இந்தியாவின் கச்சா எண்ணெய் இறக்குமதி புது உச்சம்.. நாளொன்றுக்கு 9,50,000 பீப்பாய் எண்ணெய் இறக்குமதி..!

ஜூன் மாதத்தில் ரஷ்யாவிடம் இருந்து தள்ளுபடி விலையில் வாங்கிய கச்சா எண்ணெய்யின் அளவு நாளொன்றுக்கு 9 லட்சத்து 50 ஆயிரம் பீப்பாய்களாக உயர்ந்து உச்சம் தொட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. நாட்டின் ஒட்டுமொத்த எண்ணெய் இறக்குமதியில் இது ஐந்தில் ஒரு பங்கு என கூறப்படுகிறது. அதேபோல் ஜுன் மாதத்தில் நாட்டில் எண்ணெய் ஏற்றுமதி 48 லட்சம் பீப்பாய் என்றும் கடந்த ஆண்டு இதே காலக்கட்டத்தை காட்டிலும் 23 சதவீதம் அதிகம் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்தியாவுக்கு எண்ணெய் வழங்கும் நாடுகளில் சவுதி … Read more

ரஷ்ய சூதாட்டக்காரர்களை ஏமாற்ற குஜராத்தில் போலி ஐபிஎல் நடத்திய 4 பேர் கைது

மெக்சானா: ரஷ்யாவில் கிரிக்கெட் பந்தயத்திற்கு பணம் வைத்து சூதாடுபவர்களை ஏமாற்றி பணம் பறிக்கும் நோக்கத்தில் குஜராத்தில் போலியாக ஐபிஎல் டி20 கிரிக்கெட் போட்டியை நடத்திய 4 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். குஜராத்தை சேர்ந்த ஒரு கும்பல் ரஷ்யாவில் கிரிக்கெட் போட்டியை வைத்து சூதாடும் கும்பலிடம் இருந்து பணம் பறிக்க திட்டமிட்டுள்ளது. இதற்காக போலி டி20 கிரிக்கெட் போட்டியை நடத்தியுள்ளது. குஜராத்தில் வயல் ஒன்றை வாடகைக்கு எடுத்து கிரிக்கெட் மைதானம் போல் தயார் செய்துள்ளனர். பண்ணையில் வேலை செய்பவர்கள் … Read more

என்கவுன்ட்டரில் 2 தீவிரவாதிகள் உயிரிழப்பு

ஸ்ரீநகர்: ஜம்மு காஷ்மீர் புல்வாமா மாவட்டம் அவந்திபோரா பகுதியில் தீவிரவாதிகள் நடமாட்டம் இருப்பதாக போலீஸாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. போலீஸார், ராணுவம் மற்றும் சிஆர்பிஎப் வீரர்கள் அடங்கிய குழுவினர் நேற்று காலை அப்பகுதியை சுற்றி வளைத்தனர். அங்கு மறைந்திருந்த தீவிரவாதிகள் பாதுகாப்புப் படையினர் மீது துப்பாக்கி சூடு நடத்தினர். பாதுகாப்புப் படையினரும் பதில் தாக்குதல் நடத்தினர். இதில் 2 தீவிரவாதிகள் உயிரிழந்தனர். இதில் ஒருவர் ஜெய்ஷ் தீவிரவாத அமைப்பைச் சேர்ந்த கைசர் கோகா என தெரியவந்துள்ளது. மற்றொருவரை … Read more

ரயிலில் இருந்து தவறி விழுந்த பயணி – துரிதமாக செயல்பட்டு காப்பாற்றிய காவலர்

உத்தரபிரதேச மாநிலம் வாராணாசியில் ஓடும் ரயிலில் ஏற முயன்று கீழே விழுந்த பயணியை ரயில்வே பாதுகாப்புப் படைக் காவலர் ஒருவர் காப்பாற்றிய சிசிடிவி காட்சிகள் வெளியாகியுள்ளன. கண்டோன்மென்ட் ரயில் நிலையத்திலிருந்து புறப்பட்ட ரயிலை பிடிப்பதற்காக பெண் பயணி ஒருவர் வேகமாக ஒடி சென்று ஏற முயன்றார். எதிர்பாராத விதமாக அந்த பயணியின் கால்கள் நடைமேடைக்கும் ரயிலுக்குமான இடைவெளிக்கு இடையே சிக்கியது. அப்போது அங்கு பணியில் இருந்த ரயில்வே பாதுகாப்புப் படை வீரர் துரிதமாக செயல்பட்டு அந்த பயணியை … Read more

நாடாளுமன்ற குழுவிடம் அக்னிபாதை குறித்து ராஜ்நாத் சிங் விளக்கம்: திரும்ப பெற எதிர்க்கட்சிகள் வலியுறுத்தல்

புதுடெல்லி: அக்னிபாதை திட்டம் குறித்து பாதுகாப்பு அமைச்சர் ராஜ்நாத் சிங் பாதுகாப்புக்கான நாடாளுமன்ற ஆலோசனை குழு எம்பிக்களுக்கு நாடாளுமன்றத்தில் விளக்கம் அளித்தார். ராணுவத்தில் ஆள் சேர்ப்பதற்கான அக்னிபாதை திட்டம் கடந்த 14ம் தேதி அறிமுகப்படுத்தப்பட்டது. இதற்கு எதிர்க்கட்சிகள் உள்பட பல்வேறு தரப்பில் இருந்தும் கடும் கண்டனம் தெரிவிக்கப்பட்டது. எதிர்ப்பு தெரிவித்து, நாட்டின் பல்வேறு பகுதிகளில் இளைஞர்கள் போராட்டம் நடத்தினர். இந்நிலையில், அக்னிபாதை திட்டம் குறித்து பாதுகாப்பு அமைச்சர், முப்படைகளின் தலைமை தளபதிகள், பாதுகாப்புக்கான நாடாளுமன்ற ஆலோசனை குழுவில் … Read more

