வெற்றிகரமாக முடிந்தது முதல் சோதனை ஆளில்லா போர் விமானம் கதம் செய்ய வரும் கதக்: ராணுவத்துக்கு பலம் சேர்க்கும் அதிநவீனம்

புதுடெல்லி: நாட்டின் முதல் ஆளில்லா போர் விமான சோதனையை பாதுகாப்பு ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு அமைப்பு (டிஆர்டிஓ) வெற்றிகரமாக நடத்தி உள்ளது. இது பாதுகாப்பு துறையில் புதிய மைல்கல்லாக பார்க்கப்படுகிறது.ராணுவத்தில் பலம் வாய்ந்த அமெரிக்கா, சீனா போன்ற நாடுகள் ராணுவத்தில் ஆளில்லா போர் விமானங்களைக் கொண்டுள்ளன. போர் நடக்கும் சூழலில், இத்தகைய ஆளில்லா விமானங்கள் எவ்வளவு முக்கியத்துவம் வாய்ந்தது என்பதை உக்ரைன் போர் உலகிற்கு காட்டி உள்ளது. இதனால், இந்தியாவும் தனது சொந்த முயற்சியில் ஆளில்லா போர் … Read more

நுபுர் சர்மாவுக்கு ஆதரவாக கருத்து | மகாராஷ்டிர மருந்துகடைக்காரர் கொலை – வழக்கை என்ஐஏ விசாரிக்க உத்தரவு

புதுடெல்லி: மகாராஷ்டிரா மருந்துக் கடை உரிமையாளர் உமேஷ் கோல்கே கொலை வழக்கை தேசிய புலனாய்வு அமைப்பு (என்ஐஏ) விசாரிக்க மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா நேற்று உத்தரவிட்டார். மகாராஷ்டிர மாநிலம் அமராவதி நகரில் கால்நடை மருந்து கடை நடத்தி வந்தவர் உமேஷ் கோல்கே (54). இவர் கடந்த ஜூன் 21-ம் தேதி இரவு 10 மணியளவில், தனது கடையிலிருந்து இரு சக்கர வாகனத்தில் வீடு திரும்பினார். இவரது மகன் மற்றும் மனைவி மற்றொரு வாகனத்தில் உடன் … Read more

மகாராஷ்டிராவில் சிறப்பு சட்டப்பேரவை இன்று கூடுகிறது

மும்பை: மகாராஷ்டிராவில் சிறப்பு சட்டப்பேரவை இன்று கூடுகிறது. இந்த கூட்டத்தில் சபாநாயகர் தேர்வாகிறார்.நாளை ஏக்நாத் ஷிண்டே தலைமையிலான அரசுக்கு எதிராக நம்பிக்கை வாக்கெடுப்பு நடைபெறுகிறது.

உதய்பூர் தையல்காரர் கொலை குற்றவாளிகள் மீது வழக்கறிஞர்கள் தாக்குதல்

புதுடெல்லி: உதய்பூர் தையல்காரர் கன்னையா லால் கொலையில் கைது செய்யப்பட்ட குற்றவாளிகள் 4 பேரையும் ஜெய்ப்பூர் சிறப்பு நீதிமன்றத்தில் நேற்று என்ஐஏ அதிகாரிகள் ஆஜர்படுத்தினர். அப்போது, வரும் 12-ம் தேதி வரை என்ஐஏ காவலில் வைத்து விசாரிக்க நீதிமன்றம் அனுமதி அளித்தது. நீதிமன்ற வளாகத்தில் பலத்த போலீஸ் பாதுகாப்பையும் மீறி குற்றம் சாட்டப்பட்ட நபர்கள் மீது அங்கு கூடியிருந்த பொது மக்களும் வழக்கறிஞர்களும் தாக்குதல் நடத்தினர். அப்போது அவர்கள், “கன்னையா லாலை கொன்றவர்களுக்கு மரண தண்டனை கொடுக்க … Read more

அமராவதி கொலை வழக்கு- என்ஐஏ விசாரணை

மகாராஷ்டிர மாநிலம் அமராவதியில் நடந்த கொலை வழக்கில் முக்கிய குற்றவாளியை போலீசார் கைது செய்துள்ளனர். மருந்துக் கடைக்காரரான உமேஷ் கோலே கடந்த மாதம் 21ந் தேதி கொலை செய்யப்பட்டார். இந்த வழக்கில் 6 பேர் ஏற்கனவே கைது செய்யப்பட்ட நிலையில், சிசிடிவி காட்சிகளின் அடிப்படையில் இர்பான் கான் என்பவன் கைது செய்யப்பட்டுள்ளான். முதலில் இது வழிப்பறிக் கொள்ளை தொடர்பான கொலை என்று கூறி வந்த போலீசார் தற்போது நுபுர் சர்மாவை ஆதரித்ததற்காக கொல்லப்பட்டப்பட்டதாகக் கூறியுள்ளனர். உதய்பூர் தையற்கலைஞர் … Read more

