என்பது தொடர்பான வழக்கை 5 நீதிபதிகள் கொண்ட அரசியல் அமர்வுக்கு பரிந்துரைக்க உச்ச நீதிமன்றம் ஒப்புக்கொண்டுள்ளது. டெல்லி யூனியன் பிரதேச அரசாக செயல்பட்ட போதிலும் நாட்டின் தலைநகர் என்பதால் நகரின்பாதுகாப்பு உள்ளிட்ட விஷயங்களில் மத்திய அரசின் பாதுகாப்புப் பிரிவினர் கவனம் செலுத்தி வருகின்றனர். அதாவது நகரில் பாதுகாப்பு, பேரணி, அனுமதி அளித்தல் உள்ளிட்ட அனைத்து அதிகாரங்களும் மத்திய அரசு தன்னிடத்தில் வைத்துள்ளது. இதனால் டெல்லி போலீஸார் சுதந்திரமாக செயல்பட … Read more

சிபிஎஸ்இ தேர்வு முடிவுகள் வெளியாகும் முன்னரே மாணவர் சேர்க்கையை முடித்துக் கொள்ளக்கூடாது: யுஜிசி அறிவுறுத்தல்

டெல்லி: சிபிஎஸ்இ தேர்வு முடிவுகள் வெளியாகும் முன்னரே மாணவர் சேர்க்கையை முடித்துக் கொள்ளக்கூடாது:  என யுஜிசி அறிவுறுத்தியுள்ளது. சிபிஎஸ்இ முடிவுகள் வெளியான பிறகு, உரிய கால அவகாசம் வழங்கி மாணவர் சேர்க்கை நடத்திட வேண்டும். நாடு முழுவதும் உள்ள கல்லூரிகள், பல்கலைக்கழகங்களுக்கு பல்கலைக்கழக மானியக்குழு அறிவுறுத்தியுள்ளது.

கேரளா: இரண்டு ஆண்டுகளுக்குப் பிறகு மீண்டும் களைகட்டிய படகு போட்டி

கேரள மாநிலத்தின் புகழ்பெற்ற படகு போட்டி இரண்டு ஆண்டுகளுக்கு பிறகு செம்பங்குளம் பம்பா நதியில் துவங்கியது. கேரள மாநிலம் ஆலப்புழாவில், செம்பங்குளம் படகு பந்தயம் இரண்டு ஆண்டுகள் இடைவெளிக்குப் பிறகு பம்பா நதியில் துவங்கியது. கொரோனா பரவல் காரணமாக கடந்த இரண்டு வருடங்களாக நடைபெறாமல் இருந்த கேரளாவின் புகழ் பெற்ற நேரு கோப்பைக்கான படகு போட்டியை ஆலப்புழா மாவட்ட ஆட்சியர் துவங்கி வைத்தார். இந்த படகு போட்டியில் 9 படகுகள் பங்கேற்கின்றன. செம்பகுளம்  படகு போட்டியில் வெற்றி … Read more