'உதய்பூர் சம்பவம் வெறும் எதிர்வினை அல்ல; அது ஒரு நம்பிக்கை அமைப்பின் தாக்கம்' – ஆர்எஸ்எஸ் கருத்து

புதுடெல்லி: உதய்பூர் சம்பவம் தலிபான் மனநிலை கொண்டது. இது வெறும் பேச்சுக்கான எதிர்வினை அல்ல மாறாக ஒரு நம்பிக்கை அமைப்பின் தாக்கம் என்று ஆர்எஸ்எஸ் பிரிவின் விளம்பரப் பிரிவுத் தலைவர் சுனில் அம்பேகர் தெரிவித்துள்ளார். டெல்லியில் நடந்த The Taliban: War and Religion in Afghanistan, The Forgotten History of India ஆகிய நூல்களின் வெளியீட்டு விழாவில் சுனில் அம்பேக்கர் இந்தக் கருத்தை பதிவு செய்தார். இந்த நூல்களை அருண் ஆனந்த் என்பவர் எழுதியிருக்கிறார். … Read more

பாஜக தேசியச் செயற்குழு ஐதராபாத்தில் தொடங்கியது.!

தெலங்கானா தலைநகர் ஐதராபாத்தில் பாஜக தேசியச் செயற்குழுக் கூட்டம் இன்றும் நாளையும் நடைபெறும் நிலையில், தேசிய நிர்வாகிகள் கூட்டத்தைக் கட்சியின் தலைவர் ஜே.பி.நட்டா தொடக்கி வைத்துள்ளார். ஐதராபாத் பன்னாட்டுக் கூட்ட அரங்கில் பாஜகவின் தேசியச் செயற்குழுக் கூட்டம் இன்றும் நாளையும் நடைபெறுகிறது. இதற்காகப் பேகம்பேட்டை விமான நிலையம் முதல் கூட்டம் நடைபெறும் அரங்கம் வரையும், ஐதராபாத்தின் முதன்மையான சாலைகளிலும் பிரதமர் மோடியை வரவேற்கும் வகையில் பெரிய பதாகைகள் வைக்கப்பட்டுள்ளன. சாலையோரங்களில் பாஜக கொடிகள் நாட்டப்பட்டு நகரமே விழாக்கோலம் … Read more

உதய்பூரில் தையல் தொழிலாளி படுகொலை செய்யப்பட்டதற்கும் மும்பை தீவிரவாத தாக்குதலுக்கும் தொடர்பு : திடுக்கிடும் தகவல்!!

ஜெய்ப்பூர் : உதய்பூரில் தையல் தொழிலாளி படுகொலை செய்யப்பட்டதற்கும் மும்பை தீவிரவாத தாக்குதலுக்கும் தொடர்பு இருக்கும் திடுக்கிடும் தகவல் வெளியாகி உள்ளது. ராஜஸ்தான் மாநிலம், உதய்பூர் மாவட்டத்தில் உள்ள மால்டாஸ் பகுதியை சேர்ந்த கன்னையா லால் என்ற டெய்லர், நுபுர் சர்மாவின் சர்ச்சை கருத்துக்கு ஆதரவு தெரிவித்து சமூகவலைதளங்களில் பதிவு போட்டதால், கடந்த 28ம் தேதி அவரை 2 பேர் தலை துண்டித்து கொடூரமான முறையில் கொலை செய்தனர்.இது தொடர்பாக பாகிஸ்தனை தலைமையிடமாக கொண்டு செயல்படும் தாவ்த்-இ-இஸ்லாமி … Read more