‘ஏஐ’ தொழில்நுட்பத்தை எதிர்கொள்ள மத்திய அமைச்சர் ராஜ்நாத் சிங் அழைப்பு

புதுடெல்லி: செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பத்தின் (ஏஐ) எழுச்சியை எதிர்கொள்ள நாம் தயாராக இருக்க வேண்டும் என்று மத்திய பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் தெரிவித்தார். டெல்லியில் நேற்று `பாதுகாப்புத் துறையில் செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பம்` என்ற தலைப்பில் நடைபெற்ற நிகழ்ச்சியை மத்திய அமைச்சர் ராஜ்நாத் சிங் தொடங்கி வைத்தார். நிகழ்ச்சியில் அவர் பேசியதாவது: செயற்கை நுண்ணறிவின் முன்னேற்றத்தை நம்மால் தடுக்க முடியாது. அதன் முன்னேற்றத்தை தடுக்க நாம் முயற்சி செய்யக்கூடாது. ஆனால் நாம் அதில் கவனமாக இருக்க … Read more

ஆடி மாத பூஜைக்காக சபரிமலை நடை வருகிற 16ந்தேதி திறப்பு.. அய்யப்பனை தரிசிக்க ஆன்லைன் முன்பதிவு துவக்கம்..!

ஆடி மாத பூஜைகளுக்காக சபரிமலை நடை வருகிற 16ந்தேதி அன்று திறக்கப்படுகிறது. அன்று மாலை 5 மணிக்கு மேல்சாந்தி பரமேஸ்வரன் நம்பூதிரி நடை திறந்து தீபம் ஏற்றுவார். மறுநாள் அதிகாலை நடை திறந்ததும் அபிஷேகத்துக்கு பின்னர் நெய்யபிஷேகம் உள்ளிட்ட வழக்கமான பூஜைகள் தொடங்கும். 5 நாட்கள் பூஜைக்குப் பின்னர் வருகிற 21ந்தேதி இரவு 10 மணிக்கு நடை அடைக்கப்படும். பக்தர்கள் தரிசனத்துக்கான ஆன்லைன் முன்பதிவு இன்று தொடங்குகிறது  Source link

உபி போலீசார் அதிர்ச்சி ஒரே ஆட்டோவில் 27 பேர் பயணம்

லக்னோ: உத்தரப்பிரதேசத்தில் ஒரே ஆட்டோவில் 27 பேர் பயணித்ததைக் கண்டு போக்குவரத்து போலீசாரே அதிர்ச்சியடைந்தனர். உத்தரப் பிரதேச மாநிலம், பதேப்பூரில் உள்ள பிந்த்கி கோட்வாலி என்ற பகுதியில் நேற்று வாகன தணிக்கையில் போக்குவரத்து போலீசார் ஈடுபட்டிருந்தனர். அப்போது, தடுமாற்றத்துடன் வேகமாக சென்ற ஆட்டோவை மடக்கி நிறுத்தினர். பின்னர் ஆட்டோவில் இருந்த அனைவரையும் கீழே இறங்கச் சொல்லியுள்ளனர். அப்போது அந்த ஆட்டோவில் இருந்து மொத்தம் 27 பேர் இறங்கியதைக் கண்டு போலீசாரே அதிர்ச்சியடைந்தனர். இதையடுத்து ஆட்டோவை பறிமுதல் செய்த … Read more

ஒரே நாளில் 73 லட்சம் பேருக்கு பிஎப் ஓய்வூதியம் வழங்க முடிவு

புதுடெல்லி: தொழிலாளர் வருங்கால வைப்பு நிதியான பி.எப். அமைப்பு தனது சந்தாதாரர்களில் ஓய்வூதியம் பெறும் 73 லட்சம் பேருக்கும் ஒரே நாளில் ஓய்வூதியம் வழங்குவதற்கான நடவடிக்கைகளை தீவிரப்படுத்தியுள்ளது. பி.எப் ஓய்வூதியத்தை மத்திய தொகுப்பு மூலம் ஒரே நேரத்தில் அனைத்து வாடிக்கையாளர்களின் வங்கிக் கணக்கில் செலுத்தும் விதமான நடவடிக்கை எடுக்க 29 மற்றும் 30-ம் தேதிகளில் கூட்டம் நடைபெற உள்ளது. இக்கூட்டத்தில் இதை நடைமுறைப்படுத்துவது தொடர்பாக இறுதி முடிவு எடுக்கப்படுகிறது. தற்போது 138 மண்டல பிஎப் அலுவலகங்கள் மூலம் … Read more

அமர்நாத்தில் யாத்ரீகர்கள் செல்ல ஏதுவாக புதிய சாலை அமைக்கும் ராணுவ வீரர்கள்.!

ஜம்மு காஷ்மீர் அமர்நாத்தில் யாத்ரீகர்கள் செல்ல ஏதுவாக புதிய சாலை அமைக்கும் பணியில் ராணுவ வீரர்கள் ஈடுபட்டுள்ளனர். மேகவெடிப்பால் கொட்டித் தீர்த்த கனமழை பெருவெள்ளத்தில் சாலைகள் அடித்துச் செல்லப்பட்டன. பனி லிங்க தரிசனம் செய்ய யாத்தீரிகர்கள் செல்ல, புதிய சாலையை அமைக்கும் பணியில் ராணுவம் தீவிரமாக ஈடுபட்டுள்ளது. மண் சரிவு ஏற்பட்ட இடத்தில் ராட்சத இயந்திரங்கள் கொண்டு சாலை அமைக்கும் பணி விரைவாக நடைபெறுகிறது. Source link