“கர்நாடகாவில் 15 தொகுதிகளில் காங்கிரஸ் வெற்றி பெறும்” – முதல்வர் சித்தராமையா உறுதி

பெங்களூரு: மக்களவைத் தேர்தலில் காங்கிரஸ் கட்சி கர்நாடக மாநிலத்தில் குறைந்தது 15 இடங்களில் வெற்றி பெறும் என அம்மாநில முதல்வர் சித்தராமையா தெரிவித்துள்ளார். அந்த மாநிலத்தில் மொத்தம் 28 மக்களவைத் தொகுதிகள் உள்ளன என்பது குறிப்பிடத்தக்கது. மொத்தம் இரண்டு கட்டங்களாக அங்கு வாக்குப்பதிவு நிறைவடைந்துள்ளது. மாநிலத்தில் காங்கிரஸ் ஆட்சி அமைந்து ஓராண்டு கடந்துள்ள நிலையில் பத்திரிகையாளர்களை சித்தராமையா சந்தித்து பேசினார். அப்போது அவர், “மக்கள்வை தேர்தலைப் பொறுத்த வரையில் கர்நாடகாவில் குறைந்தது காங்கிரஸ் கட்சி 15 இடங்களில் … Read more

ராஜீவ்காந்தி நினைவு தினம்: ராகுல் நெகிழ்ச்சி பதிவு: காங்கிரஸ் தலைவர்கள் அஞ்சலி

புதுடெல்லி: மறைந்த முன்னாள் பிரதமர் ராஜீவ்காந்தியின் 33-வது நினைவு தினத்தையொட்டி டெல்லியில் உள்ள அவரது நினைவிடத்தில் காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர்கள் சோனியா காந்தி, ராகுல் காந்தி, மல்லிகார்ஜுன கார்கே, ப.சிதம்பரம், சச்சின் பைலட் உள்ளிட்டோர் அஞ்சலி செலுத்தினர். இந்தச் சூழலில் தனது தந்தை ராஜீவ்காந்தியுடன் தான் இருக்கும் பால்ய கால புகைப்படத்தை சமூக வலைதளத்தில் ராகுல் காந்தி பகிர்ந்துள்ளார். “அப்பா… உங்களது கனவுகள், எனது கனவுகள். உங்களின் ஆசைகள், எனது பொறுப்புகள். உங்களது நினைவுகள் எனது … Read more

வாக்களிக்காதவர்களுக்கு வரியை உயர்த்த வேண்டும்: நடிகர் பரேஷ் ராவல்

பிரபல இந்தி நடிகர் பரேஷ் ராவல். தமிழில் சூர்யாவின் ‘சூரரைப் போற்று’ படத்தில் தொழிலதிபராக நடித்திருந்தார். 2014 மக்களவைத் தேர்தலில் அகமதாபாத் மக்களவைத் தொகுதியில் பாஜக சார்பில் போட்டியிட்டு வெற்றி பெற்றார். இந்நிலையில் நேற்று நடந்த 5-ம் கட்ட மக்களவைத் தேர்தலில், மும்பையில் உள்ள ஒரு வாக்குப்பதிவு மையத்தில் நடிகர் பரேஷ் ராவல் வாக்களித்தார். பின்னர் அவர், செய்தியாளர்களிடம் பேசும்போது, “அரசு இதைச் செய்யவில்லை, அதைச் செய்யவில்லை என்று குறை சொல்கிறார்கள். நீங்கள் வாக்களிக்கவில்லை என்றால் அதற்கு … Read more