முகமது ஜுபைருக்கு எதிராக புதிய வழக்குகள் பதிவு

அல்ட்நியூஸ் என்ற உண்மை கண்டறியும் இணையதளத்தின் இணை நிறுவனர் முகமது ஜுபைருக்கு எதிராக புதிய வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளது. ஏற்கெனவே அவர் மீது இந்திய தண்டனைச் சட்டம் 153ஏ மற்றும் 295 ஆகிய பிரிவுகளின் கீழ் வழக்குப் பதிவு செய்யப்பட்டது. முஸ்லிம்களின் இறைத்தூதர் முகம்மது நபியை பாஜக செய்தித்தொடர்பாளராக இருந்த நுபுர் சர்மா விமர்சித்திருந்தார். இதையடுத்து, நாடு முழுவதிலும் சமூகவலைதளங்களை டெல்லி போலீஸார் தீவிரமாகக் கண்காணித்தனர். இதில், ‘ஹனுமன்பக்தி’ என்ற பெயரில் பெங்களூரூவில் இருந்து செயல்படும் செய்தி … Read more

சிவசேனா கட்சியில் இருந்து ஏக்நாத் சிண்டேயை நீக்கியதாக உத்தவ் தாக்கரே அறிவிப்பு..!

கட்சிக்கு எதிரான செயல்களில் ஈடுபட்டதால், சிவசேனா கட்சியில் இருந்து ஏக்நாத் சிண்டேயை நீக்கியுள்ளதாக உத்தவ் தாக்கரே அறிவித்துள்ளார். சிவசேனா சட்டமன்ற உறுப்பினர்கள் 40 பேரைத் தம் பக்கம் வைத்துள்ள ஏக்நாத் சிண்டே, பாஜகவுடன் சேர்ந்து மகாராஷ்டிரத்தில் கூட்டணி அரசை அமைத்துள்ளார். முதலமைச்சராக ஏக்நாத் சிண்டேயும் துணை முதலமைச்சராகத் தேவேந்திர பட்னாவிசும் பதவியேற்றுள்ளனர். தங்கள் அணியில் பெரும்பான்மை உறுப்பினர்கள் உள்ளதால் தாங்கள்தான் சிவசேனா என ஏக்நாத் சிண்டே கூறி வருகிறார். Source link

தோண்ட தோண்ட சடலம்.. மணிப்பூர் நிலச்சரிவில் சிக்கி 20 பேர் பலி… உயிரிழந்தோர் குடும்பத்திற்கு தலா ரூ.5 நிதியுதவி அறிவிப்பு!!

இம்பால்: மணிப்பூர் நிலச்சரிவில் பலியானாவர்கள் எண்ணிக்கை 20 ஆக உயர்ந்துள்ளது. மேலும், மண்ணில் புதைந்த பிராந்திய வீரர்கள் உட்பட 43 பேரின் கதி பற்றி கவலை ஏற்பட்டுள்ளதால், அவர்களை தேடும் பணி தீவிரப்படுத்தப்பட்டு உள்ளது. மணிப்பூரில் ேநானி மாவட்டத்தில்  துபுல் யார்டு அருகே ரயில்வே கட்டுமான பணிகள் நடந்து வருகின்றது. இதற்காக பிராந்திய ராணுவ  வீரர்கள் அந்த பகுதியில் முகாம் அமைத்து பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வந்தனர்.கடந்த புதன் இரவு இங்கு பயங்கர நிலச்சரிவு ஏற்பட்டது. இதில், … Read more

சம்பல் பள்ளத்தாக்கில் மீண்டும் தலைதூக்கும் கொள்ளைக்காரர்கள்: சாலை ஒப்பந்ததாரரிடம் பணம் கேட்டு மிரட்டல்