தவறுதலாக எல்லை தாண்டிய குழந்தை: பாக். வீரர்களிடம் ஒப்படைப்பு

சண்டிகர்: பஞ்சாப் மாநிலத்தில் பெரோஸ்பூரில் உள்ள சர்வதேச எல்லைப்பகுதி அருகே பாகிஸ்தான் பகுதியில் 3 வயது சிறுவன் விளையாடிக் கொண்டு இருந்துள்ளான். நேற்று இரவு 7 மணியளவில் அவன் தவறுதலாக இந்திய எல்லைக்குள் நுழைந்துள்ளான். புதிய இடம் என்பதால் வீட்டிற்கு செல்வதற்கு வழி தெரியாமல் சிறுவன் அப்பா, அப்பா என அழுதுள்ளான். இதனை பார்த்த எல்லைப் பாதுகாப்பு படை வீரர்கள் அவனை மீட்டனர். பின்னர் சம்பந்தப்பட்ட சிறுவனின் தந்தை முன்னிலையில் பாகிஸ்தான் ரேஞ்சர்களிடம் சிறுவன் பாதுகாப்பாக ஒப்படைக்கப்பட்டான்.

பிரதமர் ஆயுஷ்மான் பாரத் திட்டத்துக்கு உலக வங்கி ரூ.13,834 கோடி கடனுதவி

புதுடெல்லி: மத்திய அரசு செயல்படுத்தும் பிரதமர் ஆயுஷ்மான் பாரத் திட்டத்துக்கு உலக வங்கி 175 கோடி டாலர் (ரூ.13,834.54 கோடி) கடனுதவி அளிக்க ஒப்புதல் அளித்துள்ளது. இதில் 100 கோடி டாலர் ஆயுஷ்மான் பாரத் திட்டத்துக்கும் 75 கோடி டாலர் மேம்பாட்டு திட்டப் பணிகளுக்கும் வழங்கப்படுகிறது. இத்தகவலை இந்தியாவுக்கான உலக வங்கி இயக்குநர் ஹைதெகி மோரி தெரிவித்துள்ளார். தனியார் முதலீடுகள் குறைந்துள்ள சூழலில் பொருளாதாரத்தை ஊக்குவிக்க 75 கோடி டாலரை முதலீட்டு திட்டப் பணிகளில் முதலீடு செய்ய … Read more

தேசிய ஜனநாயக கூட்டணி குடியரசு துணைத் தலைவர் வேட்பாளர் அமரீந்தர் சிங்?

தேசிய ஜனநாயக கூட்டணி சார்பில் குடியரசுத் துணைத் தலைவர் வேட்பாளராக பஞ்சாப் முன்னாள் முதலமைச்சர் அமரீந்தர் சிங் தேர்வு செய்யப்பட உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. வெங்கையா நாயுடுவின் பதவிக் காலம் முடிய உள்ள நிலையில், ஆகஸ்ட் 6ஆம் தேதி குடியரசு துணைத் தலைவருக்கான தேர்தல் நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இதற்கான பாஜக வேட்பாளர்கள் பட்டியலில் மத்திய பிரதேச முதலமைச்சர் சிவராஜ் சிங் சவுகான், சிறுபான்மையினர் விவகாரங்களுக்கான அமைச்சர் முக்தர் அப்பாஸ் நக்வி உள்ளிட்டோர் பெயர்களும் பரிசீலனையில் … Read more

6 நாட்களுக்கு முன்பே தென்மேற்கு பருவமழை நாடு முழுதும் துவங்கியது

புதுடெல்லி: நாடு முழுவதும் 6 நாட்களுக்கு முன்பாகவே தென்மேற்கு பருவமழை தொடங்கியுள்ளது. தென் பருவமழை வழக்கமாக நாடு முழுவதும் ஜூலை 8ம் தேதி தொடங்கும். ஆனால், இந்தாண்டு பெரும்பாலான மாநிலங்களில் முன்கூட்டியே தொடங்கி விட்டது. ராஜஸ்தான், குஜராத்தில் மட்டும் மழை இல்லாமல் இருந்தது. நேற்று முன்தினம் முதல் இங்கும் பருவ மழை பெய்ததால், தென்மேற்குப் பருவமழை சாதாரண தேதிக்கு 6 நாட்களுக்கு முன்பாகவே நாடு முழுவதும் தொடங்கி விட்டதாக இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இந்நிலையில், … Read more

மகாராஷ்டிரா பேரவைத் தலைவர் தேர்தல் | சமபலம் இருபப்தால் பாஜக – சிவசேனா இடையே கடும் போட்டி

மும்பை: மகாராஷ்டிர பேரவைத் தலைவர் தேர்தலில் பாஜக, சிவசேனா இடையே கடும் போட்டி ஏற்பட்டுள்ளது. மகாராஷ்டிராவில் சிவசேனா, காங்கிரஸ், தேசியவாத காங்கிரஸ் ஆகியவை இணைந்து மகா விகாஸ் அகாடி என்ற பெயரில் கூட்டணி ஆட்சி நடைபெற்று வந்தது. இந்நிலையில் சிவசேனா அதிருப்தி எம்எல்ஏக்கள் அணி தலைவரான ஏக்நாத் ஷிண்டே ஆட்சிக்கு எதிராக போர்க்கொடி தூக்கினார். எம்எல்ஏக்களை அழைத்துக் கொண்டு அசாமில் உள்ள சொகுசு ஓட்டலில் தங்கினார். இதையடுத்து பேரவையில் பலத்தை நிரூபிக்குமாறு முதல்வர் உத்தவ் தாக்கரேவுக்கு, ஆளுநர் … Read more