47.4 டிகிரி செல்சியஸ் வெப்பநிலை; தகிக்கும் டெல்லி – 4 மாநிலங்களுக்கு ரெட் அலர்ட்

புதுடெல்லி: தலைநகர் டெல்லியில் நேற்று (மே.20) 47.4 டிகிரி செல்சியஸ் வெப்பம் பதிவானது. இந்திய வரலாற்றிலேயே இதுதான் மிக அதிகமான வெப்பநிலை பதிவாக அறியப்படுகிறது. இதன் தொடர்ச்சியாக டெல்லி, பஞ்சாப், ஹரியாணா, சண்டிகர் ஆகிய 4 மாநிலங்களில் இன்று முதல் அடுத்த 5 நாட்களுக்கு கடும் வெப்ப அலை வீசும் என்று எச்சரித்துள்ளது. மே 23 ஆம் தேதியன்று உத்தரப் பிரதேசம், இமாச்சலப் பிரதேசம், மத்தியப் பிரதேசம், ஒடிசா மாநிலங்களில் ஒரு சில பகுதிகளிலும் குஜராத் மாநிலத்தின் … Read more

ஆந்திர மாநில தேர்தலில் 33 வன்முறை சம்பவங்கள்: சிறப்பு ஆய்வு குழு விசாரணையில் தகவல்

அமராவதி: ஆந்திராவில் நடந்து முடிந்த தேர்தலில் வன்முறை சம்பவங் களில் பலர் படுகாயம் அடைந்தனர். சில வேட்பாளர்கள் மீது கொலை வெறி தாக்குதல் நடத்தப்பட்டது. இது வேண்டுமென்றே செய்த சதி எனவும், வாக்கு இயந்திரங்கள் வைக்கப்பட்ட இடங்களுக்கு போதிய பாதுகாப்பு இல்லை எனவும், வாக்கு எண்ணிக்கையின் போதும், அதன் பிறகும் கூட ஆந்திராவில் வன்முறை நடக்கலாம் எனமுன்னாள் முதல்வர் சந்திரபாபுநாயுடு மத்திய தேர்தல் ஆணையத்திடம் தெரிவித்தார். இது தொடர்பாக உடனடி நடவடிக்கை தேவை என்றும் அவர் வலியுறுத்தினார். … Read more

அகமதாபாத் விமானநிலையத்தில் 4 ஐஎஸ்ஐஎஸ் தீவிரவாதிகள் கைது

அகமதாபாத்: குஜராத் மாநிலம் அகமதா பாத் விமான நிலையத்தில் 4 ஐஎஸ்ஐஎஸ் தீவிரவாதிகள் குஜராத் தீவிரவாத தடுப்புப் பிரிவு போலீஸாரால் (ஏடிஎஸ்) கைது செய்யப்பட்டனர். குஜராத் மாநிலத்தில் உள்ள அகமதாபாத் விமானநிலையம் வழியாக ஐஎஸ்ஐஎஸ் தீவிரவாதிகள் வருவதாக, உளவுத்துறைக்குத் தகவல் கிடைத்தது. இதையடுத்து குஜராத் மாநில தீவிரவாத தடுப்பு பிரிவு போலீஸாருக்கு, உளவுத்துறை அதிகாரிகள் தகவல் கொடுத்தனர். இதைத் தொடர்ந்து விமானநிலையத்துக்கு வந்த 4 தீவிரவாதிகளை, குஜராத் தீவிரவாத தடுப்புப் பிரிவு போலீஸார் நேற்று கைது செய்தனர். … Read more

சென்னை வருவதற்கு திட்டமிட்ட 4 வங்கதேசத்தினர் கைது: திரிபுரா ரயில் நிலையத்தில் சிக்கினர்

அகர்தலா: சென்னை வருவதற்காக திட்டமிருந்த வங்கதேசத்தை சேர்ந்த 4 பேர் திரிபுரா ரயில் நிலையத்தில் கைது செய்யப்பட்டனர். வெளிநாட்டினர் சட்டம் உட்பட பல பிரிவுகளின் கீழ் அவர்கள் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. வங்கதேசத்தை சேர்ந்த ஜஷாங்கிர், உசைன், ஓம்ரான் உசைன், ரியாத் உசைன் ஆகியோர் இந்திய தரகர் ரஃபிகுல் இஸ்லாம் என்பவர் மூலமாக எல்லையை கடந்து திரிபுரா மாநிலத்துக்குள் நுழைந்துள்ளனர். கடந்த 17-ம் தேதி இரவு அகர்தலா ரயில் நிலையத்தில், செகந்திராபாத் செல்லும் எக்ஸ்பிரஸ் ரயில் … Read more