புதுடெல்லி: மத்தியப் பிரதேசத்தின் சம்பல் பள்ளத்தாக்கில் மீண்டும் கொள்ளைக்காரர்கள் தலைதூக்கும் நிலை உருவாகி உள்ளது. அங்குள்ள சாலைப்பணி ஒப்பந்ததாரரிடம் பணம் கேட்டு மிரட்டியதால், சாலை அமைக்கும் பணி நிறுத்தப்பட்டுள்ளது. பூலன் தேவி தொடங்கிவைத்த கொள்ளை: மத்தியப்பிரதேசம், உத்தரப்பிரதேசம் மற்றும் ராஜஸ்தான் மாநிலங்களில் அமைந்துள்ளது சம்பல் பள்ளத்தாக்கு. இப்பகுதி, சுமார் 15 ஆண்டுகளுக்கு முன்புவரை கொள்ளைக்காரர்களின் பிடியில் சிக்கியிருந்தது. இங்குள்ள அரசியல்வாதிகளும் தேர்தல் சமயங்களில் சம்பலின் கொள்ளைக்காரர்களிடம் கையேந்தும் நிலை இருந்தது. இவர்களில் ஒருவராக இருந்த பூலன் தேவி … Read more

ஆந்திராவில் வாகன தணிக்கையின் போது பிடிபட்ட ரூ.1.30 கோடி மதிப்பிலான மதுபாட்டில்கள் ரோட் ரோலர் மூலம் அழிப்பு..!

ஆந்திர மாநிலம் சித்தூரில், சட்டவிரோதமாக கடத்தி வரப்பட்டு பறிமுதல் செய்யப்பட்ட ஒரு கோடியே 30 லட்ச ரூபாய் மதிப்பிலான மதுபாட்டில்களை, போலீசார் ரோடு ரோலர் மூலம் அழித்தனர். கடந்த ஓராண்டாக வாகன தணிக்கையின் போது பிடிபட்ட, பிற மாநிலங்களில் இருந்து கடத்தி வரப்பட்ட சுமார் ஒரு லட்சம் மதுபாட்டில்களை, காணிப்பாக்கம் ஐடிஐ அருகே சாலையில் கொட்டி போலீசார் அழித்தனர். Source link

அக்னிபாதை திட்டத்தின் கீழ் ராணுவம், கடற்படையில் சேர ஆன்லைனில் விண்ணப்பிக்கலாம்!!

டெல்லி: அக்னிபாதை திட்டத்தின் கீழ் ராணுவம் மற்றும் கடற்படையில் சேர ஆன்லைன் வாயிலாக விண்ணப்பிக்கலாம் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.இந்திய ராணுவத்தின் முப்படைகளுக்கும் அக்னிபாதை திட்டத்தின் கீழ், 4 ஆண்டுகள் ஒப்பந்த அடிப்படையில் 17 முதல் 23 வயதுக்கு உட்பட்ட அக்னி வீரர்கள் தேர்வு செய்யப்படுகின்றனர். ஒன்றிய அரசின் இத்திட்டத்துக்கு காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்க்கட்சிகளும், பல்வேறு அமைப்புகளும், ராணுவத்தில் சேர முயற்சி செய்து கொண்டிருக்கும் இளைஞர்களும் கடும் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர்.நாடு முழுவதும் பல மாநிலங்களில் போராட்டங்களும், வன்முறைகளும் நடந்தன. … Read more

ஸ்பைஸ் ஜெட் விமானத்தில் திடீர் புகை: டெல்லியில் அவசரமாக தரையிறக்கம்

டெல்லியில் இருந்து ஜபல்பூருக்குச் சென்ற ஸ்பைஸ் ஜெட் விமானத்தில் திடீரென்று புகை கிளம்பியதால் விமான அவசரமாக மீண்டும் டெல்லிக்கே திரும்பியது. விமானத்தில் திடீர் புகை கிளம்பியபோது விமானம் 5000 அடி உயரத்தில் பறந்து கொண்டிருந்தது. இது தொடர்பாக ஸ்பைஸ் ஜெட் விமான நிறுவன செய்தித்தொடர்பாளர், டெல்லியில் இருந்து இன்று காலை ஸ்பைஸ் ஜெட் விமானம் ஒன்று இன்று காலை ஜபல்பூர் நோக்கி புறப்பட்டது. விமானம் மேலெழும்பிய சில நிமிடங்களிலேயே உள்ளே கேபினில் இருந்து புகை கிளம்பியது. இதனையடுத்து … Read more