24 மணி நேரமும் விளக்கை அணைத்து ஹாஸ்டலில் மறைந்து இருக்கிறோம்: கிர்கிஸ்தானில் மருத்துவம் பயிலும் இந்திய மாணவர் வேதனை

புதுடெல்லி: மத்திய ஆசிய நாடான கிர்கிஸ்தானில் உள்ளூர் மக்களுக்கும் வெளிநாட்டு மாணவர்களுக்கும் இடையே வன்முறை வெடித்துள்ளநிலையில், அங்கு பயிலும் இந்தியா, பாகிஸ்தான் மாணவர்கள் கடும் நெருக்கடிக்கு உள்ளாகி இருக்கின்றனர். உள்ளூர் மக்களின் தாக்குதலால், விடுதியை விட்டு வெளியே வர முடியாத நிலையில் இந்திய மாணவர்கள் உள்ளனர். இந்த சம்பவம் குறித்து கிர்கிஸ்தானில் மருத்துவம் பயிலும் மகாராஷ்டிரா மாநிலத்தைச் சேர்ந்த மாணவர் ஒருவர் கூறுகையில் “உள்ளூர் மக்களின் தாக்குதலிலிருந்து தப்பிப்பதற்காக 24 மணி நேரமும் ஹாஸ்டல் விளக்கை அணைத்தே … Read more

காஷ்மீர் தீவிரவாத தாக்குதலில் பாஜக பிரமுகர் உயிரிழப்பு: சர்வதேச அமைப்பின் விசாரணைக்கு பரூக் அப்துல்லா வலியுறுத்தல்

ஸ்ரீநகர்: காஷ்மீரில் நேற்று முன்தினம் நிகழ்ந்த 2 தீவிரவாத தாக்குதல்களில் பாஜக தலைவர் ஒருவர்உயிரிழந்தார். இரண்டு சுற்றுலா பயணிகள் காயமடைந்தனர். அனந்த்நாக், யன்னாரில் உள்ள திறந்தவெளி சுற்றுலா முகாம் பகுதியில் சனிக்கிழமை இரவு 10 மணியளவில் துப்பாக்கிச் சூடு நடந்தது. துப்பாக்கி துண்டுகள் தாக்கியதில் இரண்டு சுற்றுலா பயணிகள் காயமடைந்தனர். அவர்கள் இருவரும் சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர். இவர்கள் ராஜஸ்தான் மாநிலம் ஜெய்ப்பூரை சேர்ந்த தம்பதியினர் ஆவர். முதல் சம்பவம் நடைபெற்று அரை மணி நேரம் கழித்து … Read more

“புரி ஜெகந்நாதரே மோடியின் பக்தர்தான்” – சர்ச்சை கருத்துக்குப் பின்  வருத்தம் தெரிவித்த பாஜக சம்பித் பத்ரா 

புரி: புரி ஜெகந்நாதரே பிரதமர் நரேந்திர மோடியின் பக்தர்தான் என்று பாஜக மூத்த தலைவர் சம்பித் பத்ரா பேசியது சர்ச்சையான நிலையில், தற்போது அதுகுறித்து அவர் மன்னிப்புக் கோரியுள்ளார். ஒடிசாவின் புரி மக்களவை தொகுதிக்கான வாக்குப் பதிவு வரும் மே 25ஆம் தேதி நடைபெறுகிறது. இதனை முன்னிட்டு புரியில் இன்று (மே 20) நடைபெற்ற ரோட் ஷோவில் பிரதமர் மோடி பங்கேற்றார். முன்னதாக புரி ஜெகந்நாதர் கோயிலில் வழிபாடு நடத்தினார். இந்த நிலையில், “புரி ஜெகந்நாதரே பிரதமர் … Read more